அமெரிக்க மயமாக்கல்

=========================================
"தகவல் தொழில் நுட்பக்க காலம். உலகம் சின்ன கிராமத்தை விட சுருங்கி விட்டது.
 எனவே உலகமயமாக்கல் தவிர்க்க முடியாதது" என்று தண்ணீர் குடிக்காமல்  பொருளாதாரம் பேசும்  நவீன பொருளாதாரவாதிகவனத்திற்கு இச்செய்தி.
“சீனாவின் இறக்குமதிகளுக்கு 60 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி வரி விதித்திருக்கிறது அமெரிக்கா, இதனால் ஒரு வர்த்தக யுத்தம் துவங்கியிருக்கிறது.
 இது  உலக அளவில் பங்குச் சந்தைகளில் சரிவைத் தந்திருக்கிறது” என்பதுதான் இன்றைய முக்கிய செய்தி.
உலகமயமாக்கல் என்றால் எந்த நாடும் எந்த நாட்டிலும் தனது பொருட்களை விற்கலாம்.அதற்கு தடை கிடையாது என்றுதான் காட் என்ற அமெரிக்க தயாரிப்பு ஒப்பந்தம் உலகவங்கி மூலம் நடைமுறைக்கு கொண்டுவந்தது.

ஆனால் சீனப் பொருட்களுக்கு மட்டும் அதிக வரி எதற்கு?
இது உலகமயமாக்கல் என்று அமெரிக்கா தந்த மகாத் தத்துவத்திற்கே  எதிரானது அல்லவா?

 உண்மையில் உலகில் நடந்து கொண்டிருப்பது உலகமயமாக்கல் அல்ல.
   உலகமயமாக்கல் என்ற போர்வையில் அமெரிக்கமயமாக்கல். 
இதுவரை எதிர்ப்பில்லாமல் உலகநாடுகளை தனது பொருட்களை வாங்க வைத்து சுரண்டிக்கொழுத்து வந்த அமெரிக்கா அதற்கு போட்டியாக காலம் இறங்கி  சீனாவிலிருந்து சவால் வரும்போது
அமெரிக்காவானது “சுதந்திர வர்த்தகம்” எனும் தனது தத்துவத்தை காலாவதியாக்கி விட்டு சீனாவை .அடக்கப் பார்க்கிறது.
தனது நாட்டில் மக்கள் சுவைக்க,உண்ண  விரும்பாத ,குப்பைக்கழிவாகும் கோழிக்கால்களை (சப்பை )இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தனது கெடுபிடியை செய்கின்ற அமெரிக்கா ,இந்திய பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய விடுமா என்ன?
விவசாய உணவுப் பொருட்களில் தன்னிறைவு அடைந்து ஏற்றுமதிக்கு வழிபார்த்துக்கொண்டிருந்த இந்தியாவை  மோடி தலைமை ஏற்றவுடன் விவசாய நிலங்களை கரப்பரேட்களுக்கு தாரை வார்க்கவும்,விவசாயிகளுக்கு தொடர்ந்து வந்த அணைத்து மானியங்களை,சலுகைகளையும் நீக்கச் செய்து விவசாயிகளை தற்கொலை செய்யவும்,விவசாயத்தை விட்டு அனாதைகளாக பெருநகரங்களில் கூலிகளாக அலையவும்  செய்தது அமெரிக்காதான் .
அதன் விளைவுகளைத்தான் இன்று இந்தியா அனுபவித்து வருகிறது.விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்வது என்ற திட்டத்தின் ஒரு பங்குதான் காவிரி நீரில் மோடி அரசு நடத்தும் கொடூர சதுரங்க ஆட்டம். 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெயரைக் கெடுக்காதீர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏதோ ஓர் அதிகாரமற்ற குழுவை அமைக்கப் போகிறதாம் மோடி அரசு! இதை பெருமையோடு சொல்லியிருக்கிறார் தமிழிசை.
இத்தனை ஆண்டுகள் போராடி அதிகாரம் உள்ள அந்த வாரியம் அமைக்கும் தீர்ப்பை பெற்ற பிறகும் அதை ஒழித்துக்கட்டும் வேலையைச் செய்கிறது பாஜகஅரசு.
 தமிழச்சியாய் பிறந்து, தமிழிசை எனும் பெயர் வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்ய எப்படித்தான் மனம் வருகிறதோ இவருக்கு? 

இவர் தந்தை குமாரி அனந்தன் தமிழருக்காய் படுபட்டதை எல்லாம் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார் தமிழிசை.தமிழுக்காய்,தமிழருக்காய் பாடுபட்டவருக்கு இப்படி ஒரு மகளா?
இன்னும் ஏன் தமிழை தன பெயரில் வைத்துக்கொண்டு கருங்காலியாக இருக்கிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோ(ச)டியின்  நண்பர்கள்.
“மோசடி தெரியவந்த இரண்டு வாரங்களில் அதை ரிசர்வ் வங்கிக்கு  தெரிவிக்க வேண்டும் என்பது வங்கிகளுக்கான விதி. 
கனிஷ்க் நகைக்கடையின் ரூ824 கோடி மோசடி 2017 மேயில் தெரிய வந்தும் அதை ரிசர்வ் வங்கிக்கு ஸ்டேட் வங்கி சொன்னது நவம்பரில்தான்.
எதற்காக , ஏன் தாமதித்தது என்று ஸ்டேட் வங்கி என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த நகைக்கடை அதிபர் பூபேஷ் ஜெயினுக்கும் மத்திய பாஜக ஆட்சியாளர்கள் மற்றும் வங்கி உயர் அதிகாரிகளுக்கும்இடையிலான தொடர்புதான் இந்த தாமதத்துக்கு காரணமாம்..
வேறு  தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை ? 
நமது பொருளாதார வாழ்வில் ஒரு பெரும் எதிரியாக முளைத்திருக்கிறது இந்த மோடி பாஜக அரசு-பெரும்முதலாளிகள் கள்ளக்கூட்டு முதலாளித்துவம்.
=======================================================================================
ன்று,
மார்ச்-26.
  • உலகில் முதன்முறையாக  வாகன ஓட்டுனர் தேர்வு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது(1934)
  • ஜொனாஸ் சால்க், போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்(1953)
  • வங்கதேச விடுதலை மற்றும் தேசிய தினம்(1971)
  • மியான்மரின் புதிய தலைநகராக நாய்பிடோ நகரம் ராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது(2006)
========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?