வியாழன், 11 அக்டோபர், 2018

அநாகரீகம் , நாகரீகமாகிவிட்டது.?

மாட்டிக்கொண்ட மோடி ஒப்பந்தம்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்காக இந்திய அரசுக்கும், டசால்ட் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது. 

இதில், இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில், இந்திய பங்குதாரருக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம்  கொடுக்கப்பட்டுள்ளது. 


இதை, அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்திற்கு வழங்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. 


ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக, டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக தேர்வு செய்ததில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என்று விளக்கமளித்தது. 

இந்த நிலையில், டசால்ட் நிறுவனம் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 


டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களை கைப்பற்றி இந்த தகவலை அறிந்துள்ளதாக அந்த நாளிதழ் கூறியுள்ளது.அந்த ஆவணங்களில், டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தை உள்நாட்டு பங்குதாரராக தேர்வு செய்தால் மட்டும் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. 

2018ஆண்டு செப்டம்பர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாண்டே, இந்தியா பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய டசால்ட் நிறுவனம் நிர்பந்திக்கப்பட்டதாகவும், இதில் வேறு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். 

மூன்று நாள் அரசு முறை பயணமாக  பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் விமானங்கள் உற்பத்தி செய்யப்படும் டசால்ட் நிறுவன தொழிற்சாலையை நேரில் சென்று பார்வையிடுகிறார். 


இந்த நிலையில் இந்த தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு?

தி.மு..,வுடனான காங்கிரசின் கூட்டணி பேச்சுவார்த்தைஇன்னும்அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு வரவில்லைஆனாலும்இதுகுறித்ததிரைமறைவு பேச்சுஇறுதிக்கட்டத்தில் உள்ளது

'இம்முறை நாங்கள்அதிக தொகுதிகளில் போட்டியிடப் போவதால்ஒற்றை இலக்கத்தில் தான்உங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியும்எனதி.மு.., தரப்பு,தெளிவாக கூறிவிட்டது.


இதனால் தான்தி.மு..,வுக்கு மாற்றாகசில யோசனைகளைதமிழககாங்கிரஸ் தலைமை முன்வைத்ததாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என திருநாவுக்கரசர் உள்ளிட்ட சிலர் ஆலோசனை கூறியதாக தெரிகிறது.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத  காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில் தி.மு.., தலைமையின் மிக முக்கிய உறவினர்,அண்மையில் டெல்லியில்  முகாமிட்டிருந்தார்
அப்போதுஅகமதுபடேல் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் நடந்த பேச்சில்சிலவிஷயங்கள் தெளிவுபடுத்தப்பட்டன.
டெல்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் எதுவும் போட்டியிடப்போதில்லை அதனால் திமுகவின் வெற்றி எப்படியும் காங்கிரஸ் கட்சிக்கு பயன்படத்தான் போகிறது என்பதை திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவேதொகுதிகளின் எண்ணிக்கையை பார்க்க வேண்டாம்வெற்றிதான் முக்கியம்எனதி.மு.., தரப்பில் சுட்டிகாட்டப்பட்டதுதமிழகத்தில்,தொகுதி எண்ணிக்கையை காட்டிலும்கூட்டணி யாரோடு என்பது தான்முக்கியம் எனசோனியா மட்டுமல்லாதுஅகமது படேல்குலாம்நபிஆசாத் போன்ற மூத்த தலைவர்களும் உறுதியாக இருந்தனர்.
இந்த நேரத்தில்பரிசோதனை முயற்சிகள் வேண்டாம்ஓட்டு வங்கி,உள்கட்டமைப்பு என எல்லா வகையிலும்ஏற்கனவே நிரூபணம் ஆனகட்சிதி.மு.., தான்மேலும், 2019 தேர்தலில்பா..,வுக்கு எதிராகபிரமாண்ட கூட்டணியை ஏற்படுத்துவோம் என கூறினாலும்சமீபத்தியபல நிகழ்வுகள்அதற்கு நேர் எதிராக உள்ளன.

தேசியவாதகாங்., பகுஜன் சமாஜ்சமாஜ்வாதிஇடதுசாரி ஆகிய கட்சிகள்,ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில்கூட்டணி அமைக்க மறுத்துவிட்டனஇதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில்தி.மு..,வையும்இழந்தால்தேசிய அளவில்காங்கிரசின் மீதான இமேஜ்இன்னும்மோசமாகும் என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

எனவேஇழுபறியை மேலும் நீட்டிக்காமல்தி.மு.., தரும் தொகுதிகளைபெற்றுஇதே கூட்டணியில் போட்டியிடலாம்மற்றவற்றை பிறகுபார்த்துக் கொள்ளலாம் என்ற நிலைக்குகாங்கிரஸ் மேலிடம் வந்துவிட்டது.
தமிழ்நாட்டில் இளங்கோவன் ,சிதம்பரம் ஆகியோர் திமுக கூட்டணியில்தான் வெற்றி கிடைக்கும் என்று  கூறிவரும் நிலையில் திருநாவுக்கரசர் மட்டுமே தனது பழைய அதிமுக பாசத்தினால் தினகரனுடன் கூட்டு என்று கூட்டணி பேச்சை 
குழப்பிக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
===============================================================================
ன்று,
அக்டோபர்-11.


  • உலக பெண் குழந்தைகள் தினம்
  • ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு  நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஓடியது (1811)
  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)
  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)
=======================================================================================
 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

தமிழின் முதல் புதினத் தைப் படைத்தவரும், மறுமலர்ச்சிக் கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Mayuram Vedanayagam Pillai) பிறந்த தினம் இன்று'
 (அக்டோபர் 11). 
* திருச்சி மாவட்டம் குளத்தூரில் (1826) பிறந்தார். 
தந்தையிடம் கல்வியைத் தொடங்கியவர், தமிழ், ஆங்கிலக் கல்வியை தியாகராச பிள்ளையிடம் பயின்றார். 
சிறு வயதிலேயே எழுது வதில் ஆர்வமும் ஆற்றலும் கொண்டி ருந்தார். 
திருமணம், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளில் நகைச்சுவைக் கவிதைகள் எழுதுவார்.* நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர், பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர், தரங்கம்பாடியில் முன்சீஃப் பணியில் சேர்ந்தார். 
மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். (பின்னாளில் இவ்வூர் பெயர் மாயவரம் என்று மருவி, தற்போது மயிலாடுதுறை எனப்படுகிறது.)
* மாயவரம் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இந்த காலகட்டத்தில் தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ நூலைப் படைத்தார். மேலும் 15 நூல்கள் எழுதினார். 
வீணை வாசிப்பதில் வல்லவர்.
* வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. 
தமிழ் கவிதையில் இந்த பாணி ஒரு புதிய உத்தியாக, முதல் முயற்சியாக கருதப்படுகிறது.
* சமகாலத் தமிழ் அறிஞர்களான மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம், சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்.
* 1805 முதல் 1861 வரையிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக வெளியிட்டார். தீர்ப்புகளை முதலில் மொழிபெயர்த்த பெருமைக்கு உரியவர். சட்ட விதிகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் முதலில் வெளியிட்டார்.

* தமிழ் உரைநடையை வளம் பெறச் செய்த முன்னோடிகளில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். 
இவரது கட்டுரைகள், பெண் கல்வி, தாய்மொழிப் பற்று, கடவுள் பக்தி, நல்லாட்சி, நீதி நெறிகள் என பல அம்சங்களையும் உள்ளடக்கியவை. இவை தமிழில் கட்டுரை இலக்கிய வளர்ச்சிக்கு முன்னோடியாக அமைந்தன.
* பெண் கல்வி குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் உரைநடைச் சிறப்புக்கு சான்றாக விளங்குகின்றன. மாயவரத்தில் பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். இது தமிழகத்தில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட முதல் பள்ளி.
* கிறிஸ்தவ வழிபாட்டு பாடல்கள் கிரேக்கம், லத்தீன், ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. தமிழ் கிறிஸ்தவர்கள் தமிழிலேயே உணர்ந்து வழிபட வேண்டும் என விரும்பினார். 
திருவருள் மாலை, திருவருள் அந்தாதி, தேவமாதா அந்தாதி, தேவ தோத்திர மாலை, பெரியநாயகி அம்மைப் பதிகம் போன்ற இலக்கியங்களைப் படைத்தார்.
* தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார். 
தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர், மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி எனப் போற்றப்படும் வேதநாயகம் பிள்ளை 63 வயதில் (1889) மறைந்தார்.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

அநாகரீகம் இப்போது நாகரீகமாகிவிட்டது

கவிஞர் வைரமுத்து மீது பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது ஏற்கனவே இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வைரமுத்து பதில் :

ஒரு முறை சுவிட்ஸர்லாந்துக்கு பாடல் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்து எனது அறையில் நானும், எனது தாயும் மட்டுமே இருந்தோம். அப்போது, நிகழ்ச்சி அமைப்பாளர் என்னிடம் வந்து வைரமுத்து அவரின் அறையில் எனக்காக காத்திருப்பதாக கூறினார்.
இது கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன் என ஒரு பதிவிலும், வைரமுத்து பற்றி அவரின் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தெரியும். வைரமுத்து சார் நீங்கள் என்ன செய்தீர்கள் என உங்களுக்கு தெரியும். சினிமாவில் எனக்கு வாய்ப்பு போனாலும் பரவாயில்லை” என ஒரு டிவிட்டிலும் அவர் பதிவிட்டுள்ளார்.
வைரமுத்து
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
1,613 RETWEETS 6,872 LIKES
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள வைரமுத்து “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்”என பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட திரைமறைவு சதிகள் உள்ளது.அதன் பின்னால் சாதிகள் உள்ளதும் தெரிகிறது.
திராவிட இனம் வைரமுத்துமேல் குற்றம் சுமத்தியவர்கள் அனைவரும் குறிப்பிட்ட இனத்தவர்கள்தான்.ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவை அசிங்கமாகப்பேசி போராடியும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போனவர்களும் உண்ணாவிரதம்,ஆர்ப்பாட்டம் என்று நடத்தியும் தோற்றவர்களும் தான் இதன் பின்னால் உள்ளது தெரிகிறது.
உண்மை இருந்தாலும் 18 ஆண்டுகள் கழித்து இவ்விவகாரம் கிளப்பப்பட்ட காரணம் ஏன்ன?
இடையில் பாடகி  சின்மயி திருமணத்தில் வைரமுத்து அழைக்கப்பட்டு மனமக்களுடன் புகைப்படமும் எடுத்து வெளியிடப்பட்டது.அசிங்கம் நடந்திருந்தால் அவ்வாறு நடக்குமா என்ன?
தற்போது அமைசசர் அஃபர் மீது மீட்டு வில் பாலியல் குற்றம் சாட்டியவர் அவர் பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதாகத் தெரிகிறது என்றே இடுகையிட்டுள்ளார்.
ஆக மொத்தம் தங்களுக்கு பிடிக்காதவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கவே மீட்டு போன்றவைகள் பயன்படுத்தப்படுவதாக ஐயம் எழுகிறது.