பியூஸ் கோயல் ; ரூ.650 கோடி மோசடி பின்னணி

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த அவரது  ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் ரூ. 650 கோடி அளவிற்கு கடன்கொடுத்திருப்பதும், அந்த கடன்தொகையை ‘ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனம்’ இப்போது வரை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.

வங்கிகள் கோடிக் கணக்கில் கடன் அளித்ததற்கும், அக்கடனை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதற்கும் ஷிர்தி நிறுவனத்திற்கு, பியூஷ் கோயலுடன் இருக்கும் நெருக்கமே காரணம்என்பதுடன், ஷிர்தி நிறுவனத்திடமிருந்து, கோயலின் மனைவி 1 கோடியே 59 லட்சம் பண ஆதாயம்அடைந்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.

புதுதில்லியிலிருந்து வெளியாகும் ‘தி ஒயர்’ இணைய இதழ்,இந்த தகவல்களை வெளியிட்டுள் ளது.மும்பையைச் சேர்ந்த ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் என்னும் தகடுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநராக இன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 2010 ஜூலை வரை இருந்து வந்தார். 

அந்த சமயத்தில் அந்நிறுவனம் பொதுத்துறை வங்கிகள் பலவற்றிடமிருந்து 650 கோடி ரூபாய்அளவிற்குக் கடன்கள் பெற்றுள் ளது. ஆனால் அவற்றை அது திருப்பிச் செலுத்தவில்லை. 

ஷிர்தி நிறுவனமானது, பியூஷ் கோயல் அதன் தலைவராக இருந்தகாலத்திலிருந்தே வாங்கிய கடன் களைத் திருப்பிச் செலுத்தாமல் தாமதப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டது. 

இந்நிறுவனம் யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி என ஏராளமான வங்கிகளில் பல நூறுகோடிகளை கடன் வாங்கியுள்ளது. பியூஷ் கோயல் இதற்கு முன்புஅரசாங்கத்தின் இரு வங்கிகளுக்கு அரசின் பிரதிநிதியாக இயக்குநர் குழுவில் இருந்திருக்கிறார். 

ஒன்று, பரோடா வங்கி. இதில் அவர் வாஜ்பாயி தலைமையிலிருந்த தேசியஜனநாயக கூட்டணி அரசாங் கத்தின் போதும், பின்னர் 2004-2008-இல் மன்மோகன்சிங் அரசாங்கத்தின் போது பாரத ஸ்டேட் வங்கியிலும் இருந்திருக்கிறார். 2008-இல்தான் பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வெளியேறிய பிறகு, ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநராகவும் கோயல் மாறியிருக்கிறார்.
2010-இல் கோயல், பாஜகவின்பொருளாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்படுகிறார். 

பின்னர் அதே ஆண்டில் அவர் நாடாளுமன்ற நிதிக் குழுவிற்கும் (parliamentary committee of finance)நியமிக்கப்படுகிறார். இந்தக் குழுதான்வங்கிகள் உட்பட நிதிநிறுவனங்களின் செயல்பாடுகளை மேற் பார்வை பார்த்திடும் குழுவாகும்.


எனவே, கோயலின் செல்வாக்குபேரிலேயே ஷிர்தி நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அளவிற்கு வங்கிக் கடன்கள் கிடத்துள்ளன.
ஆனால், ஷிர்தி நிறுவனத்தின் துவக்காளரான (பிரமோட்டர்) ராகேஷ் அகர்வால் இதனை மறுத்துள்ளார். “பியூஷ் கோயல் 1994-ஆம்ஆண்டிலிருந்தே என் நெருங்கிய நண்பர்; அவரின் குடும்பத்தினரும் மிகவும் நெருக்கம்; இருந்தாலும் எவ்விதமான பயனையும் பெறுவதற்கு நான் அத்தகைய நட்பைப் பயன்படுத்திக் கொண்டதில்லை” என்று ‘தி வயர்’ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்திற்கு பியூஷ் கோயல், 2008 ஏப்ரலிலிருந்து 2010 ஜூலை வரை இயக்குநராக இருந்தார் என்பது அந்நிறுவனங்கள் சார்பாக அரசாங்கத்தின் ‘ரிஜிஸ்ட்ட்ரார் ஆப் கம்பெனிஸ்’க்கு அளித்துள்ள அறிக்கைகளிலிருந்து தெரியவருகிறது. 2009 செப்டம்பர் 30 வரை பியூஷ்கோயல் அதன் முழுநேர இயக்குநராக இருந்திருக்கிறார். பின்னர் தான் ராஜினாமா செய்துள்ளார்.

எனினும் செயல்படா இயக்குநராக தொடர்ந்துஇருந்து வந்திருக்கிறார்.
ராகேஷ் அகர்வால் கூறுவதே உண்மை என்று வைத்துக் கொண்டாலும், வேறு சில கேள்விகளுக்கு அவரிடம் பதில் இருப்பதாக தெரியவில்லை.கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘ஷிர்தி’ நிறுவனம் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகைகள் எதையும் செலுத்தாமல் உள்ளது. 

பிராவிடண்ட் பண்ட் ரூ. 4 கோடி உட்பட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி, எம்ப்ளாயி ஸ்டேட் இன்சூரன்ஸ் மற்றும் அரசாங்க வரிகளையும் கட்டவில்லை.ஆனால், அதே காலக்கட்டத் தில், ஷிர்தி நிறுவனம் பியூஷ் கோயலின் மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமான ‘இண்டர்கான் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு எவ்விதப் பாதுகாப்புப் பத்திரங்களையும் பெறாமல் 1.59 கோடி ரூபாய் கடனாகக் கொடுக்கிறது என்றால், இதனை எவ்வாறுபுரிந்து கொள்வது? 
கோயல் செய்தஉதவிக்காக, அவரது மனைவியும்,மகனும் ஷிர்தி நிறுவனத்திடமிருந்து பண ஆதாயம் பெற்றார்கள் என்பதல்லாமல் வேறு என்ன? 


இதுதற்போது அம்பலமாகி இருக்கிறது.
ஆனால், இந்தக் கடன் மேற்படி‘இண்டர்கான் அட்வைசர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்னும் நிறுவனத்திற்கு நட்பின் அடையாளமாகக் கொடுக்கப்பட்டதாக ஷிர்தி இண்டஸ்ட்ரிஸ் உரிமையாளர்கள் ‘தி ஒயர்’ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். 

தன்னுடைய நிறுவனம் அரசாங்கத்தின் வங்கிகளுக்குக் கடன்தொகைகளைத் திருப்பிச் செலுத்தாததற்கும், பியூஷ் கோயலின் மனைவிக்கும் மகனுக்கும் சொந்தமுள்ள நிறுவனம், தங்கள்நிறுவனத்திற்குக் கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்தாததற்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று அகர்வால் மறுக்கிறார்.கம்பெனியின் பதிவுருக்களைப் பரிசீலிக்கும்போது, பியூஷ் கோயலும், அவர் மனைவி சீமா கோயலும் 2009 பிப்ரவரியிலிருந்து 2013டிசம்பர் வரை ‘சஜால் ஃபைனான்ஸ்’ மற்றும் ‘இன்வெஸ்ட்மெண் ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்னும்கம்பெனியின் இயக்குநர்களாக இருந்தார்கள் என்பது தெரியவருகிறது.

இவர்களுக்குப் பின்னர் இவற் றின் நிறுவனர்களாக கௌரவ் ராகேஷ் அகர்வால் மற்றும் அமீத் முகேஷ் பன்சால் வந்தார்கள். 
கௌரவ் ராகேஷ் அகர்வால் என்பவர் ராகேஷ் அகர்வாலின் மகன்.இந்த அகர்வால், 2011 ஆகஸ்ட்டிலிருந்து 2013 ஏப்ரல் வரைபிரதீப் மெட்டல்ஸ் என்னும் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இருந்தார் என்பதும், பிரதீப் மெட்டல்ஸ் நிறுவனம், பியூஷ் கோயலின் சகோதரர் பிரதீப் கோயலால் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால், “பிரதீப்பும் என் நெருங்கிய நண்பர்தான்; நான் என்னுடைய சொந்த பிசினசில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அதிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்” என்று அகர்வால் கூறுகிறார்.

எந்த வகையில் பார்த்தாலும் ஷிர்தி நிறுவனத்துடன், பியூஸ் கோயல் குடும்பத்திற்கு இருக்கும் நெருக்கத்தை மறைக்க முடியாது என்பதுதான் உண்மை.எனவே, பியூஷ் கோயல் இயக்குநராக இருந்த நிறுவனம் 650 கோடிரூபாயை அரசாங்கத்தின் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தாது இருப்பது தொடர்பாகவும், கோயலின் மனைவிக்கு அந்த நிறுவனம் அளித்துள்ள கடன் தொகை சம்பந்தமாகவும், பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்திட வேண்டும் என்றும் அமைச்சர் பொறுப்பிலிருந்து பியூஷ் கோயல் அகற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இப்பிரச்சனையை பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் எழுப்பியுள்ளார். 
                                                                                                                                          - the wire .

சீதை: நல்லவேளை ராவணன் என்னைக் கடத்தினான்.
இதுவே உங்க பக்தர்களா இருந்தா...!


எடுபடாது இந்த நாடகம்


ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து நாட்டு மக்களும் எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்துவது ஜனநாயக நடைமுறையாகும். 

பாஜக ஒரு வித்தியாசமான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சியல்லவா? அது எதிர்க்கட்சிகளைக் கண்டித்து தனது எம்பிக்கள் ஏப்ரல் 12 அன்று தங்கள் தொகுதிகளில் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமென்று அறிவித்திருக்கிறது. 

அத்துடன் பிரதமர்நரேந்திர மோடியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார் என்றும் கூறியுள்ளது.
எதற்காக இந்தப் போராட்டம்? 

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி விட்டனவாம். கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது என்ன நடந்தது என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவைகளின் செயல்பாடு, பணிநாட்கள் குறைப்பு, நாடாளுமன்ற விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க மறுப்பது மட்டுமின்றி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதை பிரதமர் மோடி தவிர்ப்பது. 

ஆனால் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் தனது பேச்சை எல்லோரும் கேட்கவேண்டுமென்று திணிப்பது தானே நடந்து கொண்டிருக்கிறது.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து பாஜக கூட்டணியிலிருந்து விலகி பிரதமர் மோடி அரசு மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்தது தெலுங்குதேசம், காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும்நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தன. 

இது தவிர நீரவ் மோடி உள்ளிட்டோரின் வங்கிமோசடிகள், எஸ்.சி., எஸ்.டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அந்தச் சட்டத்தை பாதுகாத்தல் என பல்வேறு பிரச்சனைகளை இடதுசாரிக் கட்சிகளும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் எழுப்பின. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அனுமதித்து அதை எதிர்கொள்ளத் துணிவில்லாத 52 இன்ச் மார்பளவு பிரதமர் நரேந்திர மோடி அதிலிருந்து தப்பிக்கவே நாடாளுமன்ற அமளியை பயன்படுத்திக் கொண்டார். 
அதற்கு அதிமுகவும் அவருக்கு உதவி செய்தது. 

ஏனென்றால் தமிழகம் வரும் மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டினால் நாங்கள் பச்சைக் கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பிரசாத் கூறுவது எதைக் காட்டுகிறது? 

பாஜகவின் பரிவாரங்களில் ஒன்று போலவே நடந்து கொள்ளும் அதிமுகவையும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத பாஜகவையும் மக்கள் தண்டிப்பது உறுதி.

விமானத்திலேயே பறந்து கொண்டிருந்த பிரதமர் மோடி தேர்தல் காலத்தில் மக்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே உண்ணாவிரதம் எனும் திசைதிருப்பும் நாடகத்தை நடத்துகிறது பாஜக. 
ஆனாலும் இந்த நாடகம் எடுபடாது. 
அவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள்.
=======================================================================================
ன்று,
ஏப்ரல் -14.

  • நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார்(1828)

  •  அம்பேத்கர் பிறந்த தினம்(1891)

=======================================================================================

அம்பேத்கர்.
‘பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்’ என அழைக்கப்படும் ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’, 1891ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள், இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாவ் (இப்போது மத்தியபிரதேசத்தில் உள்ளது) என்ற இடத்தில், ராம்ஜி மாலோஜி சக்பாலுக்கும், பீமாபாயிக்கும் பதினான்காவது குழந்தையாக, ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை இராணுவப்பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
“மகர்” என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் ராம்ஜி அவர்கள், ‘சாத்தாராவில்’ உள்ள ஒரு பள்ளியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இளம் வயதில், தனி மண்பானையில் தண்ணிர் குடிப்பது; குதிரை வண்டியில் போகும்போது, தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் இறக்கிவிடப்பட்டது; பள்ளியில் படிக்கும்போது, ஒதுக்கிவிடப்பட்டது என பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்தார்.ஆனால், மகாதேவ அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியர், இவர்மீது அன்பும், அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், தன்னுடைய குடும்ப பெயரான ‘பீம்ராவ் சக்பால் அம்பாவடேகர்’ என்ற பெயரை, ‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’ என்று மாற்றிக்கொண்டார்.
1904 ஆம் ஆண்டு, இவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது.அங்கு “எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில்” சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார்.குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும், கல்வியை விடாமல் தொடர்ந்த அவர், 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு, பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்த அவர், 1912ல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிதுகாலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பரோடா மன்னர் ‘ஷாயாஜி ராவ்’ உதவியுடன் உயர்கல்வி கற்க அமெரிக்கா பயணம் ஆனார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற அம்பேத்கர் அவர்கள், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்” என்ற ஆய்விற்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.பின்னர் “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு” என்ற ஆய்வுக்கு,‘கொலம்பியா பல்கலைக்கழகம்’ அவருக்கு ‘டாக்டர் பட்டம்’ வழங்கியது. மேலும், 1921 ஆம் ஆண்டு “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்” என்ற ஆய்வுக்கு ‘முது அறிவியல் பட்டமும்’, 1923 ஆம் ஆண்டு “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வுக்கு ‘டி.எஸ்.சி பட்டமும்’ பெற்றார். பிறகு சட்டப் படிப்பில் ‘பாரிஸ்டர் பட்டமும்’ பெற்றார்.
1923 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்தியாவிற்கு திரும்பிய அம்பேத்கர் அவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், சமூதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என முடுவுசெய்தார். ஜூலை 1924ல், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக “பஹிஸ்கிருத ஹிதகாரிணி சபா” என்ற அமைப்பை நிறுவினார். இதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமூதாய உரிமைக்காக போராடினார். 1930 ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக புறப்படும் முன் அவர் கூறியது,“என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காக போராடுவேன் என்றும், அதே சமயத்தில் சுயராஜ்ய கோரிக்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்றும் கூறினார்.”
இரண்டாவது வட்டமேச மாநாட்டில், பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சனை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும், விகிதாச்சார பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினார். இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்தப்பட்ட சமூக வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் “இரட்டை வாக்குரிமை” முறை தாழ்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த காந்திஜி, உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, செப்டம்பர் 24, 1931 ஆம் ஆண்டு காந்திஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே “பூனா ஒப்பந்தம்” ஏற்பட்டு, தாழ்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக, பொது வாக்கெடுப்பில் தனி தொகுதி என முடிவுசெய்யப்பட்டது.
வர்ணாசிரம தர்மத்திலிருந்து தோன்றிய சாதியமைப்பையும், தீண்டாமை கொடுமைகளையும் எதிர்த்து தீவிரமாக போராடிய அம்பேத்கர் அவர்கள், 1927 ஆம் ஆண்டு தாழ்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைக்கொடுமைகளை எதிர்த்து போராட்டத்தினைத் தொடங்கினார். பிறகு, 1930 ஆம் ஆண்டு தொடங்கிய நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தினை நடத்தி வெற்றிக்கண்டார். தீண்டாமை என்பது ஒரு சமூகப் பிரச்சனை மட்டுமல்லாமல், அது ஒரு அரசியல் பிரச்சினை எனவும் கருதிய அவர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையும் கொண்டுவந்தார். இறுதியில், 1956 ஆம் ஆண்டு “புத்த மதத்திலும்” இணைந்தார்.
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு, இந்தியா விடுதலைப் பெற்ற பிறகு, காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவிஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது. அதன்பேரில், விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நவம்பர் 26,  1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையிலான இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவுக்குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.    அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், இது ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், 1951 ஆம் ஆண்டு தன் பதவியைத் துறந்தார்.
தம்முடைய சமூகப் போராட்டதிற்கு, தாம் இந்து மதத்தில் இருப்பதே ஒரு பெரிய தடையாக கருதிய அவர், பௌத்த சமயக் கொள்கைகளின் மீது ஈடுபாடுகொண்டு, 1950 ஆம்ஆண்டுக்கு பிறகு பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை செலுத்தினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் கருத்தரங்கின் கலந்துக்கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்துகொண்டார். 1955 ஆம் ஆண்டு “பாரதீய பௌத்த மகாசபாவை” தோற்றுவித்தார்.1956 ல் “புத்தரும் அவரின் தம்மாவும்” என்ற புத்தகத்தை எழுதினார். பிறகு 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் பௌத்த சமயத்திற்கு முழுவதுமாக தன்னை மாற்றிக்கொண்டார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அம்பேத்கர் அவர்களுக்கு, 1955ல் உடல் நலம் மோசமடைய தொடங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன்னுடைய வாழ்வையே அர்பணித்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் தில்லியிலுள்ள அவருடைய வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதே உயிர் நீத்தார். பௌத்த சமயத்தில் அதிக ஈடுபாடு கொண்டமையால், பௌத்த சமய முறைப்படி இவருடைய உடல் “தாதர் சௌபதி” கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது. இவருடைய மரணத்திற்கு பின், இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, விடுதலை இந்தியாவின் அரசியல் சாசனத்தையே வரைந்த மாபெரும் சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என அனைத்து துறைகளிலும் திறமைப்பெற்று விளங்கிய அவர், இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்தெறிந்த மாமனிதர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய், ஈடுஇணையற்ற ஜோதியாய் விளங்கியசமூகப் போராளி. இப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கை, அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையாகாது.
====================================================================
கடன் தொல்லையால் சித்ரவதைஅனுபவித்து வந்த விவசாயி ஒருவர், “எனது சாவுக்கு பிரதமர் மோடியே காரணம்” என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டிருப்பது, பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டம், ரஜூவர்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் பாபுராவ்சாவ்ரே (55). இவருக்கு மனைவியும்,திருமண வயதில் 3 மகள்களும், ஒருமகனும் உள்ளனர்.
 சங்கர் தனக்குச் சொந்தமாக 9 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.இந்நிலையில், தனது நிலத்தில் பருத்தி பயிரிடுவதற்காக தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

ஆனால், பருத்தியில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, வேளாண்மையில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், அவர் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. நிதிநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்தக்கோரி சங்கருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால், கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த சங்கர், செவ்வாய்க்கிழமையன்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
தனது தற்கொலைக்கு முன்பு, 6 பக்கங்களில் வாக்குமூலம் ஒன்றைஎழுதி வைத்துள்ளார்.
 அதில், “தான்இந்த நிலைக்கு கடனாளியாக பிரதமர் மோடியே காரணம். அவரின் அரசின் செயல்பாடுதான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மறைவுக்கு பின்,முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், பாஜக எம்எல்ஏ ராஜூ தோட்ஸம் ஆகியோர் தனது குடும்பத்துக்குஉதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் போராட்டங்கள் ஓய்ந்து சுமூகமான சூழ்நிலை உருவான பின்னர், என்ன மயித்துக்கு நீர் கட்சி தொடங்கணும்? உம்மை சொல்லி குற்றமில்லை.. இன்னமும் உம்மை நம்பிக்கிட்டு, நீர் எப்போ கறிசோறு போடுவீர்'னு உம் பின்னாடி அலையிற இந்த மானங்கெட்ட கூட்டத்தை சொல்லணும்..


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?