வாத்துகள்.....1

“இந்தியர்கள் இங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் நிலையில், வேறு நாடுகளுக்கு மோடி அரசு குறைந்த விலையில் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

அதிக வரி விதிப்பு காரணமாக உள்நாட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இவ்வாறாக அதிக வரி விதித்ததன் மூலம் ஏற்கெனவே மோடி அரசு ரூ.11 லட்சம் கோடியைச் சுருட்டியுள்ளது.

மறுபுறமோ, விலை உயர்வு காரணமாக, சாதாரண நடுத்தர மக்களும், விவசாயிகளும், சிறு குறு தொழில் துறையினரும், போக்குவரத்துத் துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இப்போது பெட்ரோல் விலை ரூ.78 முதல் ரூ.86 வரையிலும், டீசல் விலை ரூ.70 முதல் ரூ.75 வரையிலும் உள்ளது.


ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.34 என்ற குறைந்த விலைக்கு மோடி அரசு 15 நாடுகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அதேபோல, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலேசியா, இஸ்ரேல் உள்ளிட்ட 29 நாடுகளுக்கு ஒரு லிட்டர் டீசல் ரூ.37 என்ற விலைக்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது. 

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் அவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர வேண்டும்.ஜிஎஸ்டி கொண்டுவந்த  2017 ஜூலை மாதமே இடதுசாரிகளும் , காங்கிரசும்  கோரிக்கை வைத்தனர். 

ஆனால் பாஜக மோடி அரசு அக்கோரிக்கையை ஏற்கவில்லை. 
இந்திய மக்களை கொடுமைப்படுத்தி வெளிநாடுகளில் கொடைவள்ளலாக காட்சியளிக்கவா பாஜகவை இந்தியர்கள் வாக்களித்து மோடியைப் பிரதமராக்கினார்கள்.

140டாலரில் கட்சா எண்ணை விற்றபோது மன்மோகன் காங்கிரஸ் அரசு 38 ரூபாய்க்கு பெட்ரோல் விலையை உயர்த்திய போது பாஜக இந்தியா முழுக்க நடத்திய போராட்டங்கள் எத்தனை.கொந்தளித்த கோப வார்த்தைகள் எத்தனை?

ஆனால் இன்று 16-40 டாலராக விற்கும் போது 82 ரூபாய்க்கு அதே பாஜக மோடி அரசு பெட்ரோலை விற்பது என்ன கொடுமையான நிர்வாகம்.ஆட்சி.?

பெட்ரோல் விலையை உயர்த்துவதாலேயே இந்தியாவில் பொருளாதார வீக்கம் உண்டாகிறது.டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி அடைந்துவருகிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் பற்றி பேசாமல் குளத்தில் ஆக்சிஜன் அதிகரிக்க வாத்துகளை விட்டுக்கொண்டு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறது பாஜக.

தினமும் விலையேறுவதால் போக்குவரத்து கட்டணம் உயர்கிறது.காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை இதனால் ஏறுகிறது.

அதை சமாளிக்க உழைப்பாளர் ஊதியம் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால் தொழிற்சாலைகள் தயாரிப்பு விலையும் கூடுகிறது.

ஆக இதை சமாளிக்க அரசு பணத்தை அதிக அளவில் அச்சிட வேண்டிய நிலை கட்டாயமாகிறது.
அதானால் பண வீக்கம்.
அங்குதான் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாகிறது.

 அதை உணராமல் கார்பரேட்கள் அம்பானி லாபம் குறையாமல் பார்த்துக்கொள்ள பெட்ரோல் விலையை மட்டும் தினமும் ஏறிவரும் பாஜக கொள்கை பொருளாதாரத்தில் இவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைத்தான் காட்டுவதுதான்  வாத்துகள்.
=====================================================================================
ன்று,
செப்டம்பர்-01.
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1914)
  • அமெரிக்க விமானப்படை பயிற்சி தளம் அமைக்கப்பட்டது(1982)
  • உஸ்பகிஸ்தான் விடுதலை தினம்(1991)
======================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?