செவ்வாய், 30 அக்டோபர், 2018

சபரிமலையை மற்றொரு அயோத்தியாக மாற்ற

 சங்பரிவாரின் பெரும் திட்டம்!

"சபரிமலையை மற்றொரு அயோத்தியாக்கும் பெரும் திட்டத்தை (மாஸ்டர் பிளான்)பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் உருவாக்கியிருந்தன. "

துலா மாத (ஐப்பசி) பூஜைக்காக சபரிமலை கோயில் திறக்கப்பட்டபோது நம்பிக்கையின் பெயரில் கேரள மாநிலத்தில் வகுப்புவாத வன்முறை நடத்த திட்டமிட்டிருந்தனர். 
அதற்காக மாநிலத்திற்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் சுமார் 3 ஆயிரம்பேரை சபரிமலை காட்டுக்குள்ளும் வெளியிலும் முகாமிடச் செய்தனர். 

அவர்கள் நடத்திய வன்முறைகளுக்கும், அட்டகாசங்களுக்கும் அளவில்லை. 
மலையேற வந்த 50 வயதைக் கடந்த பெண்களைக்கூட தொல்லை செய்தனர். 

உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வின் தீர்ப்பை அமல்படுத்தும் பொருட்டு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முயன்ற காவல்துறையினரையும், ஊடகவியலாளர்களையும் கொடூரமாக தாக்கினார்கள். 
பெண் ஊடகவியலாளர்கள் 7 பேரை குண்டர்கள் தாக்கினர். 

தொலைக்காட்சிகளின் காமிராக்களும் மைக்குகளும் வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டன. சங்பரிவார் குண்டர்களின் கொலைக் கத்தியின் முனையிலிருந்து தப்பி சபரிமலை கோயில் மூடப்பட்ட அன்று சில மணிநேரங்களுக்கு முன்பாகவே அங்கிருந்து பலர் வெளியேறினார்கள். 

சபரிமலையில் ரத்தக்களரி ஏற்படுத்தவும், நாட்டில் வகுப்புவாத வன் முறைகளை நடத்தவும் சங் பரிவாரக் கும்பல்கள் முயன்றது நம்பிக்கையை பாதுகாப்பதற்கல்ல. 

வரும்நாடாளுமன்ற தேர்தலில் இடங்களைப் பெறுவதற்கு தேவையான ஓட்டுக்காக நீசத்தனமான அரசியலை சங்பரிவார் அரங்கேற்றியது. 

அறிவொளி பெற்ற உண்மையானநம்பிக்கையாளர்கள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளதுதலையீடு, காவல்துறை மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை ஆகியவை காரணமாக தங்களது பெரும்திட்டத்தை சங்பரிவாரால் நிறைவேற்ற முடியாமல்போனது. 

ஆனால், இந்த கும்பலுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஊக்கமளித்தது காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) கட்சிகளின் நிலைப்பாடுகள். இதை புரிந்துகொள்ள நவீனவரலாற்றில் பங்குவகித்துள்ள சில சமுதாய அமைப்புகளால் இயலவில்லை.

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முயற்சித்ததாக பாஜகவும், காங்கிரசும் கேரள மாநில அரசின் மீதும் சிபிஎம் மீதும் குற்றம்சாட்டி வருகின்றன. 

தீர்ப்பை அமல்படுத்தக் கூடாதுஎன்கிற பாஜகவினருக்கு மத்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமரோ உள்துறை அமைச்சரோ அறிவுரை வழங்கினார்களா? 
தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறினார்.

 ராணுவத்தை பயன்படுத்தியாவது பெண்களுக்கு தரிசன உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். 
தீர்ப்புக்கு எதிராக ஒருபகுதியினர் போராட்டம் நடத்துவதாகவும் இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெண்கள் உட்பட அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என மாநில அரசிடம் மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தது. 

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புதானாக வந்ததல்ல. 
கோயில் மரபுகளை துல்லியமாகபரிசீலித்து 12 ஆண்டுகள் நடந்த சட்டப் போராட்டங்களுக்கு பிறகு வந்த தீர்ப்பாகும். 

இதில் நம்பிக்கையாளர்களில் ஒருபகுதியினரின் தவறான புரிதல் அல்லதுவேறு காரணங்களுக்காக இந்த தீர்ப்புடன் உடன்பட முடியவில்லை. என்எஸ்எஸ் (நாயர் சர்வீஸ் சொசைட்டி) உள்ளிட்ட அமைப்புகள் சீராய்வு மனுக்களுடன் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.

 வழக்கை நவம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 
நீதிமன்றத் தீர்ப்புஎப்படி வந்தாலும் அதை அமல்படுத்துவதே இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசின் கொள்கைநிலை.


அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை அமலாக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியோ, காங்கிரஸ் தலைவரோ இதுவரை கூறவில்லை. 

தீர்ப்பு வந்தவுடன் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் அதனை வரவேற்றனர். அவர்கள் இப்போதுதங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். 

அதன் பிறகுகேரளத்தில் சங்பரிவார் சக்திகள் விரித்துள்ள வலைக்குள்பாய்ந்து பாஜகவின் ஊதுகுழலாக கேரளத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தரம் தாழ்ந்து விட்டனர். 

அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை கடந்து செல்ல அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசிடம் கோர வேண்டும் எனவும் அதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். 

பெருவெள்ளத்தில் மூழ்கிய கேரளத்தை புதுப்பித்து நிர்மாணிக்க வெளிநாட்டு உதவிகள் பெற அனுமதிக்க வேண்டும் என சட்டமன்றம் கேட்டுக்கொண்டபோதிலும் மத்திய அரசு அதை புறக்கணித்துவிட்டது. 
மாநில அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு செல்லவும் அங்குள்ள மலையாளி சகோதரர்களிடம் உதவிகள் கோரும் வாய்ப்பையும் கூட மத்திய அரசு மனிதாபிமானமற்ற முறையில் நிராகரித்தது. 
அதனால் மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க சட்டமன்றத்தின் பரிந்துரை தேவையில்லை. 

ஸ்ரீதரன்பிள்ளையின் கோரிக்கையை ரமேஷ் சென்னித்தலா ஏற்கவில்லை. ஆனால் கேபிசிசி அரசியல் விவகாரக் குழு கூட்டம் சென்னித்தலாவின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ளது. ஸ்ரீதரன்பிள்ளையின் கோரிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 
சட்டமன்றக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்கிற பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் வழிமொழிந்துள்ளார்.

கேரளத்தில் இதுவரை நாடாளுமன்ற இடங்களைப்பெற இயலாத சங்பரிவார் விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இடங்களும் வாக்குகளும் பெறுவதற்கான இலக்காக கொண்டு சபரிமலையை அரசியல் ஆயுதமாக்கி இருக்கிறது. 

இந்து சமுதாயங்களில் ‘பீதியும், அச்சஉணர்வும், வெறுப்புணர்வும்’ வளர்ப்பது; அதோடு இந்துக்கள் அல்லாதாரோடு பகை ஏற்படுத்துவது; இவற்றின் வழியாக வகுப்புவாத வன்முறைகளுக்கு பாஜக – ஆர்எஸ்எஸ் சக்திகள் களம் அமைக்கின்றன. 


இதற்கு துணை நிற்கும் காங்கிரஸ் யுடிஎப் கட்சிகள் மன்னிக்கமுடியாத குற்றத்தை நாட்டு மக்களுக்கு இழைத்து வருகின்றன. கொடி பிடிக்காமல் போராட்டத்தில் பங்கேற்பது என்கிற முடிவை மாற்றி கொடி பிடித்து போராட்டத்தில் பங்காளிகளாகலாம் என்பது அவர்களது புதிய தீர்மானம்.சபரிமலை குறித்து சரியான மதச்சார்பற்ற நிலைப்பாட்டைகாற்றில் பறக்கவிடும் மாநில காங்கிரசுக்கு காத்திருப்பதுகுஜராத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே ஆகும். 

ஆண்களைப்போல பெண்களுக்கும் சமூகநீதியும் சமவாய்ப்பும் கிடைக்க உதவும் ஒரு மதச்சார்பற்ற இந்தியாதான் தேவை. 

அதற்கான நல்லதொரு நடவடிக்கையாகசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கான தீர்ப்பை பார்க்கும் சிபிஎம் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. 
சபரிமலை வனத்திலும் வெளியிலும் நிலய்கல்லிலும் அணிவகுத்த சங்பரிவாரின் 3 ஆயிரம் கயவர்கள் அல்ல கேரளத்தின் நம்பிக்கையாளர் சமூகம். நம்பிக்கையாளர்களை தொடர்பு கொள்ளாமலே உச்சநீதிமன்ற தீர்ப்பு அமலாக்க வேண்டியதாகும். 

பெண்களின் வழிபாட்டு உரிமையுடன் சமூகநீதியின் பகுதியாகவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோர் புரிந்துகொள்ள வேண்டும். மறுமலர்ச்சி கால அடிப்படைகளை தங்களுக்கு கற்பிக்க பினராயி விஜயனும் கொடியேரியும் வர வேண்டாம்என சென்னித்தலாவும் முல்லப்பள்ளியும் கூறுகின்றனர். 

அவர்கள் பாரபட்சமின்றி பாதைகளில் செல்லவும் கோயில்களுக்கு செல்லவும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் போராட்டங்களில் பங்கு வகித்த டி.கே.மாதவன்,கே.பி.கேசவமேனோன், சி.கேசவன் உள்ளிட்ட தலைவர்களின் பாரம்பரியத்தை கைவிட்டு மறுமலர்ச்சியின் வரலாற்றை பின்னோக்கி செலுத்த முயற்சிப்பது தீங்குவிளைவிக்கும் செயலாகும். 

ஸ்ரீநாராயணகுரு உள்ளிட்டமறுமலர்ச்சி நாயகரும், மன்னத்து பத்மநாபன் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளும் நமக்கு வழிகாட்டிகள்.


சபரிமலையில் காவல்துறையினர் பணியாற்றுவது பல்லாண்டு காலமாக நடந்து வருவது. அங்கு வரும் காவல்துறையினரும், அதிகாரிகளும் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது அட்டூழியம். 

சாதியும் மதமும் பார்த்து காவல்துறையினரை சங்பரிவாரின் ‘சமூக ஊடககயவாளிகள்’ மட்டுமல்ல; ஸ்ரீதரன் பிள்ளை போன்றதலைவர்களே கூறுவது அவமானகரமானது. 
இது மதச்சார்பற்ற கேரளத்திற்கு களங்கமாகும். 
கொடியேரி பாலகிருஷ்ணன்


ஐயப்பனின் நந்தவனமான சபரிமலையில் ஐயப்பனே அழைத்துக்கொண்டதாகக் கூறும்  வாவர் சாமி உண்டு. 
அதுபோல் மாளிகைப்புறத்து அம்மாஉண்டு. 

இங்கு இந்து மரபுகள் பின்பற்றப்படும் கோயில் என்பதற்கு இணையாக அனைத்து சாதிமத பிரிவினரும் தரிசனம் செய்ய அனுமதி உள்ள இடமுமாகும். 

இங்கு அலுவலக பணிகளுக்காக மற்ற அதிகாரிகளுடன் காவல்துறை ஐஜி மனோஜ் ஆப்ரகாம் வந்தது சங்பரிவாரிகளின் கண்களுக்கு கொடிய செயலாகபட்டுள்ளது. 

இதற்கு முன்பும் இதுபோன்ற அதிகாரிகள் சபரிமலைக்கு வந்துள்ளனர். 
இங்கு பணி நிமித்தம் வரும் காவல்துறை அதிகாரிகளின் சாதியையும் மதத்தையும் ஆராய்ச்சி செய்பவர்கள் நாளை சபரிமலையில் தர்மசாஸ்தாவை உறங்க வைக்கும் ‘ஹரிவராசனம்’ பாடியமகத்தான பாடகரின் சாதி மதம் பற்றியும் கூறுவார்கள். 

இந்த போக்கை ஏற்றுக்கொள்ள கல்வியிற் சிறந்த கேரளத்தால் முடியாது. 

காவல்துறையிலும் சமூகத்திலும் சபரிமலையின் பெயரால் வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்தும் போக்கை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும். 
சபரிமலையை மற்றொரு அயோத்தியாக மாற்ற கேரளம் அனுமதிக்காது.
                                                                                                                                                                                                                                                                                                  -கொடியேரி பாலகிருஷ்ணன்
                                                                                                                                                               -கேரள மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
==========================================================================================
ன்று,
அக்டோபர்-30.


  • உலக சிக்கன தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
  • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
===========================================================================================

தமிழ்நாடு அரசு விடுமுறைத் தினங்கள் 
வ. எண்பொது விடுமுறைதேதிகிழமை
1ஆங்கிலப் புத்தாண்டு01.01.2019செவ்வாய்
2பொங்கல்&தமிழ்ப்புத்தாண்டு 15.01.2019செவ்வாய்
3திருவள்ளுவர் தினம்16.01.2019புதன்
4உழவர் திருநாள்17.01.2019வியாழன்
5குடியரசு தினம்26.01.2019சனி
6*வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு 
(வணிக/கூட்டுறவு வங்கிகள்)
01.04.2019திங்கள்
7தெலுங்கு வருடப் பிறப்பு06.04.2019சனி
8டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தினம்14.04.2019ஞாயிறு
9மகாவீர் ஜெயந்தி17.04.2019புதன்
10புனித வெள்ளி19.04.2019வெள்ளி
11மே தினம்01.05.2019புதன்
12ரம்ஜான்05.06.2019புதன்
13பக்ரீத்12.08.2019திங்கள்
14சுதந்திர தினம்15.08.2019வியாழன்
15கிருஷ்ண ஜெயந்தி23.08.2019வெள்ளி
16விநாயகர் சதுர்த்தி02.09.2019திங்கள்
17மொகரம்10.09.2019செவ்வாய்
18காந்தி ஜெயந்தி02.10.2019புதன்
19ஆயுத பூஜை07.10.2019திங்கள்
20விஜய தசமி08.10.2019செவ்வாய்
21தீபாவளி27.10.2019ஞாயிறு
22மிலாதுன் நபி10.11.2019ஞாயிறு
23கிருஸ்துமஸ்25.12.2019புதன்

டிஜிட்டல் திருட்டைத்தடுக்க ....,

நமது கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சேவைகளின் வழியே நுழையும் வைரஸ்கள், மால்வேர்கள் போன்றவையே நமது ரகசியங்கள் கசியவும், திருட்டு நடைபெறவும் காரணமாக இருக்கிறது. 
இவை தவிர நாம் பதி விறக்கம் செய்த அப்ளிகேசன்களும் சந்தா என்ற பெயரில் நம்மை அறியாமலேயே கட்டணத்தை காலி செய்வதும் உண்டு. இவற்றிடம் இருந்து நமது வங்கிக் கணக்கு மற்றும் ரகசியங்களை பாதுகாப்பது எப்படி என்று பார்க்கலாமா?


டிஜிட்டல் இந்தியாவில் நாம், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். 
மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் செலுத்த, ஆன்லைன் ஷாப்பிங், கடைகளில் கார்டு தேய்ப்பது என பல்வேறு பயன்பாடுகளுக்கு டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தைப் பயன்படுத்துகிறோம்.

இவை தவிர இணையத்தில் நமக்கு பிடித்தமான பல்வேறு சேவைகளை கட்டணம் செலுத்தி பெறு கிறோம். 
உதாரணமாக ஒரு பாடலை, படத்தை, விளையாட்டை பதிவிறக்கம் செய்வதை சொல்லலாம். மேலும் சில அப்ளிகேசன்கள், இணைய டி.வி. சேனல்களை ரசிக்கவும் நாம் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

அப்போது நாம் நமது வங்கிக் கணக்கு பற்றிய விவரங்களை பகிர வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுபோன்ற நேரங்களில் பல்வேறு தனியார் அப்ளிகேசன் வழியாகவும் ஏராளமானவர்கள் பணப்பரிமாற்றம் செய்கிறார்கள். 
இந்த நேரங்களில்தான் நமது வங்கிக் கணக்கின் ரகசியங்கள் திருடப்படும் வாய்ப்புகள் உள்ளன.


உங்கள் ஸ்மார்ட்போன்களின் இணைய அப்ளி கேசன்கள் வழியே கட்டணம், சந்தா செலுத்த நேர்ந்தால் ஏமாறாமல் இருக்க இனி இந்த மாற்றங்களை செய்யுங்கள்...

ஆப்பிள் கருவிகளில் ஆப்பிள் ஐ.டி. (முகவரி) மூலமாகத்தான் பல்வேறு சேவைகளில் நுழைய முடியும். ஐ.டியூன் ரசிப்பது, ஆப் ஸ்டோரில் பதிவிறக்குவது போன்ற நேரங்களில் ஐ.டி. கேட்கப்படும். 
அப்போது எந்த சேவைக்காவது கேன்சல் சப்ஸ்கிரைப்சன் (Cancel Subscription) கொடுத்து வெளியேறாவிட்டால், மாதா மாதம் தானாகவே அது கட்டணத்தை பிடிக்கத் தொடங்கும்.

இதை சரியாக கையாள வேண்டுமானால் செட்டிங்ஸ் வழியே Account > View My Account > View Account என்பதை சொடுக்குங்கள். 
பின்னர் அதன் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று சப்ஸ்கிரைப்சன் சேவைகளை பாருங்கள். அதில் தேவையற்றதை மேனேஜ் (Manage) பகுதிக்கு சென்று மாற்றம் செய்யுங்கள். 
தேவையான காலத்திற்கு மட்டும் சந்தா செலுத்தும் வகையிலும், அவசியம் ஏற்பட்டால் அவ்வப்போது சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளவும் தேவையான மாற்றங்களை கொடுத்து வைத்திருங்கள்.

ஆண்ட்ராய்டு போன்களிலும் பிளே ஸ்டோர் அப்ளிகேசனை திறந்து, மேல்புறம் வலது ஓரத்தில் உள்ள சப்ஸ்கிரைப்சன்ஸ் என்ற ஆப்சனில் இதற்கான மாற்றங்களை செய்ய வேண்டும். 
அதில் சென்றால் எந்தெந்த சேவைக்கு சந்தா பிடிக்கப் படுகிறது என்ற பட்டியலை பார்க்கலாம். இதில் தேவையான மாற்றங்களை செய்யாவிட்டால், அது உங்கள் அவசியமான செலவுக்குரிய தொகையை பிடித்தம் செய்ய வாய்ப்பு உண்டு.


இதை செயல்படுத்த Play Store> Subscriptions> Update> சென்று தேவையற்ற அப்ளிகேசனை தேர்வு செய்து Cancel subscription கொடுங்கள். இப்படி கொடுத்துவிட்டால் தொடர்ச்சியாக சந்தா பிடிப்பது நிறுத்தப்பட்டுவிடும். 
மீண்டும் அந்த வசதி தேவைப்பட்டால் புதிய கணக்கு ஆரம்பித்து கட்டணம் செலுத்தி அதை பயன் படுத்த வேண்டும்.

ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தவிர்த்த பிற இயங்குதளங்களில் செயல்படும் போன்களில் இதுபோல, தேவையற்ற சந்தாக்களை நிறுத்த வெவ்வேறு இடங்களில் வசதிகள் உள்ளன. 
உதாரணமாக மைக்ரோசாப்ட் இயங்குதள போன்களில், எல்லா சேவைகளுக்கான பட்டியல் மொத்தமாக காட்டப்படுவதில்லை, யூ-டியூப், கூகுள் டிரைவ், பிரைம் வீடியோ, ஸ்கைப், எக்ஸ்பாக்ஸ் என ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியேதான் செட்டிங்ஸ் சென்று சந்தாவை நிறுத்த வேண்டியிருக்கும்.

பேபால் உள்ளிட்ட பிற அப்ளிகேசன்களில் பேமன்ட்ஸ் என்பதிலும், செட்டிங்ஸ் பகுதியிலும் இதற்கான வழிகள் இருக்கும். கவனமாக அதை படித்து தேவையற்றதை கேன்சல் கொடுக்கவும்.

கணினிகளிலும் இதுபோன்ற மாற்றம் செய்ய முடியும். 
பிளே ஸ்டோரை திறந்து கொண்டு மை சப்ஸ் கிரைப்சனில் Manage பகுதிக்குச் சென்று தேவையான மாற்றங்களை செய்யலாம்.

தேவையற்ற சந்தாக்களை நிறுத்தி உங்கள் பணத்தை மிச்சம்பிடியுங்கள்!