ஏழைகளிடம் கொள்ளையிட்டு....,
2017 - 18ம் நிதியாண்டில், வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச மாத இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடம், பொதுத்துறையைச் சேர்ந்த, 21 வங்கிகள், மூன்று தனியார் வங்கிகள், 5,000 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளன.
பணக்காரர்கள் கடனை வாங்கிக்கொண்டு திரும்ப செலுத்தா நிலையில் பாமரர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வளர்கிறது இந்திய வங்கிகள்.
நாட்டின் பெரிய, பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, 2017 - 18 நிதியாண்டில், 6,547 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.
அந்த வங்கி, 2017 ஏப்ரல் முதல், வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச, மாத சராசரி இருப்புத் தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிக்கத் துவங்கியது.
அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி, வசூலித்த அபராதத் தொகை, 2,433 கோடிரூபாய்.இந்ததொகை இல்லாவிட்டால், 2017 - 18ம் நிதியாண்டில், அந்த வங்கிக்கு ஏற்பட்ட நஷ்டம் பெரியளவில் இருந்திருக்கும்.
ஆனால் 45000 கோடிகள் கடனாக வைத்திருப்பவர்தான் உலகப்பணக்காரர்கள் வரிசையில் இருக்கும் அம்பானிகள்.
மற்றும் கடன்காரர்கள் அதானிகள்,மோடிகள்.
இவர்களுக்கு அம்பானிக்கு ஆரம்பமே ஆகாத ஜியோ கல்வி நிறுவனத்துக்கு தர்வரிசையும் கொடுத்து 93,500 கோடிகள் நிதியும் கொடுக்கப்பட்டுள்ளது.கொடுத்தது.கல்விக்கடன் கட்டமுடியாத ஏழை மாணவர்களை தற்கொலையளவுக்கு தூண்டி வசூலிக்கும் வங்கிகள்.அரசுகள்.
தந்தை 20,000 கடன் வைத்திருப்பதால் பிள்ளைகளுக்கு கடன் தர மறுக்கும் வங்கிகள்.
ஆனால் அரசோ 45000 கோடிகள் திரும்ப செலுத்தா கடன்வைத்திருக்கும் அம்பானிக்கு 1,30,000 கோடிகள் மதிப்புள்ள ரபேல் விமான ஒப்பந்தத்தைக்கொடுக்குகிறது.
கேட்டால் ராணுவ ரகசியம் என்று கதை விடுகிறார் அமைசசர் நிர்மலா.
அடுத்ததாக, எச்.டி.எப்.சி., வங்கி, 2017 - 18ம் நிதியாண்டில், குறைந்தபட்ச மாத சராசரி இருப்புத் தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, 590 கோடி ரூபாய்வசூலித்துள்ளது.
முந்தைய நிதியாண்டில், அந்த வங்கிக்கு, அபராத தொகையாக, 619 கோடி ரூபாய் கிடைத்தது. ஆக்சிஸ் வங்கி, 530 கோடி ரூபாய், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, 317 கோடி ரூபாய் அபராதம் வசூலித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதிகளவில் அபராதம் வசூலிப்பதாக வந்த விமர்சனங்களை அடுத்து, 2017, அக்., 1 முதல், அபராத தொகையை, பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத்துறை வங்கிகள் மற்றும், மூன்று தனியார் வங்கிகள் சேர்ந்து, 2017 - 18ம் நிதியாண்டில், தங்கள் வாடிக்கையாளர் களிடம் அபராத தொகையாக, 5,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள்கூறுகின்றன.
=========================================================================================
இன்று,
ஆகஸ்ட்-06.
காற்றாலை காட்டுக்குள்ளே..
இயற்கை பொருட்களிலேயே கலப்படம் செய்யும் இக்காலத்தில், இயற்கை தன்மை மாறாமல் சில பொருட்கள் கிடைக்கின்றன.
அவற்றில் ஒன்று தான், கற்றாழை.
'அலோவேரா' என்று அழைக்கப்படும் கற்றாழையை, குமரி, கன்னி என்று கூறுகின்றனர், சித்தர்கள். காரணம், என்றும் இளமையோடு இருக்க உதவுவதால் தான், இதற்கு இப்பெயர்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என, பல வகை உண்டு. இதில், சோற்றுக் கற்றாழை மட்டுமே மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
இதை, 'மருத்துவ உலகின் ராணி' என்று அழைக்கின்றனர்,
சித்த மருத்துவர்கள். 17ம் நுாற்றாண்டு முதலே அழகு பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, கற்றாழை.
நன்கு வளர்ந்த கற்றாழையின் தண்டுகளை ஒடித்து, தோல் சீவினால் உள்ளே நுங்கு போல காணப்படும். இதை, சோறு என்று கூறுவர். இதில், உள்ள, 'அலாய்ன்' எனும் பொருளில், 'ஆன்டி ஆக்சிடன்டு'கள் அதிகம் இருப்பதால், பல நோய்களுக்கு, மருந்தாக பயன்படுகிறது.
மேலும், சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
கற்றாழை சாறு, உடலுக்கு குளிர்ச்சி தரும்; தீக்காயம், சவரம் செய்யும்போது ஏற்படும் கீறல்கள் மற்றும் வெட்டுக் காயங்களுக்கும் கற்றாழை கூழை பூசலாம். கற்றாழை சோற்றை முகத்தில் பூசி கழுவி வர, ஈரப்பதம் மாறாமல் இளமையுடன் இருக்கும், முகம்.
கற்றாழையின் கூழை வெய்யிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்தோ அல்லது அதன் ஜெல்லை தலையில் தேய்த்து குளித்தாலோ, கூந்தல் நன்றாக வளரும்.
கற்றாழை சோற்றை சில நிமிடங்கள் கண்கள் மீது வைத்து வர, கண் எரிச்சல் குணமாகும்; மூல நோய், வாய்வு தொல்லைக்கும் இது சிறந்த மருந்து.
சருமத்தில் உள்ள, 'கொலாஜன்' எனப்படும் கொழுப்பு திசுவை குறைக்கக் கூடிய புரோட்டீன், கற்றாழையில் அதிகம் காணப்படுவதால், முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் வயோதிக தோற்றத்தை மாற்றுகிறது.
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் வெய்யில் பாதிப்பால் உலர்ந்த சருமம் போன்றவற்றுக்கு சிறிது கற்றாழைச் சாறை தினமும் பூசி வர, நல்ல குணம் கிடைக்கும்.
உஷ்ணத்தை உள்ளிழுத்து, குளிர்ச்சியை வெளிக்காட்டும் பண்பு கற்றாழைக்கு உள்ளது.
இதனால் தான், கற்றாழையை வீட்டு வாசலில் கட்டி வைத்தால், கண் திருஷ்டி நீங்கும் என கூறுகின்றனர்.!
- எம்.விக்னேஷ்.
==================================================================================================================================
மர்மம் நிறைந்த மாயன்கள்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த நிதியாண்டில், வங்கிகள் கடன், 76 லட்சத்து, 59 ஆயிரத்து, 898 கோடி ரூபாயாக இருந்தது. இது, ஜூலை, 20ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கைப்படி, 12.44 சதவீதம் உயர்ந்து, 86 லட்சத்து, 13 ஆயிரத்து, 164 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கிகளில் முதலீடு, ஜூலை மாத அறிக்கைப்படி, 8.15 சதவீதம் உயர்ந்து, 114 லட்சத்து, 38 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
விவசாயம் மற்றும் சார்பு நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், 1 சதவீதம் குறைந்து, 6.5 சதவீதமாக உள்ளது.
==========================================================================================
நேற்று (ஆக 5) இணையற்ற கலைஞன் சந்திரபாபு பிறந்த தினம்.
ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்.
எம்.ஜி.ஆரை mr எம்.ஜி.ஆர் என்று அழைத்த ஒரே ஆள்.
சிவாஜியை வாடாபோடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே .
கதாநாயகர்களான அவர்களுக்கு இது பிடிக்கவில்லைஅதுபற்றி இவர் கவலைப்படவும் இல்லை .
இவர் பாடிய பாடல்களும்,நடனங்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன.இன்றும் இவரது பாடல்கள் பிரபலம்.
ஆகஸ்ட்-06.
- ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்
- பொலீவியா விடுதலை தினம்(1825)
- ஜமைக்கா விடுதலை தினம்(1962)
- உலகளாவிய வலை (WWW)தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)
காற்றாலை காட்டுக்குள்ளே..
இயற்கை பொருட்களிலேயே கலப்படம் செய்யும் இக்காலத்தில், இயற்கை தன்மை மாறாமல் சில பொருட்கள் கிடைக்கின்றன.
அவற்றில் ஒன்று தான், கற்றாழை.
'அலோவேரா' என்று அழைக்கப்படும் கற்றாழையை, குமரி, கன்னி என்று கூறுகின்றனர், சித்தர்கள். காரணம், என்றும் இளமையோடு இருக்க உதவுவதால் தான், இதற்கு இப்பெயர்.
கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, ரயில் கற்றாழை என, பல வகை உண்டு. இதில், சோற்றுக் கற்றாழை மட்டுமே மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.
இதை, 'மருத்துவ உலகின் ராணி' என்று அழைக்கின்றனர்,
சித்த மருத்துவர்கள். 17ம் நுாற்றாண்டு முதலே அழகு பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது, கற்றாழை.
நன்கு வளர்ந்த கற்றாழையின் தண்டுகளை ஒடித்து, தோல் சீவினால் உள்ளே நுங்கு போல காணப்படும். இதை, சோறு என்று கூறுவர். இதில், உள்ள, 'அலாய்ன்' எனும் பொருளில், 'ஆன்டி ஆக்சிடன்டு'கள் அதிகம் இருப்பதால், பல நோய்களுக்கு, மருந்தாக பயன்படுகிறது.
மேலும், சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
கற்றாழை சாறு, உடலுக்கு குளிர்ச்சி தரும்; தீக்காயம், சவரம் செய்யும்போது ஏற்படும் கீறல்கள் மற்றும் வெட்டுக் காயங்களுக்கும் கற்றாழை கூழை பூசலாம். கற்றாழை சோற்றை முகத்தில் பூசி கழுவி வர, ஈரப்பதம் மாறாமல் இளமையுடன் இருக்கும், முகம்.
கற்றாழையின் கூழை வெய்யிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தேய்த்தோ அல்லது அதன் ஜெல்லை தலையில் தேய்த்து குளித்தாலோ, கூந்தல் நன்றாக வளரும்.
கற்றாழை சோற்றை சில நிமிடங்கள் கண்கள் மீது வைத்து வர, கண் எரிச்சல் குணமாகும்; மூல நோய், வாய்வு தொல்லைக்கும் இது சிறந்த மருந்து.
சருமத்தில் உள்ள, 'கொலாஜன்' எனப்படும் கொழுப்பு திசுவை குறைக்கக் கூடிய புரோட்டீன், கற்றாழையில் அதிகம் காணப்படுவதால், முகத்தில் உள்ள சுருக்கம் மற்றும் வயோதிக தோற்றத்தை மாற்றுகிறது.
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் வெய்யில் பாதிப்பால் உலர்ந்த சருமம் போன்றவற்றுக்கு சிறிது கற்றாழைச் சாறை தினமும் பூசி வர, நல்ல குணம் கிடைக்கும்.
உஷ்ணத்தை உள்ளிழுத்து, குளிர்ச்சியை வெளிக்காட்டும் பண்பு கற்றாழைக்கு உள்ளது.
இதனால் தான், கற்றாழையை வீட்டு வாசலில் கட்டி வைத்தால், கண் திருஷ்டி நீங்கும் என கூறுகின்றனர்.!
- எம்.விக்னேஷ்.
==================================================================================================================================
மர்மம் நிறைந்த மாயன்கள்.
உலகில் பல நாகரீகங்கள் தோன்றி மறைந்துவிட்ட காலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்றளவும் தனக்கென தனி சட்ட திட்டங்களோடும் சில அதிசயங்களையும் பல அமானுஷ்யங்களையும் தன்னகத்தே கொண்டு உலகின் பல நாகரீகங்களுக்கு முன்னோடியாய் திகழும் ஒரு நாகரீகமே மாயன் எனப்படும் மர்ம நாகரீகம்.
மாயன் இனத்தவர். இவர்களை பற்றி பல முறை செவிவழி செய்தியாக மட்டுமே அறிந்திருப்போம். ஆனால் பல ஆயிரம் ஆண்டு பழமையான இவர்களை பற்றி வாருங்கள் விரிவாய் காண்போம்.
சூரியன், சந்திரன், வெள்ளி போன்ற கிரகங்களை பற்றியும் நட்சத்திரங்களை பற்றியும் நாம் அறிந்தது பல. ஆனால் 10,000 ஆண்டுகள் முன்னரே அவற்றின் பாதையை அறிந்து வானவியலில் புது புரட்சியை உருவாக்கி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றும் 4 வருடங்களுக்கு ஒரு முறை நம் பூமியின் பாதை சிறிது மாற்றம் பெற்று 365.24 நாட்களாக நீள்வதையும் துல்லியமாய் கண்டு கூறினார்.
2012ம் ஆண்டு மாயன்கள் உருவாக்கிய நாள்காட்டி முடிவுறுவதாகவும் ஆதலால் உலகம் அழிய போகிறது என்றும் பரவிய வதந்தி நாம் அறிந்ததே. ஆனால் அதன் பின் மாயன் நாள்காட்டியின் ஒரு பாகம் மட்டுமே முடிவுற்று இருப்பதாகவும். இன்னும் பல லட்ச ஆண்டுகளுக்கான நாள்கட்டி உள்ளதாகவும் அறிவியலாளர்கள் கூறினார்.
மனிதனின் வளர்ச்சி ஒரு ஒரு காலகட்டத்திற்கு எவ்வாறு மாறுபடும் என்றும் அதை மனிதன் எவ்வாறு எதிர்கொள்வான் என்ற கூற்றையும் அவர்கள் அளித்துள்ளனர். விவசாயம், மனித வாழ்வில் விலங்குகளின் பங்கீடு, இயந்திரங்களின் பங்கீடு என்று இன்றளவு நடக்கும் மாற்றங்களையும் அன்றே கணித்தனர் மாயன்கள்.
கட்டிடக்கலை வல்லுனர்களாக திகழ்ந்த மாயன் இனத்தவர்கள் கட்டிய கட்டிடங்கள் இன்றளவும் மத்திய அமெரிக்காவில் தலைநிமிர்ந்து நிற்கிறது. Hieroglyphic System என்று கூறப்படும் உருவரை எழுத்துமுறை இந்த மாயன்கள் தந்ததே. முந்தய காலகட்டத்தில் இந்த முறை எழுத்துக்களே பழக்கத்தில் இருந்தது. இன்று மத்திய அமெரிக்காவில் வாழும் மாயன் இனத்தின் சந்ததியினர் இன்றளவும் இவ்வகை எழுத்துக்களை மறவாமல், அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.

கணிதம், வானவியல், வாழ்வின் நெறி, விளையாட்டு என்று அவர்கள் இவர்கள் கால்பதியா துறை இல்லை என்றே கூறலாம். ஆனால் ஒரு ஆதிகால மனிதனுக்கு 10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனுக்கு எப்படி இவ்வாறான சிந்தனைகள் உதித்தது?. அம்மக்களின் IQ எனப்படும் நுண்ணறிவு திறனின் அளவு கண்டறிய முடியவில்லை.
ஆனால் இவ்வளவு மதிப்பும் தொன்மையும் கொண்ட இந்த நாகரிகம் தானாக எதையும் கற்கவில்லை, என்ன? தானாக எதையும் கற்கவில்லையா? ஆம் இந்த மாயன் நாகரீகத்திற்கும் முன் தோன்றிய ஒரு நாகரீகம் அதே மத்திய அமெரிக்காவில் புதையுண்டு கிடக்கிறது. அதுவே OLMEC எனப்படும் மாயன் மக்களை விட பழமையான மக்கள் கூட்டம். இவர்களிடம் இருந்தே மாயன்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டனர்.
அறிவியலாளர்கள் இன்றும் OLMEC இனத்தவர்களின் அழிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மேலும் இம்மக்கள் மத்திய அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்ததாக தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஒரு ஆய்வை கூறினாலும், அகழ்வாயப்பட்டது OLMEC மக்கள் தானா என்ற சந்தேகம் இன்றும் உள்ளது. வேளாண்மை, வேட்டையாடுதல், சேகரிப்பது, போக்குவரத்து போன்றவை OLMEC மக்கள் வழக்கமாக இருந்தது. ஆனால் நதி ஓட்டங்களின் மாற்றம் விவசாயத்திற்கு பொருந்தாத சுற்றுசூழல் மாற்றம் இவையே இவர்கள் மறைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1997ம் ஆண்டு Santley என்பவர் அளித்த ஆய்வில், Olmec மக்கள் வாழ்ந்த நிலம் சுற்றிலும் எரிமலைகள் நிறைந்த பகுதியாக இருந்ததாகவும் அதை உணர்த்த மக்கள் அடிக்கடி தங்கள் இடங்களை மாற்றி வந்ததையும் தெரிவித்துள்ளார். இவ்வாறு குறுகிய காலகட்டத்தில் அதிக அளவிலான இடமாற்றமே இம்மக்கள் முழுமையாய் மறைந்ததின் காரணமாக அவர் கூறுகிறார்.
அம்மக்கள் முழுமையாய் அழிந்துவிட்டதாக அறிஞர்கள் நினைத்தாலும் அவர்கள் வாழ்ந்த மத்திய அமெரிக்கா பகுதியில் இருந்து 330 மயில் தொலைவில் Olmec இனத்தில் மூதாதையரான Epi-Olmec இனத்தவர்கள் இடம்பெயர்ந்த காட்சிகளை சிலர் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு சென்றனர் என்னவாயினர் என்பது எல்லாம் மர்மமே.
இதை போன்ற மர்மங்கள் ஆச்சர்யங்கள் நிறைந்த பல இனமக்கள் இன்னும் நம் கண்ணில் படாமல் வாழ்ந்துகொண்டு தான் உள்ளனர். ஏன் இந்த Epi-Olmec இனத்தவரே தெற்கிலிருந்து வந்த ஒரு நதிக்கரை நாகரீகம் அறிந்த மக்கள் கூட்டத்திடம் இருந்தே பல விஷயங்களை கற்றுள்ளனர். அந்த நதிக்கரை நாகரீக மக்கள் யாரென்றே ஆய்வு இன்றும் ஆய்வுக்கு உட்பட்டே உள்ளது.
லியோ