மறைக்கப்பட்ட தியாகி


ஆண்டுந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாக  கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சுதந்திர தினத்தை வரலாற்றாக மாற்ற தலைவர்களும், தியாகிகளும் சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.
இருகை தட்டினால் தான் ஓசை என்பார்கள். 
அது போல் ஒருவர் மட்டுமே சுதந்திரம் என்று கத்தினால் அது உளறல். ஓட்டு மொத்த மக்களும் நின்று சுதந்திரம் என்று கத்தினால் அது கோஷம். ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும், வாழ்விலும் மறந்துவிடக் கூடாத நாளாக பார்க்கப்படும் சுதந்திர தினத்தின் வரலாறு சுருக்கமாக உங்கள் பார்வைக்கு..
நமது தாய்மண்ணில் பிறந்த மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் விரும்பிய நமது தேசிய தலைவர்களையும், போராட்ட வீரர்களையும் அவ்வளவு எளிதாக மறந்து விடக் கூடாது.

இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி அதிகமாக அதிகமாக,தலைவர்கள் துணிச்சலுடனும் வீரர்கள் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டனர்.

‘1857 இந்திய கலகம்’ என்ற இயக்கத்தை முகாலாயப் பேரரசர் பகதூர் ஷாபர் உருவாக்கினர். இதுவே, ‘முதல் இந்தியப் போர்’ என்று அழைக்கப்பட்டது. ஒரு வருடமாகப் போராடிய பின்னர், இவ்வியக்கத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதன் தளபதியையும் நாடு கடத்தி, முகலாய வம்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைத்தனர், ஆங்கிலேயர்கள்.
ஆங்கிலேயர்கள் ஒருபுறம் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்து கொண்டே இருந்தாலும், அதை நினைத்து  நமது இந்தியர்கள் அஞ்சி நடுங்கவில்லை.‘முதல் இந்தியப் போரைத்’ தொடர்ந்து, பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர்.
1867ல் ‘கிழக்கிந்திய கூட்டமைப்பை’ தாதாபாய் நவ்ரோஜியும், 1876ல் ‘இந்திய தேசிய கூட்டமைப்பை’ சுரேந்திரநாத் பானர்ஜியும் உருவாக்கினர்.
1905ல், ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்சியை கொண்டு வந்தனர். இதைக் கண்டு கொதித்த இந்தியர்கள் பலரும், சுதேசி மற்றும் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.  
பால கங்காதர திலகர் முதல் இந்திய தேசியவாதியாக இருந்து, சுயராஜ்ஜியத்தை ஏற்றுக் கொண்டார்,
இதன்காரணமாக , தேசியவாதம் அடிப்படைவாதம் என இரண்டு தலைமைகளில் 1907 ஆம் ஆண்டு காங்கிரஸ் இரண்டாக  பிரிந்தது. 1911 ஆம் ஆண்டில், ஐந்தாம் ஜார்ஜ் டர்பாரில் இந்தியாவிற்கு வந்தார். அவர், வங்கப் பிரிவினையை மீண்டும் பெறப்போவதாக அறிவித்தார்.
1916ல் கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடியதோடு மட்டுமல்லாமல், 1918ல் ‘கறுப்புச் சட்டம்’ என்ற ‘ரௌலட் சட்டம்’ ஒன்றை நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். 
1919ல் நடந்த திட்டமிட்ட படுகொலையான  ஜாலியன் வாலாபாக் சம்பவம் இரண்டாக பிளவுற்ற காங்கிரஸ் கட்சி, போராட்டங்கள், கிளர்ச்சிகள் எனப் பிரிந்திருந்த இந்திய மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்தது.
1920 ஆம் ஆண்டில், ‘கிலாபாத்’, ‘ஒத்துழையாமை இயக்கம்’, ‘கம்யூனிஸ்ட் கட்சி’, ‘அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்’ போன்றவைகள் உதயமானது. தனது நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி முதல் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினர். 
உப்புக்கும் வரி விதித்த கொடுமையால் மக்கள் ஆவேசமடைந்த நிலையில் 
 1930 ஆம் ஆண்டில் ‘தண்டி யாத்திரை’ எனப்படும் ‘உப்பு சத்தியாக்கிரகம்’ நடந்தது . அப்போது தான் முதல் வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.
அதற்கு அடுத்து லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக  காந்தி கலந்துகொண்டார் . இந்த மாநாடும் தோல்வியடைந்தது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலயர்கள் இந்தியர்களை கொத்தடிமையாக்க துடித்தனர்.
1940ல் ‘தனிநபர் சத்தியாக்கிரகம்’ மற்றும் 1942ல் ‘வெள்ளையனே வெளியேறு தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்பட்டது. 
1943 ஆம் ஆண்டில், நேதாஜி இந்திய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடு கடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜாப்பான் உதவியுடன் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, 1946ல் ‘ஆர்ஐஎன் கழகம்’ எனப்படும் ‘கப்பற்படை எழுச்சி’ எழுப்பப்பட்டது.
இந்த அனைத்து போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி போல் 1947 ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன்  ‘பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், ‘முஸ்லீம் பாகிஸ்தான்’ என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார். 
இந்தத் தேசப் பிரிவினையால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது.
விடுதலை  இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர்.  
விடுதலைக்குப்பின் நேருவின் முதல் உரை 

ஆகஸ்ட் 15 ஆம் நாள் வரலாறாக மாறிய அந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட முடியாது.  
விடுதலை  காற்றை சுவாசிக்க  எத்தனையோ தலைவர்களின்  உயிர்கள் மண்ணில் புதைந்தன.நாட்டு விடுதலை  என்ற ஒன்றை மட்டுமே  குறிக்கோளாகக் கொண்டு அவர்கள் செய்த தியாகங்களை என்றுமே மறந்து விடக்கூடாது. 
இந்த விடுதலை நாளில் இந்திய விடுதலைக்காக ஒட்டு மொத்த இந்தியாவே போராடிய நிலையில் தமிழ்நாட்டை சார்ந்த தியாகிகளை இந்திய அரசு குறிப்பாக வட இந்திய தலைவர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்து நம் திருப்பூர் குமரன்,விஸ்வநாத தாஸ்,சுப்பிரமணிய பாரதி,வ.உ.சிதம்பரனார்,சுப்பிரமணிய சிவா போன்றவர்களை மறக்கடித்து விட்டார்கள்.போதுமான முக்கியத்துவம் தரப்படவில்லை.
சுப்பிரமணிய சிவா விடுதலைப் போராட்டத்தில் கலந்து ஆயுள் தண்டனைப்பெற்று தொழு நோயாளிகளுடன் அடைக்கப்பட்டு துன்பப்படுத்தப்பட்டார்.கடைசியில் ஆங்கிலேயர் அளித்த கொடை தொழுநோயுடன் சிறையை விட்டு வெளிவருகையில் அவரை வரவேற்க காங்கிரசார் எவருமே வரவில்லை.
சுப்பிரமணிய சிவா

வெள்ளையாருக்கெதிராக போராட தனது அனைத்து சொத்துக்களையும் விற்றும்,கடன் வாங்கியும் வ.உ.சி,இரண்டு கப்பல்களை வாங்கி வெள்ளையர்களுக்கு கொடுங்கனவாக மாறினார்.
ஆனால் அவர் இரு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் கொடுந்தண்டனையாக செக்கிழுத்துக்கொண்டிருந்தபோது அவரது கப்பல் நிறுவனத்தில் இருந்த மற்ற காங்கிரசார் வ.உ.சிக்கு தெரிவிக்காமலேயே வெள்ளையருக்கே இரு கப்பல்களையும் விற்று விட்டு பணத்தையும் வ.உ.சி.குடும்பத்துக்கு கொடுக்காமல் இருந்து விட்டனர்.
சிறையில் இருந்து வ.உ.சிதம்பரனார் வெளிவருகையில் வரவேற்ற ஒருவர் சுப்பிரமணிய சிவாதான்.
செல்வம் கொழித்த வழக்குரைஞர் தொழில் உரிமத்தை ஆங்கிலேயர் முடக்கியதால் உணவுக்கே துயர்.
கடைகளில் கணக்கெழுதி குடும்பத்தை ஏழ்மையில் நடத்தினார்.
இவரின் துன்ப வாழ்வை காங்கிரசார் கண்டுகொள்ளவில்லை.வ.உ.சியை ஒரு பொருட்டாகவே கொள்ளவில்லை.
ஆனால் ஆங்கிலேயர் வாலஸ் என்பவர் அரசுடன் போராடி வழக்குரைஞர் தொழில் உரிமத்தை இவருக்கு மீள வாங்கித்தந்தார்.
அந்த நன்றிக்கடனாக தனது மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார்.
அதைவிடக்கொடுமை வ.உ.சிதம்பரனார் நிலையைக்கண்டு தென் ஆப்ரிக்க தமிழர்கள்,இந்தியர்கள் அக்காலத்திலேயே 2000 ரூபாய் நிதியாகத்திரட்டி காங்கிரஸ் தலைவர் காந்தியிடம் கொடுத்து அனுப்ப

அவரோ அப்பணத்தை தனது சபர்மதி ஆசிரமத்தை விரிவுபடுத்த முறைகேடாக செலவிட்டார்.
அப்பணம் வந்ததைப்பற்றி கூட வ.உ.சி இடம் தெரிவிக்கவில்லை.அந்த மோசடியும் வ.உ.சியை காங்கிரஸ்,காந்தி மேல் வைத்திருந்த மதிப்பை சிதைத்தது.
ஆன்மிகம்,நூல்கள் எழுதுவது என்ற வழிகளில் தனது எஞ்சிய நாட்களை கழித்தது மறைந்தார் வ.உ.சிதம்பரனார் என்ற ஒப்புயர்வற்ற தியாகி.
அடுத்த தலைமுறைக்கும் இது போன்ற மறைக்கப்பட்ட தியாகிகளை  கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடுதலைப் போராளி "மாயாண்டி பாரதி".
மதுரையில், தன், 97 வயது வரை வாழ்ந்து, மக்கள் சேவை செய்த சுதந்திர போராட்ட வீரர், மாயாண்டி பாரதி.
பிப்ரவரி, 2015ல் காலமானார். 


இந்திய விடுதலைப்போராட்டத்த்தில் கலந்து கொண்டு  13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். 

ஒருமுறை, வெள்ளையரை எதிர்த்து போராடியதில், கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் நிறுத்தப்பட்டார், மாயாண்டி பாரதி. 


அவரைப் பார்த்த வெள்ளைக்கார நீதிபதி, 'உனக்கு சொத்து உள்ளதா...' எனக் கேட்டார். 

உடனே "இருக்கிறது.மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மங்கம்மா சத்திரம் எல்லாமே என் சொத்து தான்...' என்றார் மாயாண்டி பாரதி!


பண்ணையார்களின் கட்சியான காங்கிரசை வெறுத்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து இறுதிவரை தீவிரமாகப் பணியாற்றினார்.

தீக்கதிர் நாளிதழ்,செம்மலர் மாத இதழ் போன்ற முற்போக்கு இடதுசாரி இதழ்களில் ஆசிரியராக பொறுப்பில் இருந்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  ஆரம்பத்தவர்களில் முக்கியமானவர் மாயாண்டி பாரதி .
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-15.
  • பனாமா கால்வாய் திறக்கப்பட்டது(1915)
  • இந்திய விடுதலை  தினம்(1947)
  • தென் கொரியா உருவாக்கப்பட்டது(1948)
  • பஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)
=====================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?