சனி, 6 அக்டோபர், 2018

இது ஐயர்கள் ஆக்கிரமிப்பு

பார்ப்பனியர்களால்  ஆக்கிரமிப்பு
செய்யப்பட்ட அரசு நிலம் 58 ஏக்கர்...//
"ஊழல் என்ற வார்த்தையைக் கேட்டாலே பொங்கி எழும் அறப்போர் இயக்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், students against corruption மற்றும் சேஷாத்திரிகளெல்லாம் எங்கே ஓடிப்போய்விட்டார்கள்?? "

குருமூர்த்தி தலைமையில் பார்ப்பனிய சக்திகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் 58 ஏக்கர்...

போலீஸ்சிடமே திருடிவிட்டு,திருடிய நிலத்தை நீதிமன்றமே சொன்னாலும் கூட தர முடியாது என தில்லாகச் சொல்லமுடிகிறது என்றால்.....
அப்படியொரு தைரியம் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்திற்கு எப்படி ஏற்பட்டது?

தங்களின் 58 ஏக்கர் நிலத்தை சாஸ்த்ரா பல்கலை ஆக்கிரமித்துள்ளது என்று 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேசன் புகார் கொடுத்தது!

மாவட்ட நிர்வாகம் வழக்கு தொடுத்து, அது உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அலைகழிக்கப்பட்டு தீர்ப்பு வந்தும்..


’’இடத்தை காலி செய்வதாவது, நாங்களாவது ‘’என்கிறார்கள் !

மத்திய அரசு சாஸ்த்ராவின் பக்கம் சாய்ந்து நிற்கிறது.அதனால்,மாநில அரசு மவுனம் காக்கிறது.

ஆச்சார அனுஸ்டானங்களை பின்பற்றும் ஒழுக்க சீலர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் பிராமணர்களான சாஸ்த்ரா பல்கலை உரிமையாளர்களின் இந்த ஆக்கிரமிப்பு நியாயம் தானா?

இவ்வளவு பெரிய ஆக்கிரமிப்பை வேறுயாராவது செய்திருந்தால் இப்படி விட்டு வைப்பார்களா? 

இந்த ஆக்கிரமிப்பு நாளை மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகிவிடாதா?

இது குறித்த நீதிமன்றத் தீர்ப்பையும், இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வரும் மக்களின் போராட்டச் செய்திகளையும் இந்தியாவின் முக்கிய  ஊடகங்கள்  மூச்சுவிடாமல்,கப்சிப்பென மூடி மறைக்கின்றன.அவைகள் யாரை நடத்துகிறார்கள் என்பதையும்  நீங்களே கணித்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.
இன்றைய இந்தியாவின் ஊடகங்கள் 90% பார்ப்பனர்கள் வசம்தான்.இந்து,இண்டியன் எக்ஸ்பிரஸ்,தினமணி,தினமலர்,இந்தியாடுடே.அவுட்லுக் ,என்டிடிவி உட்பட.

கடந்த 30 ஆண்டுகளாக சாஸ்த்ரா பல்கலையின் பல்வேறு பராக்கிரமங்களை,சாதனைகளை விலாவாரியாக விதந்தோதி வரும் பற்பல ஊடகங்கள் இப்போது செவிடர்களாக,ஊமைகளாக,
குருடர்களாக திடீரென்று மாறிய விந்தையை வர்ணிக்கும் சக்தியற்று தவிக்கிறேன்.

’’ஆக்கிரமித்த நிலத்தை சாஸ்த்ராவிடமிருந்து மீட்க, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்’’ என்று
மு க ஸ்டாலினைத் தவிர வேறு அரசியல் தலைவர்கள் முணுமுணுக்கக் கூடத் திராணியற்று அமைதி காப்பதை எப்படி புரிந்து கொள்வது...?சென்ற வருடம் மே மாதம் இதே சாஸ்த்ராவில்
ஆர் எஸ் எஸ் முகாம் நடத்தி ஆயுத பயிற்சி வழங்கியதையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? 

அல்லது சாஸ்த்திரங்களின் ஆட்சி நடக்கிறதா?

என்பது உயர் நீதிமன்றத்தின் நிலமீட்பு ஆணை நிறைவேற்றப்படுவதை பொறுத்து தான் உள்ளது.

இப்படி ஒரு பதிவை எழுதினால்,’சாவித்திரி கண்ணன் ஒரு பிராமண துவேசி’ எனப் பாய்ந்து கடித்துக் குதற வந்துவிடுவீர்களே!
                                                                                                                                                                                                                                                               நன்றி: Savithri Kannan
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொந்த நாட்டிலேயே நாங்கள், அகதிகள்!

உத்தரகண்டில், பா.ஜ.,வை சேர்ந்த, திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக உள்ளார். 

இம்மாநிலத்தின் பியாஸ் பகுதியில், சீன எல்லை அருகில், ஏழு கிராமங்களை சேர்ந்த, 400 குடும்பங்கள் வசிக்கின்றனர்.


இந்த கிராமங்களை, லிபுலேக் கணவாய், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.இந்த கிராமங்களை சேர்ந்தோர், லிபுலேக் கணவாய் வழியாக, 50 கி.மீ., துாரம் கடந்து சென்று, அங்குள்ள சந்தையில் பொருட்களை வாங்கி வருவர். 


ஆனால், லிபுலேக் கணவாய் தற்போது மூடப்பட்டுள்ளதால், சில மாதங்களாக, அந்த கிராம மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை.


இதனால் இவர்கள், அண்டை நாடான, நேபாளத்தில் இருந்து, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இப்பொருட்கள், சீனாவில் இருந்து, நேபாள எல்லை கிராம மக்களால் வாங்கப்பட்டு, விற்கப்படுகின்றன.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

"மாநில அரசு, எங்களுக்கு பொது வினியோக முறையில், மாதம், 2 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை அளிக்கிறது; இது, ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. எங்கள் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை.அரசிடம் பலமுறை முறையிட்டும்,மனுக்கள் கொடுத்தும் முதல்வர் கண்டு கொள்ளவே இல்லை.

எனவே, நேபாளத்தில் உள்ள கிராமங்களில் இருந்து, எண்ணெய், உப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை வாங்குகிறோம். நேபாள கிராம மக்கள், அந்த பொருட்களை சீன பகுதியில் இருந்து வாங்கி வருகின்றனர்.


சீன பொருட்கள் விலை குறைவாக உள்ளபோதும், வாகனங்களில் எடுத்து வரும் செலவு அதிகமாக உள்ளது. 


எனவே, சீனாவில், 30 ரூபாய்க்கு கிடைக்கும் உப்பு, எங்களுக்கு, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

சொந்த நாட்டிலேயே நாங்கள், அகதிகள் போல் கஷ்டப்படுகிறோம்."
இவ்வாறு அவர்கள் கூறினர்.
===========================================================================================
ன்று,
அக்டோபர்-06.
  • எகிப்து ராணுவ தினம்
  • ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)
  • முதல் பேசும் படமான தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)
  • பிஜி குடியரசானது(1987)
============================================================================================

இன்டர்போலுக்கு வந்த சோதனை!

இன்டர்போல் தலைவரையே காணோம் ? 

உலக அளவில் போலீஸ் விசாரணைக்கு உதவும்இன்டர்போல் அமைப்பின் தலைவர் மாயமாகி உள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

உலக அளவில் போலீஸ் விசாரணைகளுக்கு உதவும் அமைப்பாக இன்டர்போல் திகழ்ந்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக சீனாவைச் சேர்ந்த மெங் ஹாங்வி கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். சீனாவின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராகவும் இருக்கும் மெங், பிரான்சில் உள்ள லியோனில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். 

இந்நிலையில், மெங் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி, சீனாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லை. இதனால், அவரது மனைவி, பிரான்ஸ் போலீஸிடம் இதுப்பற்றி புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின் அடிப்படையில், பிரான்ஸ் மற்றும் சீன ஆகிய இருநாட்டு போலீஸாரும் மாயமான மெங் ஹாங்வியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

உலகில் எந்த ஒரு விசாரணை என்றாலும், அதற்கு முன்னோடியாக திகழ்வது இன்டர்போல். ஆனால், அதன் தலைவரே மாயமாகி உள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் மற்றும் மிக முக்கியமாக ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பிளேட்லெட் உடலினுள் செலுத்த வேண்டியது அவசியம் 
இதிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற, கோத்ரஜ் HIT மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து, இதற்காக தனி இணையதள பக்கத்தை உருவாக்கி, வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து உள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் உதவியை நாட 7878782020 என்ற எண்ணை அழைக்கலாம்.
ரத்த அணுக்கள் வழங்குவது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு குறிப்பாக, ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடும். ஓரிரு நாட்களில் மிக விரைவாக பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதால் உடலில் பல்வேறு பகுதிகளிலிருந்து ரத்தம் வெளியேற துவங்கும்.
அதிலும் குறிப்பாக ரத்த அணுக்களின் எண்ணிக்கை 20,000 / cu.mm - கும் குறைவாக செல்லும்  போது,  டெங்குவால் பாதிக்கப்பட்டவருக்கு கட்டாயம் பிளேட்லெட்  உடலினுள் செலுத்தவேண்டும். இல்லையென்றால் ஆபத்தில் முடிய வாய்ப்பு உள்ளது.
பிளேட்லெட் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம்...இது சாதாரண ரத்தம் போன்று எளிதில் கிடைப்பதில்லை. ஒருவரிடம் இருந்து பெற்ற பிளேட்லெட்டை 5  நாட்களுக்கு மேல் பாதுகாக்க முடியாது. இதையெல்லாம் மீறி ஒரு சவாலாக டெங்கு பாதிப்பால் ஏற்படும் உயிர் பலியை தடுக்க, அவரசரீதியில் பிளேட்லெட்டை வழங்குகிறது கோத்ரஜ் HIT.
மக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உயிரை பாதுகாக்கவும், இதற்கென பிரத்யேகமாக பிளேட்லெட் வழங்க, தன்னார்வலர்கள் கொண்ட ஒரு இணையதளம் இயங்கி வருகிறது.
"பிளேட்லெட்" பெற உதவி எண்: 7878782020
கோத்ரெஜ் HIT  மற்றும் அப்போலோ மருத்துவமனை இணைந்து உருவாக்கிய பிளேட்லெட் டோனர்ஸ் கொண்ட இணையதள பக்கத்தில் இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேலான  தன்னார்வலர்கள் உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தற்போது அவசரமாக பிளேட்லெட் தேவைப்படுபவர்களின் அவசர அழைப்புக்கு 7878782020 என்ற எண்ணை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த முறை சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய முக்கிய பெருநகரங்களில் அமலில் உள்ளது.
தேவைப்படுபவர்கள் இந்த எண்ணை அழைத்து முன் பதிவு செய்து கொள்ளலாம். டெங்குவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் உயிர் காக்க தாயார? பிளேட்லெட் வழங்க இந்த இணைய பக்கத்தை கிளிக் செய்யுங்க...! http://m.godrejhit.com/trackthebitedesktop/