மண்ணுளி அரசு


 பெண்களைப்பற்றி அசிங்கமாக இடுகையிட்டராஜா,சேகர் போன்ற அசிங்கங்களை கைது செய்யாமல் தேடிக்கொண்டே இருக்கும் காவல்துறைதான் மோடி,எட்டப்பாடியை அரசியல் ரிதியாக விமர்சித்ததவர்களை கைது செய்கிறது.
நட்டு நடப்பை பாடிய கோவனை வீட்டுக்கதவை உடைத்து தீவிரவாதியைப்போல் இழுத்து செல்கிறது.
நீட் தேர்வை ராஜஸ்தானில் போய் எழுதிவைத்த சிபிஎஸ்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மாணவர் சங்கத்தினரை அடித்து உதைத்து கைது செய்கிறது.
கையாலாக அடிமை அரசுதான் அதிமுக அரசு என்பதை ராஜஸ்தான்,கேரளா நீட் தேர்வு மய்யம் வைக்க காரணம்.

இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகள் ,பொறியியல் கல்லூரிகள்,நிகர் நிலை பல்கலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு .இங்கு நீட் தேர்வு எழுத  மய்யம் காண  முடியவில்லை என்று சிபிஎஸ்சி அதிகாரிகள் சொல்வது பெரிய பொய் .அதைவிட பெரும் பொய் ராஜஸ்தானுக்கு தமிழக மாணவர்கள் யாரும் தேர்வெழுத மய்யம் ஒதுக்கப்பட்டு போகவில்லை என்பது.
அதை விடக் கேவலம் இதை எதையுமே தட்டிக்கேட்காமல் மண்ணுளி களாக அதிமுக அடிமைகள் அரசு வேடிக்கைப்பார்த்ததுதான்.

நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரி கடந்த ஆண்டு நடந்த போராட்டம் மத்திய அரசு கைவிரித்ததால் வீணாகிப் போனது. 
இந்த ஆண்டு தமிழக அரசின் கையாலாகா தனத்தால் நீட்தேர்வை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் என்று கோருகிற நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டு விட்டது. தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுத மையங்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கூட சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் சென்று அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் ஒருபுறம் இருக்கத் தேர்வை எழுதுகிற மாணவர்கள் – அந்தந்த மாநிலங்களிலேயே எழுதுவதற்குக் கூட ஏற்பாடு செய்ய முடியாத நிறுவனமாக சிபிஎஸ்இ உள்ளதா என்கிற கேள்வி எழுகிறது. 
அல்லது தமிழகத்தின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்கிற உள்நோக்கத்தோடு செயல்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது.  பொதுவாக ஒவ்வொரு தேர்வின்போதும் தேர்வை நடத்தும் அமைப்பு எத்தனை மாணவர்கள் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து மையங்களை முடியும் செய்யும். 
ஆனால் சிபிஎஸ்இ-யோ மையங்களை முடிவு செய்துவிட்டு மாணவர்களை மாநிலம் விட்டு மாநிலம் பந்தாடியுள்ளது. 
 நாடு முழுவதும் 13,26,725 பேர் தேர்வு எழுத பதிவு செய்தனர். தமிழகத்தில் பத்தில் ஒரு பங்கு எனும் விகிதத்தில் 1,07,288 பேர் பதிவு செய்தனர். அப்படியெனில் ஏற்கெனவே கடந்த ஆண்டு இருந்த மையங்களைவிட இப்பொழுது அதற்கேற்ப எண்ணிக்கையில் தேர்வு மையங்களை அதிகமாக்கி இருக்க வேண்டும்.
 அதைவிடுத்து நாட்டின் கடைக்கோடி மாநிலமான சிக்கிமில் கூட தேர்வு எழுத தமிழக மாணவர்களை நிர்ப்பந்திப்பது எந்தவகையில் நியாயம்? பொதுவாக தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு பயம் என்பது இருக்கும். 
ஆனால் இங்கு தேர்வு மையத்திற்கு செல்வதே பெரும் பயமாகிவிட்டது. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலும், அலைச்சலும் பணச் செலவும் நிம்மதியான மனநிலையில் தேர்வு எழுதும் வாய்ப்பை கெடுத்துவிட்டது.



இதையெல்லாம் பார்க்கும்போது நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கிற தமிழகத்திற்கு மத்திய அரசும், சிபிஎஸ்இ அமைப்பும் கொடுத்ததண்டனை போல் தெரிகிறது. அந்த பாதிப்பால் தான் கேரளம் சென்ற மாணவன் கஸ்தூரிமகாலிங்கத்தின் தந்தை மன உளைச்சலினாலேயே மாரடைப்பால் அங்கேயேஉயிரிழந்து விட்டார். கடந்த ஆண்டு முதல் மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வில் வெற்றிபெற முடியவில்லையே என்பதால் தனது மருத்துவக் கனவு நிராசையானதால் தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு நீட்தேர்வின் உயிர்ப்பலி திருத்துறைப்பூண்டி கிருஷ்ணசாமி என்றாகிவிட்டது. இன்னும் எத்தனை எத்தனை உயிர்களை பலி கொள்ள காத்திருக்கின்றன மத்திய பாஜக அரசும், சிபிஎஸ்இ-யும். மொத்தத்தில் இதற்கெல்லாம் விடிவு பிறக்க தமிழகத்துக்கு நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கிக் கொள்வதே தேவை.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?