தேவை இராவணன் லீலா!

ராவணனை எரித்து ராமலீலா கொண்டாடியவர்களில் 62 பேர்கள் ரெயில் மோதி இறந்துள்ளனர்.340 பேர்களுக்கு மேல் மருத்துவமனையில் படுகாயத்துடன் போராடி வருகிறார்கள்.
எந்த ராமனை கொண்டாடினார்களோ அந்த ராமன்(வேடமிட்டவர் ) இவர்கள் யாரையும் காப்பாற்றவில்லை.
ஆனால் ராவணன் வேடமிட்டு ஆடியவர் பலரை காப்பாற்ற ஒடி கடைசியில் அவரும் பலியானார்.

இப்போது ராமன் நல்லவனா ?
ராவணன் நல்லவரா?என்ற கேள்விதான் மக்கள் மனதில்.

கதைப்படியே பார்த்தாலும் ராவணன்தான் நல்லவர்.சீதையை கடத்தியதற்கு காரணமே,அவர் தங்கை மூக்கை அறுத்து ஈவ் டீசிங் செய்ததுதான் சூர்ப்பனகை லட்சுமணனை தன்னை மணந்து கொள்ளத்தானே கேட்டுக்கொண்டாள்.

விருப்பமில்லாவிட்டால் அதை கூறுவதை விட்டு மூக்கை அறுத்து குரூபியாக்குவது என்ன மனிதத்தனம்.?

வாலியை மறைந்திருந்து கொன்ற மாவீரன் ராமன்.

சீதையை கடத்திய ராவணனின் சுண்டு விரல் கூட அவள் மீது படவில்லை.அவளுக்கு உதவியாக பல பணிப்பெண்களை அமர்த்திருந்தார் ராவணன்.

ஆனால் ராமன்?தனது மனைவி கற்பை சந்தேகித்து தீயில்  இறங்கக்கூறினான். 
வடஇந்தியாவில் பல இடங்களில், ஆதிவாசி மக்கள் ராவணனைத் தங்களது மாவீரனாகவும் கடவுளாகவும் வழிபடுகிறார்கள். 

உத்தராகண்ட் மாநிலத்தில் பைஜிநாத் கங்கிரா போன்ற இடங்களில் அவர்கள் ராவணனைக் கடவுளாக நினைக்கவிட்டாலும், சிவனுடைய தீவிர பக்தன் என்று போற்றுகிறார்கள். 
ராவணனின் கொடும்பாவியை எரித்தால் சிவன் கடவுள் கோபம் கொள்வார் என்கிறார்கள். 


அவர்கள் தசராவைக் கொண்டாடி ராவணனின் கொடும்பாவியை எரிப்பவர்கள், செயற்கை மரணத்தில் சாவார்கள் என்கிறார்கள். 
அப்படி உயிரிழந்த குடும்பங்களின் கதைகளையும் ஆதாரத்துடன்  கூறி வருகின்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மால்வா பிராந்தியத்தில் மாண்ட்ஸாவுர் பகுதியில் ராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர், தங்கள் ஊர் என மக்கள் கருதுகின்றனர். 
அதனால் ராவணனைத் தங்கள் ஊரின் மருமகன் என்று எண்ணுகின்றனர். அதுமட்டுமின்றி, ராவணன் ஒரு சிறந்த படித்த அறிவாளி எனப் போற்றுகின்றனர். தங்கள் ஊர் மருமகன் ராவணனுக்கு முப்பத்தைந்து அடி உயரச் சிலை ஒன்றை வைத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் டெல்லியிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் பிஸ்ராக் என்ற சிறிய கிராமத்தில் ராவணன் தங்கள் ஊர்க்காரர் என்று பெருமையுடன் கூறுகிறார்கள். 
தங்கள் கிராமத்தின் வைஷ்ரவாவுக்கும், பெண் தெய்வம் கைகேசிக்கும் பிசராகில் பிறந்தவர்தான் ராவணன் என்கிறார்கள். ராவணனை மகா பிராமணன் என்று அழைக்கிறார்கள். 

தசரா நேரத்தில் ராவணனுக்காக அவர்கள் நினைவேந்தல் செய்து அவரது ஆன்மா அமைதி நாட வேண்டுகின்றனர். ராவணனின் தந்தை வைஷ்ரவா தங்கள் ஊரில் சுயம்புவான சிவலிங்கத்தை உருவாக்கியவர் என்கிறார்கள்.

அதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் கோண்டு பழங்குடிகள் முந்நூறு பேர் மட்டுமே வாழும் சிறிய கிராமமான பர்ஸவாடியில் ராவணனைத் தங்களது கடவுளாக வழிபடுகின்றனர். 
தங்களை ராவண வம்சத்தவர் என்று அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதை மறுக்கின்றனர். 
இந்தக் கிராமத்து பழங்குடி கோண்டு மக்கள், ராவணன் ஒரு கோண்டு பழங்குடி அரசர் என்றும், அவர் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றனர்.

 வால்மீகி ராமாயணம் ராவணனை ஒரு வில்லனாக விவரிக்கவில்லை என்றும், துளசிதாஸ் ராமாயணம்தான் ராவணனை ஒரு தீய சக்தியாக வர்ணிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள மண்டோரி, மண்டோதரி, ராவணனை மணம் முடித்த இடம் என்று கூறப்படுகிறது. மண்டோரி என்ற அந்த ஊரில் உள்ள, ராவண கி சன்வாரியில் அந்தத் திருமணம் நடந்தது என்கிறார்கள். 

அந்தக் கிராமத்தில் உள்ள மௌத்கில்ஸ் என்ற பிராமணர்கள், ராவணனை தங்களது மருமகன் என்கிறார்கள். 

அதனால் இந்தியாவின் மற்ற பகுதிகளை போல இங்கே, ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுவதில்லை. 
மாறாக, அந்த ராவண கி சன்வாரியில், ராவணனுக்கு ஸ்ராத்தம், பித்ரு தானம் ஆகிய இறந்தவர்களுக்குச் செய்யப்படும் நினைவேந்தல்கள் இந்து முறைப்படி செய்யப்படுகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், கான்பூரில், ஷிவாலாவில் உள்ள சிவன் கோயிலில், ராவணனுக்கும் ஒரு கோயில் உள்ளது. 

தசரா அன்று தஷணன் கோயில் வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் ராவணனை மனதுக்கும் இதயத்துக்கும் சுத்தம் வேண்டி வழிபடுவார்கள். அந்தப் பக்தர்கள் ராவணன் ஒரு ராட்சசன் அல்ல. மாறாக, இணையற்ற அறிவு, கெட்டிக்காரத்தனம், புத்திக்கூர்மை, அன்பு ஆகியவற்றுக்கான கடவுள் என்று நம்புகின்றனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காக்கிநாடாவில் ராவணன் கோயில், சிவனுக்கு அடிப்படையில் அர்ப்பணிக்கப்பட்ட ராவணனைச் சிவனின் பக்தனாக ஏற்றுக்கொண்ட கோயில். பெரிய உருவம் கொண்ட சிவலிங்கம் சிலை அந்தக் கோயிலில் இருக்கிறது. 
ராவணனாலேயே அந்தச் சிவலிங்கம் சிலைக்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறுகின்றனர். அதனால் இந்த அழகான ஆந்திர நகரில் பலர், ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நகரிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராவண கிராம் என்ற இந்த இடத்தில், ராவணனை வழிபடக் கூடிய ஒரு கூட்டத்தையே காணலாம். தசரா அன்று இங்குள்ள மக்கள் ராவணனின் ஆன்மாவுக்காக அமைதி வேண்டுவார்கள். 

ராவணனின் கொடும்பாவியை எரிக்க மாட்டார்கள். 
கன்யாகும்ப பிராமணர்கள் என்போர் தங்கள் வகுப்பைச் சேர்ந்தவர் ராவணன் என்று கூறி, ராவணனுக்கு ஒரு பத்து அடி நீளக் கல் உருவாக்கியுள்ளார்கள். 
அது பல நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாறு கொண்டது என்கிறார்கள். பிராமணர்கள் என்றாலும் இவர்கள் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ராவணனது உயிரை ஓர் அம்பு துளைத்துக் கொன்று விட்டது என்பதே ஸ்டேட்ஸ்மன் ஆங்கில ஏட்டில், எட்டு இடங்களில் ’ராவணன் கொடும்பாவி எரிக்கப்படாது’ என்ற கட்டுரையின் கட்டுரையாளர் தனது முடிவான வாக்கியமாகக் கூறுகிறார்.

நாம் இனியாவது தமிழ் அரசர் ஒருவரின் வரலாற்றை மறு வாசிப்பு செய்ய இந்தியத் துணைக் கண்டத்தை நாடப் போகிறோமா, இல்லையா என்பதே கேள்வி. எல்லா விதிகளும் நியதிகளும் வரலாறுகளும் மாற்றப்பட்டு, மறு வாசிப்புக்கு உள்ளாகும் இன்றைய காலத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் விடுத்த கதைகளில்தான் இனியும் செல்வாக்கு செலுத்த வேண்டுமா? 
உண்மை வரலாறுகள் அடிப்படை மக்களால், ஆதிவாசிகளால் பின்பற்றப்படுகின்றன அதை ஆரியப்  புரட்டுகளை நம்பாமல் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 இந்திய வரலாறுகளைத்திரிப்பதே  வந்தேறிகள் ஆரியர்களின் அன்று முதல் இன்றுவரையிலான தலையாயப் பணி .கடமை.
அதுதான் அவர்களை மண்ணின் மக்கள் திராவிட இனத்தவரை சூத்திரனாக்கி அடிமைக்கொண்டதன் மூலக்கருவி.
அதற்கு பல திராவிட இனத் துரோகிகளும் துணை போவதுதான் கொடுமை.
கதையின் நாயகனாக மட்டுமே ராமனை தன எழுதிய இராமாயணத்தில் வால்மீகி காட்டினார்.
அவனை  கடவுள் நிலைக்கு தனது கமப ராமாயணம் மூலம் கொண்டு சென்றது கம்பர்தான்.
ராமாயணம் என்பது இன்று ஒரு இதிகாசம் அளவுக்கு ஆரியர்கள் கொண்டு சென்றாலும் ,ராவணன்-ராமன் கதை இந்தியாவில் நடந்த கதை அது நூற்றுக்கு மேற்பட்டவர்கள்  கதைகளாக பதிவு செய்துள்ளனர்.
அதை கண்டு தங்களுக்கு தோதான வால்மீகி கதையை பிரபலப்படுத்தினர்.
ராமாயணக்கதைகள் பல சமணர்களால் எழுதப்பட்டவை.அவை விருப்பு வெறுப்பின்றி நடந்தவைகள் அப்படியே உருக்கொண்டவை.அதில் ராவணன் வில்லனும் இல்லை.
ராமன் கடவுள் அவதாரமும் இல்லை.இரு மன்னர்களிடையே நடந்த போர் பற்றிய வரலாறே.அவைகளும் இலங்கையில் உள்ள பூர்விக ராமாயணமும் ராவணனை போற்றத்தகுந்தவராகத்தான் தமிழ் மன்னராகத்தான் காட்டுகிறது.

ங்கையை சுத்தம் செய்வதாகக் கூறி இதுவரை பாஜக மோடி அரசு 4000 கோடிகளை செலவுக்கணக்கு எழுதி கங்கையில் கரைத்துள்ளது.
ஆனால் இன்றைய மாசு ஆய்வு நிலவரப்படி கங்கை மேலும் அதிக மாசுதான் அடைந்திருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
4000 கோடிகளை வைத்து கங்கையை எப்படி சுத்தம் செய்தார்களோ?
லட்சுமி கங்காதேவியை சரி செய்து விடுவாள் என்ற நம்பிக்கையில் ,அப்படியே புதிய 2000 தாட்களை கங்கையில் கொட்டியிருப்பார்களோ?
============================================================================================
ன்று,
அக்டோபர்-21.
  • ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)
============================================================================================

பெங்களூரில் உள்ள வணிக வளாகத்தில் யூனோகாயின் நிறுவனத்தின் பிட்காயின் ATM திறக்கப்பட்டுள்ளது..! 
இந்தியாவில் பிட் காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரண்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களுருவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கிரிப்ட்டோ கரண்சி ATM துவங்கப்பட்டுள்ளது. 
விர்ச்சுவல் கரண்சி எனப்படும Bitcoin புழக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த முறையின் மூலம் பணம் யாரால் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது கண்டுபிடிப்பது கடினம். மேலும், கிரிப்டோ காயின் புழக்கத்தால் 10 சதவீத விலை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தற்போது முதன்முதலாக கிரிப்டோ கரண்சிகளுக்காக தனியாக ATM துவங்கப்பட்டுள்ளது.

இந்த ATM-ல் டெபிட்/கிரடிட் கார்டு ஸ்லாட் செயல்படாது. யூனோகாயின்,  யூனோடாக்ஸ் (Unodax) வாடிக்கையாளர்கள், 500 ரூபாய் நோட்டுகளாக ரொக்கமாக நாள் ஒன்றுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் போடலாம் அல்லது எடுக்கலாம்.
கணக்கில் உள்ள தொகை மூலம்  கிரிப்டோகரன்சிகளை வாங்கலாம்.
தங்களிடம் 13 லட்சம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அவர்களது வசதிக்காக ATM திறக்கப்பட்டுள்ளதாக
யூனோகாயின் நிறுவனர் சாத்விக் விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.


டெல்லி, மும்பையிலும் திறக்கப்படும் என்றும், இது வழக்கமான ATM எந்திரம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். கிரிப்டோ கரன்சிகள் இந்தியாவில் சட்டபூர்வமாக செல்லுபடியாகக் கூடியவை அல்ல என்று மத்திய நிதியமைச்சகம் கூறியிருந்தாலும் சட்டவிரோத பிட்காயின் பயனர்கள் தனியாக ஏ.டி.எம்,திறக்குமளவு தைரியமாக செயல்படுவது நம் அரசு மேல் இருக்கும் பயத்தையே காட்டுகிறது.
பிட்காயின் உலக அளவில் மதிப்பு குறைந்து வருகிறது.பல நாடுகளில் பிட்காயினுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது  என்பதுதான் இன்றைய பிட்காயின் நிலை.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?