கடைந்தெடுத்த ஆர்எஸ்எஸ் பேர்வழி

நள்ளிரவில் குறுக்கு வழியில் சிபிஐ இயக்குநர் பொறுப்பில் 

அமர்த்தப்பட்டவர்!

அலோக் குமார் வர்மா, ரகேஷ் அஸ்தானாபிரச்சனையைக் காரணம் காட்டி, இரவோடு இரவாக மத்திய புலனாய்வுக் கழகத்தின் (சிபிஐ)இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டவர் நாகேஸ்வர ராவ். 

சிபிஐ அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்காகவே இவரை நியமனம் செய்துள்ளோம் என்று நாகேஸ்வர ராவ் நியமனத்தைக் குறித்து மோடி அரசு ஜம்பம் அடிந்திருந்தது.
ஆனால் நாகேஸ்வரராவ் கடைந்தெடுத்த ஆர்எஸ்எஸ் பேர்வழி என்பதும்,டிஐஜி நிலைக்கு உள்ள சிபிஐ இயக்குனர் பதவிக்கு இப்போதுதான் ஐஜி நிலைக்கு உயர்ந்துள்ள  நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டது தகுதியில்லா ஒருவரை பல அதிகாரிகளைத்தாண்டி நியமித்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்திய நிர்வாகம் முழுக்க காவிமயமாக்களின் ஒரு படிதான் என்பதும் தற்போது வெளிவந்துள்ளது.

ஆனால், ரகேஷ் அஸ்தானாவைப் போல இவரும் மோடிக்கு நெருக்கமானவர்தான் என்றும், இன்னும் சொன்னால் அஸ்தானாவைக் காட்டிலும், கொள்கை அடிப்படையில் கடைந்தெடுத்த ஆர்எஸ்எஸ் பேர்வழி என்றும் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.


 ‘ராவ்... இந்து கலாச்சாரத்தின் சாம்பியன்’ என்ற தலைப்பில் மிகப்பெரிய செய்தியையும் வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா பல்கலைக் கழகத்தில் வேதியியலில் முதுநிலைப் பட்டமும், சென்னை ஐஐடி-யில்ஆராய்ச்சிப் படிப்பும் முடித்தவரான “நாகேஸ்வரராவ், இந்து இயக்கங்களோடு நெருங்கியத் தொடர்புடையவர்; கோயில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது, சிறுபான்மையினருக்கு ஆதரவான சட்டப் பிரிவுகளை அகற்றுவது, மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்கு எதிரானகருத்துருவாக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்தி வருபவர்” என்று அந்த செய்தியில் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது.2

016-ஆம் ஆண்டு சிபிஐ-க்கு இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவ், ஆர்எஸ்எஸ், பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் ராம் மாதவின் நெருங்கிய நண்பர் ஆவார். 

ராம் மாதவ் நடத்திவரும் ‘இந்தியா பவுண்டேஷன், சர்வதேச விவேகானந்தா பவுண்டேஷன்’ போன்ற அமைப்புகளின் சார்பில் நடக்கும் இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்க கூடியவர்.

தில்லியில் இந்திய கலை, கலாச்சார தேசிய டிரஸ்ட் என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஸ்ரீஜன்பவுண்டேஷன் என்ற அமைப்பு கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 
இந்துக்களின் முக்கிய கோரிக்கைகள், பிரச்சனைகள் என்ன என்பது பற்றி வரையறுப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். 

அதன்படி7 முக்கியக் கோரிக்கைகளும் உருவாக்கப்பட்டன. இவை செப்டம்பர் 22-ஆம் தேதி தில்லியில் செய்தியாளர்கள் மத்தியிலும் வெளியிடப்பட்டன.அந்த 7 முக்கியக் கோரிக்கைகள் என்னவெனில், கோயில்களை அரசு நிர்வகிக்கக் கூடாது,வெளிநாட்டு நிதி உதவி பெறும் இந்து விரோத தொண்டு நிறுவனங்கள் அந்த நிதியை பெறாமல் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்,மாட்டிறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும், இந்து கலாச்சார செயல்பாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பன போன்றவைதான்.

இவையெல்லாம் இந்துக்களின் முக்கிய பிரச்சனைகள் என்று வரையறை செய்த 7 பேர்களில் நாகேஸ்வர ராவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. 

ஸ்ரீஜன் பவுண்டேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டநாகேஸ்வர ராவ், சுமார் இரண்டு மணி நேரம் சின்னச் சின்ன இந்து இயக்கப் பிரமுகர்களோடு கலந்துரையாடியதாகவும் எகனாமிக் டைம்ஸ் ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாகேஸ்வர ராவின் விளக்கத்தைப் பெற முயன்றபோது, அவரிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை என்பதையும் ‘எகனாமிக் டைம்ஸ்’ ஏடு பதிவு செய்துள்ளது.

அலோக் வர்மாவை விடுப்பில் அனுப்பியதன் மூலம் ரபேல் ஊழல், மருத்துவக் கவுன்சிலிங்கில் நடைபெற்ற ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்டெர்லிங் பயோடெக் வழக்குகள் என பல வழக்குகளை முடக்கி விட முடியும் என்று கணக்கு ஒருபுறமென்றால், மற்றொரு புறத்தில் தங்களுக்கு வேண்டியவரை சிபிஐ-க்குள் நுழைத்து அந்த அமைப்பைதங்களின் கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என்ற கணக்கையும் பாஜக செயல்படுத்தியுள்ளது.
===========================================================================================
இது நீண்டகாலம் நிலைக்காது
மத்தியில் ஆளும் மோடி அரசானது, பொருளாதாரத்தில் ‘டி20’ கிரிக்கெட் ஆட முயற்சிப்பதாகவும், இது நீண்டகாலம் நிலைக்காது என்றும் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மும்பையில், ஏடி ஷெராப் நினைவு இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு, பேசிய ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கி தன்னாட்சி செயல்பாடுகளிலும், பொதுத்துறை வங்கிகளை கட்டுப்படுத்தும் விஷயத்திலும் அண்மைக் காலமாக மத்திய அரசு தலையீடு செய்வதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

கருத்தரங்கில் மேலும் அவர் பேசியிருப்பதாவது:
 விரால் ஆச்சார்யா


“ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தின் மீது முதலீடு செய்துள்ள மத்திய அரசு, குறைந்தவட்டியில் கடன் பெறுதல், சர்வதேச முதலீட்டாளர்களின் அன்பைப் பெறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
ரிசர்வ் வங்கி தொடர்புடைய ஒவ்வொரு முடிவுகளையும் மத்திய அரசு குறுகிய கண்ணோட்டத்தில் டி20 கிரிக்கெட் போட்டி போன்று எடுக்கிறது. 

அதற்கேற்பவே எப்போதும் ஏதாவது தேர்தலும் வந்தபடியே உள்ளது; ஆனால், ரிசர்வ் வங்கியோ டெஸ்ட் கிரிக்கெட் போல செயல்படுகிறது; 
ஒவ்வொரு இன்னிங்சிலும் வெற்றி பெற முயற்சிப்பதோடு, அடுத்த இன்னிங்சில் வெற்றிவாய்ப்பை எதிர்பார்த்து தாக்குப் பிடிக்க முயற்சிக்கிறது; 

பிரச்சனைகளைச் சமாளித்துக்கொண்டு அடுத்து வரும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என நினைக்கிறது.

வராக்கடன் இழப்புகளை, ‘கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைகள்’ என்ற கம்பளத்திற்குப் பின் மறைத்தால், அதன் மூலம் குறுகிய காலத்திற்கு வேண்டுமானால், ஒரு திரைச்சீலையாக பயன்படுத்தி தப்பிக்கலாம். 

ஆனால், எதிர்காலத்தில் அந்த முறை சீட்டுக்கட்டு சரிவதைப் போல வீழ்ச்சி அடையும்.
கடன் வழங்குவதில் சில வங்கிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி ரிசர்வ் வங்கிக்கு, மத்திய பாஜக அரசின் ஆணைப்படி  உயர் அதிகாரிகள் தொடர்ந்து நிர்ப்பந்தம் அளித்து வருகின்றனர். 

நாட்டின் பரிவர்த்தனை அமைப்புக்கு புதிய ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பதன் வாயிலாக ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகாரங்களை குறைக்கவும் மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.   

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை குறைப்பதன் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும். கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் மூலதனச் சந்தைகளில் நம்பகத்தன்மை குறைந்துவிடும். 

மத்திய வங்கியின் சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுக்காத அரசுகள், நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு ஆளாகி, பொருளாதார தீயை மூட்டி, மத்திய வங்கியின் அதிகாரங்களை குறைத்ததற்காக ஒரு நாள் வருத்தப்படும். 

சட்டத்தை மீறி செயல்படும் செயல்களுக்கு மத்தியஅரசு உரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும்."
-இவ்வாறு விரால் ஆச்சார்யா கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியாவின் பேச்சு மோடியின் காதை இப்போது சென்றடைந்திருக்கும்.
சிபிஐ  இயக்குனர் அலோகவர்மா  கதைதான் நடக்கும்.
=========================================================================================
அமெரிக்காவின் கச்சடா ஆணை.
நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரான் மீதும் அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதும்கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் மிரட்டியுள்ளார். 
அமெரிக்க விதித்த கெடு முடிய 10 நாட்களே உள்ள நிலையில், இந்த நெருக்கடியால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத்தொடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார். 
அதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீதுபொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. 
மேலும் இந்தியா உள்ளிட்டஉலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இடையே நவம்பரில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்றுமத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். 
ஆனால் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனிடையே வெள்ளியன்று வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டிரம்ப் பேசும்போது,“நவம்பர் 5 முதல் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அனைத்து பொருளாதாரத் தடைகளும் முழு வேகத்தில் விதிக்கப்படும். 
மேலும் ஈரானின் தவறான அணுகுமுறையால் இன்னும் கூடுதலாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். 
தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி வழங்கும் ஆபத்தான ஆயுதங்களை ஈரான் உற்பத்தி செய்ய நாங்கள்அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் நவம்பர் மாதத்துக்கு பிறகு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிக்கல்ஏற்படும் எனத் தெரிகிறது. 

ஈரானில் இருந்து அதிக அளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடு இந்தியா. மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்க்கு இந்தியா டாலரில் பணம்செலுத்துவதில்லை.மாறாக இந்திய ரூபாயை கணக்கிட்டு அதற்கு நிகரான அளவு பொருட்களை ஏற்றுமதிசெய்கிறது. 
ஏறக்குறைய பண்டமாற்று முறை போன்றே ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. 
இதனால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பில் எந்த பாதிப்பும் இல்லாமல் உள்ளது.

ஆனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியவில்லை என்றால் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை மட்டுமேஇந்தியா நம்ப வேண்டிய சூழல் ஏற்படும். 

இதனால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரும் என நிபுணர்கள்எச்சரிக்கின்றனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வந்த நிலையில் தற்போது தான்நிலைமை சீரடைந்து வருகிறது. 
அமெரிக்காவின் தடையால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல்மற்றும் டீசல் விலை மேலும் உயரும் ஆபத்துஉள்ளது. 

அதுமட்டுமின்றி ஈரான் தவிர மற்ற நாடுகளுக்கு இந்தியா டாலரில் பணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறையும். 

இதனால் இந்திய ரூபாய் மதிப்பும் சரிவடையும் ஆபத்து இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 அமெரிக்காவிற்கு அடிபணிந்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கையிருப்பு டாலர்களை வாரி இறைப்பதால் இந்திய ரூபாய் மதிப்பு சரியும் ஆபத்துஎன்ற இரட்டை பிரச்சனையை அமெரிக்க கட்டளைகளை தலைமேற்கொண்டு செயல்படும் மோடி அரசு எப்படி சமாளிக்கப்போகிறது ?

டிரம்ப் ஆணைப்படி செயல்பட்டு இந்தியாவை படுகுழியில் தள்ளப்போகிறதா?அல்லது இந்தியாவுக்குத்தேவையான   கச்சாஎண்ணையை நம் இந்தியப் பணத்திற்கே தரும் ஈரானிடமிருந்து   கச்சா எண்ணையை வாங்கப்போகிறதா?
===========================================================================================
ன்று,
அக்டோபர்-27.
  • ஸ்பெயினின் முதல் ரயில் பாதை திறக்கப்பட்டது(1848)
  • செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய தினம்(1918)
  • கனடா- அலாஸ்கா இடையேயான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது(1942)
  • முதலாவது ஏர்பஸ் ஏ300 இயக்கப்பட்டது(1972)
============================================================================================

மனித இனத்திற்கான அச்சுறுத்தல் மற்றும் சர்வதே பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் பிராந்திய போர்சைட் குழு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

"லஷ்கர் இ தொய்பா மற்றும் ஆப்கன் தலிபான் பயங்கரவாத அமைப்புகள், சர்வதேச பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. 

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் மற்றும் அதிக பயங்கரவாத குழுக்கள் செயல்படும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 

கடினமான உண்மைகள் மற்றும் புள்ளியில் அடிப்படையில், மிகவும் அபாயமான பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவுவது தெரிய வந்துள்ளது. 

அனைத்து வகையிலும் மோசமான பிரிவினைவாத அமைப்புகளின் எழுச்சி, பேரழிவுக்காக ஆயுதங்களை தவறாக பயன்படுத்துதல், பொருளாதாரத்திற்கு இடையூறு ஆகியவற்றை இக்குழுக்கள் செய்கின்றன. 

இதில் 21ம் நூற்றாண்டில் பயங்கவாத செயல்களில் ஈடுபட்ட 200 குழுக்கள் குறித்து ஆராயப்பட்டது. அதில், 200 குழுக்களில் நான்கு பங்கு குழுக்கள் மட்டுமே, சொந்த கொள்கைகளால் உருவாக்கப்பட்டன. இவற்றில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மட்டுமே, கடந்த 5 ஆண்டுகளில் மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தது. 

அல்கொய்தா 2011 வரை ஒசாமா பின்லாடன் தலைமையில் செயல்பட்டது. 
தற்போது அவரது மகன் ஹஸ்மா பின் ஒசாமா பின்லாடன் தலைமையில் செயல்படுகிறது. 
அல்கொய்தா பாகிஸ்தானில் பிறந்தது. 
இதன்மூலம் ஆப்கனில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. 
அபோதாபாத்தில் பெரிய காம்பவுண்ட் வீட்டில் ஒசாமா வசித்தார். இந்த வீடானது, அந்நாட்டின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் பகுதியில் இருந்தது அவர்கள் வீட்டை விட பின் லேடன் வீடு  பெரியது. "
                                                                               -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
=============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?