அபாயமாகும் ஆதார்.

ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். ஷர்மாவின் ஆதார் எண்ணை வைத்து ஹேக் செய்ய முற்பட்ட ஏலியட் ஆல்டெர்சன் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் தற்போது ட்விட்டரில் Aadhaar helpline number குறித்து புதிய கேள்வியைக் கேட்டுள்ளார்.
அது மீண்டும் ஆதார் பாதுகாப்பு குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் ட்ராய் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிய ஹேக்கர்கள் அவருடைய பிறந்த தேதி, முகவரி, மற்றும் இதர விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டனர்.

Aadhaar helpline number சர்ச்சை

ஆதார் உதவி மையத்தின் டோல் ப்ரீ (aadhaar helpline number) எண்ணான  1800-300-1947 இந்த எண்கள் நிறைய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் போனில் ஏற்கனவே பதிவாகியுள்ளது.
ஆதார் அட்டை வைத்திருந்தாலும் இல்லாவிடினும் அவ்வாடிக்கையாளர்களின் போனில் இந்த எண் டீஃபால்ட்டாக பதிவாகியுள்ளது.
Aadhaar helpline number பற்றி ஃப்ரெஞ்ச் ஹேக்கர் எழுப்பிய கேள்வி…

Do you have @UIDAI in your contact list by default?
இந்த கேள்விக்கு பின்பு இந்த எண்ணை தன்னுடைய அலைபேசியில் சரி பார்த்து தகவல்களை உறுதி செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
வெறும் காண்டாக்ட் எண்ணால் என்ன நடந்துவிடப் போகிறது என்று கேட்பவர்களும் அங்கு இருக்கிறார்கள்.
என்னுடைய விருப்பம் இன்றி என்னுடைய திறன்பேசியில் எப்படி இந்த எண்ணை டிஃபால்ட்டாக இணைக்கலாம் என்ற கேள்வியினையும் தொடர்ந்து கேட்டு தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகிறார்கள்.
வாடிக்கையாளர் சேவை எண் போன்றுதான் இதுவும் என்று எடுத்துக் கொண்டாலும் அனைத்துவிதமான போன்களிலும் இந்த எண் பதிவு  செய்யப்பட்டதாகவே வருகிறது. இதனால் தனிமனிதனின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பலர் கருத்து தெரித்துள்ளனர்.
இது குறித்து அரசு பேசுகையில், நாங்கள் எந்த ஒரு திறன்பேசி தயாரிக்கும் நிறுவனத்திடமும், சர்வீஸ் ப்ரொவைடர்களிடமும் இந்த எண்ணை டீஃபால்ட்டாக இணைக்க வேண்டும் என்று கூறவில்லை என்று அறிவித்திருக்கிறது.
யு.ஐ.டி.ஏ.ஐ எப்படியாக இப்படி ஒன்றை செய்யலாம் என்று தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்கள் பொதுமக்கள். சில நாட்களுக்கு முன்பு தான் எந்த ஒரு சமூக வலைதளத்திலும் ஆதார் சேலஞ்ச் என எதையாவது ஏற்றுக் கொண்டு ஆதார் எண்களை பதிய வேண்டாம் என யு.ஐ.டி.ஏ.ஐ கேட்டுக் கொண்டது.
UIDAI உதவி மைய எண் ஆண்ட்ராய்ட் போன்களில் டீஃபால்ட்டாக இணைத்தது குறித்து நேற்று UIDAI அமைப்பின் மீதும் ஆதார் அட்டையின் நம்பிக்கை குறித்தும்  கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டது.
பிரெஞ்ச் நாட்டு ஹேக்கர் எலியட் ஆதாரின் உதவி மைய எண் குறித்து ட்விட்டரில் கேள்வி கேட்க பரப்பாக மாறியது UIDAI உதவி மைய எண் விவகாரம்.
UIDAI உதவி மைய எண் தற்போது வெளிவரும் அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் டிஃபால்ட்டாக இணைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தான் எலியட்டும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் ஆதார் அமைப்பு, ” நாங்கள் எந்த ஒரு நெட்வொர்க் புரோவைடர்களிடமோ, அல்லது திறன்பேசி தயாரிக்கும் நிறுவனத்திடமோ ஆதார் உதவி மைய எண்ணை இணைப்பது குறித்து பேசவில்லை” என்று ட்விட்டரில் பதில் கூறியது.

UIDAI உதவி மைய எண் விவகாரமும் – கூகுளின் மன்னிப்புக் கடிதமும்

அதன்பின்னர், கூகுள் நிறுவனம் தானாக முன்வந்து, 2014ம் ஆண்டு இந்தியாவில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராட்ய்ட் செட்டப் விசார்ட்டில் தாங்கள் தான் UIDAI – யின் உதவி மைய எண்ணை இணைத்தோம் என்று ஒப்புக் கொண்டது.
மேலும் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது கூகுள்.அதில் “இது தவறுதலாக நடந்த ஒன்று. அதற்காக வருந்துகிறோம். மேலும் மிக விரைவில் புதிய விசார்ட் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதில் இந்த பிரச்சனை வராது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் “தனி நபர் குறித்த ரகசியங்களை இது எண் கொண்டு திருடிவிட இயலாது” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம்.
ஆண்ட்ராய்ட் போன்களில் இந்த ஆதார் உதவி எண் வருவதற்கு இது தான் காரணம் என்று கண்டறியப்பட்டாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களிலும் UIDAI – உதவி எண் எப்படி வருகிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.
ஆனால் ஏதேனும் ஒரு புள்ளியில் ஜிமெயிலை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் போது இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது என்று கூகுள் குறிப்பிட்டிருக்கிறது.
UIDAI உதவி மைய எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி என இரண்டையும் 2014ல் கூகுள் இணைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதார் அட்டையின் நம்பத்தன்மை குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் மக்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
மிக சமீபத்தில் ட்ராய் அமைப்பின் சேர்மன் ஆர்.எஸ். சர்மா தன்னுடைய ஆதார் அட்டை எண்ணை ட்விட்டரில் பதிவிட்டார்.
ஹேக்கர்கள் மிகவும் அசால்ட்டாக அந்த எண்ணை பயன்படுத்தி சர்மாவின் பிறந்த தேதி, முகவரி, அலைபேசி எண் உட்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டு ஆதாரின் நம்பகத் தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
தொலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லவில்லை என்று ஆதார் சொல்லுகிறது.ஆனால் bsnl உடன்பட அணைத்து தொலைபேசி நிறுவனங்களும் ஆதாருடன் இணைந்துள்ளன.அப்போது நமது கைரேகை வரை வெளியாகி ஒத்துப் பார்க்கப்பட்டது.
பின் என்ன வகையில் ஆதார் பாதுகாப்பானதாகும் .
=======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-05.
  • உலக  நண்பர்கள் தினம்
  • சுதந்திர தேவி சிலை அடிக்கல் நியூயார்க் , பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)
  • நிலவில் காலடிவைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்(1930)
  • புர்கினா பாசோ விடுதலை தினம்(1960)
  • தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா, 17 மாத தேடுதலுக்கு பின் கைது செய்யப்பட்டார்(1962)

========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?