செவ்வாய், 2 அக்டோபர், 2018

வேலு money

தி.மு.க., அமைப்பு செயலருமான, ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனு: -
                                              ''உள்ளாட்சி துறை அமைச்சராக, எஸ்.பி. வேலுமணி உள்ளார். 
அதிகார துஷ்பிரயோகம் செய்து, கே.சி.பி., இன்ஜினியர்ஸ், பி.செந்தில் அண்டு கோ உள்ளிட்ட ஏழு நிறுவனங்களுக்கு, சென்னை, கோவை, சேலம், திருப்பூர் மற்றும் திருச்சி மாநகராட்சிகளில், ஒப்பந்தம் பெற்று தந்துள்ளார்.


கே.சி.பி., இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில், அமைச்சரின் நெருங்கிய கூட்டாளிகள், இயக்குனர்களாக உள்ளனர். 
கடந்த, 2011 - 12ல், 17.47 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றிருந்த இந்த நிறுவனம், 2016 - 17ல், 142 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. 

தற்போது, இந்த நிறுவனத்திடம், 498 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் உள்ளன.

கோவையில், கான்ட்ராக்ட் நிறுவனமான, செந்தில் அண்டு கோவின், நிர்வாக இயக்குனராக, அன்பரசன் உள்ளார். இவர், அமைச்சர் வேலுமணியின் சகோதரர்.

கோவை மாநகராட்சியில் இருந்து, நான்கு ஆண்டுகளில், 15 கோடி ரூபாய்க்கு, இந்த நிறுவனம் ஒப்பந்தம் பெற்று உள்ளது.

மாநகராட்சிகளில் ஒப்பந்தம் பெற்ற, இந்த நிறுவனங்கள், அமைச்சர் வேலுமணியின் உறவினர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகளுக்கு சொந்தமானவை. 
அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகள் வாயிலாக, அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளுக்கு சொந்தமான கம்பெனிகளுக்கு, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில், 2012ல், 942 கோடி ரூபாய் உபரியாக இருந்தது. 2013ல், 566 கோடி ரூபாயாக குறைந்தது. 
வேலுமணி, அமைச்சரான பின், உபரி நிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி, 2,500 கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைக்கு மாறியது. 
தவறான நிர்வாகத்தால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பெயரில், 2015 - 16ல், 72.51 கோடி ரூபாயாக இருந்த வங்கிடிபாசிட் தொகை, 2016 - 17ல், 4.91 கோடி ரூபாயாக குறைந்தது. 
தற்போது, ஒரு ரூபாய் கூட இல்லை. 

அமைச்சர் வேலுமணி, அவரது பினாமிகளுக்கு எதிராக, வருமான வரி சட்டம், கம்பெனி சட்டம், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், ஊழல் சட்டம் ஆகியவற்றின் கீழ், வழக்கு தொடரப்பட வேண்டும்.
முதல்வர், துணை முதல்வருக்கு எதிராக, ஊழல் புகார் அளித்துள்ளேன்.

லஞ்ச ஒழிப்பு துறை, சட்டப்படி விசாரணை நடத்தாமல், உயர் பதவியில் இருப்பவர்களை பாதுகாக்கிறது. 
லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிக்கு எதிராக, பெண் போலீஸ் அதிகாரியே புகார் அளித்துள்ளார். 
அவரை, முதல்வரும் மற்ற அமைச்சர்களும், பாதுகாக்கின்றனர்.
புகாரில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து, என்னிடம், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்கவில்லை. பாரபட்சமின்றி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத் துறை விரும்பவில்லை. எ
னவே, சிறப்பு புலனாய்வு குழுவை ஏற்படுத்த, நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். 
என் புகாரை, சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக, 3,000 பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள், உயர் நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்டன. 
ஆர்.எஸ்.பாரதியின் மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கலைஞர் அறிமுகபடுத்திய புரட்சி நடிகர் எம்ஜிஆர் வாழ்ந்த இராமாபுர தோட்டம் இன்று நுழைவு பாதை இல்லாமல் கூவத்தை விட கேவலமாக காட்சி அளிக்கிறது .இது கோடிகளில் கொள்ளையடித்து வாழும் அதிமுக அமைச்சர்கள்,100 கோடிகளுக்கு மேல் செலவிட்டு நூற்ராண்டு விழாவை கொட்டும் அடிமைகள் எம்.ஜி.ஆர் .மீது வைத்துள்ள பற்றை பல்லிளிக்க வைக்கிறது.


வாயே  திறக்காத மோடியின் கருத்தே தனது  கருத்தும் ஆகுமாம் !

ஃபேல் ஒப்பந்த ஊழல் உலக நாடுகள் பேசும் அளவுக்கு ‘பிரபலமாகி’யுள்ளது. அதனால்தான் சர்வதேச நாடுகள் பங்கேற்கும் ஐநாவின் பொது சபை அமர்வில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் சர்வதேச செய்தியாளர்களிடன் விளக்கம் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் ரஃபேல் ஊழல் சர்வதேச கவனத்துக்கு வந்தது. அதன் விளைவாகவே பிரான்ஸ் அதிபரின் ‘விளக்கம்’ அமைந்திருக்கிறது. 
செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மெக்ரான், “இது அரசுக்கும் அரசுக்குமான ஒப்பந்தம். இது இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொலைநோக்கு ஒப்பந்தம்” என சொல்கிறார்.
பிரான்ஸ் அதிபர் மெக்ரான்

சமீபத்தில் பிரான்ஸ் நாட்டு ஊடகம் ஒன்று,ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேட்டை ஆதாரங்களுடன் எழுதியிருந்தது. முன்பே ஊழல் விவகாரங்கள் விவரமாக வெளியானபோது, பிரான்ஸ் ஊடகம் கூடுதலாக வெளியிட்ட விவரங்களை சில இந்திய ஊடகங்கள் வெளியிட்டு மோடி அரசின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தின.  
அதாவது, பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவிருக்கும் இந்திய நிறுவனத்தை (ரிலையன்ஸ்) இந்திய அரசுதான் தேர்ந்தெடுத்தது என சொன்னது அந்த செய்தி.
பிரான்ஸ் அதிபராக இருந்த ஹோலாண்டே ஆட்சி காலத்தின் போது, 2015, ஏப்ரல் 10-ஆம் தேதி 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் கொள்முதல் செய்யவிருப்பதாக பாரீஸில் அறிவித்தார் மோடி.  
அறிவிப்பு வெளியான ஒன்றரை ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ. 58,000 கோடி மதிப்பிலான 36 ரஃபேல் ஜெட் விமானங்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது. 2019 செப்டம்பர் மாதம் முதல் ஜெட் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அந்த ஒப்பந்தம் சொன்னது.
மெக்ரான் ஆட்சிக்கு வந்தது 2017ல். எனவே தனக்கும் அந்த ஒப்பந்ததுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது மெக்ரானின் வாதம். 
பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததும் இந்தியா அரசே என்பதையும் மெக்ரான் தெளிவுபடுத்தியுள்ளார்.
“இது குறித்து மேற்கொண்டு சொல்ல எதுவுமில்லை. அந்த நேரத்தில் நான் பொறுப்பில் இல்லை. ஆனால் நாங்கள் விதிப்படியே செயல்பட்டோம் என்பது மட்டும் எனக்குத் தெரியும்” என்கிறார் மெக்ரான்.
“இது தொழில்நிறுவனங்களின் ஒப்பந்தம் என்பது மட்டுமல்ல, என்னைப் பொறுத்தவரை இது இராணுவம் தொடர்பான ஒரு ஒப்பந்தம்.” 
என்றவர், (இந்த விவகாரம் குறித்து இதுவரை வாயைத் திறக்காத) இந்திய பிரதமர் மோடி என்ன சொன்னாரோ அதுதான் தனது கருத்தும்” என வேகமாக நழுவுகிறார்.
மேக்ரானின் கருத்து இந்தியாவில் கடும் எதிர்வினையை உருவாக்கின. விமானத் துறையில் எந்தவித அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு எப்படி இவ்வளவு பெரிய ஒப்பந்தம் தரப்பட்டது என கேள்வி எழுப்பினர். 
மோடி அரசு தனது தொழிலதிபர் நண்பர்களுக்காக செயல்படுவதாக குற்றம்சாட்டியது காங்கிரஸ்.
இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற பா.ஜ.க.வினர் ஆரம்பத்தில் தேசபக்தி, நாட்டின் பாதுகாப்பு என ஜீ பூம்பா காட்டினர். 
தற்போது அதுவும் முடியாத நிலையில் எல்லாம் முறைப்படி நடந்ததாக கண்ணை மூடிக் கொண்டு உளறுகின்றனர். பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹொலாண்டேவின் பெண் நண்பர் நடித்த படத்திற்கு ரிலையன்ஸ் அனில் அம்பானி புரவலராக நிதி அளித்திருக்கிறார். 
இப்படி வண்டவாளங்கள் அனைத்தும் தண்டவாளங்கள் ஏறிய நிலையில் ஊழல் நாற்றத்தை மறைக்க முடியாமல் அலைகிறது பா.ஜ.க.
இந்நிலையில் இன்று 28.09.2018 திருவாளர் மோடி அரசு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சமயத்தில் நடந்தது என ஒரு தெளிவற்ற வீடியோவை வெளியிட்டு தனது குற்றத்தை மறைக்க பார்க்கிறது. 
எதற்கு சுற்றி வளைத்து சமாளிக்க வேண்டும்? 
தேசத்தின் பாதுகாப்பு, நலனுக்காக ஊழலும் செய்யலாம் என்று பேசிவிட்டால் என்ன?
நன்றி:வினவு.
=====================================================================================
ன்று,
அக்டோபர்-02.
  • உலக  வன்முறை எதிர்ப்பு தினம்
  •   மக்கள் தலைவர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)
  •  பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம்(1975)
  • காந்தி பிறந்த தினம்(1869)
======================================================================================


                       கலைஞர் கட்டிய கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு                                                                                               எம்.ஜி.ஆர்.பெயர் வைப்பது கேவலமான செயல்.

பிறந்த நாளில் புது கட்சி :ரஜினி முடிவு - செய்தி

 '"அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா..."