ஒருவழியான எட்டுவழி

தேர்தல் சுரம்.
"இவர்களுக்கு உள்ளாட்ச்சி தேர்தல் நடத்த்தும் எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.2019இல் கூட இந்த அரசு தேர்தல் நடத்துவதாக தெரியவில்லை."
                                                        - உள்ளாடசித்தேர்தல் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியவை.
தமிழ்­நாட்­டில் 2016ம் ஆண்டு நடை­பெற்­றி­ருக்க வேண்­டிய உள்­ளாட்­சித் தேர்­தல் இன்­னும் நடந்­த­பா­டில்லை. அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளும், பல்­வேறு அமைப்­பு­க­ளும், பொது­மக்­க­ளும் கூட உள்­ளாட்­சித் தேர்­தலை விரை­வில் நடத்த வேண்­டும் என வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

தமிழ்­நாடு அரசு தரப்­பில் முத­ல­மைச்­சர் எடப்­பாடி பழ­னிச்­சாமி, துணை முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வம் மற்­றும் அமைச்­சர்­க­ளும், உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்த நாங்­கள் தயார், வார்டு வரை­யறை பணி­கள் முடிய வேண்­டும்,
இது தொடர்­பான வழக்­கின் தீர்ப்பு உச்­ச­நீதி மன்­றத்­தில் இருந்து வர வேண்­டும். அதன்­பின் நிச்­ச­யம் தேர்­தலை நடத்­து­வோம். அதற்­காக நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்­கின்­ற­னர்.
பஞ்­சா­யத்­து­ராஜ் சட்­டப்­படி, 5 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் தேர்­தலை கட்­டா­யம் நடத்த வேண்­டும். ஜன­நா­ய­கத்­தின் அடிப்­படை நிர்­வாக அமைப்பு உள்­ளாட்சி பத­வி­கள்­தான். அங்கு தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள்­தான், மக்­க­ளின் அடிப்­படை பிரச்­னை­களை கவ­னிப்­பார்­கள்.
தமிழ்­நாட்­டில் 234 எம்.எல்.ஏ. தொகு­தி­க­ளும், 39 எம்.பி. தொகு­தி­க­ளும் தான் உள்­ளன. ஆனால் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் 12 மாந­க­ராட்­சி­கள், 31 மாவட்ட ஊராட்­சி­கள், 385 ஒன்­றி­யங்­கள், 124 நக­ராட்­சி­கள், 524 பேரூ­ராட்­சி­கள், 12 ஆயி­ரத்து 524 ஊராட்­சி­கள், இவற்­றில் உள்­ள­டங்­கிய சுமார் ஒரு லட்­சத்து 31 ஆயி­ரம் பிர­தி­நி­தி­கள் பங்­கேற்­கிற மிகப்­பெ­ரிய நிர்­வாக அமைப்பு இது. அவ­சி­யம் அர­சி­ய­ல­மைப்பு சட்­டப்­படி உரிய காலக்­கெ­டு­வுக்­குள் உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்த வேண்­டிய பொறுப்­பும், கட­மை­யும் அர­சுக்கு உண்டு. அவர்­க­ளும் இதற்­கான முன் முயற்­சி­களை எடுத்­த­னர்.
கடந்த 2001 – மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி, 2006, 2011–ல் முந்­தைய அர­சு­கள் கடைப் பிடித்த அதே அணு­கு­மு­றை­யின் அடிப்­ப­டை­யில், 2016–க்கான தேர்­த­லை­யும், மாநில தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­தது.
ஆனால், திமுக சார்­பில் அக்­கட்­சி­க­ளின் அமைப்பு செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி, பழங்­கு­டி­யின மக்­கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்­கீடு வழங்­கப்­ப­ட­வில்லை. பெண்­கள் வார்டு எது என்­ப­தை­யும் தெளி­வு­ப­டுத்­த­வில்லை, போதிய கால அவ­கா­ச­மும் வழங்­க­வில்லை என்­பது உள்­பட பல்­வேறு கார­ணங்­களை குறிப்­பிட்டு, உயர்­நீதி மன்­றத்­தில் வழக்கு தொடர்ந்து, உள்­ளாட்சி தேர்­தல் அட்­ட­வ­ணையை ரத்து செய்ய வேண்­டும் என கோரி­யி­ருந்­தார்.

இந்த மனு மீது விசா­ரணை நடத்­திய உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி கிரு­பா­க­ரன், உள்­ளாட்சி தொடர்­பான அர­சா­ணை­களை ரத்து செய்­த­து­டன், பழங்­கு­டி­யி­னர், பெண்­கள் இட ஒதுக்­கீடு உள்­ளிட்­ட­வற்றை முறைப்­ப­டுத்­து­வ­து­டன், குற்­றப் பின்­னணி விப­ரங்­களை வேட்பு மனு­வில் குறிப்­பிட்ட வேண்­டும் என்­பது உள்­ளிட்ட சில பரிந்­து­ரை­க­ளை­யும் தனது உத்­த­ர­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார். இது தொடர்­பாக அர­சின் மேல்­மு­றை­யீடு, திமுக தரப்­பில் மேலும் சில கோரிக்­கை­க­ளோடு வழக்கு உச்ச நீதி­மன்­றம் வரை சென்­றது.
 2001 மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி தேர்­தலை நடத்த வேண்­டும். வாக்­குச் சீட்டு முறை­களை ரத்து செய்து, மின்­னணு எந்­தி­ரம் மூலமே வாக்­க­ளிக்க அனு­ம­திக்க வேண்­டும் என திமுக தரப்பு வலி­யு­றுத்­தி­யது.
இது தொடர்­பான வழக்­கு­களை விசா­ரித்த நீதி­மன்­றங்­கள், விரைந்து தேர்­தலை நடத்த வேண்­டும் என்று தான் உத்­த­ர­விட்­டது.
ஒரு கட்­டத்­தில், இந்த வழக்­கில் ஆஜ­ரான மாநில தேர்­தல் ஆணை­யத்­தின் செய­லா­ளர் டி.எஸ். ராஜ­சே­கர், தற்­போ­தைய மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் உள்­ளாட்சி வார்­டு­கள் மறு சீர­மைப்பு செய்­யப்­பட்டு வரு­வ­தா­க­வும், இதற்­கென அமைக்­கப்­பட்ட மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் பல்­வேறு ஆய்­வு­களை மேற்­கொண்டு தொகுதி சீர­மைப்பு வரைவு பட்­டி­யல் மற்­றும் வரை­ப­டத்தை தயா­ரித்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­னார்.
மேலும் வார்டு சீர­மைப்­புத் தொடர்­பாக அர­சி­யல் கட்­சி­கள், பொது­மக்­கள் மற்­றும் பல்­வேறு அமைப்­பு­க­ளி­டம் இருந்து 18 ஆயி­ரத்து 961 ஆட்­சே­பனை மனுக்­கள் வந்­தி­ருப்­ப­தா­க­வும், இவற்­றில் 7 ஆயி­ரத்து 575 மனுக்­கள் அதி­கா­ரி­க­ளின் கள ஆய்­வுக்கு பிறகு ஏற்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும், தெரி­வித்­த­து­டன், தமி­ழ­கத்­தி­லுள்ள ஒரு லட்­சத்து 31 ஆயி­ரம் வார்­டு­களை மறு சீர­மைப்பை இறுதி செய்ய கால அவ­கா­சம் தேவைப்­ப­டு­வ­தா­க­வும் கூறி­யுள்­ளார்.
வார்டு மறு சீர­மைப்பு பணி­கள் முடிந்து வார்டு வாரி­யாக வாக்­கா­ளர்­கள் பட்­டி­யல் வெளி­யி­டப்­பட்டு அதன் அடிப்­ப­டை­யில் உள்­ளாட்­சித் தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்­றும் தேர்­தல் ஆணை­யச் செய­லர் உறுதி அளித்­தி­ருந்­தார்.
ஆனா­லும், மேலும் கால­தா­ம­தம் ஆன­தன் அடிப்­ப­டை­யில், திமுக, தேர்­தல் ஆணை­யம் மற்­றும் தமி­ழக அர­சின் மீது நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு தொடர்ந்து.
இந்த வழக்கை விசா­ரித்த உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள், தேர்­தல் ஆணை­யத்­திற்­கும், தமி­ழக அர­சுக்­கும் கடும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர். இம்­மா­தம் 6ம் தேதிக்­குள், தேர்­தல் தொடர்­பான அட்­ட­வ­ணையை வெளி­யிட வேண்­டும் என்­றும், இல்லை என்­றால், நீதி­மன்ற அவ­ம­திப்பு அடிப்­ப­டை­யில், நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக நேரி­டும் என்­றும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

எனவே, தமிழ்­நாடு மாநில தேர்­தல் ஆணை­யம், இன்­னும் கார­ணங்­களை தேடி அலை­யா­மல், உட­ன­டி­யாக உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான தேதி­களை அறி­வித்து நடத்­திட வேண்­டும் என்­ப­து­தான், அனைத்­துப் பிரிவு மக்­க­ளின் கருத்­தாக உள்­ளது.
கடந்த மாதம் சட்­ட­மன்­றத்­தில், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் தனி அலு­வ­லர்க்­கான பதவி நீட்­டிப்பு மசோ­தாவை அறி­மு­கப்­ப­டுத்­திய அமைச்­சர் வேலு­மணி, ‘எந்த நேரம் தேர்­தல் வந்­தா­லும் அதைச் சந்­திக்க தயார் நிலை­யில் இருக்­கி­றோம் என்­றும்’ உள்­ளாட்­சித் தேர்­தலை விரை­வில் நடத்­து­வ­தற்கு உரிய நிதி ஒதுக்­கீடு செய்­தி­ருப்­ப­தா­க­வும், வார்டு மறு வரை­யறை தொடர்­பான நீதி­மன்­றத் தீர்ப்பு கிடைத்­த­தும், உடனே தேர்­தல் நடத்­தப்­ப­டும் என்­றும் உறுதி தெரி­வித்­தார்.
அந்த நிலைப்­பாட்­டில் மேலும் உறு­தி­யாக இருந்து, உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்­து­வ­து­தான் இந்த அர­சுக்­கும் நல்­லது. வெற்றி, தோல்­வி­களை பற்­றிக் கவ­லைப்­ப­டா­மல், ஜன­நா­ய­கத்­தின் மீது நம்­பிக்கை வைத்து இந்த அர­சாங்­கம் தேர்­தலை நடத்­தி­யது என்ற நற்­பெ­ய­ரு­டன், அடுத்­த­டுத்து வரும் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்­தல்­க­ளுக்­கும் இது உறு­து­ணை­யாக இருக்­கும்.

===================================================================================
ன்று,
ஆகஸ்ட்-17.
  • இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
  • இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)
  • காபோன் விடுதலை தினம்(1960)
  • முதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)
====================================================================================
ஊடக தர்மம்.'
அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதல் அமெரிக்க ஊடங்களை கடுமையாக சாடி வருகிறார். அமெரிக்க ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை திசை திருப்பி வருவதாக அவர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்தியாவில் பிரதமர் மோடி ஊடகங்களை வளைத்து பாஜக அரசு ஊதுகுழலாக மாற்றிய தந்திரம் டிரம்புக்கு தெரியவில்லையா?அல்லது இந்திய ஊடகங்கள் போல் அமெரிக்க ஊடகர்கள் விலை போகவில்லையா?இரண்டாவதுதான் சரியாக இருக்கும்.!


 அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னணி பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் டைம்ஸ் இரண்டையும்  ‘டிரம்ப் வெறுப்பாளர்கள்’ என சாடினார் டிரம்ப்.

‘‘அந்த இரு பத்திரிகைகளும் நேர்மறையான நல்ல செய்திகளை விட்டுவிட்டு எதிர்மறையான செய்திகளை மட்டும் வெளியிட்டு வருகின்றன. அவர்கள் என்றும் மாறபோவதில்லை’’ என கூறினார்.
மேலும் கடந்த மாதம் சி.என்.என் பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் தகாத கேள்வியை கேட்டதாக கூறி வெள்ளை மாளிகை அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது.

அதை தொடர்ந்து அமெரிக்க பத்திரிகையான பாஸ்டன் குளோப் கடந்த வாரம் டிரம்புக்கு எதிரான தேசிய அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. ஊடகத்துக்கு எதிரான டிரம்பின் போருக்கு தக்க பதிலடி கொடுக்க ஒவ்வொரு பத்திரிகையும் டிரம்புக்கு எதிராக தலையங்கம் எழுத வேண்டும் என அறிவித்தது.


பாஸ்டன் குளோப்பின் இந்த அழைப்புக்கு நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் போஸ்ட், பிலடெல்பியா இன்கொய்ரர் உட்பட சுமார் 350 பத்திரிகைகள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

அதன் தொடர்ச்சியாக இன்று சுமார் 350 பத்திரிகைகள் டிரம்புக்கு எதிராக தலையங்கம் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. டிரம்பின் கட்சி வெற்றி பெற்ற மாகாணங்களின் செய்தித்தாள்களும் இதில் அடக்கம். 

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்த ஆண்டு அரசு அதிகாரிகளால் ஊடகங்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான வருடம் என தலையங்கத்தில் எழுதியுள்ளது.

‘‘உங்களுக்கு பிடிக்காத உண்மைகளை போலி செய்திகள் என சாடுவது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை மக்களின் எதிரிகள் என வர்ணிப்பது ஆபத்தான காலக்கட்டதை காட்டுகிறது’’ என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
=======================================================================================
ஒருவழியான எட்டுவழி சாலை 
சென்னை- சேலம் எட்டுவழிச் சாலையை முதலில் ஆதரித்தது பா.ம.க. பின்னர் கடுமையாக எதிர்jத்து வந்தது. தடையை மீறி மக்களை சந்தித்து ஆய்வு செய்ய பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி களமிறங்கினார். 
எட்டுவழிச் சாலை அமைய இருக்கும் மாவட்டங்களில் மக்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டு அவற்றை பிரதமருக்கும், முதல்வருக்கும் அனுப்பப் போவதாக அவர் கூறினார். 

அத்தோடு ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராமங்களிலும் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் எட்டுவழிச் சாலையை எதிர்த்து தீர்மானம் போட, அந்தந்த கிராமங்களில் இருக்கும் பா.ம.கவினர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம், தர்மபுரி மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் தங்கள் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். 
தலைமைக்கு தகவல் தெரிவித்ததோடு சேலம் மாவட்டத்தில் பனைமரத்துப்பட்டி, பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தர்மபுரி மாவட்டத்திலும் கிராம சபை கூட்டங்களில் பா.ம.கவினர் கலந்துகொண்டு எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது என்று முடிவெடுத்திருந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ். 
அப்போது இருவருக்கும் இடையே தனிப்பட்ட ஒப்பந்தங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 
அத்தோடு 8 வழிச்சாலை குறித்து வாய் திறக்கவில்லை பா.ம.க தலைவர்கள். 

இந்நிலையில், ஆகஸ்டு 13ம் தேதி பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணியிடம் இருந்து வந்த அறிக்கையில், “ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுதலை நாளையொட்டி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினரும், பொதுமக்களும் அதிக அளவில் கலந்து கொண்டு நாடு முழுவதும் புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  
அதை ஏற்று நாடு முழுவதும் புகையிலைக்கு தடை விதிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்டு பாமக நிர்வாகிகள் அதிர்ச்சியாகிவிட்டதாக கூறப்படுகிறது. 
எட்டுவழிச் சாலையை கடுமையாக களத்தில் நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் அதைவிட்டுவிட்டு புகையிலை எதிர்ப்பினை இப்போது தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 
இதனால் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பா.ம.கவினர் பலர் கிராம சபை கூட்டங்களுக்கு செல்வதையே தவிர்த்துவிட்டனர்.
ஆனாலும் பாமகவினரின் பங்களிப்பு இல்லாமலேயே 16 கிராமங்களில் எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

உண்மையிலேயே பாமகவினர் இதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தால் எட்டுவழிச் சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் என்று அப்பகுதியில் உள்ள பாமக நிர்வாகிகள் வருந்துகிறார்கள்.
“ஆகஸ்டு 6 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்ப்பதில் பாமக முன்பு காட்டிய வேகம் குறைந்திருப்பதாகவே தெரிகிறது. 
இதன் விளைவுதான் பாமக கிராம சபைகளில் எட்டுவழிச் சாலையை விட்டுவிட்டு தன்னுடைய பழைய முழக்கமான புகையிலை ஒழிப்பைக் கையில் எடுத்திருக்கிறது. 

புகையிலை ஒழிப்பு நல்ல முழக்கம்தான் என்றாலும் எட்டுவழிச் சாலையில் இருந்து ஒதுங்கிச் செல்ல பாமகவுக்கு அந்த முழக்கம் பயன்பட்டிருக்கிறது” என்கிறார்கள் சேலம் மாவட்ட பத்திரிகையாளர்கள்.
சேலம், தர்மபுரியில் இதுகுறித்து பேசப்படுவதை அறிந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “பசுமைச் சாலைத் திட்டத்திற்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டது கண்டிக்கத்தக்கது. 
சில கிராமங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என ஒப்புக்காக ஒரு கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். 
எடப்பாடி பழனிசாமி மத்திய அரசால் சாலை ஒப்பந்தம் மூலம் பணமாகவும்,ஊழல் காரணமாகவும் தான் அமுக்கப்பட்டதைப்போல் மருத்துவக்கல்லூரி ஊழல் மூலம் அன்புமணி மீது சிபிஐ விசாரணை விரைவாக்கப்படலாம் என்று பேசியிருப்பார்கள் .அதனாலே எட்டுவழிசாலைக்கு எதிரான கிராமசபை தீர்மானங்கள் புகையிலையாக புகைந்து விட்டது என்பதே பலரின் ஐயம்.
அதுவாகத்தான் இருக்கும். மற்றபடி அன்புமணி- ராமதாஸுக்கும் முதல்வருக்கும் இடையே என்ன உடன்பாடோ ?



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?