விமானம் ஏறிய மானம்.

பாஜகவின் மானம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் விமானத்தில் ஏறியது போல இந்திய பாதுகாப்பத்துறை விமானம் வாங்கல் தொடர்பாக மோடி அரசின் ஒப்பந்தம் இந்திய பாதுகாப்பத்துறையின் மனத்தை விமானத்தில் ஏற்றியுள்ளது.

இந்தியப் பாதுகாப்புத் துறையில் நடந்த மிகப் பெரிய ஊழல் ரஃபேல் போர் விமான ஊழல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டிவருகின்றன. 
ஆனால், மோடி அரசோ ரஃபேல் விவகாரத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என்று மறுத்துவருகிறது. ஆனால், ஒன்றிய அரசு, டசால்ட் ஏவியேசன் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிடெட் தரப்பிலிருந்து கூறப்படும் முன்னுக்குப் பின் முரணான பதில்கள் ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கும் என்னும் ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன.


ரஃபேல் ஒப்பந்தம்
இந்திய விமானப் படையின் கோரிக்கையின்படி, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2007ஆம் ஆண்டு 127 மத்திய ரக பல்நோக்கு போர் விமானங்கள் (Medium Multi-Role Combat Aircrafts (MMRCA)) வாங்குவதற்கு வரைவுத் திட்டம் ஒன்றைத் தயாரித்தது. 
இதன்படி பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட்நிறுவனத்திடம் இந்த 127 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடத் திட்டமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் போர் விமானங்கள் வாங்குவது மட்டுமின்றி தொழில்நுட்பங்களைப் பகிர்வது மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான உரிமம் ஆகியவையும் அடங்கியிருந்தது.

எனவே டசால்டிடமிருந்து நேரடியாக 18 விமானங்கள் மட்டுமே இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. எஞ்சிய 109 போர் விமானங்களை இந்தியப் பொதுத் துறை விமானத் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் ஆஃப் இந்தியா தயாரிக்கும். 
இதற்கு அப்போது ரூ.42,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இதற்கிடையே 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 

2015ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் பிரான்ஸ் நாட்டிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்க புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதற்குப் பிறகு தூர்தர்சன் ஊடகத்துக்குப் பேட்டியளித்த அப்போதைய ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான மனோகர் பாரிக்கர், 126 போர் விமானங்கள் வாங்க ரூ.90,000 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 

இந்த முறை 36 போர் விமானங்களை நேரடியாக டசால்ட் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்பந்தம் வழிவகை செய்தது. 
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் அவசரத் தேவையை உணர்ந்து கூடுதலாக வாங்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. 
இப்போது வரையிலும் ஒரு விமானம்கூட இந்திய விமானத் துறைக்கு வரவில்லை என்பது வேறு கதை.

ரிலையன்ஸ் நுழைவு
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு போடப்பட்ட ஒப்பந்தத்தில் பொதுத் துறை விமானத் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட் நிறுவனம் விலக்கப்பட்டுவிட்டது. 
அதற்குப் பதிலாக அதானி மற்றும் அனில் அம்பானியின் பாதுகாப்புத் துறை தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள் அடிபட்டன. அதன்படியே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் உள்நுழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


 இதன்படி டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இணைத்துக் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் 51 விழுக்காடு பங்குகளையும், பிரான்சின் டசால்ட் நிறுவனம் 49 விழுக்காடு பங்குகளையும் கொண்டுள்ளன என்று செய்திகள் வெளியாயின.
ஆனால், 2007ஆம் ஆண்டில் போடப்பட்ட பழைய ஒப்பந்தம் என்ன ஆனது என்பது பற்றியோ, புதிய ஒப்பந்தத்துக்கான தேவை என்ன என்பது பற்றியோ ஒன்றிய அரசு போதுமான விளக்கத்தை அளிக்கவே இல்லை. 

புதிய ஒப்பந்தத்தின்படி 36 போர் விமானங்கள் வாங்க விமானத் துறை எப்போது ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தது என்பது பற்றியோ, இதற்கான ஒப்புதல் நாடாளுமன்றத்தில் எப்போது பெறப்பட்டது என்பது பற்றியோ எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை. புதிய ஒப்பந்தத்துக்கான டெண்டரும் விடப்படவில்லை.

இதையடுத்து, 36 போர் விமானங்களுக்கான கட்டண நிர்ணயம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும், ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் 2015ஆம் ஆண்டில் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அப்போதைய ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பதில்தான் வியப்புக்குரியது. என்டிடிவிக்கு அப்போது அவர் அளித்த பேட்டியில், “இந்த ஒப்பந்தம் குறித்து என்னிடம் எதுவுமே கலந்து ஆலோசிக்கப்படவில்லை. 

இது பிரதமர் மோடியின் முடிவு. 
இரு நாட்டுத் தலைவர்களும் கலந்து எடுத்து முடிவு. இதில் என்னால் எந்தக் கருத்தும் சொல்ல இயலாது” என்று பதுங்கிவிட்டார்.

”விமானத் துறையை வலுப்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை வலுவிழக்கச் செய்து, குறிப்பிட்ட ஒரு தொழிலதிபருக்காக ஒப்பந்தம் மாற்றப்பட்டுள்ளது. 
இதனால் அரசாங்கத்துக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் நடந்த மிகப்பெரிய ஊழல் இதுதான்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 


நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்து இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்திவருகிறார்.

இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது வலைப்பக்கத்தில் ரஃபேல் குறித்த காங்கிரஸ் கட்சியின் 15 பொய்கள் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒரு நீண்ட பதிவை இட்டுள்ளார். 
அதில் “ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், இந்தியாவில் எந்தவொரு தனியார் நிறுவனத்திடமும் அரசு ஒப்பந்தம் செய்யவில்லை. 

36 போர் விமானங்களுக்கான எந்தவொரு பாகமும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் தலைவரான அனில் அம்பானி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில், “36 போர் விமானங்கள் தயாரிப்புக்கான பணிகளில் நாங்கள் ஈடுபடவில்லை” என்று கூறியுள்ளார். 
ஆனால் டசால்ட் நிறுவனத்தின் கருத்தோ இதற்கு நேர்மாறாக உள்ளது.

நாக்பூர் ஆலை எதற்காக?
ஒன்றிய அரசு மற்றும் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தின் கருத்துகளை முற்றிலும் மறுக்கும் விதமாக தி எகனாமிக் டைம்ஸ் இதழில் இந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. 
அதில், “இந்தியாவுடன் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் பிரான்ஸ் இணைந்து செயல்படுகிறது. பிரான்ஸின் டசால்ட் ஏவியேசனும், இந்தியாவின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் இணைந்து நாக்பூரில் பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியில் ஈடுபடவுள்ளன. ரஃபேல் போர் விமானங்களுக்கான பாகங்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாக்பூரில் உள்ள மிஹன் பகுதியில் இன்று நடைபெற்றது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் டசால்ட் நிறுவனத்தின் தலைவர் எரிக் டிரெய்ப்பர், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி ஆகிய இருவர் மட்டுமின்றி இந்திய கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். 


இந்த ஆலை குறித்து டசால்ட் நிறுவனம் அப்போது கூறுகையில், “இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள 36 ரஃபேல் விமானங்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்கள் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படவுள்ளது. 2016ஆம் ஆண்டு இந்தியா - பிரான்ஸ் இடையில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தின்படி இங்கு முக்கியப் பாகங்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது” என்று தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறியுள்ளது.

இந்த ஆலை குறித்து ட்ரெய்ப்பர் கூறுகையில், “ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கும் பணி மிஹனில் தொடங்கிவிட்டது. 36 விமானங்களில் இங்கு விமானப் பாகங்களைப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை. 
இதற்கு உத்தரவு கிடைத்தால் எல்லா விமானப் பாகங்களையும் இங்கேயே பொருத்துவோம்” என்று தெரிவித்துள்ளார். 
இதற்கு முன்பு 2017ஆம் ஆண்டில் தி இந்து ஆங்கில ஊடகத்திடம் அவர் பேசுகையிலும் ரஃபேல் பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

உண்மை எது?
ரஃபேல் போர் விமானங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன, யார் தயாரிக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாத புதிராகவே உள்ளது. 

”டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து யார் தயாரிக்கிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது, நாங்கள் டசால்ட் நிறுவனத்திடம் மட்டும்தான் ஒப்பந்தம் செய்துள்ளோம்” என்று மோடி  அரசு கூறும் விளக்கம் எந்த வகையில் ஏற்கத்தக்கது?

 பாதுகாப்பு தொடர்பான போர் விமானம் வாங்கும் பேரத்தில் இப்படி விபரமே தெரியாமல் அரசு ஒப்பந்தம் செய்வதென்பது சாதாரண மனிதன் கூட நம்புவது அரிது.

இந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிடெட்டுடன் டசால்ட் இணைந்து செயலாற்ற காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் என்னவானது என்பதை ஒன்றிய அரசு உடனடியாக விளக்க வேண்டும் என்பதே தற்போது மோடி கூறும் இந்திய தேச விரோதிகள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
                                                                                                                                                      -பிரகாசு
ஆதாரங்கள்:
தி வயர் 1
தி வயர் 2
தி எகனாமிக் டைம்ஸ்
மிண்ட்
=====================================================================================
ன்று,
செப்டம்பர்-05.

  • இந்திய ஆசிரியர் தினம்
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(1872)
  • இந்தியாவின் 2வது ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்(1888)
  • மோல்டா, பிரிட்டானியாவால் பிடிக்கப்பட்டது(1800)
======================================================================================
வ.உ.சிதம்பரனார் 
வ.உ.சிதம்பரனார் என அன்புடன் ழைக்கப்படும் வ. உ. சிதம்பரம் பிள்ளை  ‘வ. உ. சி’ என்றும்  அழைக்கப்பட்டார். 
அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவரும் கூட. தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வலுவான தொழிற்சங்கங்கள் இயங்க தலைமை வகித்தாலும், ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். 
தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். 
அவருக்கு, புரட்சி மனப்பான்மையும், ஆங்கிலேயருக்கு எதிராக தைரியமாக செயல்படும் திறனும் இருந்ததால், அவரது ‘பாரிஸ்டர் பட்டம்’ பறிக்கப்பட்டது. அவரது துணிச்சலான தன்மையே அவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று தமிழ்நாட்டில் பெயரெடுக்க வைத்தது. 
இதனையே ஆங்கிலத்தில், ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்று கூறுகின்றனர். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திரத்திற்காக அவஇது பங்களிப்பைப் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.
வ. உ. சி அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தில் செப்டம்பர் 5, 1872ல் பிறந்தார்.
அவரது தந்தை உலகநாதன் பிள்ளை நாட்டின் மிக முக்கியமான வழக்கறிஞர்களுள் ஒருவர். இதுவே, தனது கல்வி முடிந்த பிறகு, அவரைத் தனது தந்தையின் வழியில் தொடர்ந்து செல்ல ஊக்குவித்தது. அவர், தனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலும், அருகிலுள்ள திருநெல்வேலி பள்ளிகளிளும் சேர்ந்து கல்விப் பயின்றார். தனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, ஒட்டப்பிடாரத்திலுள்ள மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர் சட்டப்பள்ளியில் சேர்ந்து, சட்ட ஆய்வுகளை நிறைவு செய்து அவரது தந்தை உலகநாதன் பிள்ளை போலவே ஒரு வழக்கறிஞரானார்.
சட்டத்தொழிலில், அவரின் மிகப் பெரிய உத்வேகமாக அவரது தந்தை இருந்தாலும், அவருக்கும், அவரது தந்தை உலகநாதன் பிள்ளை அவர்களுக்கும் செயல்படும் பாணிகளில் ஒரு அடிப்படை வேறுபாடு இருந்தது. அவரது தந்தை சமுதாயத்தில் பணக்காரர்களின் பிரச்சினைகளில் மட்டும் வாதாடுபவர். ஆனால், வ.உ.சி அவர்கள், ஏழை மக்களின் மீது கொண்ட அனுதாபத்தின் காரணமாக, பல தருணங்களில் தனது செல்வாக்குமிக்க தந்தையின் விருப்பத்திற்கு எதிராகவும் வாதாடியிருக்கிறார். தமிழ்நாட்டில் ‘மூன்று துணை நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ற வழக்கில்’ சிறப்பாக வாதாடிக் குற்றவாளிகளை நிரூபித்ததால், அவர் பலராலும் ஈர்க்கப்பட்டு, மிகச் சிறந்த வழக்கறிஞர் என்ற புகழ் பெற்றார்.
அரசியல் வாழ்க்கை
செயல்மிகு அரசியலில் நுழையும் பொருட்டாக, 1905ல் வ. உ. சி அவர்கள், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைத்தூக்கிய அந்த நேரத்தில், தலைவர்களான லாலா லஜ்பத் ராய், பாலகங்காதர திலகர் போன்ற பலரும் ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தனர். அதே காரணத்திற்காகவும், இந்தியப் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபிந்தோ கோஷ், சுப்ரமணிய சிவா மற்றும் சுப்ரமணிய பாரதி அவர்கள் சென்னை மாகாணத்திலிருந்து போராடினார்கள். இதுவே, வ.உ.சியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரவும், சென்னை மாகாணத்தின் உறுப்பினர்களுடன் இணைந்துப் போராடவும் தூண்டியது. பின்னர், அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமைத் தாங்கினார்.
கப்பல் நிறுவனம்
இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தவுடன்,  இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக அவர்  முழு மனதுடன் சுதேசிப் பணியில் மூழ்கினார். அவரது சுதேசி வேலையின் ஒரு பகுதியாக, இலங்கை கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய கப்பல் போக்குவரத்தின் ஏகபோகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினார். சுதந்திர போராட்ட வீரர் ராமக்ருஷ்ணானந்தாவால் ஈர்க்கப்பட்ட அவர், நவம்பர் 12, 1906ல், ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை’ நிறுவினார். தனது கப்பல் போக்குவரத்து நிறுவனத்தைத் தொடங்க, இரண்டு நீராவி கப்பல்களான “எஸ்.எஸ்.காலியோவையும், எஸ்.எஸ். லாவோவையும்”, மற்ற சுதேசி உறுப்பினர்களான அரபிந்தோ கோஷ் மற்றும் பால கங்காதர திலகர் உதவியுடன் வாங்கினார். ஆங்கிலேய அரசாங்கம் மற்றும் ஆங்கிலேய வியாபாரிகளின் கோபத்தைத் தாண்டியும், வ.உ.சியின் கப்பல்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையே வழக்கமான சேவைகளைத் தொடங்கியது. அவரது கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஒரு வர்த்தக மையமாக மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு இந்தியர் அமைக்கப்பட்ட முதல் விரிவான கப்பல் போக்குவரத்து சேவையாகவும் இருந்தது. ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’, பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு கடும் போட்டியாக இருந்தது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வ.உ.சியும் தனது கப்பல் கட்டணத்தை மேலும் குறைத்தார்.
கடைசியில், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி பயணிகளை இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. மேலும், பயணிகளுக்கு  இலவச சவாரி மற்றும் குடைகள் வழங்கும் உத்திகளைக் கையாண்டனர், ஆங்கிலேயர்கள். ஆனால், வ.உ.சியால் அவ்வாறு முடியவில்லை. இதனால், சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி திவாலாகும் விளிம்பிற்கே சென்றது.
தேசிய மனப்பான்மை
அவர், நாட்டில் சுதேசி இயக்கத்தை விரிவாக்கவும், தவறான ஆங்கிலேய அரசாங்கத்தைப் பற்றி இந்திய மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருந்தார். இதன் நோக்கமாக அவர், திருநெல்வேலியிலுள்ள ‘கோரல் மில்ஸ்’ தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். ஆங்கிலேய அதிகாரிகள் ஏற்கனவே அவர் மீது கொண்ட வெறுப்பினால், இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று குற்றம் சாட்டி, மார்ச் 12, 1908 அன்று அவரைக் கைது செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர். அவரைக் கைது செய்தப் பின்னர், நாட்டில் வன்முறை வெடித்தது. இதனால், காவல் அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு, நான்கு பேர் மரணம் அடைந்தனர். ஆங்கிலேய அதிகாரிகள், அவரது செயல்களுக்குத் தீவிரமாக கண்டனம் தெரிவித்தாலும், நாட்டின் ஊடக ஆதரவு கிடைத்ததால், அவரின் தேசிய உணர்வை அவர்கள் நாளிதழ்கள் மூலமாக விரிவாகப் பாராட்டினார்கள். ஆங்கிலேயர்கள், அவருக்கு எதிராக வழக்குத் தொடர முயற்சித்தாலும், நாட்டிலுள்ள இந்தியர்கள், சிறையிலிருந்து அவரை விடுவிக்க நிதி சேகரித்தனர். 

அச்சமயம், தென் ஆஃப்ரிக்காவிலிருந்தஇந்தியர்கள்  வ.உ.சியின் பாதுகாப்பிற்காக, மேலும் நிதி சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பினர். தனது கைதுக்குப் பின்னர்,  அவர் கோயம்புத்தூரிலுள்ள மத்திய சிறையில் ஜூலை 9, 1908 முதல் டிசம்பர் 1, 1910 அடைக்கப்பட்டார். அவரின் புரட்சிகரமான மனப்பான்மையைப் பார்த்து அஞ்சிய ஆங்கிலேயர்கள், தெளிவாக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தனர்.
சிறையில் இருந்த அந்நாட்களில், மற்ற அரசியல் கைதிகளுக்குக் கிடைத்த சலுகைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவர் மற்ற குற்றவாளிகள் போல சிறையில் கடின உழைப்பில்  ஈடுபட்டார். அவரது இந்த கடின உழைப்பு, அவரின் உடல்நிலையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அவரது உடல்நலம் படிப்படியாக சரிந்தது. இதனால் ஆங்கிலேய அதிகாரிகள் அவரை விடுதலை செய்யும் கட்டாயத்தில் தள்ளப்பட்டதால், டிசம்பர் 12, 1912 அன்று அவரை விடுதலை செய்தனர். சிறையில் இருக்கும் போது,  அவர் தனது சட்ட மனுக்கள் மூலம் அவரது சுதேசி நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சிறையில் கொடுமையான சூழ்நிலை நிலவியதால், அவர் விடுதலை செய்யப்பட்டார். அவரின் விடுதலைக்குப் பின், சிறை வாயிலின் முன்பு பெருமளவு தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை எதிர்பார்த்த அவருக்கு அச்சம் விளைவிக்கிற அளவுக்கு அமைதி காத்திருந்தது. இது, அவருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ‘பாரிஸ்டர் பட்டம்’ அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால், அவரால் சட்டப் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911ல் ஒழிக்கப்பட்டதால்,  அவர் ஏழ்மை நிலையை அடைந்தார். அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் குடியேறினார். பின்னர், சென்னையிலுள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல அமைப்புகளின் தலைவரானார். 1920ல், அவர், இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா அமர்வில் ஆயத்தமானார்.
இலக்கிய படைப்புகள்
அரசியல்வாதியாகவும், வழக்கறிஞராகவும் அவர் ஆற்றிய பணிகளைத் தவிர, அவர் ஒரு சிறந்த அறிஞரும் ஆவார். சிறையில் இருந்தபோது, தனது சுயசரிதையைத் தொடங்கிய அவர், 1912ல் சிறையிலிருந்து விடுதலைப் பெற்ற பின், அதனை நிறைவு செய்தார். அவர், ஒரு சில நாவல்களையும் எழுதியுள்ளார். அவர், தத்துவ எழுத்தாளாரான ஜேம்ஸ் ஆலன் அவர்களின் பல படைப்புகளை தமிழில் மொழிப் பெயர்த்துள்ளார். தமிழில் மிக முக்கியமான படைப்புகளான திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் தொகுப்புகளையும் வெளியுட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
அவர், 1895ல் வள்ளியம்மையை மணமுடித்தார். ஆனால், அவரது மனைவி 1901ல் இறந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர், அவர்  மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்தார். அவர்களுக்கு நான்கு மகன்களும், நான்கு மகள்களும் இருந்தனர். அவருடைய மூத்த மகன், தனது இளமைப் பருவத்திலேயே இறந்து விட்டார். அவரது இரண்டாவது மகன், ஒரு அரசியல்வாதி. மூன்றாவது மகன், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றுகிறார். நான்காவது மகன், இன்னும் மதுரையில் வசித்து வருகிறார். அவரது மகள்கள் அனைவரும் சென்னையில் மணமுடித்து வசிக்கின்றனர். அவரது வம்சாவளிகள் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இறப்பு
ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர்  18, 1936அன்று விட்டார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஒருவராக நினைவு கூறப்பட்டவர், வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை அவர்கள். அவர், தமிழ்நாட்டில் இன்று வரையிலும், பலரால் மிகவும் நேசிக்கவும், கொண்டாடப்படுபவரும் கூட.
  • ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றும் ‘தமிழ் ஹெல்ம்ஸ்மேன்’ என்றும் ‘கப்பல் செலுத்துகிற திசையைக் காட்டுபவர்’ என்ற பட்டங்களைப் பெற்றார்.
  • சுதந்திரத்திற்கு பின்னர், அவரை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடி துறைமுகம் ‘வ.உ.சி போர்ட்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • அவரது பெயரில் தூத்துக்குடியில் ஒரு கல்லூரியும் உள்ளது.
  • செப்டம்பர்  5, 1972, அவரது நூற்றாண்டு விழாவை நினைவுக்ப்ப்ரும் வகையில், இந்திய தபால் மற்றும் தந்தித்தொடர்புத் துறை ஒரு சிறப்பு தபால்தலையை அவரின் பெயரில் வெளியிட்டது.
  • கோயம்புத்தூரிலுள்ள ‘வ.உ.சி பூங்கா’ மற்றும் ‘வ.உ.சி மைதானம்’ மிக முக்கியமான பொது பூங்காவாகவும், சந்திப்புக் கூடமாகவும் இருக்கின்றது.
  • விடுதலைப் போராட்டத்தில், அவரது புரட்சிகரமான செயலுக்காக கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்தில் உள்ளே ஒரு ‘நினைவுச்சின்னம்’ அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • திருநெல்வேலியையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பாலத்திற்கு ‘வ.உ.சி பாலம்’ என பெயரிடப்பட்டது.
  • ‘கப்பலோட்டிய தமிழன் வள்ளிநாயகம் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை’ வாழ்க்கைக் கதையை அடிப்படையாக கொண்டு, 1961ல் தமிழ் படம் வெளியானது. அதன் முன்னணி பாத்திரமாக சிவாஜி கணேசன் அவர்கள் நடித்துள்ளார்.
காலவரிசை
1872: செப்டம்பர் 5 ம் தேதி பிறந்தார்.
1895: வள்ளியம்மையை மணமுடித்தார்.
1901: அவரது மனைவி நோயால் இறந்தார்.
1905: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார்.
1906: நவம்பர் 12ஆம் தேதி அன்று தனது சொந்த கப்பல் நிறுவனமான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத்’ துவக்கினார்.
1908: மார்ச் 12ஆம் தேதி அன்று ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
1908: ஜூலை 9ம் தேதி கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
1911: அவரது கப்பல் கம்பெனியான ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’ கலைந்தது.
1912: டிசம்பர் 12 ஆம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியிடப்பட்டார்.
1920: கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமர்வில் ஆயத்தமானார்.
1936: நவம்பர் 18ஆம் தேதி அன்று இறந்தார்.
          போற வேகத்தை பாத்தா கல்வெட்டுலேந்து கல்யாண பத்திரிக்கை வரை எழுதிடுவாங்க போலிருக்கே !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?