செவ்வாய், 9 அக்டோபர், 2018

நம்முன் எழும் கேள்வி!


 பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 
தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தொடர்பாக வெளியான செய்திக் கட்டுரை தொடர்பாக ஆளுநர் கொடுத்த அழுத்தம் தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்திருப்பதாகத் தருகிறது.

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால். சந்தனக் கடத்தல் மன்னம் வீரப்பனை அதிரடிப்படை நெருங்க முடியாமல் தவித்த நாட்களில் இவரும், இவரது குழுவினரும் அவரை சந்தித்து எடுத்த பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அரசு தூதராக சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கோபால்!
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரின் முறைகேடுகள்,ஊழல் தொடர்பாக ஆதாரப்பூர்வமாக  கட்டுரைகள் ,செய்திகள்  வெளியிட்டதால் பல்வேறு வழக்குகளை,அதிமுகவினரின் தாக்குதல்களை,சிறையை   சந்தித்தவர் நக்கீரன் கோபால்!  

ஜெயலலிதாவை ஹிட்லர் என்று எழுதிய கட்டுரைக்காவும் பல வழக்குகளை அரசு சார்பிலும்,அதிமுக சார்பிலும்,ஜெயலலிதா சார்பிலும் பல அடக்குமுறைகளை சந்தித்தவர் கோபால்.
ஒரு "மாட்டுக்கறி தின்னும் மாமி நான்"என்ற ஜெயலலிதாவின் பழைய பேட்டிக்கட்டுரையை பிரசுரித்ததற்காக கைது ஆனார்.நக்கீரன் அலுவலகம் இருந்த தெருவிற்கு குடிநீர் ,மின்சாரம் துண்டிக்கப்பட்டது.நக்கீரன் அலுவலகம் சூறையாடப்பட்டது.
 தற்போது  அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரை புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் தள்ளியதாக கைதான நிர்மலா தேவி 4 முறை ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்ததாகவும் ,தனது உயிர்க்கு தற்போது ஆபத்து இருப்பதாகவும் நிர்மலாதேவி கொடுத்தப் பேட்டியை  அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டதுதான் இந்தக் கைதுக்கு காரணம் என தெரிகிறது. 
புனேவுக்கு செல்வதற்காக இன்று (அக்டோபர் 9) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் கோபாலை போலீஸார் கைது செய்தனர்.
 ஆளுனரை அரசியல் சாசன பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-நிர்மலாதேவி விவகாரத்தை வெளியிட்டதற்காகத்தான் தேசத்துரோக வழக்கு   124 (a) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாம் .
 124- சட்டப்பிரிவானது, குடியரசு தலைவர் மற்றும் 
ஆளுநரின் நற்பெயருக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்துபவர்களை தேச விரோத வழக்கில் கைது 
செய்ய வழிவகை செய்கிறது. 
மேலும் இந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை 
அபராதத்துடன் தண்டனை விதிக்கவும் முடியும்.
ஆனால் நக்கீரன் கோபால் தனிப்பட்ட முறையில் இவ்விவகாரத்தை ஆளுநர் மீதான களங்கத்திற்காக வெளியிடவில்லை.
கைது செய்யப்பட ஒருவரின் வாக்குமூலத்தைத்தான் தனது புலனாய்வு இதழில் வெளியிட்டுள்ளார்.
இதற்கு மானநஷ்ட வழக்கைத் தொடர்வதுதான் சரியாக இருக்கும் என்பது சட்டத்துறையினரின் கருத்து.
 எதுதான் தேசத்துரோகம் என்றே தெரியவில்லை.
ஆளுநர் ,பிரதமர்கள் செய்யும் முறைகேடுகளை சுட்டிக்காட்டினால் தேச விரோதி,தேசத் துரோகம்,சமூக விரோதி,நக்சலைட் ,மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதும்,நாடெங்கும் இடதுசாரி பத்திரிகையாளர்கள்,எழுத்தாளர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள் இந்த பிரிவுகளில் கைது செய்யப்படுவதும்,தாக்கப்படுவதும் இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லாத பாசிச ஆட்சி நடப்பதாகத்தான் தெரிகிறது.

ஆளுநர் தன மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டால் அதற்கு வழக்குப்பதிவு செய்தாலே போதுமே?உண்மை வெளிவருமே!தன்னை சுத்தமானவராகக் காட்டலாமே.

அதை விடுத்து பணியாற்ற விடாமல் தடுத்ததாக தேசத்துரோக வழக்கை பதிவு செய்வது சரியான முறையா?  என்பதுதான் நம்முன் எழும் கேள்வி.
இந்த பரபரப்பான கைதினால் நிர்மலாதேவி விவகாரத்தில் பன்வாரிலால் புரோஹித் பெயர் அடிபடுவது இதுவரை தெரியாத பாமரர்களுக்கு,வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டப்படுமே தவிர வேறு எதிர்பார்த்த பயன் நிச்சயம் ஆள்வோருக்கு கிட்டாது.
நிர்மலாதேவி