ஆளே இல்லாத கடையில் காபி ஆத்துபவர்கள்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா கடந்த வாரம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருடைய பொறுப்புகள் அனைத்தையும் ஒடிசாவைச் சேர்ந்த நாகேஷ்வர ராவ் ஏற்றுக் கொள்வார் என்று உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு.
 மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் கட்டாய விடுப்பினை ஏற்க இயலாது என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்தார் அலோக் வர்மா. 
நாகேஷ்வர ராவ், அலோக் வர்மாவின் வழக்கு விசாரணை முடியும் வரை எந்த விதமான முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. 

இவரின் நியமனத்திற்கு தொடர்ந்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் இருக்கிறது.

சிபிஐ அதிகாரி நாகேஷ்வர ராவ் மனைவி கொடுத்த கடன்

கொல்கத்தாவைச் சேர்ந்த ஏஞ்சலா மெர்கண்டைல்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Angela Mercantiles Private Ltd (AMPL) ) நிறுவனத்திற்கும், நாகேஷ்வர ராவின் மனைவி எம். சந்தியாவிற்கும் இடையில் 2011ம் ஆண்டு தொடங்கி 2014ம் ஆண்டு வரை வர்த்தக ரீதியிலான தொடர்புகள் இருந்து வந்ததை சுட்டிக்காட்டியிருக்கிறது ரெஜிஸ்தரார் ஆஃப் கம்பனீஸ்.
இந்த ஏ.எம்.பி.எல் நிறுவனத்திடம் இருந்து 2011ம் நிதியாண்டின் முடிவில் 25 லட்சம் ரூபாய் கடனாய் வாங்கியுள்ளார். அதே தரவுகளில் 2012 மற்றும் 2014ம் ஆண்டு வரை 1.14 கோடி ரூபாயை மூன்று தவணைகளாக அந்த நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது கண்டறியப்பட்டிருக்கிறது.
2012ம் ஆண்டில் ரூபாய் 35.56 லட்சம், 2013ம் ஆண்டில் ரூபாய் 38.27 லட்சம் மற்றும் 2014ம் ஆண்டில் 40.29 ரூபாயை அந்நிறுவனத்திற்கு கடனாய் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏ.எம்.பி.எல். நிறுவனத்தின் இயக்குநர் ப்ரவீன் அகர்வாலிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, ராவ் எனக்கு நெருங்கிய நண்பர். சந்தியா எங்களின் குடும்ப நண்பர்களில் மிகவும் முக்கியமானவர். நண்பர்களிடம் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினார். சிபிஐ செய்தித் தொடர்பாளரிடம் இது குறித்து கேள்வி கேட்ட போது, பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
சிபிஐ அதிகாரி நாகேஷ்வர ராவ்
பதிவாளர்  அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட போலி முகவரியில் இருக்கும் கட்டிடம்
பதிவாளர்  அலுவலகத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஏ.எம்.பி.எல் நிறுவனத்தின் முகவரிக்கு நேரில் சென்று பார்த்த போது, அங்கே நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை என்றும், குடும்பங்கள் வாழ்வதற்கான வீடு மட்டுமே உள்ளது என்றும் அங்கே வீட்டினை பாதுகாத்து வரும் பாதுகாவலர் கூறினார். 
மேலும் அகர்வாலின் குடும்பம் எப்போதுமே அங்கே குடியிருக்கவும்  இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் .
மோடி ஆடசியில் தனக்கு ஆதரவான நபர்களை பதவிகளில் நியமிப்பது இருக்கட்டும்.ஆனால் அனைவருமே ஊழல்,முறைகேடுகளில் ஈடுபட்டவர்களாகவும் ஆர்.எஸ்.எஸ்.பின்னணி உள்ளவர்களாகவும் இருப்பதுதான் கவலைதருகிறது.
சிபிஐ இயக்குனராக பதவியேற்றபின்னர் தனது  மனைவியின் முறைகேடான கொடுக்கல் வாங்கலையே சிபிஐயில் தான் எடுக்கும் முதல் வழக்காக ராவ் எடுப்பாருங்களா? 
============================================================================================
ன்று,
அக்டோபர்-29.


  • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகள் இணைந்து செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானம் (1863)
  • துருக்கி குடியரசு தினம்(1923)
  • கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
============================================================================================

பங்குச்சந்தையை பொறுத்தவரை இதற்குத்தான் நம் இந்திய பங்குகளின் விலை குறைகிறது,ஏறுகிறது என்பதை உணர இயலாது.
பனைமரத்தில் மழை பெய்தால் தென்னை மரத்தில் நெறி காட்டியது போல என்ற பழமொழியைப்போல் 
அமெரிக்க,ஐரோப்பிய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை இங்கு பாதிப்பை உண்டாக்கும்.

தனியே பங்குச்சந்தை(கமாடிட்டி) இருந்தாலும்  கச்சா எண்ணெய் விலை விலை உயர்வு முக்கிய பங்குச் சந்தையையும் பாதிக்கும்.

அமெரிக்க பங்குச் சந்தையின் சமீப நகர்வுகள், உலக பங்குச் சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 
தொடர்ந்து சரியும் டெக்னாலஜி பங்குகள், பல சராசரி அமெரிக்கர்களின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.


இதற்கு காரணம், பெருவாரியான அமெரிக்கர்களின் ஓய்வூதிய நிதி திட்டமான 401(கே), பணம் முழுக்க பங்குச்சந்தையில்தான்  முதலீடு செய்யப்பட்டுள்ளது. 


கடந்த, 10 ஆண்டுகளில், வட்டி விகிதம் மிக குறைவாக இருந்த நிலையில், பங்கு முதலீடுகளை மட்டுமே பலரும் தேர்தெடுத்தனர். 

இதன் நீட்சியாக தளர்ந்திருந்த பங்குச்சந்தை நிமிர ஓய்வூதிய பணத்தை முழுக்க அமெரிக்கா  பங்கு சந்தையில் குவித்து பங்கு வர்த்தகம்  நடத்தும்  சூழல் உருவானது.

ஈ.டி.எப். முறையிலும் குறிப்பிட்ட சில பங்குகளில் பெரும் பண முதலீடுகள், கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்டன.

 அமெரிக்க சந்தை தொடர்ந்து உயர இந்த முதலீடுகளே முக்கிய காரணம். 

இந்த முதலீடுகள் ஒருவழி பணவரத்தை சந்தையில் ஏற்படுத்தியது.சந்தையின் பங்கு மதிப்பீடுகள் நெடுங்கால சராசரிகளை எல்லாம் கடந்து, சரித்திர உச்சத்தை சில குறிப்பிட்ட பங்குகளில் எட்டியது. 

இந்த பங்குகளின் மீது முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் இருக்க, அவை மேலும் மதிப்பில் உயர்ந்தன.

ஆனால், சந்தை அக்டோபரில் சந்தித்த திடீர் வீழ்ச்சி, மாற்றத்திற்கு வழி திறந்து இருக்கிறது. வீழவே வாய்ப்பில்லை என்று சந்தையில் அனைவராலும் கருதப்பட்ட பங்குகளும் சரிந்தது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. 


இதனால், சாமானியர்கள் அனைவரும் தினமும் அச்சத்தோடு சந்தையின் நகர்வுகளை கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

‘வீழ்ச்சி காணா பங்குகள்’ என்று கருதப்பட்ட, எப்.ஏ.ஏ.என்.ஜி., எனும், பேஸ்புக், ஆப்பிள், அமேசான், நெட்பிளிக்ஸ் மற்றும் கூகுள் ஆகிய ஐந்து நிறுவனப் பங்குகளின் விலை பெரும் உயர்விற்கு சென்ற பின் அங்கேயே நிலை கொள்ளாமல் வேறுவழியின்றி  சரிவை சந்திக்குமென்று அமெரிக்க பங்குச்சந்தை நிபுணர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.


இவற்றின் தொடர் சரிவு, ஈ.டி.எப்., களில் இருந்தும், 4019(கே)வில் இருந்தும் முதலீட்டார்கள் பணத்தை காப்பாற்ற வெளியேறினர்.இந்நிகழ்வு பெரும் பண வெளியேற்றத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் தற்போது  துவங்கியுள்ளது.

இதனால், சந்தையில் முதலீட்டாளர்கள் எப்.ஏ.ஏ.என்.ஜி., பங்குகளை மேலும் விற்க வாய்ப்புள்ளது. 

இதன் அதிர்வலைகள் தான் கடந்த சில வாரங்களாக நம் சந்தையிலும் தெரிகின்றன.


நம் நாட்டில் அதிக மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்பட்ட நிதி நிறுவன பங்குகளும், சிறு நிதி வங்கி பங்குகளும் பெரும் விலைச் சரிவை கண்டுள்ளன.

அமெரிக்க நிலை இங்கு இல்லாவிட்டாலும் கூட இந்தியாவிலும் முதலீட்டாளர்கள் நஷ்டம் ஏற்படுவதற்கு முன்பாக விற்றுவிட்டு வெளியேறி விடலாமா என்று யோசிக்க துவங்கி உள்ளனர். 

இதனால் கடந்த சில நாட்களாக  மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்வோர்  குறைந்து விட்டனர்.முதலீடுகள் குறைவான   பண வரத்தையே  காண்கின்றன.

முதலீட்டு ஆலோசகர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும்  வரும் வாரங்களில், நிலைமை மாறி பணம் மேலும் வெளியேறுமா என்ற கேள்விக்கு விடை பொறுத்திருந்துதான் கிடைக்கும்.

அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளை விற்றாலும், நம் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வாங்குவதால் சந்தை குறியீடுகள் இதுவரை அதிகம் விழவில்லை.
வரும் வாரங்களிலும் தொடருமா  இந்நிலை ? 

அந்த சூழலில், சந்தையின் மனநிலை மாற்றங்கள் எப்படி அமைகின்றன என்பதை பொறுத்து, வருங்காலத்தை பற்றிய முதலீட்டு பார்வைகளும் மாறும்.


தேர்தல் ஆண்டை நோக்கி போகும் நாம் முதலீட்டு பார்வையை, நாம் தொலைநோக்கோடு செதுக்கிக்கொண்டால், எடுக்கும் முடிவுகள் நிச்சயம் வெற்றிதான் .
ஆனால் இந்தியாவிலும் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி ஊழியர்களிடம் பெரும் ஓய்வூதியப் பங்குப் பணம்  பங்குச்சந்தையில்தான் முதலீடு செய்ய அரசு ஆணையிட்டுள்ளது.அதற்கான பொறுப்பை அம்பானியின் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம்தான் ஏற்று செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிலோ இதுவரை ஊழியர்களிடம் பெறப்பட்ட பங்குத்தொகை 1800 கோடிகள் இருக்குமிடமே தெரியவில்லை.அரசுக்கும் கூட.
இதனாலேயே ஆயிரக்கணக்கில் ஒய்வு பெற்ற,இறந்த புதிய ஓய்வூதிய திட்டம் சேர்ந்த ஊழியர்கள் இதுவரை அரசிடமிருந்து ஒரு பைசா கூட பெறாமல் தவிக்கிறார்கள்.
பங்குசந்தை நிலையில்லா சூதாட்டம் .அதில் மக்களின் பணத்தைப்போட்டு தொழிலதிபர்கள் விளையாட அரசே ஏற்பாடு செய்வது தவறானது. முதலாளித்துவ நாடான அமெரிக்க பங்குச்சந்தையே நிலை குலையும் போது ஹர்சத் மேத்தா,அம்பானி,நீரவ் மோடி,விஜய் மல்லையா  போன்றோர் நிறைந்த  இந்தியா எம்மாத்திரம்?
இதை ஆள்வோர் சிந்திக்க வேண்டும்.
 ===========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?