வேண்டாம் 700 கோடிகள்.


கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பெருத்த சேதாரத்தினை சந்தித்திருக்கிறது  கேரளா. அவர்களுக்கு உதவி புரிவதற்காக உலகின் பல்வேறு பக்கங்களில் இருந்தும் நிதியை திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள் அண்டை மாநிலத்தவர்கள்.

பல்வேறு மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியினை கேரளாவிற்கு அளித்து வந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் 700 கோடி ரூபாயை நிதியாக கேரளாவிற்கு தர விருப்பம் தெரிவித்தது. ஆனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் அந்த நிதி உதவியினை ஏற்க இடம் தரவில்லை என்ற செய்தி வந்துள்ளது.


இந்திய பேரிடர் நிவாரண நிதிக் கொள்கை 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்படி, எந்த ஒரு சூழலிலும் இந்தியா வெளிநாட்டு அரசிடம் இருந்து வரும் நிதியினை பெற்றுக் கொள்ளாது என்பதாகும். சுனாமி பேரலை வந்த பின்பு தான் இக்கொள்கைகள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவுகளில் வெளிநாட்டின் நிதி உதவியை இந்தியா பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உத்தர்காஷி நிலநடுக்கம் (1991), லத்தூர் நிலநடுக்கம் (1993), குஜராத் பூகம்பம் (2001), பிகார் வெள்ளம் (2004) காலங்களில் இந்தியா வெளிநாட்டின் நிதி உதவியை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் “எந்த பேரிடராக இருந்தாலும் அதை இந்தியா சமாளித்துக் கொள்ளும். அதையும் மீறி ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். 

அதற்கு பின்னாலான இந்த 14 வருடங்களில் ஒரு முறை கூட வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவியை இந்தியா பெற்றதில்லை. 

இதற்கு  இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.

 இந்தியா இது போன்ற பிரச்சனைகளை தனியாளாக நின்று சமாளித்துக் கொள்ளும் அதற்கான திறன் இந்தியாவுக்கு உண்டு  . 
மற்றொன்று பல்வேறு வெளியுறவுக் கொள்கைக் காரணங்களால் ஒரு சில நாட்டினரிடம் இருந்து நிதி உதவி பெறாமல் இருப்பது நாட்டின் வெளியுறவுக்  கொள்கைக்கு நலம்.
கேரள முதல்வர் பினராயி விஜயன்

சிலநாட்டினரிடம்  முறையாக வேண்டாம் என்று மறுப்பதும், மற்ற நாடுகளிடம் இருந்து பெற்றுக் கொள்வதும் மன வருத்தத்தினை உண்டாக்கும் என்பதால் பொதுவாக மொத்த  வெளிநாடுகளில் இருந்தும்  நிதி உதவி பெறுவதை நிறுத்திவிட்டது இந்திய அரசு .
கடந்த 14 வருடங்களில் ரஷ்யா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து உத்தரகாண்ட் வெள்ளம், காஷ்மீர் பூகம்பம், காஷ்மீர் வெள்ளம் ஆகியவற்றிற்காக தரப்பட்ட நிதி உதவியை இந்தியா நிராகரித்துள்ளது .
அதன்படி தற்போது மாலத்தீவுகள் கொடுத்த 34 லட்சம் நிதி உதவியையும், ஐக்கிய அரபு அமீரகம் தரும் 700 கோடியையும் நிராகரிக்கும் வாய்ப்புகள்தான்  அதிகம்.
பாதிக்கப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன்  பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் மற்றொரு நாடு தானாக விருப்பப்பட்டு உதவ முன்வந்தால், மத்திய அரசு ஏற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-23.
  • உக்ரேன் கொடி நாள்
  • மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது(1821)
  • ருமேனியா விடுதலை தினம்(1944)
  • உலக தேவாலயங்களின் தலைமை கழகம் ஏற்படுத்தப்பட்டது(1948)
1617 - லண்டன் தேம்ஸ் நதிக்கு அருகாமையில் இருந்த குறுகிய தெருக்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. 
மோட்டார் வாகனங்களின் வருகைக்கு முன்பே ஒரு வழிப்பாதை என்பது வியப்புக்குரியதாக இருந்தாலும், உலகின் முதல் ஒரு வழிப்பாதைப் போக்குவரத்து இதுதான். லண்டனின் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக அரசரால் நியமிக்கப்பட்ட நிறுவனமான, ஒர்ஷிப்ஃபுல் கம்பெனி ஆஃப் கார்மென் என்ற நிறுவனம் இந்த ஒரு வழிப்பாதைப் போக்குவரத்தை உருவாக்கியது. 
அக்காலத்திலேயே, போக்குவரத்தைக் ஒழுங்குபடுத்த ஒரு தனியார் நிறுவனத்தை நியமிக்குமளவுக்குப் போக்குவரத்து இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. 400 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு வழிப்பாதை என்ற முறை உருவாகிவிட்டாலும், மிக நீண்டகாலத்திற்குப் பின்பே, பிற நாடுகளுக்கு இது பரவியது. உலகில் இங்கிலாந்துக்கு அடுத்து இம்முறையைப் பின்பற்றிய நாடான பிரான்சில், 1909 டிசம்பர் 13 அன்றுதான் பாரீசில் முதல் ஒரு வழிப்பாதை ஏற்படுத்தப்பட்டது. 
தற்போது, உலகெங்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, குறுகலான தெருக்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது ஆகியவை தொடங்கி, நவீன விரைவுச் சாலைகளில் நுழையவும் வெளியேறவும் பயன்படும் இணைப்புச் சாலைகள்வரை, ஒருவழிப்பாதை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. நவீன நெடுஞ்சாலைகள் அனைத்துமே, நடுவில் பிரிக்கின்ற தடுப்புடன், ஒரு திசையில் மட்டுமே போக்குவரத்தை அனுமதிக்கும் ஒரு வழிப்பாதைகளாகவே உருவாக்கப்படுகின்றன. 
நெருக்கடி நிறைந்த சாலைகளையும், சிக்னல்களையும் தவிர்க்க, வழக்கமான போக்குவரத்துக்கு உரியவை அல்லாத குடியிருப்புப் பகுதிகள் முதலானவற்றில் வாகனங்களை ஓட்டுவது எலி ஓட்டம் (ரேட் ரன்) என்று அழைக்கப்படுகிறது. 
அவ்வாறு குறுக்கு வழிகளில் நுழைந்து, குடியிருப்புப் பகுதிகளில் விபத்து ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும் ஒரு வழிப்பாதை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. 
ஒரு வழிப்பாதை (நோ எண்ட்ரி) என்று அறிவிப்புகள் வைக்கப்பட்டாலும், இதனை மீறுவோர் உலகெங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். 
அதனால், தடைசெய்யப்பட்ட திசையில் செல்லும் வாகனங்களின் டயர்களை பங்ச்சர் செய்யும் தடைகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. 
இவை, அனுமதிக்கப்பட்ட திசையில் செல்லும் வாகனங்களின் டயர்களைச் சேதப்படுத்துவதில்லை.
======================================================================================================================================


.













இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?