"உங்கள் டூத் பேஸ்ட்டில் புற்று நோய் இருக்கா?
உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா,கரி இருக்கா,புளி இருக்கா"
என்று கேட்டு விளமபரத்தால் தாக்கிய
கோல்கேட் பற்பசையில் புற்றுநோயை உருவாக்கும் நச்சு ரசாயனப் பொருள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோல்கேட்டில் ட்ரீகுளோசா என்ற நச்சு ரசாயனப் பொருள் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ரசாயன நச்சுயியல் ஆய்வு (Chemical Research in Toxicology) தெரிவித்துள்ளது.
கோல்கேட் பற்பசையைப் பயன்படுத்தாத வீடுகளே குறைவு. உலகமெங்கும் பயன்படுத்தப்படும் கோல்கேட் பற்பசையை அமெரிக்க ஆய்வு வெளியீட்டுக்குப்பின் உபயோகிக்க வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது.
ரசாயன நச்சுயியல் ஆய்வுநிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை வேர்ல்டு ஹெல்த் கேர் என்ற இணைய இதழ் வெளியிடப்பட்டுள்ளது.
வேர்ல்டு ஹெல்த் கேர் இணைய இதழில் கூறியுள்ளதாவது:
கோல்கேட் பற்பசையில் ட்ரீகுளோசா என்ற நச்சு ரசாயனப் பொருள் உள்ளது.
இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க்கான செல்களை மிக அதிகமான அளவில் உற்பத்தி செய்யும். உடல் நலத்துக்கு ட்ரீகுளோசா கடுமையான தீங்கு விளைவிக்கும்.
இந்த ஆய்வு மட்டுமல்ல; ஏற்கெனவே பற்பசைகள் தொடர்பாக மேற்கொண்ட பல ஆய்வுகளும் இதே முடிவுகளுக்கே வந்துள்ளன.
ட்ரீகுளோசா என்ற ரசாயனப் பொருள் தோலை ஊடுருவிச் சென்று நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும்.
2008இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சோதனை செய்யப்பட்ட 2517 பேரில் 75 விழுக்காட்டினரின் சிறுநீரில் ட்ரீகுளோசா ரசாயனப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ட்ரீகுளோசா ரசாயனமானது சலவையகங்களில் டிடர்ஜெண்டாகவும், கைகளைக் கழுவும்போது பயன்படுத்தப்படும் ரசாயனமாகவும், பயன்படுத்தப்படுகிறது.
இது மிகவும் அபாயகரமானது.
நேரடியாக ரத்தத்தில் ஊடுருவிச்சென்று நாளமில்லாச் சுரப்பில் தலையிட்டு உடலின் சம நிலையைச் சீர்குலைத்து விடும்.
பல்லுக்கு வெண்மையைத்தருவதற்காக துணிகள்,கைகளை சுத்தம் செய்யும் இந்த ட்ரீகுளோசா சேர்க்கப்படுகிறது.இத்துடன் பல்வலிவரும் காலங்களில் ஈறுகளை மரத்துப்போகசெய்யும் ரசாயனமும் சேர்க்கப்படுகிறது.இதுவும் உயிரணுக்களை கொல்லும் ஆபத்தான பொருள்தான்.
பல்லுக்கு வெண்மையைத்தருவதற்காக துணிகள்,கைகளை சுத்தம் செய்யும் இந்த ட்ரீகுளோசா சேர்க்கப்படுகிறது.இத்துடன் பல்வலிவரும் காலங்களில் ஈறுகளை மரத்துப்போகசெய்யும் ரசாயனமும் சேர்க்கப்படுகிறது.இதுவும் உயிரணுக்களை கொல்லும் ஆபத்தான பொருள்தான்.
இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வழமை போல் கோல்கேட் நிறுவனம் இதை மறுத்துள்ளது.
கோல்கேட் பற்பசையினால் எந்தப் பாதிப்பும் நேராது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.பின்னே ஆமாம் ,நாங்கள் உபயோகிக்கும் ரசாயனம் புற்றுநோய்க்கான காரணி என்றா அறிக்கை வெளியிடும்.
கோல்கேட் பற்பசையினால் எந்தப் பாதிப்பும் நேராது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.பின்னே ஆமாம் ,நாங்கள் உபயோகிக்கும் ரசாயனம் புற்றுநோய்க்கான காரணி என்றா அறிக்கை வெளியிடும்.
ஆங்கில பற்பசைத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எல்லா ஊடகங்களிலும் நம்மைத்தாக்கும் விளம்பர மாயையில் இருந்து நாம் விடுபட்டு பழைய "கோபால் பற்பொடி,விக்கோ வஜ்ரதந்தி,டாபர் சிகப்பு, K.P.நம்பூதிரி களுக்கே மாறிவிடுவது நம் பற்களுக்கு மட்டுமல்ல உயிருக்கும்,உடலுக்குமே நல்லது.!
பல் அதிகமாக வலிக்கும் வேளை "பயோரியா" பல்பொடிக்கு மாறலாம்.
வெளிவருகிற ஆய்வுகளை பார்க்கையில் நாம் பழைய கரித்தூள்,சாம்பல் ,உப்புக்கே மாற்றிடலாம்.
அவர்களே விளம்பரத்தில் "உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா,கரி இருக்கா,புளி இருக்கா"ன்னுதானே கேட்கிறார்கள்?
இப்போது நாம் ஒவ்வொரு பற்பசை தயாரிப்பாரர்களிடமும் கேட்க வேண்டும்.
"உங்கள் டூத் பேஸ்ட்டில் புற்று நோய் இருக்கானு?
இது 2 நாளில் புயலாக வலுவடையவுள்ளது.தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலையக தீபகற்ப பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த 8-ஆம் தேதி உருவாகியது.
இது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வெள்ளிக் கிழமை நிலவியது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும், இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை புயலாக மாறியது.
இதற்கு கஜா (யானை) புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தபெயரை இலங்கை பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் 930 கி.மீ தொலைவில் கஜா புயல் உள் ளது.
வருகிற 15ஆம் தேதி முற் பகல் கடலூர் மற்றும் சிறீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது 80 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14ஆம் தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும்.
சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தற்போது 13 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.
இது பின்னர் மாறுபடலாம்’’ மேலும் 15ஆம் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள் ளது .
தமிழகம் முழுவதும் சிகப்பு எச்சரிக்கை விடப்படவில்லை என்றும் வடதமிழகத்தில் மட்டும் விடப்பட்டுள்ளது .
முன்னதாக, புயல் எச்சரிக்கையையடுத்து தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், கடலூர், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பதிவில் , தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும். மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
=====================================================================================
இன்று,நவம்பர்-12.
- அஜர்பைஜான், அரசியலமைப்பு தினம்
- ஆஸ்திரியா குடியரசானது(1918)
- சூடான், துனீசியா ஆகிய நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)
- ஜெனீவா, ஐ.நா.,வில் இணைந்தது(1968)
- இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)
சுருங்கும் ஓசோன் ஓட்டை.
சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியை அடைந்தால் அதன் மூலம் உயிரினங்களுக்கு டி.என்.ஏ. குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்திலிருந்து பூமியில் வாழும் உயிர்களைக் காக்கும் வகையில் ஓசோன் படலம் உள்ளது.
இந்த வாயுப் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் கண்டறிந்தார். குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது.
பிரிட்ஜ், ஏசி போன்ற மின் சாதனங்கள் குளோரோ புளூரோ கார்பன் என்ற வாயுவை அதிகம் வெளியிடுகின்றன. இது ஓசோன் பாதிப்புக்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது.
இந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சீரடைந்து வருகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், செப்டம்பர் 16ஆம் தேதியை ஓசோன் பாதுகாப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.