தீவிரப் பேரிடர்..
கேரள பெருவெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவித்து உரிய நிவாரணம் அளிக்குமாறு கேரள அரசும் ,மக்களும்,அரசியல்வாதிகளும் வலியுறுத்தியிருந்த நிலையில்,
‘‘தீவிரத் தன்மைகொண்ட இயற்கைப் பேரிடர்” என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த நூற்றாண்டில் இல்லாத மிகப்பெரும் இயற்கைச் சீற்றத்தை கேரளா சந்தித்துள்ளது.
மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் அரசு கணக்கீட்டில் இதுவரை சுமார் 370 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் சற்று வடிந்தால்தான் உயிரிழப்பின் கொடூர விபரம் சரியாகத்தெரியும்.சில குடும்பங்கள் மொத்தமாக காணவில்லை.
மாநிலம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
கேரளாவில் ஏற்பட்ட பெருஞ்சேதங்களை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், கேரளாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பை தீவிரத் தன்மை கொண்ட இயற்கை பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
இதனிடையே தீவிர நிவாரணப் பணிக்கு கேரளம் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திங்களன்று (ஆக.20) கொச்சி கடற்படை விமான தளத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் கொச்சி விமான நிலையம் முழுவதும் சூழ்ந்தது.
இதனால் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை விமானப் போக்குவரத்து இருக்காது என கொச்சி தேசிய விமான நிலையம் அறிவித்திருந்த நிலையில், திங்களன்று கொச்சி கடற்படை விமான தளத்திற்கு பெங்களூரு விமானம் வந்தடைந்தது.
கடற்படை விமான தளத்தில் இருந்து முதன்முறையாக இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் பெங்களூரிலிருந்து புறப்பட்டு திங்களன்று காலை கொச்சி வந்தது.
பின்னர் காலை 8.30 மணிக்கு மீண்டும் புறப்பட்டது.
திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் ரயில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீராகிக் கொண்டிருக்கிறது.
கேரளாவின் முக்கிய தடங்களான எர்ணாகுளம் - திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா - கோட்டயம் வழிகளில் இயக்கப்படும் ரயில்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஆக.8 ஆம் தேதி முதல் தற்போது வரை 210 உயிர்களை காவு வாங்கியுள்ளது. 7.14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செங்ஙன்னூர், பந்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
வரும் நாட்களில் கேரளாவில் மழைப் பொழிவு படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள அரசின் அடுத்த மிகப்பெரிய பணி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதுதான் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளது.
1649.5 மி.மீ என்ற இயல்பான அளவை விட 2346.6 மி.மீ மழை இதுவரை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் மிக அதிகமாக இடுக்கி (சராசரியை விட 92சதவீதம் அதிகம்) மற்றும் பாலக்காட்டில்(சராசரியை விட 72 சதவீதம் அதிகம்) மழைபெய்துள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பலர் உயிரிழந்திருப்பதாகவும் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7,24,649 லட்சம் மக்கள் 5,645 நிவாரணமுகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிறன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்புத்துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சியால்ஞாயிறன்று சுமார் 22 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கேரள அரசு அடுத்து எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரிய சவால் தொற்றுநோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதும் ஆகும்.
இதுகுறித்து முதல்வர் பினராயிவிஜயன்கூறுகையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொருபஞ்சாயத்துகளிலும் ஆறு சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வெள்ள நீரால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறதா எனகண்காணித்து அதற்குஉரிய நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என்றார்.
நிவாரண முகாம்களில் இருந்தமக்கள் வெள்ளம் வடியத் தொடங்கிய தங்கள் பகுதிக்கு திரும்பத் துவங்கிவிட்டனர்.
இந்த வெள்ளத்தால் சேறும் சகதியுமாக உள்ள தங்கள் வீடுகளின்நிலையைஎண்ணி பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் மத்திய அரசோ பேரிடர் என்று அறிவிக்க மிகவும் யோசித்து அறிவித்துள்ளது.
மேலும் கேரள அரசு 2000 கோடிகள் முதல் கட்ட நிவாரணமாகக் கேட்ட நிலையில் வெறும் 500 கோடிகளை மட்டும் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
ஆனால் கேரளா இந்நிலையில் இருந்து மீண்டு வர குறைந்தது 10000 கோடிகள் தேவைப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது.சாலைகள்,மின் கம்பங்கள்,பாலங்கள்,ஆறு,ஏரி ,குளங்களின் கறைகளை முற்றிலுமாக புதிதாகத்தான் அமைக்க வேண்டிய நிலை.
இவைகளை செய்து முடிப்பது என்பது கேரளாவையே புதுப்பிப்பது போல்.காரணம் 17 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பெரும் பாதிப்பை தீவிரத் தன்மை கொண்ட இயற்கை பேரிடராகஅறிவித்தால் மட்டும் போதா.
பாஜக ஆடசியில்லாத மாநிலம்,தென்மாநிலம்,இடதுசாரிகள் ஆளும் மாநிலம் என்ற காழ்ப்புணர்சிகளைக் கைவிட்டு உ.பி போல் எண்ணி மறுசீரமைப்புக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.
தங்கள் மீன்பிடித்தொழிலை விட்டு விட்டு வெள்ளத்தில் சிக்கிய மக்களைக்காப்பாற்ற தங்கள் முதுகையே படிக்கட்டுகளாக்கிய பாமரனுக்கு உள்ள உதவும் உணர்சி ஆட்சி -அதிகாரம்-நிதியை கொட்டி வைத்திருக்கும் பாஜக அரசுக்கு வேண்டும்.
சபரிமலைக்கு பெண்கள் அனுமதித்ததால் வந்த வினை என்று மூளையற்றத் தனமாக இடுகைகைகளப்போடுவதை நிறுத்திவிட்டு சபரி மலை கோவிலே மூழ்கி அய்யப்பனை தேடும் நிலை வந்ததை எண்ணி பகுத்தறிய வேண்டும்.
கங்கையை சுத்தப்படுத்தவே 10000கோடிகளை கங்கையில் கொட்டியவர்களுக்கு ஒரு மாநிலத்தையே புதுப்பிக்க எவ்வளவு தேவைப்படும் என்பது தெரியாததல்ல.
வரதராஜப்பெருமாள் கோவில் வாசலில் சங்கர்ராமனைக் கொலை செய்ததால் தான் சுனாமி வந்தது.
ரஞ்சிதா கேசட் பார்த்துத்தான் ஒக்கி புயல் வந்தது.
ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்றதால் தான் கேரளா மூழ்குகிறது.
ரஞ்சிதா கேசட் பார்த்துத்தான் ஒக்கி புயல் வந்தது.
ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்றதால் தான் கேரளா மூழ்குகிறது.
உங்களுக்கு
மட்டும் இவ்வளவு குரூர மூளைகளை எப்படித் தயாரிக்கிறான்?
படிப்பு பழக்க வழக்கம் நாகரிகம் விஞ்ஞான தொழில்நுட்ப காலத்திலேயே இவ்வளவு குரூரக் கயமைத்தனம் இருக்குமானால் பலநூறு ஆண்டுக்கு முன்னால் நம் முன்னோர்கள் எவ்வளவு துன்ப துயரங்களை அனுபவித்திருப்பார்கள்?
இந்தக் கழிசடை ரிசர்வ் வங்கியை தீட்டு ஆக்காமல் இருப்பது நல்லது.
மட்டும் இவ்வளவு குரூர மூளைகளை எப்படித் தயாரிக்கிறான்?
படிப்பு பழக்க வழக்கம் நாகரிகம் விஞ்ஞான தொழில்நுட்ப காலத்திலேயே இவ்வளவு குரூரக் கயமைத்தனம் இருக்குமானால் பலநூறு ஆண்டுக்கு முன்னால் நம் முன்னோர்கள் எவ்வளவு துன்ப துயரங்களை அனுபவித்திருப்பார்கள்?
இந்தக் கழிசடை ரிசர்வ் வங்கியை தீட்டு ஆக்காமல் இருப்பது நல்லது.
நாடு அனுபவிக்கப் போகும் எல்லா நிதிப்பேரழிவுகளுக்கும் இந்த ஒரு நியமனம் தான் காரணம்!
பிணங்களை மோகிக்கும் பிண்டங்கள்!
பிணங்களை மோகிக்கும் பிண்டங்கள்!
-ப.திருமாவேலன்
======================================================================================
இன்று,ஆகஸ்ட்-21.
- ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)
- ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
- டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
- ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
"பிரிட்டிஷ் இந்தியாவில், பாம்பே மாகாணத்தில் லட்சக்கணக்கான மக்களை கொன்ற கொடிய பிளேக் நோயை கட்டுப்படுத்த, நோய் கிருமிகளை பரப்பும் எலிகளை அழிக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தபோது, எலிகள் கணபதியின் வாகனம் அதை கொல்லகூடாதுன்னு நின்றவர்கள் பார்ப்பனர்கள்.. தலைமை ஏற்றவர் திலகர்.. அப்போது துவக்கப்பட்டது தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..."=======================================================================================