பறக்கப்போவது யார் (வி) மானம்?
தாமிரபரணி புஷ்கரம் உண்மை என்ன?
144 ஆண்டுக்குப் பின்னால் தாமிரபரணி புஷ்கரம் நடப்பதாகச் செய்திகளில் சொல்கிறார்கள்.
ஆனால் அப்படி ஒரு நிகழ்வே அப்போது நடந்ததாக விபரம் இல்லை என்கிறது நீதிமன்றத்தில் அரசு தரப்பு.
ஒரு வரலாற்று உண்மையைச் சொல்லட்டுமா?
வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது.
வற்றாத தாமிரபரணி நதி இதுவரை இரண்டு முறை பொதிகை முதல் புன்னக்காயல் வரை வற்றியிருக்கிறது.
அது முற்றிலுமாக வற்றிய வருடம் 144 ஆண்டுகளுக்கு முன்பு தான்.
இந்தியாவையே புரட்டிப்போட்டப் பஞ்சம் ஏற்பட்ட 1876 தான். 1872 ல் தாமிரபரணி முற்றிலுமாக வற்றி மீண்டும் அது இயல்புக்கு வந்தது 1892 ல் தான்.
அதன் பிறகு மீண்டும் 1885 மற்றும் 1889 ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. 1872 பஞ்சத்தை ஒட்டி தான் தென் மாவட்டத்தினர் பஞ்சம் பிழைக்க மாட்டுவண்டிகள் கட்டிக்கொண்டு மும்பை போய் சேர்ந்தனர். அவர்கள் போய் தங்கிய இடம் தான் இன்றைய தாராவி.
1872 முதல் 1890 வரை பஞ்சத்தால் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுமையும் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தனர்.
1876 பஞ்சம் என்று கூகுள் செய்து பாருங்கள்.
1876 பஞ்சம் என்று கூகுள் செய்து பாருங்கள்.
144 வருடங்களுக்கு முன்னால் தண்ணீரே ஓடாத தாமிரபரணியில் புஷ்கர விழா எப்படி நடத்தப்பட்டது?
மேலும் இந்த குறிப்பிட்ட ஆண்டுகளில், அதுவரை இந்து கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படாத நாடார் சமூகத்தினர் தமிழகத்தில் பெரும் ஆலய நுழைவுப் போராட்டங்களை, நடத்திய வருடங்களும் கூட.
1872 ல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள்ளும்,
1874 ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளும்,
1876 ல் திருத்தங்கல் கோவிலிலும்,
1897 ல் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும்,
1899 ல் சிவகாசி காசி விஸ்வநாதர் கோவிலிலும் ஆலயப் பிரவேசப் பெரும் போராட்டங்களை நாடார்கள் நடத்தினர்.

நாடார்கள் ஆலயம் நுழைவதால் தான் பெரும் பஞ்சங்கள் ஏற்படுகிறது என சனாதனவாதிகள் பிரச்சாரம் செய்த காலமும் இதுதான்.
இதையொட்டியே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள 1899 சிவகாசி கலவரம் நடந்தது.
இதையொட்டியே வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள 1899 சிவகாசி கலவரம் நடந்தது.
இந்தக் கலவரத்தையொட்டி அங்கிருந்து வெளியேறிய நாடார்கள் தாங்கள் புதிதாகச் சென்று குடியேறிய ஊர்களில் சிவகாசி நாடார் உறவின்முறை என்று பெயர் வைத்திருப்பார்கள்.
பார்ப்பனிய அடக்குதலுக்கு எதிராக போராடிய சமூகம் நாடார் சமூகம். அதன் பெரும்பான்மையான தலைவர்களே இன்று முன்னின்று இல்லாத ஒன்றைச் சொல்கிறார்கள்.
ஒரு பிரிவினர் நம்பிக்கை என்ற பெயரில் வழிபாடு நடத்துவதில் ஆட்சேபனை யாருக்கும் இல்லை. அதற்கு மத்திய அரசு இவ்வளவு மெனக்கெடுவது அரசியல் நோக்கமின்றி வேறென்ன?
பீஜேபீ கட்சியின் அரசியல் நோக்கத்திற்காக எது வேண்டுமானாலும் இட்டுக்கட்டிய பொய்யைப் பரப்புவதும், மக்களை வேறுபடுத்துவதும் சரியா?
=======================================================================================
பறக்கப்போவது யார் (வி)மானம்?
'ரபேல்' போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை வெளியிட, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
இந்திய விமானப் படைக்கு, 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக, ஐரோப்பிய நாடான, பிரான்சுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர் . இதைத் தொடர்ந்து, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யஉத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவரது மனுவில் ,
"ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக, பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்களை வெளியிட, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கடந்த, காங்கிரஸ் ஆட்சியிலும், தற்போதும் நிர்ணயிக்கப்பட்டுள்ள, விலைகளின் ஒப்பீடுகளையும் தாக்கல் செய்ய, உத்தரவிட வேண்டும்.
பிரான்சின், 'டசால்ட்' நிறுவனம், இந்த போர் விமானங்களை தயாரிக்க, தொழிலதிபர்அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துக்கு அளித்துள்ள ஒப்பந்தம் தொடர்பான தகவல்களையும், தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
திட்டமிட்டபடி, ஹாங்காங்கில் அல்போன்ஸோவை சந்தித்த நிரவ், அவரிடம், போலி வைரங்கள் பதித்த இரு மோதிரங்களை, 1.4 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளான்.

இந்த தகவல்கள் அனைத்தையும், சீலிட்ட உறை யில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்." இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.கே. கவுல், கே.எம். ஜோசப் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது .
இந்த மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், எஸ்.கே. கவுல், கே.எம். ஜோசப் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது .
தீபக் மிஸ்ரா இல்லாத உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் ரபேல் விவகாரத்தில் எப்படி அமையப்போகிறது என்பதே எதிர்க்கட்சியினர் எதிர்பார்ப்பு.
உலகம் முழுக்க பரவலாக அறியப்பட்ட மோடி அரசின் இந்த ஊழல் முறைகேட்டை எத்தனை நாள்தான் ராணுவ ரகசியம் என்பார்கள்.?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஞாபகம் வருதே!"
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஞாபகம் வருதே!"
=======================================================================================
இன்று,
அக்டோபர்-09.
- தோழர் சே குவேரா நினைவு தினம் (1967)
- டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)
- தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)
- உகாண்டா விடுதலை தினம்(1962)
- பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)
=======================================================================================
திருட்டு வியாபாரி மோடி?
கடன் மோசடி செய்து, வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி, கனடா நாட்டை சேர்ந்த ஒருவருக்கு, போலி வைரங்கள் பொருத்திய மோதிரங்களை, 1.4 கோடி ரூபாய்க்கு விற்று, மோசடி செய்தது அம்பலமாகி உள்ளது.
நீரவ் மோடியை வைர வியாபாரி என்பதை வீட்டா திட்டமிட்டு கொள்ளையடிக்கும் திருடன் என்பதே சரியாகும்.
இந்தியாவில் ஆட்சியாளர்கள் ,அதிகாரிகள் ஆதரவுடன் 13 ஆயிரத்து,600 கோடி ரூபாய்களை கொள்ளையடித்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றவன் தனது திருட்டு வேலையை அங்கும் தொடர்ந்துதான் வருகிறான்.
இதிலிருந்தே அவன் வேலையே மற்றவர்களை மோசடி செய்யும் திருட்டு வியாபாரி என்பது புரிகிறது.
இந்த திருடன்தான் தப்பியோடிய பின்னரும் வெளிநாட்டில் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டவன்.
இப்போது கனடாவை சேர்ந்த அல்போன்ஸோ என்பவரிடம் கண்ணாடி கற்களை வைரம் என்று கூறி 1கோடி 40 லட்சம் ரூபாய்களுக்கு கொடுத்து மோசடி செய்துள்ளான்.இதனால் அல்போன்ஸோ ஏமாற்றுக்காரர் என்ற பட்டத்துடன் காதலியை மனம் செய்து கொள்வதும் போய் புலம்பித்திரிகிறார்.
நீரவ் மோடி தனது திருவிளையாடல் திருட்டுக்களை வெளிநாடுகளிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறான்.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், நிரவ் மோடியும், அவனது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைவருமான, மெஹுல் சோக்சியும், 13 ஆயிரத்து,600 கோடி ரூபாய் மோசடி செய்து, குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பியோடினர்.
அவர்களைகைது செய்து, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் செயல்படும், தன்னாட்சி பிரதேசமான, ஹாங்காங்கில் இருந்து வெளியாகும், 'சவுத் சீனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
"கனடா நாட்டை சேர்ந்த அல்போன்ஸோ என்பவர், 2012ல், நிரவ் மோடியை, அமெரிக்காவில், மலிபு நகரில் சந்தித்துள்ளார். அவரிடம், நிரவ் மோடி நட்பாக பேசியுள்ளான்.
இந்த நட்பு அவ்வப்போது, இ - மெயில் மூலம், தகவல் பரிமாற்றமாக தொடர்ந்துள்ளது.
இதற்கிடையே, பெண் ஒருவரை காதலித்து வந்த அல்போன்ஸோ, தங்கள் திருமணத்துக்கு வைர மோதிரங்கள் தேவை என, இ - மெயில் மூலம், நிரவ் மோடிக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பெண் ஒருவரை காதலித்து வந்த அல்போன்ஸோ, தங்கள் திருமணத்துக்கு வைர மோதிரங்கள் தேவை என, இ - மெயில் மூலம், நிரவ் மோடிக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், நிரவுக்கு எதிராக மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள விபரங்கள் தெரியாத அல்போன்ஸோ, ஹாங்காங்கில் அவரை சந்திக்க முடிவு செய்தார்.
திட்டமிட்டபடி, ஹாங்காங்கில் அல்போன்ஸோவை சந்தித்த நிரவ், அவரிடம், போலி வைரங்கள் பதித்த இரு மோதிரங்களை, 1.4 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளான்.
அந்த வைரங்கள் போலி என, பின் தெரிய வந்ததால், அல்போன்ஸோவின் திருமணம் நின்று போனது. அதைத் தொடர்ந்து, அல்போன்ஸோவிடம் இருந்து, அவரது காதலி பிரிந்து விட்டார்.
இதனால், அல்போன்ஸோ கடும் மன உளைச்சலில் .கவலையில் உள்ளார். "
இவ்வாறு, அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.