"ஆப்பிள்","பேரிக்காய்" வித்தியாசம் உண்டு.

“இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும்” “மாநில நெடுஞ்சாலைத் துறைக்கும்” உள்ள அடிப்படை வித்தியாசம் கூட புரியாத முதலமைச்சர் “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பது போல் உளறிக்கொட்டியிருக்கிறார். 
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் அமைப்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்த போது நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புக்குரிய சாதனைகள் எதையும் புரிந்துகொளாமலே கொச்சைப்படுத்த முனைந்திருக்கிறார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது மட்டுமே மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பணி.  
சாலைப்பணிகளை  செயல்படுத்துவது, டெண்டர் விடுவது, டெண்டர்களை முடிவு செய்யும்  அதிகாரம் எல்லாம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்! 

ஆப்பிளுக்கும் பேரிக்காய்க்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
 “1988 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்” கீழ் அமைக்கப்பட்டு இந்த ஆணையம் 1995-லிருந்து தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 
ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை முழுக்க முழுக்க முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 
ஆகவே தன்னாட்சி பெற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் தன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் “கமிஷன், கலெக்சன், கரெப்சனுக்காக”என்றே திட்டமிட்டு விடப்படும் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை ஒப்பிடுவதே முதல் தவறு. 
குறைந்தபட்சம் அவர் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர்களிடம் கேட்டிருந்தால் இந்த அடிப்படை வேறுபாட்டை புரிந்து கொள்ளும்படி பழனிசாமிக்கு போதித்திருப்பார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கிய சில டெண்டர்களை மேற்கோள் காட்டியுள்ள முதலமைச்சர், “ஒரு கிலோ மீட்டருக்கு 8.78 கோடி ரூபாய், 12 கோடி ரூபாய் வரை கொடுத்திருக்கிறார்கள்” என்று எழுதிக் கொடுத்ததைப் புரிந்து கொள்ளாமல் அப்படியே கக்கியிருக்கிறார். 
ஆனால், “செங்கம்பள்ளி - கோவை - கேரளா” எல்லை வரை உள்ள  82 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைப் பணி கிலோமீட்டருக்கு 4.14 கோடி ரூபாய் மதிப்பிலும், 125 கிலோ மீட்டர் தூரம் உள்ள “திருச்சி- மதுரை” தேசிய நெடுஞ்சாலை பணி ஒரு கிலோ மீட்டருக்கு 3.36 கோடி ரூபாய் என்ற அளவிலும், கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து பூந்தமல்லி வரையுள்ள 300 கிலோ மீட்டர் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஒரு கிலோ மீட்டருக்கு 3.35 கோடி ரூபாய் மதிப்பிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியதை வசதியாக மறைத்து, தனது ஊழல் துர்நாற்றத்திற்கு சாம்பிராணி போட்டு மறைக்க முயற்சி செய்திருக்கிறார். 
“வடக்கு- தெற்கு காரிடார் தேசிய நெடுஞ்சாலை  (காஷ்மீர் முதல் கன்னியாகுமரி) பகுதிகள் சாலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட “சேலம்- செங்கம்பள்ளி” சாலைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5.65 கோடி ரூபாய் மட்டுமே ஆணையம் வழங்கியிருக்கிறது. 
ஆனால் கிலோ மீட்டருக்கு 12 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் அண்டப்புளுகு ஆகாசப் புளுகு வெட்கம் நாணம் ஏதுமின்றி அவித்துவிட்டுள்ளார்.
“ஒரு கிலோ மீட்டருக்கு எத்தனை கோடி ரூபாய்?” என்று மதிப்பீடு செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு அம்சங்களைப் பார்க்கிறது. 
அது நான்கு வழிச்சாலையா, இரு வழிச் சாலையா, ஆறு வழிச்சாலையா, எத்தனை மேம்பாலங்கள் அமைக்கப்படுகிறது, தரைப்பாலங்கள் எத்தனை, சாலையின் உயரம் எவ்வளவு, ஆற்றுப் பகுதிகளில் அமைக்க வேண்டிய சாலையா என்பதையெல்லாம் ஆராய்ந்து, உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலைகளை வடிவமைத்து மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது. 

ஆனால் அதிமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள, அல்லது போடப் போகின்ற நெடுஞ்சாலைகள் ஊழலுக்காவே - கொள்ளையடிப்பதற்காகவே வடிவமைக்கப் படுகிறது. 
 உலக தரமில்லை, உள்ளூர் தரத்திலேயே சாலைகள் இல்லை என்று இடிந்து விழுந்த புதுக்கோட்டை சாலையே முதலமைச்சரின் முகத்தில் ஆழமாகக்  கரி பூசியிருக்கிறது. 
போர்ஜரி சான்றிதழ் கொடுத்து டெண்டர் எடுத்த அதிமுகவினரின் கம்பெனிக்கு உலக வங்கியே தடை போட்டிருக்கிறது.
“ஆன்லைன் டெண்டர்” பற்றி முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆன் லைன் டெண்டர் யாரால் போட முடிகிறது? 
எப்படியெல்லாம் நிபந்தனைகள் வைத்து போட்டியாளர்கள் நீக்கப்படுகிறார்கள்? 
அமைச்சர்களின் கம்பெனிகளுக்கு மட்டும் எப்படி டெண்டர்கள் வழங்கப்படுகின்றன?  
என்பது எல்லாம் ஏற்கனவே எங்கள் தலைவரின் கைக்கு துறை வாரியாக  வந்து சேர்ந்து விட்டது. 
இந்த கொள்ளையாட்சி - கேடுகெட்ட ஆட்சி முடிந்த பிறகு அனைத்தும் நிச்சயம் அம்பலத்திற்கு வந்தே தீரும். 
ஒவ்வொரு அமைச்சராக சிறை செல்ல தயாராக இருக்க வேண்டியதிருக்கும். ஒரு வேளை முதலமைச்சர் அவசரப்பட்டால்- அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற பணிகள் குறித்த ஆன்லைன் டெண்டர்கள் குறித்து இப்போதே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட தயாரா? 

தன் ஊழலுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல்- ஏழு வருடம் கழித்து தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஊழல் என்கிறார் முதலமைச்சர். தைரியமிருந்தால் வழக்குப் போடுங்கள்.  
அதை சந்திக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். 
அரசு ஊழியர்களுக்கு (Govt Servant) உள்ள விதிகளை சுட்டிக்காட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின் படி பொது ஊழியராக (Public Servant) இருக்கும் முதலமைச்சர் “தன் ரத்த உறவுகளுக்கு டெண்டர் கொடுக்கவில்லை” என்கிறார். 
ஆனால், “முதலமைச்சரின் உறவினர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று அரசின் தலைமை வழக்கறிஞரே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார். 
ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் சொல்வது முதலமைச்சர்தான் என்பது உயர்நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது. 
“ராமலிங்கம் அன்ட் கோ” தி.மு.க. ஆட்சியில் இருந்தவர்கள் யாருக்கும் சம்பந்தியில்லை. 
அவர்கள் தி.மு.க. ஆட்சியில் டெண்டர் எடுத்திருந்தால் தவறு இல்லை. ஆனால் முதலமைச்சர் தனது சம்பந்திக்கு உள்நோக்கத்தோடு டெண்டர் கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்ல முதலமைச்சருக்கு அறவே வக்கில்லை.
ஞான சூனியமான ஊழல் முதலமைச்சருக்கு எங்கள் கழகத் தலைவரின் தகுதி பற்றிப் பேச துளி கூட அருகதை இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய இலக்கணத்தோடு ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு பெற்றவர் எங்கள் தலைவர். எங்கள் தலைவர் அரசியலில் நேர்மையை சம்பாதித்தார். 
நீங்கள் சி.பி.ஐ. விசாரணையை மூட்டை மூட்டையாகச் சம்பாதித்து வைத்துள்ளீர்கள்.  டெண்டர் ஊழல்களின் வண்டவாளம் எல்லாம் சி.பி.ஐ. விசாரணையில் தண்டவாளத்தில் ஏறும்போதும், 18 எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பில் இந்த ஆட்சி ஆட்டம் கண்ட பிறகும் எங்கள் தலைவரின் தகுதி எடப்பாடி பழனிச்சாமியின் கண்களுக்கு - மட்டுமல்ல அதிமுக அமைச்சரவையில் உள்ள ஊழல் அமைச்சர்கள் எல்லோரின் கண்களுக்கும் நன்றாகவே தெரியும்.
எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து “எதிர்க்கட்சித்தலைவருக்குத் தகுதி இல்லை” என்று “கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார்” எனக் கூறிய  எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் பதவிக்கு நூற்றுக்கு ஒரு சதவீதம் கூட லாயக்கில்லைதான். ஊழல் மகா சமுத்திரத்தில் மூழ்கி, வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறித் தத்தளித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு  தலைவர் ஸ்டாலின்  பற்றிப் பேசுவதற்கு தகுதி இல்லை.
                                                                                                                                        டி.ஆர்.பாலு,

=========================================================================================
ன்று,
அக்டோபர்-22.

  • இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1828)
  • அர்ஜெண்டினாவிற்கு முதல் தொலைதொடர்பு ஏற்படுத்தப்பட்டது(1875)
  • பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது(1964)
  • இந்தியா தனது முதல் ஆளில்லா செயற்கைகோளான சந்திராயன் 1-ஐ விண்ணில் செலுத்தியது(2008)

2008ம் ஆண்டு நிலவின் தரைப்பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திராயன்1 செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது. 

79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலவை அடைந்தது. நிலவைப் பற்றிய பல புதிய தகவல்களையும் கண்டறிந்து, இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. 2 ஆண்டுகள் வரை இதன் இயங்குதிறன் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், எதிர்பாராத வகையில், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியுடன், சந்திராயன் 1 செயற்கைக்கோளுக்கும், இஸ்ரோவுக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதுபற்றி பல முயற்சிகளை மேற்கொண்ட இஸ்ரோ, இறுதியாக, சந்திராயன் 1 செயற்கைக்கோள் தொலைந்துவிட்டதாக, அறிவித்தது.

மாருதி 800 ரகக் காரின் அளவில்தான் இந்த சந்திராயன் 1 செயற்கைக்கோள் இருக்கும். இதனை தொலைந்துவிட்டதாக, அறிவித்தாலும், தொடர்ந்து தேடும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டிருந்தது. ஆனாலும், இதுபற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. 

இந்நிலையில், இஸ்ரோ தொலைந்துவிட்டதாகக் கூறிவரும் சந்திராயன்1 செயற்கைக்கோள் இன்னமும் நிலவைச் சுற்றி வந்துகொண்டிருப்பதாகவும், அது தொலையவில்லை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 

அதன் வாழ்நாள் முடிந்துவிட்ட நிலையில், சந்திராயன்1 ஒரு விண்வெளி குப்பையை போல நிலவைச் சுற்றிவந்துகொண்டுள்ளதாகவும் நாசா குறிப்பிட்டுள்ளது. 

தாங்கள் அனுப்பிய இந்தியாவின் பெருமைக்குரிய முதல்  செயற்கைக்கோளான சந்திராயன்1, விண்வெளியில் ஒரு குப்பையை போல சுற்றிவருவது வேதனை அளிப்பதாக உள்ளதென்று, இஸ்ரோ விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 
==========================================================================================
கேரளாவின் பிரபல நாளிதழ் சார்ந்த பத்திரிகையாளர், சபரிமலை விவகாரம் குறித்து குறிப்பிட்ட தகவல்கள் பின்வருமாறு.....
சபரிமலை விவகாரத்தில் கேரள முதல்வர் அம்மாநில உளவுத்துறை கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் செயல்படுகிறார். 
கேரளாவில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்கு பிஜேபி போடும் நாடகம் இது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த பெண்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகள் மற்றும் அவர்கள் நி
ர்வாகிகளின் குடும்பத்து பெண்கள். 

மோடி அரசு கூட உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டது. 
மேலும் அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தான் கேரள அரசிற்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டது. 
அதை தான் கேரள அரசு அமல்படுத்தியது. 

ஒருவேளை அமல்படுத்தி இருக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மூலம் கேரள அரசிற்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்கள். 
அதே நேரத்தில் இதன் மூலம் அரசிற்கு நெருக்கடி கொடுக்க இதற்கு எதிராக கேரளாவின் நாயர் சமாஜ ஆட்கள் மற்றும் தன் கட்சியின் மற்ற பிரிவுகளை ஐயப்ப பக்தர்கள் என்ற போர்வையில் தூண்டி விட்டதும் அவர்கள் தான். 

மிக முக்கியமாக ரஹ்னா பாத்திமா என்கிற சூர்யா என்ற பெண்ணை மிக இரகசிய திட்டம் தீட்டி அவர்களே இரு முடி கட்டி இங்கு அனுப்பி மிகப்பெரும் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார்கள். இதை உளவுத்துறை மிக தாமதமாக கண்டறிந்து அது கொடுத்த தகவலின் பெயரில் தான் இருவரும் உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டார்கள். 

ரஹ்னா திட்டமிட்டே ஐயப்ப பக்தர் உடை அணிந்து தொடை தெரிய செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டே வெளியிட்டு வந்துள்ளார்.

சந்நிதானத்தில் வைத்து படியேறியே தீருவேன் என்று காவல்துறையிடம் அடம்பிடித்திருக்கிறார். 
பின்னர் ஐ.ஜி தான் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருப்பி அழைத்து வந்திருக்கிறார். 

மேலும் ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் வந்த பலரின் இரு முடி கட்டுகளில் தேங்காயும், கற்களும், அரிவாளும் இருந்திருக்கின்றன. 

இதையும் உளவுத்துறை அறிக்கையின் பெயரில் போலீஸ் கண்டறிந்து அவர்களில் சிலரை கைது செய்திருக்கிறது. 

ஆக எப்படியாவது கேரளாவில் காலூன்றி விட வேண்டும் ,இடது சாரிகள் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு நடத்தும் சூழ்ச்சியே  இவை அனைத்தும் ..
பாடகி சின்மயியால் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்)  தலைவர் நாராயணன், சின்மயியை ஆபாசமாக பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மீ டூ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் சமூகவலைதளத்தில், பெண்கள் பலர், தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.  சமீபத்தில் திரைப்பாடலாசிரியர் வைரமுத்து, ராதாரவி, கர்நாடக இசைக்கலைஞர்கள் டி.என். சேஷகோபாலன், ரவிகிரண், சசிகிரண் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றம் சுமத்தி திரைப்பாடகி சின்மயி பரபர்ப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும் பிராமணர் சங்க (தாம்ப்ராஸ்) தலைவர் நாராயணன் மீதும் பாலியல் புகார் கூறி ட்விட்டரில் பதிவிட்டார். இதை நாராயணன் மறுத்தார்.
இந்த நிலையில்,  அந்தணர் முன்னேற்றக் கழக தலைவரும், தாம்ப்ராஸ் உறுப்பினருமான ஜெயப்பிரகாஷ் தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், “தாம்ப்ராஸ் தலைவர் நாராயணனை திண்டுக்கல் மாவட்ட தாம்பிராஸ் தலைவர் ஹரிஹரமுத்து  தொடர்புகொண்டு, சின்மயி புகார் குறித்து பேசினார். அதற்கு ஆத்திரமான நாராயணன், சின்மயி அய்யங்கார் தே… என்றும் தன்னை சந்திக்க நிர்வாகிகளுக்கு நேரம்தரமுடியாது மனுவைபெறமுடியாது இவ்விசயம் தொடர்ந்தால் சங்கத்தில் இருந்துநீக்குவேன் என்றும் தான் தலைவர் பதவியை ராஜீனாமா செய்யாமாட்டேன் என்றும் அதிர்ச்சி தரத்தக்க வகையில் பேசினார்” என்றும் பதிவிட்டுள்ளார்.
“குற்றச்சாட்டை முன் வைத்தார் என்ற ஒன்றை காரணத்திற்காக ஓரு பெண்ணை
தரக்குறைவாக விமர்சித்திருப்பது எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது” என்று நாராயணனுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.
அடுத்த தொழிலதிபரை கொள்ளையடித்த பல நூறு கோடி வங்கி பணத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல ரூட் போட்டுக் கொடுத்தார் நம்ப ரூட்டு தல மோடி..

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?