எந்த பிரதமருக்கும் இல்லாப் பெருமை

உலகில் எந்த ஒரு பிரதமருக்கும் இல்லாப் பெருமை நம் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது.
அது "ஊழல் மோடி" என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதுதான்.
இதோ அதன் இணைப்பு :http://www.corruptmodi.com/.
மோடி அரசால் இந்த இணையத்தளம் முடக்கப்படுவதற்கு முன் அங்கு சென்று வந்துவிடுங்கள்.
முடிந்தால் A முதல் Z வரை ஆங்கில எழுத்துக்களை வரிசைப்படுத்தி மோடி அரசின் முறைகேடுகள்,ஊழல்களை தந்துள்ளதை நகல் எடுத்துக்கொள்ளுங்கள்.
zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
ஆதார் திட்ட முரண்பாடுகள்
ஆதார் தொடர்பாக இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் விவாதங்கள் வைக்கப்படுகின்றன.
அமெரிக்க அரசால் அதன் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு எண் (SSN) எஸ்.எஸ்.என், ஆதாரின் முன்னோடித் திட்டம் என்று கூறி ஆதாரை நியாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் அந்த எண்ணை பெறுவது மக்களின் விருப்பம், எஸ்.எஸ்.என் வாங்கவேண்டும் என்று அமெரிக்க அரசு மக்களை கட்டாயப்படுத்தவில்லை. 1935 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.என் தொடர்பாக அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, பொதுமக்களின் தனியுரிமைகளும், அவர்களின் நலன்களுக்கும் முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2010இல் ஆதார் மசோதா சாதாரண வரைவு மசோதாவாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது அதிகாரபூர்வச் சட்டமாக மாறவேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவேண்டும். அந்த வரைவு மசோதாவை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு, அரசின் கருத்துடன் வேறுபட்டது.

"ஆதார் எண் தொடர்பான தரவுகளை வேறு எவர் கையிலும் சிக்காமல் பாதுகாக்க வேண்டும், தனி மனிதர்கள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும்" என்று நாடாளுமன்ற நிலைக்குழு விரிவான அறிக்கை அளித்தது. பிறகு சட்டம் இயற்றப்படாமலேயே ஆதாரை அமலாக்கப்பட்டதால், பல்வேறு பொதுநலன் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
சில குறிபிட்ட அரசுத் திட்டங்களுக்கு மட்டும் ஆதாரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் அனுமதித்த நிலையில், 2016 மார்ச் மாதத்தில் காங்கிரஸ் அரசின் ஆதார் வரைவு மசோதாவை திரும்பப் பெற்ற தற்போதைய அரசு, புதிய வரைவு வாசகம் கொண்ட மசோதாவை, 'ஆதார் மசோதா-2016' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா, தந்திரமான வகையில் பண மசோதா என்று வகைப்படுத்தப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பண மசோதாக்களுக்கு மக்களவை ஒப்புதலே போதுமானது. எனவே, மாநிலங்களவையில் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும், மக்களவையில் பெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ.க அரசு, மசோதாவை நிறைவேற்றியது.
ஆதாரால் ஆபத்து எப்படி?
தனியார் நிறுவனங்கள் ஆதார் தரவுகளை அணுகமுடிவதால் ஆதார் திட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான புகார்கள் எழுந்தன. கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பல பிரபலங்களும் தங்கள் தரவுகள் கசிவ போலீசில் புகார் அளித்தனர்.
நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India, UIDAI) யு.ஐ.டி.ஏ.ஐக்கு தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க உரிமை உண்டு, 

ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கு இதற்கான உரிமையை எப்படி கொடுக்கமுடியும்?
125 பதிவாளர்கள் மற்றும் 556 பதிவு முகமைகள் மூலம் ஆதார் திட்டத்தை யு.ஐ.டி.ஏ.ஐ நடைமுறைப்படுத்தியது. 

இந்தியாவில் ஆதார் எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டால்கூட, ஆதார் சட்டம், ஐ.டி சட்டம் மற்றும் 2011ஆம் ஆண்டின் ரகசிய தகவல் தெரிவிப்போரை பாதுகாக்கும் சட்டத் திருத்தங்களின்படி, தனிநபர்களின் அந்தரங்க தகவல்கள் மற்றும் தரவுகளை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம், ஆனால் யு.ஐ.டி.ஏ.ஐ மற்றும் அரசு அதற்கான சட்டபூர்வ பொறுப்பை தட்டிக்கழிக்கின்றன.
தனியார் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை சரிப்பர்க்கும் வசதி தரப்படுவதால், தரவுகள் கசியும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், அரசு ஏன் ஆதார் தகவல்களை ஆஃப்லைன் சரிபார்ப்பிற்கு மட்டுமே உரியது என்று கட்டுபடுத்தக்கூடாது?
அரசின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை குறைப்பது, ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான நோக்கத்திற்காகவே ஆதார் எண் திட்டதை அமல்படுத்த அரசு திட்டமிட்டது, ஆனால் அது அனைத்து துறைகளிலும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று கூறுவதன் அவசியம் என்ன என்ற கேள்வியே பிரதானமானது.
பாஸ்போர்ட், வங்கி கணக்கு (ஜன் தன் கணக்குகளைத் தவிர), ஓட்டுநர் உரிமம், மொபைல் போன்ற பல சேவைகளில் அரசு மானியம் பெற முடியாது. பின்னர் ஏன் ஆதாரில் இவை அனைத்தும் இணைக்கவேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது? அவற்றை சேர்க்க வேண்டும்? இந்த கேள்விக்கான விளக்கத்தை அரசு இதுவரை கொடுக்கவில்லை.
மத்திய அரசின் சமூக ஊடக மையத்தின் முன்மொழிவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. பின்னர் ஆதார் கண்காணிப்பு முறைமையை எப்படி நியாயப்படுத்த முடியும்?

போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் அமல்படுத்தியது மற்றும் முரண்பாடுகள்ஆதார் அட்டை ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஐந்து அடி கனமான சுவர்களுக்குள் பாதுகாப்பாக உள்ளதாக ஆதார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் கூறியிருந்தார்.
மறுபுறமோ, 2500 ரூபாயில் கிடைக்கும் கணினி மென்பொருள் மூலம் ஆதார் தகவல்களை பெறமுடியும் என்ற தகவல் வெளியாகி இந்திய மக்களை அதிர்ச்சிக்குளாக்கியது.
யு.ஐ.டி.ஏ.ஐ-இன் இன் 12 இலக்க அடிப்படை எண்ணை ரகசியமாக வைத்திருக்க, 16-இலக்க மெய்நிகர் ஐடி (வி.ஐ.டி) முறை அமல்படுத்தப்படுகிறது.
தனது ஆதார் எண்ணை டிராயின் தலைவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டு ஆதார் தகவல் பாதுகாப்பானது என்று சவால் விட்டதும், 'டிஜிட்டல் ஆதார் சண்டை' தொடங்குகிறது.
இந்திய மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கத் தொடங்கியபின், இது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துமா என்ற அச்சங்கள் பரவலாகியுள்ளன.
டிராயின் பரிந்துரை மற்றும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் அறிக்கையின்படி, பொதுமக்களுக்கு தங்களது தரவுகளின் மீது உரிமை இல்லை என்று கூறப்பட்டாலும், ஆதார் தரவுகள் கசிந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு என்று ஆதார் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.
முன்மொழியப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஆதார் தரவு பாதுகாப்பு மற்றும் தரவு கசிந்தால் ஏற்படும் சேதங்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ அமைப்புக்கு சட்டரீதியான பொறுப்பு உள்ளது என்ற ஏற்பாட்டை செய்யலாம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதுபோன்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தை பற்றி ஆலோசிக்கலாம் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு  பரிந்துரை செய்துள்ளது.

 ஆதார் எண் எதற்கெல்லாம் அவசியம்?



அரசியலமைப்பு ரீதியில் ஆதார் அட்டை செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 
அதே நேரத்தில் ஆதார் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில அம்சங்களை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “ இந்திய மக்களின் அந்தரங்க உரிமைகளை பறிக்கும் எந்தவொரு பகுதியும் ஆதார் சட்டத்தில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். 

ஆதார் சட்ட பிரிவு 57, தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களை பெறுவதற்கு வழிவகை செய்கிறது. இதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவோருக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அவசியம் ?

1. பான் கார்டு
2. வருமான வரி தாக்கல் செய்யும்போது...
3. அரசின் நலத்திட்டங்கள், மானியம் பெறுவதற்கு...

 அவசியம்  இல்லை?


1. வங்கியில் கணக்கு தொடங்க...
2. சிம் கார்டு, மொபைல் கனெக்ஷன் பெறுவதற்கு...
3. ஆதாரை காரணம் காட்டி எந்த ஒரு குழந்தைக்கும் அரசின் திட்டங்கள் மறுக்கக் கூடாது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பதும் பொருந்தும்.
4. சி.பி.எஸ்.இ., நீட், மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை.


100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் தற்போது ஆதார் என எனப்படும் பயோமெட்ரிக் சார்ந்த 12-இலக்க தனித்துவ அடையாள எண் உள்ளது. மக்களுக்கு அளிக்கப்படும் மானியங்களில் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆதார் திட்டம், இப்போது சர்ச்சைக்குரிய டிஜிட்டல் அடையாள திட்டமாக வளர்ந்துள்ளது. 
ஆனால்  மிகவும் முன்னேறிய அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதார் போன்ற தனி மனிதன்  அடையாளம் காணும் திட்டங்களைப் பின்பற்றவில்லை.தங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கவும் இல்லை என்பதுதான் உலக உண்மை.
ஆதார் ஒரு அற்புதமான தொழில் நுட்ப வடிவமாக இருந்தால், தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேற்ற நாடுகளே ஏன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை?
ஒற்றை எண் அடையாள அமைப்பை அனைத்துக்கும் பயன்படுத்துவது நல்ல யோசனை அல்ல என ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள பல கணினி விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களும் வாதிடுகின்றனர்.
பயோமெட்ரிக் தகவலுடன் தொடர்புடைய இதே போன்ற தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை 2010-ம் ஆண்டு பிரிட்டன் கைவிட்டது.

இஸ்ரேலில் கைரேகை அல்லாத, ஒரு அடையாள அட்டை உள்ளது. இங்கு குடிமக்களின் தகவல்கள் எங்கும் சேகரிக்கப்படாது. ஆனால், தகவல்கள் அடையாள அட்டையில் மட்டும் இருக்கும்.
அமெரிக்காவிலும் இதுபோன்ற அடையாள அட்டை திட்டம் தேசிய அளவில் இல்லை. கலிபோர்னியா மற்றும் கொலராடோ ஆகிய இரண்டு மகாணங்களில் மட்டும், ஓட்டுநர் உரிமை விண்ணப்பங்களுக்காக கைரேகை எடுக்கப்படுகிறது.
இந்த நாடுகளில் பெரும்பாலானவை, தங்கள் நாட்டுக்கும் வரும் வெளிநாட்டவரின் பயோமெட்ரிக் தகவல்களையே சேகரிக்கின்றன. தங்களது சொந்த குடிமக்களின் தகவல்களை அல்ல.
பயோமெட்ரிக் உடன் வாக்காளர் பதிவையும், வங்கி கணக்கையும் இணைப்பது என்பது சீனா, ஆப்ஃபிக்கா, இராக், பிலிப்பைன்ஸ், வெனிசிசுலா போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது.
அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மையப்படுத்தப்பட்ட தகவல்கள் அதிகமான சமூக அபாயங்களை உருவாக்கும். ஏனெனில், தரவு கசிவு ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் மாற்ற முடியாத தகவல்களை இது கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தகவல் கசிந்துவிட்டது என்று யாரும் தங்களது மரபணுத் தகவல்கள் அல்லது கைரேகைகளை பிற்காலத்தில் மாற்ற முடியாது.
தகவல் துறையில் இருக்கும் பாதிப்புகள் மற்றும் பிழைகளை தீர்க்கக்கூடிய பாரம்பரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதார் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.
ஆதார் தகவல்கள் அரசின் கண்காணிப்புக்காக தவறாக பயன்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாதது.

நீண்டகாலமாக இறுக்கமான கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு உட்பட்டுள்ள சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில், 12 முதல் 65 வயதினர்களின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், ரத்த வகைகள் ஆகியவற்றை சேகரித்துள்ளனர். இந்த தகவலானது, குடியிருப்போர் தகவல் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு கல்வி நிறுவனங்கள், மருத்துவ மற்றும் வீட்டு மானியங்களை மக்கள் அணுகுவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், முகம் அடையாளம் காணும் மென்பொருள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுத்தளங்களுடன் இணைந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கட்டுப்பாடுகள் இங்கு ஏற்பட்டுள்ளன. ஒரு நீண்ட கால சிறந்த தொழில்நுட்ப திட்டத்தை ஒரு நாடு எப்படி உருவாக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
ஆனால், இந்தியாவில் ஆதார் தனது இலக்குகளுக்கு அப்பால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குடிமக்களின் விவரங்கள் ஏற்கனவே நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்பிற்கான தரவை தவறாக பயன்படுத்துவது பற்றிய அச்சங்களை இது உறுதிப்படுத்துகிறது.


ஆதாரின் ''அங்கீகரிப்பு'' ஏற்கப்படாததால் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் உணவு உதவி போன்ற நன்மைகள் மறுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தினமும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
பல தொழில் முனைவோர்கள் தரவு அடிப்படையிலான கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். மோசடி மற்றும் ஊழல் போன்ற பிரச்சனைகளை இது தீர்க்கலாம்.
ஆனால் பலருக்கு, இது தினசரி வாழ்வதற்கான தேவை. ஆதார் திட்டத்தின் மூல நோக்கம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் இழப்பு இல்லாமல் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதே.
இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தற்போது ஆதாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கிறது.
ஆதார் பதிவை கட்டாயமாக்க முடியாது என நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது. ஆதார் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள பல சமுக நலத்திட்டங்கள் தொடர்பான மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இப்போது அனைத்து சமுதாயங்களிலும் முன்னணிக்கு வந்துள்ள ஆதார் பிரச்சனை குறித்து, வலிமைமிக்க நீதிமன்றம் பேசுவதற்காக நாம் காத்திருந்தோம்.
===========================================================================================
ன்று,
செப்டம்பர்-27.
  • உலக சுற்றுலா தினம்
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
  • மெக்சிகோ,ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
  • கூகுள் சர்ச் என்ஜின் ஆரம்பிக்கப்பட்டது(1998)
  • ============================================================================================

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2017ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.300 கோடி உயர்ந்துள்ளதாக பர்க்லேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. 
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.3,71,000 கோடியாக உள்ளது. 
கடந்த ஏழு ஆண்டுகளாக முகேஷ் அம்பானி தனது முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். 




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?