"மனு - கௌடில்யர் - ஜிஎஸ்டி" சிறு குறிப்பு வரைக.
மாணவர்களின் சுயசிந்தனையை உருவாக்கும் கருவி தான் கல்வி. வரலாறை திருத்தி எழுதுவதுதான் தற்போதைய இந்துத்துவா அறிஞர்களின் முழு நேரக்கடமையாக உள்ளது.
பாடத்திட்டத்தின் வாயிலாக உண்மைத் தரவுகள், மற்றும் நிலை நாட்டப்பட்டுள்ள தகவல்களை அளிப்பதன் மூலம், இவைகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு சுய முடிவுக்கு மாணவர்கள் வர வழிவகை செய்திட கல்வி பயன்பட வேண்டும்.
இதன் வாயிலாகத் தான் கல்வி பகுத்தறியும் சமூகம் உருவாக்க பயன்படுத்தப்படும்.
இதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யினருக்கு கல்வி என்பது தத்துவார்த்த கோட்பாடுகளை உருவேற்றக்கூடிய ஒரு கருவி என்பதாகும்.
எனவே தான் தங்கள் குறிக்கோளான இந்து ராஷ்டிரம் அடைய, ஒட்டு மொத்த சமூகத்தை வகுப்புவாத மயமாக்கிட கல்வியை கருவியாக பயன்படுத்துகின்றனர்அதற்கேற்ப ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி தீவிரமாக ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரை காவிமயமாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் நான்காவது, ஐந்தாவது வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்கள், இந்துக்கள் தான் பூர்வகுடிகள் என்றும், குதுப்மினார் சமுத்திரகுப்தனால் கட்டப்பட்டது, அதன் உண்மையான பெயர் விஷ்ணு ஸ்தம்பம் என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் தரப்பட்டுள்ளது.
தொலைகாட்சிப் பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது முனிவர்கள் தமது யோக சக்தியினால் தங்களது ஞானக் கண் கொண்டு உலகில் நடப்பவைகளை உடனுக்குடன் அறிந்து சொல்பவர்களாக இருந்தனர்.
அதற்கு சான்றாக அஸ்தினாபுரத்தில் இருந்தபடியே போர்க்களத்தில் நடைபெறும் யுத்தத்தை உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பாக சஞ்சயன் திருதராஷ்டிர மாமன்னனுக்கு தெரிவித்த மஹாபாரதக் கதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதிகாச மனிதர்களை வரலாற்று மனிதர்களாக மாற்ற முயற்சிக்கும் புரட்டு வேலை இப்புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளதுஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, கல்வியை காவிமயமாக்க ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி கடைபிடிக்கும் பாடத்திட்டம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு மேற்கூறியவைகள் சான்று பகர்கின்றன. ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் வரலாற்று பாட நூல்களை திருத்தி அமைக்கும் பணியினில் ஈடுபட்டனர்.
ஜோதிடக் கல்வி, புரோகிதக் கல்வி, வேதக் கணிதம் முதலான அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கைகளை பாடத்திட்டங்களாக திணித்து வருகினறனர்.
5 ஆண்டுகளுக்கு முன்புவரை பாஜக நுழைய முடியாத அரசியல் பூமியாக விளங்கியது திரிபுரா.
2013 ஆம் ஆண்டு முதல் திரிபுராவில் காலூன்றுவதற்காக பாஜகபெருமளவில் பணத்தைச் செலவழித்ததுடன் பிற கட்சிகளிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்கி முயற்சியை மேற்கொண்டு வந்தது.
அதுமட்டுமல்லாமல் பிரிவினைவாத சக்திகளான ஐவிஏஎஃப் கட்சியுடனும் கூட்டணி அமைக்க அது தயங்கவில்லை.
யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என்றநிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் திரிபுராவிலும் பாஜக-விற்கு பாதை அமைத்துக் கொடுத்தது.
கடைசியாக ஆட்சியைக் கைப்பற்றவும் பாஜக-வால் முடிந்துள்ளது. கடந்த முறை 10 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது ஒரு இடத்தைக்கூடப் பெறமுடியவில்லை.
2013 முதலே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பாஜகவில் இணையத் தொடங்கினர். 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்தபிறகு அதன்வேகம் அதிகரித்தது.
10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் 2016ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார்கள்.
2017ல் அங்கிருந்து பாஜகவிற்குத் தாவினார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்)ல் சேர விருப்பம் தெரிவித்தபோது அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சிபிஐ(எம்)கேட்டுக் கொண்டது.
ஆனால் அவரும் பாஜகாவில் இணைந்துவிட்டார்.
மற்றொருவர் பாஜகவில் இணையாமலேயே அந்தக்கட்சிக்காகப் பணியாற்றி வந்தார்.
இவ்வாறாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது.
பாரம்பரியமாகக் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள் அதிகம்பேர் கட்சியில் இருந்தபோதிலும் ஒரு அரசியல் கட்சி என்ற நிலையில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாகிப்போனது.காங்கிரஸ்-டியுஜெஎஸ் கூட்டணி அதிகாரத்தில் இருந்த 1988-92 காலகட்டத்தைத் தவிர, திரிபுராவில் நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடைபெற்றன.
பிற வடகிழக்கு மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பல்வேறு இன-மதத்தைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த மாநிலம் என்ற பெருமை திரிபுராவிற்கு மட்டுமே உள்ளதாகும்.
மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சமுதாய-இன ஒற்றுமை என்ற சூழல் சாத்தியமானது பிரிவினைவாத சக்திகளான டிஎன்வி, ஏடிடிஎஃப், என்எல்எஃப்டி, ஐவிஎஃப்டி ஆகிய இயக்கங்களுக்கு எதிராக சிபிஐ(எம்)மும் இடதுசாரிகளும் நடத்திய நிரந்தரமான கொள்கைப் பிரச்சாரங்களின் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டியதன்மூலமாகும்.
இம்முயற்சிகளுக்கிடையே இடது முன்னணி நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் தலைவர்களையும்இழக்கநேரிட்டது.
இன்று,
மார்ச்-04.
பாடத்திட்டத்தின் வாயிலாக உண்மைத் தரவுகள், மற்றும் நிலை நாட்டப்பட்டுள்ள தகவல்களை அளிப்பதன் மூலம், இவைகளை ஆய்வுக்கு உட்படுத்தி ஒரு சுய முடிவுக்கு மாணவர்கள் வர வழிவகை செய்திட கல்வி பயன்பட வேண்டும்.
கௌடில்யர் |
இதன் வாயிலாகத் தான் கல்வி பகுத்தறியும் சமூகம் உருவாக்க பயன்படுத்தப்படும்.
இதற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.யினருக்கு கல்வி என்பது தத்துவார்த்த கோட்பாடுகளை உருவேற்றக்கூடிய ஒரு கருவி என்பதாகும்.
எனவே தான் தங்கள் குறிக்கோளான இந்து ராஷ்டிரம் அடைய, ஒட்டு மொத்த சமூகத்தை வகுப்புவாத மயமாக்கிட கல்வியை கருவியாக பயன்படுத்துகின்றனர்அதற்கேற்ப ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி தீவிரமாக ஆரம்பக் கல்வி தொடங்கி உயர் கல்வி வரை காவிமயமாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.
பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் நான்காவது, ஐந்தாவது வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்கள், இந்துக்கள் தான் பூர்வகுடிகள் என்றும், குதுப்மினார் சமுத்திரகுப்தனால் கட்டப்பட்டது, அதன் உண்மையான பெயர் விஷ்ணு ஸ்தம்பம் என்று முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் தரப்பட்டுள்ளது.
தொலைகாட்சிப் பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது முனிவர்கள் தமது யோக சக்தியினால் தங்களது ஞானக் கண் கொண்டு உலகில் நடப்பவைகளை உடனுக்குடன் அறிந்து சொல்பவர்களாக இருந்தனர்.
அதற்கு சான்றாக அஸ்தினாபுரத்தில் இருந்தபடியே போர்க்களத்தில் நடைபெறும் யுத்தத்தை உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பாக சஞ்சயன் திருதராஷ்டிர மாமன்னனுக்கு தெரிவித்த மஹாபாரதக் கதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதிகாச மனிதர்களை வரலாற்று மனிதர்களாக மாற்ற முயற்சிக்கும் புரட்டு வேலை இப்புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளதுஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, கல்வியை காவிமயமாக்க ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி கடைபிடிக்கும் பாடத்திட்டம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு மேற்கூறியவைகள் சான்று பகர்கின்றன. ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் வரலாற்று பாட நூல்களை திருத்தி அமைக்கும் பணியினில் ஈடுபட்டனர்.
ஜோதிடக் கல்வி, புரோகிதக் கல்வி, வேதக் கணிதம் முதலான அறிவியலுக்கு புறம்பான நம்பிக்கைகளை பாடத்திட்டங்களாக திணித்து வருகினறனர்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NATIONAL COUNCIL OF EDUCATIONAL RESEARCH AND TRAINING) கீழ் இயங்கும் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்டத்தில் ஹரப்பா நாகரிகம் வேத கால நாகரிகம் என்றும், ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், 1757-1857 காலகட்டத்தில் ஏற்பட்ட சமூகப் பதட்டத்திற்கு விதவை மறுமணச் சட்டம், கிறிஸ்துவ மிஷனரிகள் மற்றும் வேலையில்லாத திண்டாட்டம் ஆகியவைகளே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையோ அதற்கு மாறாக உள்ளது.
அன்றைய காலகட்டத்தில் பெண் உடன்கட்டை ஏறும் சதி பழக்க வழக்கத்திற்கு எதிராக உருவான கிளர்ச்சியே சமுக பதட்டம் தோன்ற காரணமாகியது.
சாவர்க்கர் |
மேலும் ஸ்டாலினின் வர்க்க சர்வாதிகாரத்தின் எதிர் வினையாகத்தான் நாசிசமும், பாசிசமும் தோன்றியது என வரலாறு திரித்து கூறப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில எட்டாம் வகுப்பு பாடத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்று சிறை சென்ற ஒரே புரட்சியாளர் சாவர்க்கர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சாவர்க்கர் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தன்னை விடுதலை செய்யக் கோரி பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தவர் ஆவார்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு தன்னை விடுதலை செய்தால் பிரிட்டிஷ் மாகாராணிக்கு விசுவாசமானவனாகவும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட மாட்டேன் என்றும் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தவர்.மேலும் அசைவ உணவு உண்பதால் ஏற்படும் தீங்கு குறித்தும், உணவை எப்படி, எப்போது சாப்பிடவேண்டும், சாப்பிடுவதற்கு முன் என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்று விலாவாரியாக தெரிவிக்கிறது.
பத்தாம் வகுப்பு பாடத்தில் பி.ஜே.பி.யின் தேர்தல் சின்னமான தாமரையை புகழ்ந்து பாடிய பாடல் இடம் பெற்றுள்ளது. காப்பரேட் சாமியார் பாபா ராம்தேவால் நடத்தப்படும் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்கள் சுதேசி பொருட்கள் எனவும், அதுவே தேச வளர்ச்சிக்கும், தேசப் பற்றுக்கும் அடையாளம் எனவும் கூறப்பட்டுள்ளது.
குஜராத் மாநில பள்ளி பாடப் புத்தகத்தில் காந்திஜியின் படுகொலை பற்றி தெரிவித்திருப்பது:“நாடு சுதந்திரமடைந்த பின்பு இந்தியாவில் பல மதக் கலவரங்கள் நிகழ்ந்தன. காந்திஜி தன முழு சக்தியையும் பயன்படுத்தி அதனை தடுத்திட முற்பட்டார்.
மனுதர்மம் |
பலர் இதை விரும்பவில்லை. ஜனவரி 30, 1948 அன்று கோட்ஸேயின் கரங்களினால் காந்திஜி கொலை செய்யப்பட்டார்.
”நாதுராம், காந்திஜியை படுகொலை செயயத் தூண்டிய ஆர்.எஸ்.எஸ்.சின் இந்துத்வா குறித்தோ, அக்கொலை வழக்கில் ஒரு குற்றவாளியாக உள்ள சாவர்க்கர் பற்றியோ ஒரு வரி கூட சொல்லப்படவில்லை.
அதே போல நாதுராமிற்கும் ஆர்.எஸ்.எஸ்.சிற்கும், இந்து மகாசபாவிற்கும் தொடர்பு இருந்த காரணத்தினால் இந்திய அரசால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டதும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் குஜராத் மாநில கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளும் ஆர்.எஸ்.எஸ்.சின் இதழான சாதனாவிற்கு சந்தா செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தற்போது இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக உயர்கல்வியில் காவிமயமாக்கும் செயலில் பி.ஜே.பி. அரசு ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் காசி இந்து பல்கலைக்கழகத்தில் (BANARAS HINDU UNIVERSITY) அரசியல் விஞ்ஞான முதுகலை பட்டப் படிப்பிற்கான (MASTER OF ARTS IN POLITICAL SCIENCE) தேர்வு வினாத் தாளில் “உலகமயமாக்கல் குறித்து சிந்தித்த முதல் இந்திய சிந்தனையாளர் மனு - விவாதிக்கவும்.” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதே போல முதுகலை முதல் பருவ (FIRST SEMESTER) மாணவர்களின் ஒரு பாடமாக ‘ தொன்மையான இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் சிந்தனைகள்’ (SOCIAL AND POLITICAL THOUGHTS OF ANCIENT INDIA ) என்ற பகுதியில் கேட்கப்பட்டுள்ள கேள்வியைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் காணப்படும் சரக்கு மற்றும் சேவை வரி(GOODS AND SERVICES TAX) குறித்து,
அல்லது உலகமயமாக்கல் குறித்து சிந்தித்த முதல் இந்திய சிந்தனையாளர் மனு குறித்து கட்டுரை வரைக’ என்பதே அக்கேள்வியாகும்.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத மாணவர் ஒருவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “பைத்தியக்காரத்தனமாகவும், ஜீரணிக்க இயலாததாகவுமான இக்கேள்விகள் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.
இதே போன்று கடந்த ஆண்டு வினாத் தாளில் “பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் விளைந்த நன்மைகள் மற்றும் ராமாயண கதாபாத்திர வீரர்கள் எவ்வாறு துல்லிய தாக்குதல் மூலம் எதிரிகளை வென்றனர்” என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் மத்தியில் உருவான கடும் எதிர்ப்பினால் பின்னர் இக்கேள்விகள் கேட்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டன” என்று தெரிவித்தார்.
மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்ததும், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்ததும், சிறு, குறுந் தொழில்கள் நசிந்தும், பொருளாதாரம் முடங்கியதும் தான் விளைந்த நன்மைகளாகும்.சாதாரணமாக இவைகளை பாடத்திட்டத்தை தாண்டி வெளியில் கேட்கப்பட்ட கேள்வியாக எடுத்துக் கொள்ள முடியாது.
கற்பனையான கருத்துருவாக்கத்தை மாணவர்களின் மீது திணிப்பதன் மூலம் அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்படுவதே இந்த நடவடிக்கைகள்.
மோடி அரசு தனது கொள்கைகள், நடவடிக்கைகள் ஏற்படுத்தியுள்ள நாசத்தை மதிப்பீடு செய்யப்படுவதை தடுக்கவும், புராண கதாபாத்திரங்களோடு இணைப்பதன் மூலம் தாங்கள் புனிதமானவர்கள், தாங்கள் செய்வது அனைத்தும் மக்களின் நன்மைக்கே என்ற போலியான பிம்பத்தை கட்டவும் முயல்கின்றனர்.
இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
வருங்கால இளைய தலைமுறையினரின் அனைத்தையும் பகுத்தறிவும் திறனை முற்றாக அழித்து கற்பனையான இந்துத்துவ வேதகாலத்தை இந்தியாவில் கொண்டுவர முயலும் பாஜகவை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவாரத்தின் செயல் தடுக்கப்பட வேண்டும்.இல்லையெனில் மூன்றாம் உலக நாடுகளைத்தாண்டி பாதாள உலகமாக இந்தியா மாறிவிடும்.இதுவரை பெற்ற வளர்சி காணாமல் போய் இந்தியர்கள் தேவர்,அசுரர் கற்பனைக்காலத்துக்குப்போய் தங்களுக்குள் சண்டையிட்டு இந்தியாவே இல்லாமல் போகும் நிலைதான் வரும்.
-ரமணி
நன்றி:தீக்கதிர்.
=================================================================================================================================
பண-அதிகாரபலம் வென்றது.
2013 ஆம் ஆண்டு முதல் திரிபுராவில் காலூன்றுவதற்காக பாஜகபெருமளவில் பணத்தைச் செலவழித்ததுடன் பிற கட்சிகளிலிருந்து ஆட்களை விலைக்கு வாங்கி முயற்சியை மேற்கொண்டு வந்தது.
அதுமட்டுமல்லாமல் பிரிவினைவாத சக்திகளான ஐவிஏஎஃப் கட்சியுடனும் கூட்டணி அமைக்க அது தயங்கவில்லை.
யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கலாம் என்றநிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் திரிபுராவிலும் பாஜக-விற்கு பாதை அமைத்துக் கொடுத்தது.
கடைசியாக ஆட்சியைக் கைப்பற்றவும் பாஜக-வால் முடிந்துள்ளது. கடந்த முறை 10 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது ஒரு இடத்தைக்கூடப் பெறமுடியவில்லை.
2013 முதலே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் பாஜகவில் இணையத் தொடங்கினர். 2014 ஆம் ஆண்டு பாஜக மத்தியில் அதிகாரத்திற்கு வந்தபிறகு அதன்வேகம் அதிகரித்தது.
10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் 6 பேர் 2016ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார்கள்.
2017ல் அங்கிருந்து பாஜகவிற்குத் தாவினார்கள்.
ஒரு சட்டமன்ற உறுப்பினர் சிபிஐ(எம்)ல் சேர விருப்பம் தெரிவித்தபோது அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சிபிஐ(எம்)கேட்டுக் கொண்டது.
ஆனால் அவரும் பாஜகாவில் இணைந்துவிட்டார்.
மற்றொருவர் பாஜகவில் இணையாமலேயே அந்தக்கட்சிக்காகப் பணியாற்றி வந்தார்.
இவ்வாறாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது.
பாரம்பரியமாகக் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பவர்கள் அதிகம்பேர் கட்சியில் இருந்தபோதிலும் ஒரு அரசியல் கட்சி என்ற நிலையில் காங்கிரஸ் மிகவும் பலவீனமாகிப்போனது.காங்கிரஸ்-டியுஜெஎஸ் கூட்டணி அதிகாரத்தில் இருந்த 1988-92 காலகட்டத்தைத் தவிர, திரிபுராவில் நடைபெற்ற அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களும் சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடைபெற்றன.
பிற வடகிழக்கு மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பல்வேறு இன-மதத்தைச் சார்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த மாநிலம் என்ற பெருமை திரிபுராவிற்கு மட்டுமே உள்ளதாகும்.
மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள சமுதாய-இன ஒற்றுமை என்ற சூழல் சாத்தியமானது பிரிவினைவாத சக்திகளான டிஎன்வி, ஏடிடிஎஃப், என்எல்எஃப்டி, ஐவிஎஃப்டி ஆகிய இயக்கங்களுக்கு எதிராக சிபிஐ(எம்)மும் இடதுசாரிகளும் நடத்திய நிரந்தரமான கொள்கைப் பிரச்சாரங்களின் மூலம் மக்களுக்கு நம்பிக்கையூட்டியதன்மூலமாகும்.
இம்முயற்சிகளுக்கிடையே இடது முன்னணி நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் தலைவர்களையும்இழக்கநேரிட்டது.
பழங்குடியினர்பழங்குடியினரல்லாதவர்கள், பல்வேறு மதநம்பிக்கையுள்ளவர்கள் ஆகியோரின் ஒற்றுமையே இடது முன்னணி அரசு மற்றும் திரிபுராவின் வளர்ச்சி ஆகியவற்றின் அடித்தளம்.இந்த அடித்தளத்தைத் தகர்ப்பதற்கு பாஜக இரட்டைத் தாக்குதலை நடத்தியது.
ஒரு புறம் இந்து-முஸ்லீம் ஒற்றுமையைத் தகர்ப்பது, மறுபுறம் பழங்குடியினர்-வங்காளிகள் என பிரிவினையைத் தூண்டுவது எனஇவ்விரு செயல்களையும் பாஜக தொடர்ந்து நடத்தியது. இந்து கோயில்களில் உள்ள விக்ரகங்களைச் சேதப்படுத்தியும், முஸ்லீம் மசூதிகளைச் சேதப்படுத்தியும் மாநிலத்தில் இனக்கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டது.
உதய்பூர் சப்-டிவிசனில் உள்ள டெபானியா, ஜாம்ஜூரி, ராஜ் தர்நகர்பெலோனியா சப்-டிவிசனில் உள்ள கபுர்ச்சாரா, சோனாமுரா சப்-டிவிசனில் தன்பூர்ஆகிய இடங்களில் இத்தகைய சம்பவங்களை பாஜக அரங்கேற்றியது. இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையுடன் வாழும் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களது திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியைப் பயன்படுத்தியது, பல்வேறு விதத்தில்பிரிவினையைத் தூண்டியது ஆகிய பின்புலத்தில் திரிபுராவில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது பாஜக.
ஆனாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 9லட்சத்து 81 ஆயிரத்து 11 வாக்குகளுடன், 42.6 சதவிகித வாக்குகளைப் பெற்றி ருந்தும் 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
திரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக, 9 லட்சத்து 89 ஆயிரத்து 875 வாக்குகளுடன் மொத்தம் 8ஆயிரம் வாக்குகளை மட்டும் அதிகமாகப் பெற்று 43 இடங்களைப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதுதான் மக்களாட்சியின் விந்தை.
======================================================================================
மார்ச்-04.
- சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை கண்டறிந்தனர்(1275)
- எமிலி பேர்லீனர், மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்(1877)
- பிரிட்டனின் முதலாவது மின்சார டிராம் வண்டி, கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது(1882)
- கொலம்பியா 16 விண்கலம் ஏவப்பட்டது(1994)
- அசாம் மாநிலம், அசோம் என பெயர் மாற்றப்பட்டது(2006)