சனி, 20 அக்டோபர், 2018

ராம பிரான் உயிரை காப்பாற்றவில்லையே?

சபரிமலை பெண்கள் இலவச சிறப்பு சுற்றுலா.
பாஜக தேர்தல் வாக்குறுதி.
பெண்கள் சபரிமலை செல்வதற்கு எதிராக கேரளத்தில் போராட்டம் நடத்தி வரும் பாஜக, தெலுங்கானாவில் விருப்பமுள்ள பெண்கள் அனைவரையும் இலவசமாக சபரிமலைக்கு அழைத்துச் செல்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வருவது தெரியவந்துள்ளது.

அதிகாரத்துக்கு வந்தால் அனைத்து பக்தர்களுக்கும் இலவசசபரிமலை பயணத்திற்கு ஏற்பாடு செய்வதாக தெலுங்கானா மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்துள்ளது. 

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவர் என்.வி.எஸ்.எஸ். பிரபாகர் மூலம், இந்ததகவலை உறுதி செய்துள்ள ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு, பெண்கள் சபரிமலை செல்வதை அரசியல்ஆதாயத்துக்காக கேரளத்தில் பாஜக எதிர்த்து வருகிறது. 

ஆனால்,அதற்கு நேர்மாறான நிலைப் பாட்டை தெலுங்கானாவில் தேர்தல்ஆதாயத்திற்காக பாஜக மேற்கொண்டுள்ளது என்று விமர்சித்துள்ளது.

அனைத்துப் பெண்களும் வயதுவித்தியாசம் இல்லாமல் சபரிமலையில் தரிசனம் செய்ய அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பின் பின்னணியிலேயே இந்த வாக்குறுதியை பாஜக தலைமை அளித்துள்ளது. 


பத்துக்கும் ஐம்பதுக்கும்இடைப்பட்ட வயதுள்ள பெண் களை இலவச பயணத்திலிருந்து விலக்கி வைப்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. அனைத்துப்பெண்களையும் என்றே பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது.

சபரிமலைக்கு செல்ல விரும்பும் அனைவருக்கும் இலவச பயணத் துக்கான ஏற்பாடு செய்யப்படும் என்றே பாஜக தலைமை குறிப்பிட் டுள்ளது.இதன்மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற பாஜகவின் இரட்டை வேடம் கலைந்துள் ளது.

பாஜக ஆட்சிக்கு வந்தால்,கறுப்புப் பணத்தை மீட்டு, அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சத்தை செலுத்துவோம் என்றுகடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக கூறியது. 

அது மக்களை ஏமாற்றுவதற்கு அளித்த வாக்குறுதி மட்டுமே என்பதை அண்மையில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி வெட்கமே இல்லாமல் ஒப்புக்கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே சபரிமலை ஐயப்பன் விஷயத்திலும் மக்களை ஏமாற்றும் முயற்சியை பாஜக கையில் எடுத்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கைவிடும்  வடக்கு .
2013ல் மோடியை பெரிய ஹீரோவாக நிரூபிக்க உதவியவை ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள். அந்தத் தேர்தல்களில் மோடியின் பிரச்சாரம்தான் பாஜகவுக்கு வெற்றியை தேடித் தந்தது என்று பில்டப் செய்தார்கள். 2014 மக்களவை தேர்தலில் மோடி பிரதமராவதற்கு இந்த பில்டப் மிகவும் உதவியது. இதோ, 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கான வாய்ப்பை உறுதிசெய்ய அதேதேர்தல்கள் உதவப்போவதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
 
அந்த மாநிலத் தேர்தல்களுடன் மிசோரம், தெலங்கானா மாநிலங்களிலும் பேரவைக்கு தேர்தல்கள் நடைபெறப்போகின்றன. இந்தத் தேர்தல்களை நடத்துவதா அல்லது மக்களவைக்கும் சேர்த்தே தேர்தல் நடத்துவதா என்று மோடி யோசிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அனைத்து முனைகளிலும் மோடி அரசு அடைந்துள்ள தோல்வியும், மக்கள் மத்தியில் மோடிக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்பும் மக்களவைத் தேர்தலை தள்ளிப்போடச் செய்தது.
 
2012 ஆம் ஆண்டிலிருந்து மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி கார்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியுடன் டிஜிடல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை போட்டோஷாப் பிரச்சாரம் என்று இப்போது சொல்கிறார்கள். உலகின் அத்தனை பெரிய கட்டுமானங்களையும் குஜராத்தில் இருப்பதாக இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. பாஜகவின் பிரச்சாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறியடிக்க தவறிவிட்டன.
 
2013 ஆம் ஆண்டு மோடியை முன்னிறுத்திய சமயத்தில், பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்றன. கர்நாடகா தேர்தல் மோடிக்கு முதல் சவாலாக அமைந்தது. ஆனால், அதில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதன்பிறகுதான் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

 
இந்த நான்கு மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்றது.  ராஜஸ்தானிலும் மிஜோரம் மாநிலத்திலும் காங்கிரஸ் அரசு இருந்தது. அந்தத் தேர்தலில் மோடி பறந்து பறந்து பிரச்சாரம் செய்வதற்காக அதானியும் அம்பானியும் விமானங்களை கொடுத்தார்கள். 

தேர்தல் முடிவு வந்தபோது, மத்தியப்பிரதேச மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 44.88 சதவீதமும், காங்கிரஸ் 36.38 சதவீதமும் வாக்குகளை பெற்றிருந்தன. சத்தீஸ்கரிலும் பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற்றது. பாஜக 54.44 சதவீதம் வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 43.33 சதவீதம் வாக்குகளையும் பெற்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. 
பாஜக கைப்பற்றியது. 

அங்கு பாஜக 45.17 சதவீதமும், காங்கிரஸ் கட்சி 33.07 சதவீதமும் வாக்குகளைப் பெற்றன. மிஜோரம் மாநிலத்தை காங்கிரஸ் மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. 

ஆக, இந்தத் தேர்தல்களில் ராஜஸ்தான் மட்டுமே பாஜகவுக்கு லாபம். அதிலும் அங்கு இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கமாக இருந்தது. 
ஆனால், மோடியின் பிரச்சாரத்தால்தான் மூன்று மாநிலங்களையும் பாஜக கைப்பற்றியது போன்ற ஒரு தோற்றத்தை மீடியாக்கள் வழியாக உருவாக்கினார்கள்.
 
இப்போது அதே நான்கு மாநிலங்களுடன், முன்கூட்டியே கலைக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
மிஜோரம் எப்போதுமே காங்கிரஸ் கட்சிதான் ஜெயிக்கும். தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் காங்கிரஸும் தெலுங்கு தேசமும், தெலங்கானா போராட்டக்குழுவும் கூட்டணி அமைத்திருக்கின்றன.
 இதை சந்திரசேகர் ராவ் கடுமையாக தாக்கியுள்ளார்.
 
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இப்போது காங்கிரஸுக்கு சாதகமாக மாறி இருக்கின்றன. 
ராஜஸ்தானில் காங்கிரஸ் முழு மெஜாரிட்டியுடன் வெற்றிபெறும் என்றும், மத்தியப்பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்துடன் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றும் முதல்கட்ட கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
 
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான மனநிலை தீவிரமடைந்து வருவதை அந்த மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. பெட்ரோல் விலை உயர்வு, கியாஸ் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விவசாயிகளுக்கு அல்வா கொடுத்தது, அவர்கள் மீதான தொடர் தாக்குதல், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் என்று இந்த மாநிலங்களில் அரசுக்கு எதிரான மனநிலை அதிகரித்துக்கொண்டே இருந்தது. 

இப்போது வெளியாகி இருக்கும் கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் காங்கிரஸுக்கு கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும், மத்தியப்பிரதேசத்தில் மாதவராவ் சிந்தியாவும் காங்கிரஸ் கோஷ்டி மனப்பான்மையை முடிவுக்கு கொண்டுவந்து, அங்கு கட்சியைப் பலப்படுத்தி இருக்கிறார்கள். 

காங்கிரஸின் எதிர்காலம் மட்டுமின்றி, தங்களுடைய அரசியல் எதிர்காலம் குறித்தும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்கள் உணர்ந்து ஒற்றுமையாக இயங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய அஜித் ஜோகியால் அந்தக் கட்சிக்கு பின்னடைவு இருக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. 

அங்கு அஜித் ஜோகியின் கட்சியுடன் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்துள்ளனர்.
ஆனால் இந்தக் கூட்டணி காங்கிரஸ் வெற்றியை பாதிக்காது என்று கருத்துக் கணிப்பு கூறியிருப்பதால், பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
===========================================================================================
ன்று,
அக்டோபர்-20.


  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
  • கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
  • இலங்கையின்  முதன் குடியரசுத் தேர்தல் நடைபெற்றது(1982)

கேரள மாநிலம், ஆலப்புழாவில், சங்கரன் - அக்கம்மா தம்பதிக்கு மகனாக, 1923, அக்., 20ல் பிறந்தார்  தோழர் அச்சுதானந்தன்.
தொழிற்சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த இவர், 1938ல், மாநில காங்கிரசில் சேர்ந்தார். 

கருத்து வேறுபாடுகளால், 1940ல், அதிலிருந்து விலகி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினரானார்.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற இவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சிறையில் அடைக்கப்பட்டார். 

1964ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்.பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவானது. 
அதை நிறுவிய, 32 உறுப்பினர்களுள், இவரும் ஒருவர். 
2006ல் நடந்த கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வரானார். 

============================================================================================
ராமயிறான் இவர்கள் உயிரை காப்பாற்றவில்லையே?
பஞ்சாபின் அமிர்தசரஸில் நேற்றிரவு தசரா பண்டிகை கொண்டாடத்தின் போது, எதிர்பாராத விதமாக கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த மக்கள் மீது ரயில் பாய்ந்தது. இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 


100-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ஜவுரா ஃபடாக் என்ற இடத்தில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இது அரசு தகவல்.உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றே தெரிகிறது.

அங்கு இருந்த ரயில் தண்டாவளம், கொண்டாட்டத்தைப் பார்க்க ஒரு உயரமான இடத்தைத் தந்தது. இதனால் மக்கள் அதன் மீது ஏறி நின்று கொண்டாடத்தைக் கண்டுகளித்துள்ளனர். 
மேலும் தசரா பண்டிகையையொட்டி, பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. இதனால், ரயில் வருவதை மக்கள் பார்க்கவில்லை. 
இந்த அனைத்துக் காரணிகளும் சேர்ந்து விபத்துக்கு வித்திட்டுள்ளது.ஜவுரா ஃபடாகிற்கு அருகே, தோபி காட் என்ற இடத்தில் நேற்றிரவு 6:45 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜலந்தரிலிருந்து அமிர்தசரஸிற்கு சென்ற ரயில் தான், மக்கள் மீது பாய்துள்ளது.'ரயில் வேகமாக மக்கள் மீது பாய்ந்ததால், விபத்தில் யார் இறந்தார்கள் என்பதை கண்டுபிடிக்க சிரமமாக இருக்கிறது. 

இதுவரை 32 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன' என்று உள்ளூர் மருத்துவமனை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.பல குழந்தைகளும் இந்த விபத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் 300 பேர் இருந்தார்கள் எனவும் கூறப்படுகிறது.

'இந்த விபத்துக்கு முழுக் காரணம் உள்ளூர் நிர்வாகமும், தசரா பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்திருந்த அமைப்பும் தான். 
ரயில் வருவது குறித்து அவர்கள் எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை' என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

ரயில்வே போர்டு தலைவர் அஷ்வானி லோஹானி சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். 
ரயில்வே துறையின் மீது எந்தத் தவறும் இல்லையென்று அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினரின் மகனான சவுரப் மித்து மதான் என்பவரால் இந்த தசரா பண்டிகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு இங்கு பண்டிகை நடத்தப்படவில்லை.

'ராவணன் உருவ பொம்மை எரித்தப் பிறகு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன். 
அதன் பிறகு தான் எனக்கு நடந்த சம்பவம் குறித்து தெரியவந்தது. உடனே, நான் கமிஷனருக்கு போன் செய்து விசாரித்தேன். நான் சம்பவ இடத்துக்கு வர வேண்டுமா என்று கூட அவரிடம் கேட்டேன். 
அதற்கு அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார்' என்று நவ்ஜோத் கவுர் சித்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், அமிர்தசரஸுக்கு விரைந்துள்ளார். மீட்புப் பணிகளை நேரடியாக பார்வையிட அவர் சென்றுள்ளார். மேலும் அவர், ‘விபத்தில் உயிரழந்தவர்களுக்கு அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும். 

காயமடைந்தவர்களுக்கு அருகிலிருக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அகியோரும், மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று தெரிவித்துள்ளனர்.

'ராவணனின் உருவ பொம்மை, ரயில் தண்டவாளத்திலிருந்து 70 முதல் 80 மீட்டர் தூரத்திலேயே எரிக்கப்பட்டது. இதனால், பொம்மை எரிக்கப்பட்டவுடன், அருகிலிருந்தவர்கள் ரயில்வே தண்டவாளம் நோக்கி ஓடினர். 
இது தான் விபத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது' என்று ரயில்வே துறை அதிகாரி கூறியுள்ளார்.

ராவணனை இவர்கள் எரித்துக்கொன்றும் ராமயிறான் இவர்கள் உயிரை காப்பாற்றவில்லையே?