திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கிரிமினல் சட்டம்- 2018

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் பெருகி வரும் நிலையில் அதை தடுக்க இந்திய அரசு சட்டத்தை கடுமையாக்கியுள்ளது.

ஏற்கனவே கடுமையாக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு மாற்றாக கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட மசோதா  பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேறின. 
இந்த புதிய கிரிமினல் சட்டத்துக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

 மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
" பாலியல் குற்றங்களை தடுக்கும் அவசர சட்டத்துக்கு மாற்றாக, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட புதிய  சட்டம், 'கிரிமினல் சட்டம்- 2018' என அழைக்கப்படும்;
இது, 2018, ஏப்., 21ல், அமலுக்கு வந்ததாக கருதப்படும்.


இந்த புதிய சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவற்றில் தக்க திருத்தங்களுக்கு வகை செய்யும்". 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய சட்டப்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறை அல்லது துாக்கு தண்டனை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 - 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம்செய்தால், குறைந்தபட்ச தண்டனை, 10 ஆண்டுகளில் இருந்து, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த தண்டனை, குற்ற வாளி இறக்கும் வரை, வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வரை, அதிகரிக்கப்படலாம். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமி யரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யும் கொடியவர்களுக்கு, இறக்கும் வரை வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கான குறைந்தபட்ச தண்டனை, ஏழு ஆண்டில் இருந்து, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தண்டனை, ஆயுள் தண்டனையாக நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க, புதிய சட்டம் வகை செய்கிறது. பாலியல் பலாத்கார வழக்குகள் அனைத்தையும், இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 
மேல்முறையீடுகள் மீதான விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் முன்பிணை  பெற முடியாது."
பார்ப்போம் இந்த கடுமையான சட்டம் சிறார் பாலியல் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா என்று.
அது காவல்துறையின் கையில்தான் உள்ளது.
இவ்வாறு கூற காரணம் உள்ளது.
ஒரு மாணவியிடம் பாலியல் குறும்பில் ஈடுபட்ட ஆசிரியர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காவல்துறை அவர் மீது சிறு திருட்டு வழக்கை மட்டுமே பதிவு செய்துள்ளது.
கேட்டால் கல்வி நிறுவனம் பெயர் பாதிக்கப்பட்டு விடுமாம்.
======================================================================================
ன்று,


ஆகஸ்ட்-13.
  •  உடல் உறுப்பு தான தினம்
  • இடது கையாளர்கள் தினம்
  • ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)
  • பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது(1954)
  • மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960) 
======================================================================================
இந்திய மாநிலங்கவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று (ஆக.,13) காலை கோல்கட்டாவில் காலமானார். 

சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

ஆக.,8 ம் தேதி அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இருப்பினும் நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அதற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தற்போது அவருக்கு வயது, 89.

1968 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர், அக்கட்சியில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர். 
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது 2004 ம் ஆண்டு லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் சபாநாயகராக நீடித்தவர். 2008 ம் ஆண்டு காங்., உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டது. 
இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது அரசுக்கு எதிராக ஓட்டளித்ததால் சோம்நாத், சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தும் பதவி விலக மறுத்து தொடர்ந்து சபாநாயகராகவே நீடித்தவர் சோம்நாத்.
அதிக காலம் லோக்சபா சபாநாயகராக நீடித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.