ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

மிகப்பெரிய கொடுமை

பன்னாட்டு நிறுவனமான மான்சாண்டோவின் தயாரிப்பான கிளைபோசேட் என்ற ரசாயனம் கொண்ட பூச்சிக்கொல்லியால் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக கூறும் நபருக்கு 289 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கலிபோர்னியா நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
 .தங்களது பூச்சிக்கொல்லி தயாரிப்புகள் ஆபத்தானவை என தெரிந்தும் இது குறித்து மான்சாண்டோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க தவறிவிட்டதாக கலிபோர்னியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கிளைபோசேட்(glyphosate) என்ற ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கும் என்று குற்றச்சாட்டப்படும் வழக்கு விசாரணைக்கு வருவது இதுவே முதல்முறையாகும். ஆயினும் கிளைபோசேட் புற்றுநோயை உண்டாக்கும் என்பதை மான்சாண்டோ நிறுவனம் மறுத்துள்ளது. 
மேலும் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளது.
சான் பிரான்ஸிஸ்கோ நீதிமன்றம் இதை தவறாக புரிந்து கொண்டது என தீர்ப்புக்கு பிறகு பேசிய மான்சாண்டோவின் துணைத் தலைவர் ஸ்காட் பார்ட்ரிஜ் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை தொடர்ந்த டேவேயின் ஜான்சன் அமெரிக்கா முழுவதும் இம்மாதிரியான புகார்களை தெரிவித்துள்ள 5000பேர்களில் ஒருவர்.
இந்த தீர்ப்பு மான்சாண்டோவுக்கு எதிராக ஜெர்மன் நிறுவனமான பேயர் நிறுவனம் எழுப்பியுள்ள நூற்றுக்கணக்கான புகார்களுக்கு முன்னோடியாக இருக்கும் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜான்சனுக்கு வெள்ளை அணுக்களில் உருவாகும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.கலிபோர்னியாவில் உள்ள பள்ளி ஒன்றில், விளையாட்டு மைதானங்களில் புல் தரைகளை பராமரிக்கும் நபராக ஜான்சன் பணிபுரிந்தபோது மான்சாண்டோவின் பூச்சிக் கொல்லி தயாரிப்பை பயன்படுத்தியதாக ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எட்டு வார காலமாக நடைபெற்றது, மான்சாண்டோவிற்கு எதிரான ஆதாரங்கள் அதிகப்படியாக இருந்ததை இந்த தீர்ப்புக் காட்டுகிறது என பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஜான்சனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் சரியாக இருக்கும்போது வெற்றி பெறுவது சுலபமானது”. 
மேலும் எதிர்காலத்தில் மான்சாண்டோவிற்கு எதிரான வழக்குகளுக்கு இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து வருந்துவதாக தெரிவித்த மான்சாண்டோ நிறுவனம், 40 ஆண்டுகாலமாக தங்களின் தயாரிப்பு மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது என்பதை தொடர்ந்து தீவிரமாக வலியுறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய தீர்ப்பு அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு முகமை, அமெரிக்க சுகாதார தேசிய நிறுவனங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள ஒழுங்குமுறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் கிளைபோசேட் புற்றுநோயை உண்டாக்காது என்று 800 ஆய்வு முடிவுகளும் கூறியதை பொய் ஆக்காது என்றும் ஜான்சனுக்கு இதனால் புற்றுநோய் வரவில்லை என்றும் மான்சாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கிளைபோசேட், உலகளவில் பரவலாக பயன்படுத்தக்கூடிய பூச்சிக் கொல்லியாகும். ஆனால் அதன் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பு வாதங்களும் நிலவுகின்றன.
2015ஆம் ஆண்டு சர்வதேச புற்றுநோய் குறித்த ஆய்வு முகமையான உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் முகமை, “கிளைபோசேட் மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கலாம்” என தெரிவித்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கிளைபோசேட்டை பாதுகாப்பாக பயன்படுத்தினால் அதனால் தீங்கொன்றும் நேராது என தெரிவித்துள்ளது.
ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் இந்த முடிவில் தொழிற்சாலைகளின் தலையீடு இருப்பதாக கிளைபோசேட்டுக்கு எதிரான பிரச்சாரக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே போல்தான் ஸ்டெர்லைட் உட்பட்ட சுற்றுச்சூழலைக்கெடுக்கும்  நாசகார ஆலைகள் இந்தியாவை நாசம் செய்து மனிதர்கள் வாழ்க்கைக்கு இறுதி பயணம் செய்யவைக்கின்றன.

ஆனால் இவைகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் அனைவருமே அந்த மக்களிடம் வாக்குகளைவாங்கி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பதுதான் கொடுமை.

இது போன்ற ஆலைகள் முதுகெலும்பில்லா ஆட்சியாளர்கள் ஆளும் தமிழ்நாட்டில் குவிந்திருப்பதுதான் மிகப்பெரிய கொடுமை.
======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-12.

  • உலக  இளைஞர்கள் தினம்
  • சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)
  • ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)
  • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)
  • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)
=======================================================================================
ஊடகங்களுக்கு அரசு மிரட்டல்
“ஊடக சுதந்திரத்தில் அரசு செய்யும் தலையீடுகளை” இந்திய ஊடக ஆசிரியர்கள் அமைப்பு(எடிட்டர்ஸ் கில்டு) வன்மையாகக் கண்டித்துள்ளது. “நேரடியாக ஆசிரியர்களை மிரட்டுவது அல்லது ஊடக உரிமையாளர்கள்  மூலம் அதைச் செய்வது என இரு வழிகளில் அந்த தலையீடு உள்ளது” என்று அது சுட்டியுள்ளது. 
ஒரு டி வி யிலிருந்து ஆசிரியர்களை வெளியேற்றி யது, இன்னொரு டி வியின் ஒளிபரப்பிற்கு ஊறுவிளைவித்தது என்பதை
இதற்கான எடுத்துக்காட்டுகளாக அது குறிப்பிட்டுள்ளது. 
ஊடக உரிமையாளர்கள்-மோடி ரகசிய சந்திப்பு 
அரசின் இந்த மிரட்டல்களுக்கு ஊடக உரிமையாளர்கள் பணிந்து விடக் கூடாது, “பணிந்தால் ஊடகத்தின் வலுவும் மரியாதையும் பறிபோய்விடும்” என்றும் அது வேண்டுகோள் விடுத்துள்ளது. (டிஒஐ ஏடு)
 சம்பந்தப்பட்டவர்களின் செவிகளில் இது விழும் என்று எதிர்பார்ப்போம். 
கூடவே, கருத்து சுதந்
திரத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த பேராபத்தை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து நின்று போராடுவதும் அவசியமாகும்.