வில்லன்அக்சய் குமாரா?தமிழ் ராக்கர்சா?

ஸ்டீபன் ஹாக்கிங் இந்த நூற்றாண்டின் இணையற்ற அறிவியலாளர்.
கடவுள் இல்லை என்பதை பகிரங்கமாக ஆய்வின் மூலம் அறிவித்தது முதல் "கடவுள் துகள்"ஹிக் போஸான் கண்டு பிடிப்பு வரை இவரின் பங்கு மகத்தானது.
யானை  இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிக்கு ஏற்ற வகையில் பிரபல அறிவியல் 
ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 
பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதத்தில் தன் 76-வது வயதில் இறந்தார். 
எழுந்து நடக்க முடியாத ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வீல்சேரில்தான் கழிந்தது. சிறுவயதிலேயே நரம்பு நோயால் பாதிக்கப்பட்டதால் அவரால் நடக்க முடியாமல் போனது, கைகள் இயக்கம், பேச்சு போன்றவை பாதிக்கப்பட்டன. இதனால் அவரின் வாழ்க்கை வீல் சேரிலேயே கழிந்தது. எனினும், சோர்வடைந்து விடாத ஸ்டீபன் ஹாங்கிங் இயற்பியல், வானியல், கோள்கள், கருந்துளை ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வந்தார். 
ஸ்டீபன் ஹாங்கிங் மறைந்த பிறகு அவர் பயன்படுத்திய 22 பொருள்களை நியூயார்க் நகரைச் சேர்ந்த 'கிறிஸ்டி ' என்ற அமைப்பு ஏலத்தில் விட்டது. 1965-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டத்துக்காக ஸ்டீபன் ஹாங்கிங் கைப்பட எழுதிய 117 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை 5 கோடியே 55 லட்சத்துக்கு ஏலம் போனது. நோயால் பாதிக்கப்படுவதற்கு முன் ஸ்டீபன் ஹாக்கிங் கைப்பட எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை இது. 
ஸ்டீபன் ஹாங்கிங்கை வாழ்நாள் முழுவதும் தாங்கி வந்த பிரசித்திபெற்ற நவீன வசதிகள் கொண்ட சக்கர நாற்காலி ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. 'ஹாக்கிங்கின் வீல் சேர் உடல் குறைப்பாட்டின் அடையாளம் அல்ல... நவீன அறிவியல்  அடையாளம் ' என்று சொல்வார்கள். ஸ்டீபன் ஹாக்கிங் அறக்கட்டளை உருவாக்குவதற்காக அவர் பயன்படுத்திய பொருள்கள் ஏலத்தில் விடப்பட்டன. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 வாட்ஸ் ஆப்பில்  ஸ்டிக்கர் செய்வது எப்படி?

செல்போன் சேட்டிங் ஆப்களில் தற்போது பிரபலமாக இருக்கும் வாட்ஸ் ஆப்பில் புதிய வரவு ஸ்டிக்கர்ஸ். அதில் உங்கள் முகத்தையும் வைக்கலாம்.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கட்டி இழுக்கும் பிரபலமான ஆப் வாட்ஸ் ஆப் தான். இந்தியர்களால் தொடங்கப்பட்ட இந்த ஆப், சில வருடங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் விலைக்கு வாங்கியது. முகநூல் நிர்வாகத்தில் எப்போது கை மாறியதோ அன்று முதல் ஏதேதோ புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், இம்மாதத்தின் புதிய வரவு தான் வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்ஸ் (Whatsapp stickers). ஸ்மைலி, ஜிஃப் போலவே இந்த ஸ்டிக்கர்ஸும் ஒரு டிரெண்டாக மாறிவிட்டது. ஃபேஸ்புக் மெச்சன்ஜர், ஹைக் செயலிகளில் இருப்பது போலவே இனி வாட்ஸ் ஆப் உபயோகிப்பவர்களும் ஸ்டிக்கர்ஸ் பயன்படுத்தலாம்.

முதலில் ஸ்டிக்கர்ஸ் கேலரியில், வித விதமாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டிக்கர்ஸ் கொடுக்கப்பட்டது. அவற்றை டவுன்லோடு செய்து நீங்கள் உபயோகிக்கலாம். ஆனால் இப்போது உங்களுக்காகவே ஒரு புதிய ஆப்ஷன் வந்துள்ளது.

இனி அவர்கள் கொடுக்கும் ஸ்டிக்கர்ஸ் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் முகத்தை கொண்டு கூட வெவ்வேறு முகபாவனைகளை வைத்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம். ஆனால் அதை செய்வது எப்படி? 

  • கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ‘ஸ்டிக்கர் மேக்கர் ஃபார் வாட்ஸ் ஆப் (Sticker maker for WhatsApp) என்ற செயலியை டவுன்லோடு செய்யவும்.
  • பின்னர், அதில் ஸ்டிக்கர் உருவாக்க ஒரு ஆப்ஷன் இருக்கும் (Create a new sticker pack). அதை க்ளிக் செய்யவும்.
  • இது உங்களை ஒரு பேனலுக்கு அழைத்துச் செல்லும். அதில் இந்த ஸ்டிக்கர்ஸ் பேக்கஜுக்கு ஒரு பெயர் வைக்க சொல்லும். மானே தேனே என்று மனம் போல் பெயர் வைத்துக்கொள்ளலாம். இதில் நீங்கள் உங்கள் முகம் கொண்ட 30 வகை ஸ்டிக்கர்ஸ் உருவாக்கலாம்.
  • பின்பு அது ஒரு ஆப்ஷன் போல தென்படும். என்னடா இது? ஸ்டிக்கர் போல காண்பிக்கவில்லையே என்று டென்ஷன் ஆக வேண்டாம். அது ஸ்டிக்கர் ஆப்ஷன் தான்.
  • இப்போது ஆட் ஸ்டிக்கர் என்று கொடுங்கள். பின்பு உங்களுக்கு என்ன புகைப்படம் வேண்டுமோ அதை க்ளிக் செய்யுங்கள்.
  • அந்த புகைப்படத்திற்கு கீழே உள்ள எடிட்டிங் வசதி கொண்டு பேக்ரவுண்டு அனைத்தையும் தூக்கிவிடுங்கள்.
  • இறுதியாக ஆட் டூ ஸ்டிக்கர் என்று கொடுங்கள். அவ்வளவு தான் ஸ்டிக்கர்ஸ் ரெடி.
  • இனி உங்களை,உங்களுக்குப்  பிடித்தமானவர்கள் எல்லோரையும் ஸ்டிக்கரில் கொண்டுவந்து பகிர்ந்து அசத்துங்கள்.
=================================================================================================
ன்று,
நவம்பர்-10.

  • ஏகே 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கையில் கலாஷ்னிகோவ் பிறந்த தினம்(1919)

  • நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1951)

  • சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு லூனாகோட்கொண்டு சென்றது(1970)
மிக்கையில் கலாஷ்னிகோவ் 
*1947ம் ஆண்டு சோவியத் நாட்டின் தளபதி மிகைல் டிமோஃபெய்விச் கலாஷ்னிக்கோவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கியே ஏ.கே.47 ஆகும். 1948ம் ஆண்டு சோவியத் ரஷ்ய ராணுவத்திற்கான பயிற்சிக்கு வழங்கப்பட்டது.

*இதன் எடை 4.8 கிலோ. துடைத்து சுத்தம் செய்வதும், கழற்றி திரும்பவும் அசெம்பிள் செய்வதும் வெகு சுலபம். எந்த தட்பவெப்பத்திலும் மக்கர் செய்யாது. ஒரு நிமிடத்தில் 600 ரவுண்டு சுடலாம்.

இரண்டரை நொடிகளில் அடுத்த ரவுண்டு குண்டுகளை லோட் செய்துவிடலாம். 800 மீட்டர் தூரத்தில் இருக்கும் எதிரியையும் எளிதில் சுடுவது சாத்தியம். கற்றுக்கொள்ள எளிது. இதனால் உலகின் பல நாடுகளின் ராணுவங்களும் போராளிக் குழுக்களும் போட்டி போட்டுக்கொண்டு அட்வான்ஸ் புக்கிங் செய்து வாங்க, விற்பனையில் நம்பர் 1 ஆனது ஏ.கே.47.

*இதுவரை உலகெங்கும் 10 கோடி ஏ.கே.47 துப்பாக்கிகள் விற்றுள்ளன. சீனாவும் இன்ன பிற நாடுகளும் இதுபோலவே உருவாக்கி விற்ற போலிகள் எண்ணிக்கையைக் கூட்டினால் இன்னும் பெரிய நம்பர் வரும். உலகின் பல நாடுகளில் கலாஷ்னிக்கோவ் நிறுவனத்திடம் லைசென்ஸ் பெற்று 30 நிறுவனங்கள் 200 வகையான துப்பாக்கிகளைத் தயாரிக்கின்றன. என்றாலும் போலிகளால் இந்த தயாரிப்புகளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.

*அதிகாரபூர்வமாக ரஷ்யா இந்தியாவிற்கு ஏ.கே. 47 துப்பாக்கிகளை விற்பதை நிறுத்திவிட்ட நிலையில், கலாஷ்னிக்கோவ் நிறுவனத்திடம் இந்திய நிறுவனங்கள் ஏ.கே.47 துப்பாக்கியினை இந்தியாவிலேயே தயாரிக்க கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது இதன் பெருமைக்கு சர்டிஃபிகேட்தானே! 

*2014 மே மாதம் ப்ரஸ்ஸல்சில் நடந்த தாக்குதலில் 4, 2015 ஜனவரியில் பாரிஸில் நடந்த தாக்குதலில் 17, பிப்ரவரியில் கோபன்ஹேகனில் நடந்த தாக்குதலில் 2, மார்ச்சில் துனீசில் நடந்த தாக்குதலில் 22, ஜூனில் நடந்த சூசே பகுதி தாக்குதலில் 38, நவம்பரில் பாரிஸில் நடந்த தாக்குதலில் 130  என உயிரிழப்புகளுக்கு தீவிரவாதிகள் பயன்படுத்திய ஏ.கே. 47 துப்பாக்கிகளே காரணம்.  

2013ம் ஆண்டு கலாஷ்னிக்கோவ் நிறுவன ஆயுத வணிகத்தில் ஏ.கே. 47 துப்பாக்கியின் பங்கு மட்டும் 40 சதவிகிதமாகும். 2014ல் அமெரிக்காவில் விற்பனையை விரிவுபடுத்த முயற்சித்தபோது பொருளாதாரத் தடை வந்தது. இப்போது ரஷ்யாவில் இதனை திரும்ப அறிமுகம் செய்து, ‘அமைதிக்கான ஆயுதம் ஏ.கே. 47’ என விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

 2016ம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் தொடங்கும் 60 கடைகளில் ராணுவ பாணி உடைகள் கூடவே துப்பாக்கிகளையும் விற்கும் யோசனையிலிருக்கிறது கலாஷ்னிக்கோவ் நிறுவனம். வேட்டைக்காரர்கள், பொழுதுபோக்கு நபர்களுக்கு என பிரத்யேகமாக  துப்பாக்கிகளை விற்கப்போகிறார்கள். இதோடு மோட்டார் படகுகள், கண்காணிப்பு ட்ரோன் விமான நிறுவனங்களை வாங்கவும் உத்தேசித்துள்ளது.

எரிபொருளுக்கான விலை, அமெரிக்க நிர்ப்பந்தம் உள்ளிட்டவை ரஷ்ய கரன்சியான ரூபிளின் மதிப்பைக்  குறைத்துவிட்ட நிலையில், இறக்குமதியாகும் நவீன துப்பாக்கிகளின் கடுமையான போட்டியையும் ஏ.கே. 47 எதிர்கொண்டுள்ளது. ஆனாலும் இத்தாலியின் பெரெட்டா, ஜெர்மனியின் சார், அமெரிக்காவின் வின்செஸ்டர் போன்ற துப்பாக்கிகளைவிடவும் கலாஷ்னிக்கோவ் துப்பாக்கிகள், ரைபிள்களுக்கு ஏக கிராக்கி உள்ளது.

மொஸாம்பிக் நாட்டின் தேசியக்கொடியிலும், ஜிம்பாப்வே, பர்கினோ ஃபாஸோ, கிழக்கு டிமோர் உள்ளிட்ட நாடுகளின் ராணுவ உடைகளிலும் ஏ.கே. 47 படம் அச்சிடப்பட்டுள்ளது. சில ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு ‘கலாஷ்’ என பெயர் வைக்கிறார்கள்.

1965ம் ஆண்டு ஹங்கேரி நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகத்தை நிகழ்த்திய ஜோசப் டிபோர் ஃபேஜெஸ் என்பவர்தான் முதன்முதலில் ஏ.கே. 47 துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு போஸ் தந்து பிரபலமாக்கிய புரட்சியாளர் ஆவார். இராக் அதிபர் சதாம் உசேன் கலெக்ஷனில் இருந்து அமெரிக்க துருப்புகள் கைப்பற்றிய ஒரு பொருள் மிகவும் மதிப்புமிக்கது. அது, தங்க மெருகிட்ட ஏ.கே. 47 துப்பாக்கி!

வோட்கா, அப்சிந்த் (கசப்புசுவையுடையது), எலுமிச்சை, லவங்கப்பட்டை, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானத்தின் பெயர் கலாஷ்னிக்கோவ். இப்பெயரில் விற்கும் வோட்கா பான பாட்டிலின் வடிவமைப்பே ஏ.கே. 47 துப்பாக்கியின் வடிவத்தை ஒத்ததுதான். சைலன்ஸையே சத்தமாக சொல்லவேண்டிய தேசத்திலும் துப்பாக்கி பேசத் தொடங்கினால் வருகிற அமைதி தாங்க முடியாத ஒன்றுதான்.
=================================================================================================
வில்லன்அக்சய் குமாரா?தமிழ் ராக்கர்சா?
தீபாவளியன்று வெளியான விஜய்யின் சர்கார் படத்தை ஹெச்.டி. தரத்தில் ரிலீஸ் செய்வோம் என்று அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே சவால் விட்டது.
அதற்காக நீதிமன்றம் சென்று, இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் தடை வாங்கியது. என்னவோ மற்றப்படங்களை நீதிமன்ற ஒப்புதலுடன்தான் தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுவதுபோல் எண்ணம்.
நீதிமன்றம் தடையை கொடுத்து விட்டது.
ஆனால் இந்தியாவில் சர்கார் ரிலீஸ் ஆன அதே நாளன்று, தனது தளத்திலும் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதன் மூலம் நீதிமன்றமாவது  என்பது ஹைகோர்ட்டாவது   இரண்டும் ஒன்றுதான் என்று எச்ச.ராஜா பாணியில் சொல்லிவிட்டது.
வில்லன் அகஷ குமாரா?தமிழ் ராக்கர்சா?

சர்கார்  விவகாரம் வேறுவடிவில் போய்க்கொண்டிருக்க தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
வரும்  29ம் தேதி வெளியாகவுள்ள நடிகர்  ரஜினிகாந்தின் 2.0 படமும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “#2Point0 Coming Soon in Tamil Rockers’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்து லைக்கா நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று கூறியிருப்பது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பு செலவு 500 கோடிகள் எனது திட்டமிடப்பட்டு 600 கோடிகளை முழுங்கி விட்டது என்ற நிலையில் இந்த எச்சரிக்கை தயாரிப்பாளரை அதிரவைத்துள்ளது.
இப்படி முதலிலேயே அறிவிக்காமல் இருந்தால் படம் முதல் வாரம் ஒடி தப்பிக்கும் 600 கோடிகளில் பாதியாவது ஒப்பெறும் என்ற கனவில் இருந்த லைக்கா சுபாஸ்கரனுக்கு இது உண்மையிலேயே பேரிடி.
ஆனால், என்னதான் தமிழ் ராக்கர்ஸ் படங்களை இப்படி திருட்டுத் தனமாக வெளியிட்டாலும், நல்ல படமாக இருந்தால், ரசிகர்கள் அதனை தியேட்டரில் வந்து பார்ப்பதை யாராலும் தடுக்க முடியாது என்து  உண்மை.3டிஒளி,4டி ஒலி என்பதை அதற்கான அமைப்புகள் உள்ளத் திரையரங்குகளில் பார்த்தால்தான் ரசிக்க முடியும்.
அதை திருட்டுத்தனமாக இனையத்தில் பார்த்தால் நன்றாக இராது.ஆனால் ..1000,2000 என்று பெட்ரோல் விலை விற்கும் திரையரங்கக் கட்டணம் ,அனைத்துத் திரையரங்கில் இல்லாத புதிய ஒளிஒலி வசதி என்பது தமிழ் ராக்கர்ஸ் வெளியீடே பரவாயில்லை என்றாக்கிவிடும் பயம் உள்ளதையம் மறக்கக்  கூடாது.
ஆனால் 50,60 கோடிகளில் படங்களைத்தயாரித்து அது நன்றாக ஓடோடியும் கூட லாபம் பார்க்க முடியவில்லை என்று புலம்பும்தயாரிப்பவர்கள் இடையே பத்துப் படங்களைத் தயாரிக்கும்  600 கோடிகளை ஒரே படத்தில் வாரியிறைத்தவர் நிலையை எண்ணினால் .......?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?