செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

பொய்யிலே பொறந்து.......

தவறான புள்ளி விவரங்களையும், பொய்யான தகவல்களையும் கூறி பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி வருவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவண் கேரா விமர்சித்துள்ளார்.

பாஜக தலைமையிலான 4 ஆண்டு சாதனைகளை விளக்கும் வகையில் நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி அளித்திருந்தார். 

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பவண் கேரா கூறியிருப்பதாவது:மோடி அரசின் ஆயுள் இன்னும் 9 மாதங்களில் முடிவுக்கு வர இருக்கிறது. வெளிப்படையாகக் கூறிக் கொள்ளும் அளவுக்கு அவர் நாட்டுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. 

ஆனால், தவறான புள்ளி விவரங்களையும், பொய்யான தகவல்களையும் கூறி நாட்டு மக்களை அவர் ஏமாற்றி வருகிறார். 

தனது தோல்விகளை மக்கள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதும், தங்களுக்கு நல்ல நாள்கள் வந்துவிட்டன என்று மக்கள் நம்ப வேண்டும் என்பதுமே பிரதமரின் நோக்கமாக உள்ளது.

பிரதமர் கூறுவது குறித்து அவரது அமைச்சரவை சகாக்கள் மத்தியிலேயே வேறுபட்ட கருத்துகள் உள்ளன. முக்கியமாக ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி விட்டதாக மோடி கூறுகிறார். ஆனால், நாட்டில் வேலைவாய்ப்பே உருவாகவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

பணியாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கையை வைத்து வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாக மோடி கூறுகிறார். 

வேலைவாய்ப்பு உருவாக்க புள்ளி விவரத்தை, பணியாளர் வருங்கால வைப்பு நிதி வாரியத்தின் புள்ளி விவரத்துடன் மோடி எப்படி ஒப்பிடுகிறார் என்பதே தெரியவில்லை.உண்மையில் மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு 1 கோடியே 26 லட்சம் வேலை இழந்து விட்டார்கள். இதனை நான் கூறவில்லை. 

சர்வதேச அமைப்பு ஒன்று இந்தியாவில் ஆய்வு நடத்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மோடி அரசு தனது முக்கியத் திட்டமாக முன்னெடுத்த தூய்மை இந்தியா திட்டம் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது. 
நாட்டு மக்களுக்கு நல்ல நாள்களை கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து மோடி தேர்தலில் வெற்றி பெற்றார். 
நாட்டில் எத்தனை பேருக்கு அந்த நல்ல நாள்கள் வந்துள்ளன? 
வரும் மக்களவைத் தேர்தலுடன் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். அதுதான் நாட்டு மக்களுக்கு நல்ல நாளாக அமையும்”.இவ்வாறு பவண் கேரா கூறியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வீழ்ச்சி ...

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புகடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை யன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69 ரூபாய் 53 காசுகளாக இருந்த நிலையில், சந்தைநேர முடிவில் அது 68 ரூபாய்84 காசுகள் என்ற நிலைக்குச் சென்றது. 

இந்நிலையில், திங்கட்கிழமையன்று காலை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மேலும் கடுமையாக 69 ரூபாய் 62 காசுகள் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது.


இதேபோல இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பும் கடந்த 7 மாதங்களில் இல்லாத வகையில், 402.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியான தகவலின்படி ஜூலை 27-ஆம் தேதி 404.19 பில்லியன் டாலர் கையிருப்பு இருந்தது. 

இதில் தற்போது 1.49 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அந்நிய செலாவணி கையிருப்பு 426.08 பில்லியன் டாலராக இருந்தது. 

கடந்த 4 மாதங்களாக அது படிப்படியாக குறைந்து, சுமார் 5.5 சதவிகிதம் (23.4 பில்லியன் டாலர்)வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆ....சாமிகள்  தேடும் பதவிகள்..


மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இப்போதே சாமியார்கள் பலர் போட்டியில் குதித்துள்ளனர்.

முதலில் பாஜக-விடம் ‘சீட்’ கேட்டுப் பார்ப்பது, அக்கட்சி இடம் ஒதுக்காத பட்சத்தில் தனியாகவோ, அல்லது பாஜக-வைப்பழிவாங்கும் வகையில் காங்கிரஸ் சார்பிலேயேகூட போட்டியிடுவது அந்த சாமியார்கள் திட்டமிட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி உள்ளது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் பதவி வகிக்கிறார். இங்கு 2018 இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

மத்தியப்பிரதேசத்தில் நீண்டகாலமாக பாஜக செல்வாக்கு செலுத்தி வருகிறது. 
ஆனால், இந்தமுறை முடிவுகள் மாறும். பாஜக தோற்கும் என்று கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக தோற்றதும்கூட அதையே உறுதிப்படுத்துகின்றன.


மத்தியப்பிரதேசத்தில் பாஜகவின் செல்வாக்கிற்கு சாமியார்களின் ஆதரவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. சாமியார்கள் - பாஜக இடையே விரிசல் அதிகமாகி வருகிறது.

நர்மதா நதியை சுத்தப்படுத்தும் திட்டத் தின்கீழ் மரக்கன்றுகள் நட்டதில் ஊழல், மணல் கொள்ளை நடந்திருப்பதாக சாமியார்கள்கள்தான் சில மாதங்களுக்கு முன்புகுற்றச்சாட்டு வைத்தனர். முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கு எதிராக பேரணியையும் அறிவித்தனர்.

இவர்களில் முக்கியமானவர் சுவாமி நாம்தேவ் தியாகி. இவருக்கு இன்னொரு பெயர் ‘கம்ப்யூட்டர் பாபா’. இவர், பேரணிநடத்தப்போவதாக அறிவித்ததும், சவுகான்பதறிப்போனார். 

அவரைச் சாந்தப்படுத்தும் விதமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் ‘தியாகி’மட்டுமன்றி, அவருடன் சேர்த்து 5 சாமியார்களுக்கு மாநில அமைச்சருக்கு இணையான அந்தஸ்தை சவுகான் வழங்கினார். இவர்களே நர்மதா திட்டத்தை மேற் பார்வை செய்வார்கள் என்றும் அறிவித்தார். 

பதவி என்றதும் சாமியார்கள் போராட்டத்தைக் கைவிட்டு பதுங்கினர்.ஆனால், 5 சாமியர்களுக்கு மட்டும் அமைச்சர் அந்தஸ்து வழங்கியது மற்றசாமியார்களை பொறாமையில் தள்ளிவிட்டது. 

தங்களுக்கும் அந்தஸ்து, அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தற் போது வரை பாஜகவை குடைந்தெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, புதிய பிரச்சனையாக, அமைச்சர் அந்தஸ்தைப் பெற்ற சாமியார்களும் திருப்தி அடையவில்லை என்றசெய்தி தற்போது வெளியாகி உள்ளது.

தங்களுக்கு அமைச்சர் பதவி முறைப் படி வேண்டும்; அதாவது தங்களை எம்எல்ஏவாக்கி, அமைச்சராக்கினால்தான் முழுமையான அந்தஸ்து கிடைக்கும் என்று கருதுகின்றனர்.‘கம்ப்யூட்டர் பாபா’ நாம்தேவ் தியாகி-தான், இதையும் துவங்கி வைத்துள்ளார். 

வரவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதாக, முண்டா தட்டியுள்ள தியாகி, சவுகான்கேட்டுக் கொண்டால் இந்தூர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று ‘பொடி’ வைத்துள்ளார்.இதேபோல, பாபா அவ்தேஷ்புரி (47),உஜ்ஜைனி மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதிதனக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். 

தொகுதிக்காக பாஜக.வை நிர்ப்பந்தமெல் லாம் செய்யமாட்டேன்; ஆனால், ‘சீட் தராவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன்’ என்று ஆவேசம் அடைந்துள்ளார்.

இதேபோல மகராஜ் மதன் மோகன் கதேஸ்வரி (45), சியோனி மாவட்டத்தில் உள்ள கியோலரி தொகுதியிலும், யோகி ரவிநாத் மகிவாலே (42), ரெய்சென் மாவட்டத்திலுள்ள தொகுதியிலும் போட்டியிட விரும்புகின்றனர். 
இவர்களில் ரவிநாத் மகிவாலே, ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தையே துவங்கி விட்டார். “வருவது வரட்டும். ஆனால், தேர்தலில் போட்டியிடுவது மட்டும் உறுதி. 

பாஜகசீட் தராவிட்டால் என்ன, காங்கிரஸ் சார்பில்போட்டியிடுவதிலும் எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.ரெய்சென் தொகுதியில் போட்டியிட விரும்பும் மகந்த் பிரதாப் கிரி (35)-யும்பாஜக சார்பில் சீட் தராவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று அறிவித்துள் ளார்.

இதேபோல வேறுசில சாமியார்கள், தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பார்த்துக் கொள்ளலாம் என்று சீட்டுக்காக காத்திருக்கின்றனர்.

மத்தியப்பிரதேசத்தில் பாஜக விதைத்தவினை, தற்போது அக்கட்சிக்கு எதிராகவே திரும்பியிருக்கிறது. 
எப்படி பார்த்தாலும் மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கான அறிகுறிகள் வெளிப்படையாகவே தெரியத் துவங்கி விட்டன என்பதுமட்டும் உண்மை.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-14.
  • பராகுவே கொடி நாள்
  • பசிபிக் போர் முடிவுக்கு வந்தது(1945)
  • பாகிஸ்தான் விடுதலை தினம்(1947)
  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • இஸ்ரேல்-லெபனான் போர் முடிவுக்கு வந்தது(2006)

======================================================================================
திரிபுராவில் அறிவிக்கப்படாத அவசரநிலை
ஜனநாயகத்தை முற்றாக படுகொலை செய்த பாஜக அரசு
திரிபுராவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதாக, ஆகஸ்ட் 3-5 தேதிகளில் அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்றுவந்த உண்மை அறியும் குழுவிவரித்துள்ளது.
 திரிபுரா மாநிலத்தில் 2018 மார்ச் மாதத்தில் பாஜக-ஐபிஎப்டி கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இக்கூட்டணி அரசாங்கத்தால் திரிபுராவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது. 
இந்தக்குழுவில் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணித் தலைவர் மேதா பட்கர், அகில இந்திய விவசாய மகாசபையின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா ராம் சிங், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.கே.ராகேஷ், திரிபுரா மாநிலத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜிதேந்திர சௌத்ரி, சங்கர் பிரசாத் தத்தா மற்றும் ஜர்னா தாஸ் வைத்தியா மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான நாராயண் கார் முதலானோர் இடம் பெற்றிருந்தனர். 
இவர்கள் திரிபுரா மாநிலத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஓர் இடைக்கால அறிக்கையை சனிக்கிழமை மாலை புதுதில்லியில் உள்ள அகில இந்திய விவசாயிகள் சங்க தலைமையகத்தில் வெளியிட்டனர். இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அசோக் தாவ்லே, விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன்முல்லா, நிதிச்செயலாளர் கிருஷ்ணபிரசாத் மற்றும் மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டணியின் கன்வீனர் டாக்டர் சுனிலம், அகில இந்திய விவசாய மகாசபையின் பொதுச் செயலாளர் ராஜாராம் சிங் ஆகியோர் பங்கேற்றனர். 
அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது

"2018 மார்ச் மாதத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல்கள் தங்களுடைய குண்டர்கள் மற்றும் கிரிமினல்களின் மூலமாக திரிபுரா முழுவதும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வன்முறைச் செயல்களில் ஈடுபடத்துவங்கி விட்டார்கள். 
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிறுவப்பட்டிருந்த லெனின், காரல் மார்க்ஸ், பகத்சிங், சேகுவேரா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளையும், தியாகிகளின் நினைவுச் சின்னங்களையும் இடித்துத்தள்ளினார்கள்.
l பாஜக - ஐபிஎப்டி குண்டர்கள் மிகவும் கொடூரமான முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் நான்கு பேரைக் கொலை செய்துள்ளனர். 
இவர்களில் இரண்டு பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கொலைசெய்த எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

l மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 750க்கும் மேற்பட்டஅலுவலகங்கள், விவசாய சங்கங்கள், கணமுக்தி பரிஷத் அலுவலகங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவலகங்களை தாக்கி, எரித்து, நாசப்படுத்தியுள்ளனர்; பலவற்றைக் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். குறிப்பாக போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்க அலுவலகங்களை இடித்துத்தரைமட்டமாக்கினர். இதர இடதுசாரிக் கட்சிகளின் அலுவலகங்களையும் தாக்கினர். இத்தாக்குதல்கள் அனைத்தையும் காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்த்தார்களே தவிர, இவற்றைத் தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
l முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கட்டி எழுப்பப்பட்ட 150 கட்சி அலுவலகங்களையும், 15 தொழிற்சங்க அலுவலகங்களையும் அரசாங்கத்தின் நிலத்தில் கட்டப்பட்டிருக்கின்றன என்று கூறி சட்டவிரோதமாக இடித்துத் தள்ளியுள்ளார்கள்.
l 2100க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. சில தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

l 500க்கும் மேற்பட்ட கட்சி ஊழியர்களும் ஆதரவாளர்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. நூறு பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
l எண்ணற்ற பெண்கள் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குண்டர்களின் கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக கமல்பூர் என்னுமிடத்தில் இரண்டு கர்ப்பிணிப் பெண்களின் கருக்கள் சிதைந்துவிட்டன.
l சாமானிய மக்கள், இடதுசாரிக் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதற்காக, அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒழிக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன், அவர்களின் 500க்கும் மேற்பட்ட கடைகள், ரப்பர் தோட்டங்கள், தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 
அவர்களின் மீன்,கோழி,ஆடு மற்றும் பன்றிப் பண்ணைகள் சூறையாடப்பட்டன. 60க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் சேதப்படுத்தப்பட்டன, தீக்கிரையாக்கப்பட்டன.
l இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று கூறி மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை. மதிய உணவு ஊழியர்கள் 80 பேரும், நூற்றுக்கும் மேற்பட்ட குழாய் ஆபரேட்டர்களும் அராஜகமான முறையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
l இந்திய-ஜெர்மன் திட்டத்தில் வேலை செய்து வந்த 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
l இடது முன்னணிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி எண்ணற்ற கடைக்காரர்கள், அவர்களின் வர்த்தகத்தைத் தொடரமுடியாதவாறு தாக்கப்பட்டுள்ளனர். பேருந்து உரிமையாளர்களை, அவர்களின் பேருந்துகளை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
l உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த பிரதிநிதிகளில் 2100க்கும் மேற்பட்டவர்கள் இதுநாள்வரையிலும் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருக்கின்றனர். 
அதே சமயத்தில் ஸ்தலமட்டத்தில் உள்ள குண்டர்களின் உதவியுடன் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
l இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவாளர்கள் தங்கள் பகுதிகளில் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால் மிகப்பெரிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறி மிரட்டிப் பணம் பறித்துக் கொண்டுள்ளனர்.
l இடது முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டுள்ளன.
l முற்போக்கு நாளிதழான “டெயிலி தேசர் கதா” விநியோகிப்பவர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்நாளிதழின் செய்தியாளர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். நாளேட்டின் பிரதிகளை ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். 
சில பத்திரிகைகள் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்களின் செய்தியாளர்களையும் தாக்கியிருக்கின்றனர். 
பாஜக குண்டர்களது தாக்குதல்களின் கொடூரமான அம்சங்களை, திரிபுராவின் முன்னாள் முதல்வரான மாணிக் சர்க்கார் பழங்குடியின மக்களைச் சந்திப்பதற்காகச் சென்றபோது அவருடைய காரைத் தடுத்து நிறுத்தியதன் மூலமாக நன்கு அறிந்துகொள்ள முடிகிறது. பழங்குடியின மக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த உணவுப் பாதுகாப்பு முறை சீர்குலைந்ததை அடுத்தும், இடது முன்னணி அரசாங்கத்தின்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த சமூகப் பாதுகாப்பு, தற்போது மறுக்கப்பட்டுவருவதை அடுத்தும், அவர்களைப் பார்ப்பதற்காக மாணிக் சர்க்கார் சென்றார். 
ஆனால் அவரை அங்கே செல்லாதவாறு பாஜக குண்டர்கள் தடுத்துள்ளனர். 
மாணிக் சர்க்கார் திரிபுரா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். 
அவரையே தன்னுடைய கடமைகளைச் செய்யவிடாமல் குண்டர்கள் தடுத்துள்ளனர். 
இவ்வளவையும் காவல்துறையினரின் கண்முன்னாலேயே செய்துள்ளனர். 
எனினும் மாணிக்சர்க்காரும் தோழர்களும் பின்வாங்க உறுதியுடன் மறுத்ததைத்தொடர்ந்து அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க முடிந்தது.

                                                                                                                                                   -தீக்கதிர்