சனி, 17 பிப்ரவரி, 2018

கொத்தத் தயாரானால்?

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், முசாபர்பூரில் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையில், இராணுவம் தன்னுடைய படைவீரர்களைப் பயிற்றுவிக்க ஆறு முதல் ஏழுமாதங்கள் எடுத்துக்கொள்ளும் அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் தன்னுடைய ஊழியர்களை,போர்க்களத்திற்கு இரண்டு அல்லது மூன்றுநாட்களில் தயார் செய்திடும் என்று கூறியிருக்கிறார்.

இவரது இந்தக்கருத்து மிகவும் விரிவானஅளவில் கண்டனங்களைப் பெற்றிருக்கின்றது. இந்திய இராணுவம் தங்கள் படைவீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதைவிட மிகவும் சிறப்பாக ஆர்எஸ்எஸ் செய்திட முடியும் என்று ஆர்எஸ்எஸ்தலைவர் கூறியதன் மூலம் இந்திய இராணுவத்தை அவமதித்துவிட்டார் என்பது பிரதானவிமர்சனமாகும். 

இந்த விமர்சனம் சரியானதே என்ற போதிலும், இவ்வாறு இவர் கூறியிருப்பதற்கான நோக்கம் மிகமிக ஆழமான ஒன்று.இராணுவம் பற்றிய ஆர்எஸ்எஸ்-இன் கண்ணோட்டத்தையும், சமூகத்தை இராணுவமயமாக்குவது தொடர்பாகவும் ஒரு முக்கியமான அம்சத்தை இந்தக் கூற்று வெளிப்படுத்தியிருக்கிறது.

இவரது உரை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனத்திற்குப்பதிலளிக்கும் விதத்தில் ஆர்எஸ்எஸ் ஒரு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது: ‘‘பகவத்ஒரு சூழ்நிலை உருவாகுமானால், மற்றும் அரசமைப்புச்சட்டம் அனுமதித்தால், ஆர்எஸ்எஸ் தன் ஊழியர்களுக்கு ஒழுக்கத்தைக் கட்டுப்பாட்டைமுறையாகக் கற்றுத்தரும் அதே சமயத்தில், இந்திய இராணுவம் சமூகத்தைத் தயார் செய்திடஆறு மாதங்கள் எடுத்துக்கொள்ளும் என்றுதான்கூறினார்.

 இதுவும், மத்திய உள்துறை இணைஅமைச்சர், கிரண் ரிஜிஜு, இது தொடர்பாக அளித்துள்ள தற்காப்பு விளக்கமும் பகவத்தின் கருத்தில் மறைந்திருக்கும் அம்சத்தை வெளிப் படுத்தி இருக்கின்றன. 

ரிஜிஜு தன்னுடைய ட்விட்டர்பக்கத்தில், “ஒரு நபரைப் படைவீரராகப் பயிற்றுவிக்க வேண்டுமானால் ஆறு முதல் ஏழு மாதங்களாகும் என்றும் அரசமைப்புச்சட்டம் அனுமதிக்குமானால் அதனை ஆர்எஸ்எஸ் ஊழியர்கள்அதற்கான திறமையை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள், என்றுதான் பகவத்ஜி கூறினார்,” என்றும்குறிப்பிட்டிருக்கிறார்.

பகவத்தைப் பாதுகாத்திடுவதற்காக இவ்வாறு இவர்கள் கூறியுள்ள விளக்கங்களிலிருந்து இவர்கள், தங்களையும் அறியாமல், ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தின் பின்னே ஒளிந்துள்ள உண்மையை வெளிப்படுத்திவிட்டார்கள். 

“அரசமைப்புச் சட்டம் அனுமதிக்குமானால்,” இராணுவத்தை நடத்திடும் வேலையை ஆர்எஸ்எஸ்-ஏ எடுத்துக்கொள்ளும் என்பதும், சமூகத்தை இராணுவமயப்படுத்திடும் என்பதுமாகும். இது,ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் உலகநோக்கான “இந்து ராஷ்ட்ரம்” என்பதுடன் ஒருங்கிணைந்ததாகும். இந்துத்துவா கருத்தாக்கத்தை உருவாக்கிய வி.டி.சாவர்க்கரின் முகப்பு மேற்கோள் வாசகம், “இந்துக்களை இராணுவமயமாக்கு, தேசத்தை இந்துமயமாக்கு,” என்பதாகும்.

சாவர்க்கரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி,ஆர்எஸ்எஸ்-இன் நிறுவனரான ஹெட்கேவாரும்கூட, இந்துக்களை இராணுவமயப்படுத்தும் இத்தகைய சிந்தனைக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டிருந்தார். 

இந்து மகா சபையின் தலைவராக இருந்த அவருடைய ஆசான், பி.எஸ். மூஞ்சே, இத்தாலிக்குப் பயணம்செய்து, பாசிச சிந்தனையுடனும், பாசிச இராணுவபயிற்சி நிறுவனங்களுடனும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டார். பின்னர் மூஞ்சே இந்தியாவிற்குத் திரும்பியபின் 1943இல் நாசிக்கில்போன்சாலா இராணுவப் பள்ளியை அமைத்தார். 

அந்தப் பள்ளியும், கல்லூரியும் இப்போதும் நாசிக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இராணுவத்தில் சேரவிரும்பும் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. இந்தநிறுவனத்தை நடத்தி வரும் மத்திய இந்து மிலிட்டரி எஜுகேஷனல் சொசைட்டி தற்போதுஆர்எஸ்எஸ் உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. 

மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த லெப்டினன்ட் கர்னல் எஸ்.பி. புரோஹித், போன்சாலா இராணுவப் பள்ளியில் இராணுவத்தில் அதிகாரிகளாக(Short Service Commission Officers)சேரவிரும்புகிறவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை (special coaching clas)நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவை, இந்துத்துவாவைப் பின்பற்றக்கூடிய ஒரு இராணுவப் படையாக மாற்ற வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ்-இன் விருப்பமாகும். 

பகவத்தைப் பொறுத்தவரை, இந்திய ராணுவத்தில் உள்ள படைவீரனும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் உள்ள சுயம்சேவக்கும் ஒரேமாதிரிதான் செயல்பட வேண்டும். இப்போதுள்ள அரசமைப்புச்சட்டத்தின்கீழ், அவ்வாறு இராணுவத்தையும், ஆர்எஸ்எஸ்-ஐயும் ஒன்றிணைப்பது சாத்தியமல்ல. 
அதனால்தான், ஆர்எஸ்எஸ் இயக்கமும், கிரண் ரிஜிஜுவும் அளித்துள்ள விளக்கங்கள் மூலமாக, அரசமைப்புச்சட்டம் அனுமதிக்குமானால், ஆர்எஸ்எஸ் நாட்டின் இராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைத்திடும் என்று கூறியிருக்கிறார்கள். 

இதன் உட்பொருள் மிகவும்அச்சுறுத்தக்கூடியவை, ஆபத்தானவை. 

அதாவது, இவ்வாறு நடப்பதற்காக அரசமைப்புச்சட்டத்தையே மாற்றியமைக்க வேண்டும் என்று இவர்கள் கூறத் தொடங்கிவிட்டார்கள்.

இதானால் ஒன்றுபட்ட இந்தியா வுக்குத்தான் ஆபத்து.

இவ்வாறு பேசுபவர்கள் இந்திய மக்கள் நலனுக்காகப் போராடும் நக்சல் பாரிகளை ,அவர்கள் மக்கள் படையையும் அனுமதிப்பார்களா?
அல்லது இவர்கள் இந்துத்துவாக்கு போரிடுவதைப்போல் ,முஸ்லிம்களுக்க்காப் போரிடுவதாகக் கூறிக்கொள்ளும் ஜிகாதிகளையும்,சிமி,போன்ற அமைப்புகளையும் ஒத்துக்கொள்வார்களா?

அவைகள் மத தீவிரவாத இயக்கங்கள் என்றால் ஆர்.எஸ்.எஸ் மட்டும் புனிதம் காக்கும் போர்வீரர்களா?
இரண்டுமே மத தீவிரவாத அமைப்புகள்தான்.இந்தியாவுக்கு ஆபத்தை தருவதுதான்.

வெளிநாட்டு பாம்பு கடித்தால் மட்டும் மரணம்.உள்நாட்டு பாம்பு கடித்தால் மார்க்கண்டேய வரமா?
இரண்டுமே விடம்தான்.
இரண்டுமே அழிக்கப்பட்ட வேண்டியதுதான்.
அதாவது படம் எடுத்தாடி  கொத்தத்  தயாரானால்.

புனிதப் போர் என்ற  தீவிரவாதிகள் கொத்த ஆரம்பித்தால் அவர்களை அழிக்க ஆரம்பித்துள்ளது உலகு.
இங்கோ ஆர்.எஸ்.எஸ். படம் எடுக்க ஆரம்பித்து விட்டது 
=======================================================================================
ன்று,
பிப்ரவரி-17.

  • சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்றது(1867)

  • நியூஸ் வீக் முதலாவது இதழ் வெளிவந்தது(1933)

  •  சீன குடியரசுக்கும், வியட்நாமுக்கும் இடையே போர் ஆரம்பமானது(1979)

  • விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000)

  • கொசோவா விடுதலையை அறிவித்தது(2008)
========================================================================================
காவிரி வழக்குகளின் கதை

கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. 
இது தொடர்பாக மெட்ராஸ் - மைசூரு மாகாணங்களுக்கு இடையே கடந்த 1892-ஆம்ஆண்டில் முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. 
இந்த ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து 1924-ம் ஆண்டு மீண்டும் 50 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அது 1973-இல் காலாவதியானதால், மீண்டும்சிக்கல் எழுந்தது. 
காவிரி நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக, தமிழக - கர்நாடக மாநிலங்கள் இடையே, அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, 1990 -ஆம் ஆண்டு ஜூன் 2-இல் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. 
இந்த நடுவர் மன்றத்தில் கர்நாடகா 465 டி.எம்.சி., தமிழகம் 566 டி.எம்.சி., கேரளா 99.8 டி.எம்.சி., புதுச்சேரி 9.3 டி.எம்.சி. என்றஅளவில் தண்ணீர் கேட்டன. 
அதைத்தொடர்ந்து 1991-ஆம் ஆண்டு,ஜூன் 25-ஆம் தேதி, காவிரி நடுவர்மன்றம், இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. 

205 டிஎம்சிதண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என அதில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து கர்நாடகத்தில் பெரும் போராட்டம் வெடிக்க தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.நடுவர் மன்றத்தின் இந்த உத்தரவை கர்நாடகம் அமல்படுத்தவில்லை. 
இதனால்,1998-இல் தனியாக காவிரி நதிநீர் ஆணையம் என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. 
இதனிடையே, காவிரி விவகாரத்தில், கடந்த 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி தனது இறுதித் தீர்ப்பை காவிரி நடுவர்மன்றம் அறிவித்தது.
நடுவர் மன்றத்தின் இந்த தீர்ப்பில், காவிரிமூலம் கிடைக்கும் மொத்த நீர் 740 டி.எம்.சி.என்று கணக்கிடப்பட்டு, அதில் தமிழகத்திற்கு 419 டி.எம்.சி., கர்நாடகத்திற்கு 270 டி.எம்.சி.,கேரளாவுக்கு 30 டி.எம்.சி., புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி., மீதமுள்ள 14 டி.எம்.சி. இயற்கை வளத்திற்கு என்று பிரித்தளிக்கப்பட்டது.
காவிரியில் இருந்து தமிழகம் பெறும் ஒட்டுமொத்த நீரான 419 டி.எம்.சி. தண்ணீரில் 192 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்கவேண்டுமென்றும் நடுவர் மன்றம் கூறியது. 
மேலும், தமிழகத்திற்கு உரிய 192 டி.எம்.சி.தண்ணீரை, ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி.,ஜூலையில் 34 டி.எம்.சி., ஆகஸ்ட்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 22 டி.எம்.சி, நவம்பரில் 15 டி.எம்.சி., டிசம்பரில் 8 டி.எம்.சி., ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 2.5 டி.எம்.சி. என்ற அடிப்படையில் கர்நாடகம் வழங்க வேண்டும் என்றும் நடுவர் மன்றம் வரையறுத்தது.
ஆனால், இந்த தீர்ப்பில் திருப்தியில்லை என்று தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுமே உச்சநீதிமன்றத்திற்குச் சென்றன.
192 டி.எம்.சி. நீர் போதாது என்பதால் கூடுதலாக 50 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாகதிறந்து விட வேண்டும் என்று நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 
அதுபோல் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்ட நீரில் 192 டி.எம்.சி. என்பதை132 டி.எம்.சி.யாக குறைக்க வேண்டும்; தங்களுக்கு கூடுதலாக 60 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று கர்நாடகமும், இதேபோல கேரளா, புதுச்சேரி அரசுகளும் உச்சநீதிமன்றம் சென்றன.இவ்வழக்கில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி இறுதி விசாரணையை துவக்கியது. 
28 வேலை நாட்களில் விசாரணை முடிக்கப் படும் என்று அப்போதே தெரிவித்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் தாங்கள் அளிக்கும்தீர்ப்பே இறுதியாக இருக்கும் என்றும், மீண்டும் இவ்விவகாரம் நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்படாது என்றும் அறிவித்தனர்.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, கர்நாடகத்தின் சார்பில்மூத்த வழக்கறிஞர் நாரிமன், மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோர் இவ்வழக்குகளில் ஆஜராகிவாதாடினர். 
கடந்த 2017 செப்டம்பர் 20-ஆம் தேதியுடன் விசாரணைகள் அனைத்தும்முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையிலேயே, வெள்ளிக்கிழமையன்று தனது இறுதித் தீர்ப்பில், காவிரியில்தமிழகத்திற்கு உரிய பங்கை 14.75 டி.எம்.சி. குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு 15 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்பதால்வருடத்துக்கு 15 டி.எம்.சி. என்ற கணக்கின்படி225 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் இழக்கும்நிலை ஏற்பட்டுள்ளது.
ஊடகங்கள் யாருக்கு ஆதரவாக செய்தியிடுகின்றன?
======================================================================================
இதே நாளில்,
1996 - செஸ் விளையாடுவதற்கென்றே ஐபிஎம் நிறுவனம் உருவாக்கிய சூப்பர் கம்ப்யூட்டரான டீப் ப்ளூவை, அன்றைய உலகச் சாம்பியன் காரி காஸ்பரோவ் 4-2 என்ற புள்ளிக் கணக்கில்தோற்கடித்தார். வழக்கமான நேரக்கட் டுப்பாடுகளுடன் விளையாடப்பட்ட ஆறு சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின் முதல்சுற்றில் டீப் ப்ளூ காஸ்பரோவைத் தோற்கடித்தது. 

அடுத்தடுத்த சுற்றுக்களில் சுதாரித்த காஸ்பரோவ், மூன்றில் வென்று, இரண்டை சமன் செய்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎம் இந்தக் கணினியை டீப்பர்ப்ளூ என்ற பெயருடன் மிகவலுவாக மேம்படுத்தியது. 

மே 1997இல் நடைபெற்ற அடுத்தபோட்டியில் இது காஸ்பரோவைத் தோற்கடித்து, உலகச் செஸ் சாம்பியனைத் தோற்கடித்த முதல் கணினி என்ற புகழைப் பெற்றது. 
இத்தகைய ஒரு கணினியை உருவாக்குவதற்கான ஆய்வு 1985இலேயே சிப் டெஸ்ட் என்ற பெயரில் கார்னகி மெலான் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. டீப் தாட் (ஆழ்ந்த சிந்தனை) என்ற வடிவத்தை உருவாக்கியிருந்த இந்த ஆய்வுக்குழுவினரை, 1989இல் ஐபிஎம் தன் நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டது. 

120 மெகா ஹெர்ட்ஸ் திறனுள்ள 30 மைக்ரோ ப்ராசசர்களைக் கொண்ட இக்கணினியில் செஸ் விளையாட்டுக்கென 480 சிறப்பு சிப்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஐபிஎம் ஏஐஎக்ஸ் (அட்வான்ஸ்ட் இண்ட்டராக்டிவ் எக்சிகியூட்டிவ்) என்ற இயங்குதளத்தில் இயங்கிய இது, அன்றைய உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்களில் 259ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. 

இதை உருவாக்குவதில் உதவிய கிராண்ட் மாஸ்டர் ஜோ பெஞ்சமின், 7 லட்சம் கிராண்ட் மாஸ்டர் போட்டிகளின் விபரங்களை இதில் தொகுத்திருந்தார். 
அப்போட்டிகள் பற்றிய விபரங்களை காஸ்பரோவ் அறிய விரும்பினாலும் ஐபிஎம் தர மறுத்துவிட்டது. அன்று கணினியின் திறன் வன்பொருளைச் சார்ந்திருந்த நிலையில் நொடிக்கு 20 கோடி நகர்த்தல்களைக் கணிக்கும் திறனைப் பெற்றிருந்தது டீப் ப்ளூ. 

ஆனால், நொடிக்கு வெறும் 80 லட்சம் நகர்த்தல்களைக் கணிக்கும் டீப் ஃப்ரிட்ஸ் என்ற கணினி, திறன்மிகு மென்பொருட்களின் உருவாக்கத்தால், 2006இல் அன்றைய உலகச் சாம்பியன் விளாடிமிர் கிராம்னிக்கைத் தோற்கடிக்க முடிந்தது.
==========================================================================================