என்னதான் செய்வார் பழனிச்சாமி?

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்தியதை தொடர்ந்து, அவரை நீக்க வலியுறுத்தி, முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும், நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 

அமைச்சர் பதவியிலிருந்து விலக, விஜயபாஸ்கர் மறுத்து வருவதால், முதல்வர் தவித்து வருகிறார்.
தமிழக சுகாதார துறை அமைச்சராக இருப்பவர், விஜயபாஸ்கர். 

இவர், 2013ல், எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, சட்டசபையில், கருணாநிதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை, கடுமையாக விமர்சித்து பேசினார். 
அவரது கலைஞர் மீதான தனிநபர் தாக்குதல் பேச்சு, அப்போதைய முதல்வர், ஜெயலலிதாக்கு மகிழ்சியை கொடுத்தது .அதனால்  விஜயபாஸ்கரை அமைச்சராக்கினார். 

தொடர்ந்து, சுகாதார துறை அமைச்சராக இருந்து வருகிறார். 
ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் கிளப்பின. சசிகலா குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தவிஜயபாஸ்கர், கூவத்துாரில், எம்.எல்.ஏ.,க்களை தக்கவைக்க கோடிகளில் பணத்தை இறைத்து  பெரிதும் உதவியாக இருந்தார்.

முதல்வர் பழனிசாமியும், தினகரனும் இணைந்து செயல்பட்ட நேரத்தில், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வந்தது. 
அப்போது, தினகரன் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளராக, விஜயபாஸ்கர் தான் பணியாற்றினார். 
அப்போது நடந்த வாக்குக்கு பணத்தை பகிரங்கமாக அள்ளி கொடுத்தார்.இந்தியா முழுக்க அதிர்ச்சி தந்த இந்த  பணப் பட்டுவாடா காரணமாக, தேர்தல்ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தொடர்பாக, அவர் எழுதி வைத்திருந்த ஆவணங்கள் சிக்கின. தளவாய் சுந்தரம் போன்ற அதிமுக தலைவர்கள் சோதனை நடக்கும் வீட்டுக்குள் காவலர்களை தள்ளிவிட்டு அத்து மீறி நுழைந்து அந்த ஆவணங்களில் முக்கியமான சிலவற்றை அதிகாரிகளிடம் இருந்து பறித்து வெளியே ஓடி சுவருக்கு வெளியே ஏறிய அங்கிருந்த அதிமுகவினர் அவற்றை எடுத்துக்கொண்டு கார்களில் ஏறி பறந்தனர்.
ஆனால் அது தொடர்பாக தளவாய் சுந்தரம் உட்பட  யார் மீதும் இதுவரை வருமானவரித்துறை புகார் அளிக்கவில்லை.நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 அதைத் தொடர்ந்து, 'அவர், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை.
அதன்பின், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 'குட்கா' போதை பொருளை விற்பனை செய்ய, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு, குட்கா வியாபாரிகள், லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது. 
அப்போதும், விஜய பாஸ்கர் ராஜினாமா செய்ய முன்வரவில்லை.இந்நிலையில், குட்கா வழக்கு, நீதிமன்ற உத்தர வின்படி, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. 
இரு தினங்களுக்கு முன், சி.பி.ஐ.,அதிகாரிகள், குட்கா வழக்கு தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா மற்றும் அதிகாரிகள் வீடுகளில், திடீர் சோதனை நடத்தினர்.பதவியில் இருக்கும் அமைச்சர்வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சி.பி.ஐ., அதிகாரிகள் என, அடுத்தடுத்து சோதனை நடத்தியது, அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
 'குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, அமைச்சர் விஜயபாஸ்கர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில், அமைச்சர் பதவியிலிருந்து, முதல்வர் நீக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன.
மூக வலைதளங்களிலும், அவருக்கு எதிராக, மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 'அரசுக்கும், கட்சிக்கும் கெட்டப் பெயர் ஏற்படுவதால், விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என, சக அமைச்சர்களும், முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர். 
அனைத்து தரப்பிலிருந்தும் நெருக்கடி வருவதால், அவரை பதவி விலகும்படி, முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அவரோ மறுத்துள்ளார். 
இப்பிரச்னையில், அடுத்து என்ன முடிவெடுப்பது என தெரியாமல், முதல்வர் தவிக்கிறாராம்..
பின்னே முதல்வர் பழனிச்சாமி மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றசாட்டுகள் உள்ளதே .
விஜயபாஸ்கரை நீக்கினால் அவர் இவர் என்ன யோக்கியமா என்ற விவாதத்தைக்கிளப்பி விடுவாரே?
அது போக இது போல் ஊழல் குற்றச்சாட்டில் சிக்காத அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லாததுதானே அதிமுக அமைச்சரவை .
 ஊழல்,வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா போல் சொத்து சேர்த்தவர்கள் முறைகேட்டில் ஈடு பட்டவர்கள் என்று நீக்கினால் அதிமுக அமைச்சரவையே காலி.புதியவர்களைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்னதான் செய்வார் பழனிச்சாமி?
=====================================================================================
ன்று,
செப்டம்பர்-09.
  • உலக முதலுதவி தினம்
  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)
  • ஜான் ஹோர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்(1839)
  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)
  • வட கொரியா குடியரசு தினம்(1948)
======================================================================================

உதவியாளரை காலிசெய்த ஓ.பி.எஸ்..!?

துணை முதலமைச்சரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தன்னைப்பற்றிய ரகசியங்கள் வெளியில் கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே தன்னுடன் நிழல் நிதியமைச்சரைப்போல இருந்த தனது உதவியாளர் ரமேஷை விலக்கியதாகக் கூறப்படுகிறது. 
ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் இடையே நடந்து வரும் பதவி மோதலால் வெளிப்படையாகச் சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தாலும் உள்ளுக்குள் ஒருவருக்கொருவர் குழிபறித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் 21 ஆண்டுகளாக தனக்கு உதவியாளராக இருந்த தனது உறவினர் ரமேஷை வேலையை விட்டு அனுப்பியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். துரோகம் செய்ததால் ரமேஷை விலக்கியதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தனக்கு பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ரமேஷை திட்டமிட்டு ஓ.பி.எஸ் விலக்கி இருக்கிறார் எனக்கூறுகிறார்கள்.
 
ஓ.பி.எஸ் மனைவியின் உறவினர் ரமேஷ். கடந்த 21 ஆண்டுகாலமாக ஓ.பி.எஸ்-ன் நிழலாக வலம் வந்தவர். அவரைப்பற்றிய அனைத்து ரகசியங்களையும் அறிந்தவர். ஓ.பி.எஸ்-க்கு மேலும் சில உதவியாளர்கள் இருந்தபோதும் ரமேஷ்தான் மேல்மட்ட விவகாரங்களைக் கையாண்டவர். அமைச்சர்கள், உயரதிகாரிகள் எனப் பெரிய லிங்குகளில் தொடர்புடையவர். இன்னும் சொல்லப்போனால் ஓ.பி.எஸின் நிதியமைச்சராக இருந்தவர் ரமேஷ்.
ஜெயலலிதா இருக்கும்போது 2016ம் ஆண்டு ஐந்து சீனியர் அமைச்சர்களை மடக்கி வைத்திருந்தபோது சசிலகா, ரமேஷை வீட்டுச் சிறை பிடித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரமேஷ் வீட்டிலும் சோதனை நடத்தத் தீர்மானித்தனர். காரணம் சேகர் ரெட்டி லஞ்சம் கொடுத்த பட்டியலில் பெரியவர்/ ரமேஷ் என எழுதப்பட்டிருந்தது. இப்படி பக்கபலமாக ரமேஷ் இருந்து வந்துள்ளார். 
தற்போது லஞ்ச ஒழிப்பு விசாரணையில் இருந்து வரும் ஓ.பி.எஸ், தன்னைப்பற்றி எல்லாம் அறிந்த ரமேஷ் அருகில் இருந்தால் அவரிடம் விசாரணை நடத்தப்படும். அப்படி நடந்தால் வசமாகச் சிக்கிக்கொள்ள வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், தன்னை பாதுகாத்துக் கொள்ள ரமேஷை வேலையை விட்டு நீக்கிவிட்டதாக நாடகமாடுகிறார் எனக்கூறப்படுகிறது. 
வேலையை விட்டு நீக்கினால் மட்டும் ரமேஷிடம் விசாரணை மேற்கொள்ளப்படாதா? என்கிற கேள்வி எழும். ‘’வேலையை விட்டு நீக்கி விட்ட ஆத்திரத்தில் தன்னைப்பற்றி ரமேஷ் தவறான தகவல்களைக் கொடுத்து வருகிறார்’’ எனச் சமாளித்துவிடலாம் எனக் கருதுகிறார் ஓ.பி.எஸ். ஆக உதவியாளரை நீக்கி விசாரணையில் இருந்து தப்புவதற்காக இந்த நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் ஓ.பி.எஸ்’’ என்கிறார்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?