மற்றொரு திடுக்கிடும் தகவல்..

 ரபேல் விமானம் ஊழலில்

அதிக விலை கொடுப்பதை எதிர்த்த பாதுகாப்புத் துறை அதிகாரியை கட்டாய விடுப்பில், அனுப்பிவிட்டு, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறார்கள் பாஜக -மோடி  ஆட்சியாளர்கள்.

ரபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலில், மோடி அரசு தப்பிக்க முடியாத அளவிற்கு, ஆதாரங்கள் பெருகி வருகின்றன.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், நாட்டின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸை, திட்ட மிட்டே வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில்‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ இணைக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் ரூ. 40 ஆயிரம்கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ள தாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட், நாட்டின் பாதுகாப்புக்கான தளவாடங்கள் தயாரிப்பில் 70 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிறுவனம் எனும்போது, வெறும் 5 லட்ச ரூபாய் முதலீட்டில், ஆரம்பித்து 1 மாதம் மட்டுமே ஆகக்கூடிய ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ எவ்வாறு, ரபேல் விமான ஒப்பந்தத்திற்கு தகுதி பெற்றது என்ற கேள்விகளையும் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். 

ஆனால், மத்திய பாஜக அரசிடம் தற்போது வரை முறையான பதில் இல்லை.ஆரம்பத்தில், பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட்-டின் கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது தங்களுக்கே தெரியாது; அதற்கும் தங்களுக் கும் சம்மந்தம் இல்லை என்று பாஜகவினர் சாதித்தனர்.

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி பிரான்காய்ஸ் ஹாலண்டே, பாஜக அமைச்சர்களின் கூற்றை உடைத்து நொறுக்கினார். 
“இந்திய அரசு கூறியதன் அடிப்படையில் தான் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறு வனத்தின் கூட்டு நிறுவனமாக ‘ரிலையன்ஸ் டிபென்ஸ்’ நிறுவனத்தை இணைத்தோம்” என்று உறுதிப்படுத்தினார்.

“போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது; எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை” என்று பாஜக அரசின் திருட்டுத்தனத்தை அம்பலப்படுத்தினார்.

இதனால் அடுத்த பொய்யை நோக்கி பாஜக-வினர் தாவினர். 
ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் அளவிற்கு, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ‘இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்’ (எச்ஏஎல்) நிறுவனத்திற்கு கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றனர். 

ஆனால், இதுவும் வெகு சீக்கிரத்திலேயே அவமானப்பட்டது.“நான்காம் தலைமுறையை சேர்ந்த- 25 டன் எடை கொண்ட ‘சுகோய்-30’ ரக போர் விமானங்களையே, இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனம்தான் தயாரிக்கிறது. 

அந்த வகையில், ரபேல் விமானங்களையும் எங்களால் தயாரிக்க முடியும்” என்று எச்ஏஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுவர்ண ராஜூ பதிலடி கொடுத்தார்.இந்நிலையில், வேறுபல கேள்விகளும் மோடி அரசை நோக்கி நீண்டுள்ளன.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு, ரபேல் விமானத் தயாரிப் பில் ஈடுபடும் அளவிற்கான கட்டமைப்பு இருக்கிறதா? 

எதன் அடிப்படையில் அந்த நிறுவனம் டஸ்ஸால்ட்டின் கூட்டு நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது? 
என்று கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ இதழில் அஜித்சுக்லா எழுதிய கட்டுரையின் அடிப்படை யில், பிரபல வலைத்தளமான பிராட்ஸ்வார்ட்  இந்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
“கடற்படைக்குத் தேவையான சிறு கப்பல்களை கட்டுவதற்கு அண்மையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. 


இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனமும் விண்ணப்பம் அளித்திருந்தது. 
ஆனால், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் போதிய கட்டுமானத் திறன்இல்லை என்று கூறி அதன் விண்ணப்பம்நிராகரிக்கப்பட்டு விட்டது. 
இது வெறும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் தான்.
ஆனால் அதற்கே ரிலையன்ஸிடம் கட்டமைப்பு இல்லை என்று கூறி, இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அவ்வாறிருக்க, 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான யுத்த ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எங்கிருந்து வந்தது? 
ரிலையன்ஸூக்கு திறன் இருப்பதாக பாது காப்புத்துறை அமைச்சகம் எவ்வாறு கண்டறிந்தது?” என்று பிராட்ஸ்வார்ட் கேட்டுள்ளது.

அதேபோல பாதுகாப்புத்துறை சார்ந்த ஒப்பந்தம் ஒன்று ஏபிஜி நிறுவனத்திற்கு மறுக்கப்பட்டதையும் நினைவுபடுத்தியுள்ள பிராட்ஸ்வார்ட், ஏபிஜி நிறுவனத்தின் நிதிநிலை சரியில்லை என்பதே அதற்கான காரணமாக கூறப்பட்டதாகவும், இதை வைத்துப் பார்த்தால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிதிநிலை மட்டும்சிறப்பாகவா இருக்கிறது? 

என்று வினவியுள்ளது.சொல்லப்போனால், விஜயா வங்கி யிடம் வாங்கிய கடனை ரிலையன்ஸ் கட்டமுடியவில்லை என்றும், அந்த கடன்முழுவதையும் விஜயா வங்கி வராக் கடனாக அறிவித்து விட்டதையும் பிராட்ஸ் வார்ட் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வகையில் பார்த்தாலும், மோசமான நிதிநிலையில் இருக்கும் ரிலை யன்ஸ்க்கு ரபேல் ஒப்பந்தம் எப்படி வழங்கப்பட்டது? 
என்ற கேள்வியே எழுவதாகவும் பிராட்ஸ்வார்ட் குறிப்பிட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"தன்னை 56 அங்குல மார்புக்காரர் என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடி, ரபேல் விவகாரத்தில் பொய்களின் பின்னால் ஏன் ஒளிய வேண்டும்? "
என்று சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ரபேல் விமான ஒப்பந்தத்தில், பிரதமர் மோடியும் ரிலையன்ஸ் முதலாளி அனில் அம்பானியும் இணைந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்திருப்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது. 

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடியும் பாஜக அமைச்சர்களும் தப்பித்து ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் அளித்த பேட்டிஒன்றில், சோனியா காந்தியின் மரு மகனான ராபர்ட் வதேராவுக்கு நெருக்கமான நிறுவனம், ரபேல் ஒப்பந்தத்தில், இணைய முயன்றதாகவும், ஆனால், டஸ்ஸால்ட் நிறுவனம் அதற்கு உடன்படாததால், காங்கிரஸ் கட்சி தற்போது ஊழல் குற்றச்சாட்டை எழுப்புவதாகவும் பிரச்சனையைத் திசைத் திருப்ப முயன்றார்.

இதற்கு சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவே நேரடி யாக கண்டனம் தெரிவித்துள்ளார். “நெருக்கடிகள் வரும்போ தெல்லாம் என்னை வைத்து அரசியல் செய்வதை பாஜக அரசு வாடிக்கை யாகக் கொண்டுள்ளது; டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்ததற்கும், கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததற்கும் கூட நான்தான் காரணமா?” என்று வதேரா கிண்ட லடித்துள்ளார்.

மேலும், “56 அங்குல மார்பு வைத்துள்ளவர் (நரேந்திர மோடி), பொய்களின் பின்னால் சென்று ஒளிந்து கொள்வது ஏன்? 
துணிச்சல் இருந்தால் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்த விஷயங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதுதானே?” 
என்றும் அவர் விளாசியுள்ளார்.

======================================================================================
ன்று,
செப்டம்பர்-28.

  • உலக ரேபிஸ் நோய் தினம்
  • பசுமை நுகர்வோர் தினம்

  • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
=======================================================================================

ரபேல் ஊழலும் 

நிர்மலா சீதாராமனின் பொய்களும்

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகத் தொடர்ச்சியாக மாறி மாறிப் பேசி முரண்பட்ட தகவல்களைக் கூறி வருகிறார். அவர் அளித்துவரும் தவறான தகவல்களும் அவற்றுக்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக் லிமிடெடுக்கு (எச்ஏஎல்) இந்தியாவிலேயே ஜெட் விமானங்களைத் தயாரிக்கும் திறன் இல்லாததால் 126 ரஃபேல் ஜெட் விமானங்கள் வாங்குவதற்கான பேச்சுவார்த்தை ஐமுகூ அரசால் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மாறாக எச்ஏஎல் எம்.ஐ.ஜி சுகோய் மிராஜ் போன்ற விமானங்களை வெற்றிகரமாகத் தயாரித்து லைசன்ஸ் பெற்றுள்ளதையும் , தேஜா ரக விமானங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ளதையும் வல்லுநர்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு நினைவுறுத்துகிறார்கள். டஸால்ட்டின் தொழில்நுட்பப் பரிமாற்றம் எச்ஏஎல்இன் திறன்களை அதிகரிப்பதோடு உள்நாட்டு உற்பத்தித் திறனையும் மேம்படுத்தியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் டஸால்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி எரிக்ட்ராப்பர் பாரீஸில்  ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கையில் எச்ஏஎல் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
2) எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டபோது எச்ஏஎல் தயாரிக்கக்கூடிய விமானம் பிரான்ஸில் தயாரிக்கப்படும் விமானத்தைக் காட்டிலும் அதிக செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கும் என்று டஸால்ட் கருதியது. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு பொருளை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு முயற்சியும் இந்தியாவில் அதிக செலவு பிடிக்கத்தான் செய்யும் . ஆனால் உள்நாட்டு உற்பத்தித் திறனை நாளடைவில் மேம்படுத்திக் கொள்ள நாடுகள் அத்தகைய முதலீட்டைச் செய்கின்றன.

3) எச்ஏஎல்லின் திறமையைக் குறித்து மதிப்பிட வேண்டும் என்று எனக்குத் துளிக்கூட எண்ணமில்லை. ஆனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ”நாங்கள் தேவைப்படும் எல்லா உதவிகளையும் எச்ஏஎல்லுக்கு அளிப்போம்” என்று ஏன் கூறவில்லை? நினைத்தால் அவர் அதைச் செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
4) மே – 2014 க்கும் ஏப்ரல் 2015 – க்கும் இடையேயான காலகட்டத்தில் NDA அரசாங்கம்தான் டஸால்ட் மற்றும் எச்ஏஎல் உடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது. எச்ஏஎல் –க்குத் தேவையான வசதிகளை உருவாக்கித் தந்து அதனை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு மோடி அரசுக்குத்தான் இருந்திருக்க வேண்டும்.
5) UPA  அரசுதான் எச்ஏஎல் – ஐ வஞ்சித்து விட்டது. UPA ஆட்சியின்போது இந்த ஒப்பந்தம் நிகழவில்லை. மேலும் எச்ஏஎல்- க்கும் டஸால்ட் – க்கும் இடையே உற்பத்தி சார்ந்த விதிகளில் ஒத்த கருத்து எட்ட முடியாத நிலையும் UPA ஆட்சியின் போதுதான் ஏற்பட்டது. ஆகவே  எச்ஏஎல் – க்கும் ரஃபேலுக்கும் ஒத்துவரவில்லை. இப்போது புரிகிறதா யாரால் எச்ஏஎல் – வுடன் இணக்கமாகச் செல்லமுடியவில்லை என்றும் இந்த விஷயம் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது நிகழ்ந்தது என்றும்?
6) அவ்வாறாயின் மார்ச் 25, 2015இல் டஸால்ட்டின் சி.இ.ஓ.,  எச்ஏஎல்லுடனான பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்றது என்றும் அது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் 95 சதவீதப் பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டுவிட்டன என்றும் கூறுவானேன்? எரிக் டிராப்பர் பாரீஸில் இவ்வாறு கூறியது அதிகாரபூர்வத் தகவல் ஆகும்.

7) NDA அரசாங்கம் தனது விமானங்களின் எண்ணிக்கையை 126 – ல் இருந்து 36 – ஆகக் குறைத்துவிட்டது. ஏனெனில் இந்திய விமானப் படை (IAF) 126 போர் விமானங்களுக்கான கட்டமைப்பு வசதிகள் – நிறுத்தும் இடம் மற்றும் பராமரிப்பு வசதி ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.
8) இந்திய விமானப் படைக்கு 42 – ஸ்குவாட்ரன்கள் (விமானப் படைத் தொகுதி) ஏற்படுத்திக்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதனிடம் 33 ஸ்குவாட்ரன்கள் மட்டுமே உள்ளது. ஒரு காலத்தில் விமானப் படையிடம் 37 ஸ்குவாட்ரன்கள் இருந்துள்ளன. ஆகவே இப்போது இந்திய விமானப் படையிடம் 126 விமானங்களை நிறுத்தும் இடவசதி இல்லை என்று கூறப்படுகிறது. (எனினும் ஏழு ஸ்குவாட்ரன்கள் என்பது அதிகபட்சமானது – அநியாயமானது). மேலும் 108 ரஃபேல் ரக விமானங்களையும் தயாரிப்பதற்கு ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் பிடிக்கும். இது இந்திய விமானப் படைக்கு அதனுடைய நிறுத்தும் இட வசதியை அதிகரித்துக் கொள்ளப் போதுமான கால அவகாசத்தைக் கொடுக்கும்.
9) 526 டாலர் கொடுத்து வாங்கப்படும் ஒவ்வொரு விமானமும் எவ்வித சிறப்பம்சமும் இல்லாத வெறுனே பறக்கவும் தரையிரங்கவும் மட்டுமே செய்யக்கூடியது. அதில் வான்  பயண மின்னணுவியல் (Avionics) ஆயுதம் தாங்கக்கூடிய வசதிகள் மற்றும் உபரி பாகங்கள் போன்ற அதனை ஒரு முழுமையான போர் விமானமாக மாற்றக்கூடிய எந்த அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.  ஐமுகூ அரசாங்கம் ஒப்பந்தம் செய்ததை விட இப்போது வாங்கப்படும் விமானம் மேற்கூறிய எல்லா வித முக்கிய சேர்க்கைகள் கொண்ட மிகவும் மேம்பட்டதாக இருக்கும்.

10) அப்படியானால் இந்தியா – பிரான்ஸ் இரு நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இப்போதைய புதிய இரு அரசாங்களுக்கும் இடையே ஏற்படுத்தப் பட்டுள்ள ஒப்பந்தம் 2008இல் இந்திய விமானப் படையால் கோரப்பட்ட அதே அம்சங்களைக் கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏன்?
11) இப்போதைய அரசாங்கம் கூடுதல் சேர்க்கைகளுடன் சிறப்பம்சங்கள் கொண்ட ரஃபேல் ரக விமானங்களை ஐமுகூ அரசாங்கம் ஒப்புக்கொண்டதைவிட 9% குறைந்த விலையில் வாங்குகிறது.
12) தேஜகூ அரசாங்கம் ஐமுகூ அரசாங்கத்தைவிடக் குறைந்த விலையில் விமானங்களை வாங்குகிறது என்றால் ஏன் ஐமுகூ அரசாங்கம் 126 விமானங்கள் வாங்குவதற்காக பேரம் பேசிய விலையில் அதிக விமானங்களை வாங்கக் கூடாது? ஐமுகூ அரசாங்கம் ஒப்புக்கொண்டபடி 126 விமானங்களுக்கான விலையைக் கிட்டத்தட்ட முழுவதுமாகச் செலுத்திவிட்டு ஏன் 36 விமானங்கள் மட்டுமே வாங்க வேண்டும்?
13) ரஃபேல் போர் விமானங்களின் விலையை வெளிப்படுத்துவது என்பது நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்துகொள்வதாக அமைந்துவிடும். ராகுல் காந்தியின் ஈகோவைத் திருப்திப் படுத்துவதற்காக ஏவியானிக்ஸ் பற்றிய தகவல்கள், வெடிபொருட்கள் மற்றும் நாட்டின் சூழலுக்குத் தக்கவாறு இந்த அதி நவீன போர் விமானங்களில் செய்யப்பட்டுள்ள மாறுதல்கள் குறித்த விவரங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை.
14) அரசாங்கம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் இரண்டு முறைகள் விலையைக் குறித்த தகவல்களை வெளியிட்டுவிட்டது. நிர்மலா சீதாராமன்கூட ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கையில் விலையைப் பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப் படும் என்று அறிவித்தார். இப்போதும் கூட தேஜகூ வின் ரஃபேல் ஒப்பந்தம் ஐமுகூ அரங்கத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டதை விட 9% மலிவானது என்றே கூறிவருகிறார். ஆகவே இந்த விஷயத்தில் எந்தத் தவறும் நிகழவில்லை என்று வெளிப்படைத் தன்மையோடு இருப்பதிலிருந்து அவரை எது தடுக்கிறது?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?