"மோ(ச)டி கேர்...?
தற்போது மோடி *ஆயுஷ்மான் பாரத் - மோடிகேர்* திட்டத்தை ரொம்ப பெருமிதமாக அறிவித்ததும் அதை ஊடகங்களும் ,பாஜகவும்,ஜாலராக்களும் கைதட்டி வழி மொழிந்ததும் ,வானளாவ புகழ்ந்ததும் ஞாபகமிருக்கும்.
இது போன்ற மருத்துவ காப்பீடு திட்டங்கள் வட மாநிலங்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.
இங்கே நாங்க தமிழ்நாட்டில் கலைஞர் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து 12 ஆண்டுகள் ஆகிறது.
தென்னாட்டில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா விலும் ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களிலும் கலைஞரை முன்மாதிரியாகக் கொண்டு இத்திட்டங்கள் விரிவாக செயல்படுகின்றது.
மக்களுக்கு மருத்துவ வசதியை இலவசமாக செய்து வருகிறது.
ஆனால் மோடியின் திட்டம் இலவசமல்ல, பயன்பெற விரும்பும் மக்கள் பிரிமீயம் கட்டணம் .தனியார் காப்பீடு நிறுவனங்கள் போன்றே காசு செலுத்திவிட்டு பெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம்தான் இந்த மோடி அறிவித்தத் திட்டம்.
தற்போது இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின் முன்னோடியான திமுக கொண்டு வந்த ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்த இலவச காப்பீடு திட்டத்தை ரத்து செய்து எடப்பாடி பழனிச்சாமி மத்தியரசின் மோடி கேர் திட்டத்தில்
தமிழ்நாடு
இணைவதாக அறிவித்துள்ளார் .
அப்படியென்ன அந்த மோடி கேர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என்ற ஆராயப்போனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
பிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யாருக்குமே உதவாத, ஒரு மோசடி திட்டம் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஓராண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக மோடி பெருமையாக அறிவிச்சிருக்கார்.
திட்டத்தை வெளிப்படையாக...டாம்பீகமாக அறிவித்த மோடி .அந்த திட்டத்தில் மக்கள் இணைவதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.திட்டத்தில் நீங்கள் சேர முயன்றால் பல
ரகசியமாக அரசாணையில் உள்ள பல நிபந்தனைகள் உங்களை அதிரவைக்கும்.
♦ குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.!
♦ ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக்கூடாது.!
♦ லேண்ட்லைன் போன் வைத்திருக்கூடாது.!
♦ வீட்டில் 3 அறைகள் இருக்கக்கூடாது.!
♦ வீட்டில் சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருக்கக்கூடாது.!
♦ மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம் இருக்கக்கூடாது.!
♦ விவசாயிகள் கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வைத்திருக்கக்கூடாது.!
♦ அரசு ஊழியராக இருக்கக்கூடாது.
♦ வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர், விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர் திட்டத்தில் பங்கேற்க முடியாது.!
♦ 2.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம், பாசன உபகரணங்கள்
♦ 5 ஏக்கர் அல்லது அதிகமான பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர் பருவங்களில் வைத்திருப்போர்,
♦ குறைந்தபட்சம் 7.5 ஏக்கர் நிலம்
♦ பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்.!
அப்புறம் யாருக்குதான் இந்தத் திட்டத்தினால் பலன் கிடைக்கும் என்றால், ஒருவருக்கும் இல்லை என்பதே பதில்.
இதற்கெல்லாம் பக்தர்களிடம் நேரடி பதிலிருக்காது.
2019ல் எங்களை வென்றுகாட்டுங்கள் என்ற வாய்சவடால் தான் வரும். எதற்கு?
இவர்கள் செய்த எல்லா அலங்கோலங்களையும் சரி செய்யவா?
வடக்கு முட்டாப்புண்ணாக்குகள் மதவெறியின் காரணமாக தூக்கிப்பிடிக்கும் பாஜகவை தெற்கு சுமக்காது என்பது நமக்கு நல்லா தெரியும்.
அதனால வடக்கில் அவனவன் இந்த அரசாங்கத்தை நம்பி நடுரோட்டுக்கு வரட்டும்.
நாம அமைதியா ஓரம் உட்கார்ந்து பார்த்து ரசிப்போம்.
மோடி தலைமையில் வந்த இப்பொழுது “ஆயுஷ்மான் பாரத்” மருத்துவ காப்பீடு திட்டத்தை கேரளா, ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்கள் நிராகரித்துவிட்டன.
இதற்கு காரணமாக அம்மாநிலங்களின் அரசுகள்சொல்வது எங்கள் மாநிலங்களில் இருக்கும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் மோடி அறிவித்த திட்டத்தைவிட பல வகைகளில் மேலானது என்பதாகும்.
கலைஞர் காப்பீடு போன்ற திட்டங்கள் இல்லாத மாநிலங்கள்தான் இதை ஏற்றுக்கொண்டுள்ளது.
கலைஞர் காப்பீடு போன்ற இலவச மருத்துவ திட்டங்களுக்கு மக்கள் ஒரு பைசா கூட கையிலிருந்து செலுத்தி உறுப்பினராக வேண்டியதில்லை.
ஆனால் இந்த மோடி கேர் திட்டத்துக்கு பயனர்கள் உறுப்பினராக பணம் செலுத்தியாக வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மோடி அறிவித்துள்ள இந்த திட்டத்தைவிட பன்மடங்கு சிறந்த திட்டமாக இருந்த நிலையில் தற்போது சற்றும் அருகதையின்றி ஆட்சி அதிகாரத்தை ஆக்கிரமித்திருக்கும், மோடி அசைக்கும்படி ஆடும் கைப்பாவைகளாம் கோழை எடுபுடி கொத்தடிமைகள் அரசு மோடி அறிவித்துள்ள இந்த திட்டத்தில் தமிழகத்தை இணைத்து தமிழக மக்களுக்கு பெருத்த துரோகத்தை இழைத்துவிட்டன.
==========================================================================================
இன்று,
அக்டோபர்-13.
உலக இயற்கை பேரிடர் தினம்- தாய்லாந்து தேசிய காவல்துறை தினம்
- உலக பொது நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)
- வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டனில் இடப்பட்டது(1792)
- துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)
==========================================================================================
அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் இணையத்தளங்கள் முடங்குகிறது!
இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முக்கிய சர்வரில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால்,
அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் இணையதள சேவையில் சிக்கல் ஏற்படலாம் என ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
===========================================================================================
"உசுர எடுக்காம கீழ இறங்குயா..அது வெளிநாட்டுக்கெல்லாம் போகாது.. இதுல..இஞ்சினே இல்ல..."
நார்த் சவுத் உதவித்தொகை
அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் சவுத் பவுண்டேஷன் (என்.எஸ்.எப்.,) பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள இளநிலை பட்டம் பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்காக உதவித்தொகைகளை வழங்குகிறது.
நார்த் சவுத் பௌண்டேஷன்அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளிகளுக்கு ‘ஸ்பெல்லிங் பி’, ‘வக்காபிலரி பி’, ‘ஜியோகிராபி பி’ போன்ற போட்டிகள் நடத்தி, அதில் திரட்டப்படும் நிதியை உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகிறது, நார்த் சவுத் பவுண்டேஷன்.
படிப்புகள்:இளநிலை - மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங்.
டிப்ளமா - பொறியியல் மற்றும் வேளாண்மை
டிப்ளமா - பொறியியல் மற்றும் வேளாண்மை
ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை: ஆயிரத்திற்கும் அதிகமான தகுதியான மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
10ம், 12ம் வகுப்பு மற்றும் சி.இ.டி.,/ஜே.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வு தரவரிசை பட்டியலில் முதல் 10 சதவீதத்திற்குள்ளான இடத்தை பெற்றிருக்க வேண்டும்.
10ம், 12ம் வகுப்பு மற்றும் சி.இ.டி.,/ஜே.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வு தரவரிசை பட்டியலில் முதல் 10 சதவீதத்திற்குள்ளான இடத்தை பெற்றிருக்க வேண்டும்.
அரசு அல்லது அரசு அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்றிருப்பது அவசியம். வேறு எந்த உதவித்தொகை திட்டத்திற்கும் தேர்வாகியிருக்கக் கூடாது.
குறிப்பாகக் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், பட்டப்படிப்பு படிக்கும் காலங்களிலும் வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டியது முக்கியம்.
உதவித்தொகை:மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு 25,000 ரூபாய்
பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
நர்ஸிக் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
பொறியியல் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
வேளாண் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
நர்ஸிக் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
பொறியியல் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
வேளாண் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
தேர்வு முறை:
மாணவர்களின் மதிப்பெண் மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே தேர்வு முறை இருக்கும்.
மாணவர்களின் மதிப்பெண் மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே தேர்வு முறை இருக்கும்.
குறிப்பாக அரசுப் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இறுதியாக, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க :-என்.எஸ்.எப்., உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.northsouth.org , மூலம் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.