உடல் எடையை சீராக்க.

ரபேல் தொடர்பான  மூன்று முக்கிய கேள்விகளுக்கு மத்திய அரசு  குளறுபடி பதில்
ரபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு அளித்துள்ள விளக்கங்கள், குளறுபடிகளுடன் இருப்பதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 3 கேள்விகளுக்கு மத்திய அரசின்அறிக்கையில் பதிலே இல்லை என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் உடனான ரபேல் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றுவழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், அக்டோபர் 31-க்குள் ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 
மத்திய அரசும் தற்போது 16 பக்க ஆவணத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.


ரபேல் விமானக் கொள்முதலில் கடைப்பிடிக்கப் பட்ட வழிமுறைகளை இந்த ஆவணத்தில் மத்தியஅரசு விளக்கி இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில்தான், மத்திய அரசின் பதில் குளறுபடிகளுடன் இருப்பதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:ரபேல் ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு அளித்துள்ள பதிலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. 
குறிப்பாக, மூன்று முக்கியமான குளறுபடிகள் உள்ளன.கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் கூட்டறிக்கையில், ‘பல முக்கியத் தேவைகளுக்காக, இந்திய விமானப்படை பிரான்ஸ் நாட்டிலிருந்து 36 ரபேல் ரக விமானங்களை பறக்கும் நிலையிலேயே, எவ்வளவு விரைவில் வாங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக வாங்குவதற்கு காத்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதாவது விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. 
முதலாவதாக இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே விமானக் கொள்முதல் தொடர்பான பேரம், அடுத்ததாக ஒப்புதல், மூன்றாவதாக, ஒப்பந்தம் குறித்து இந்திய அரசு அறிவிப்பு வெளியிடுதல் என்ற வரிசைகளில் இந்த ஆவணம் அமைந்துள்ளது.

ஆனால், நடப்பில் பிரதமர் மோடி முதலிலேயேஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு விடுகிறார். 

அதன் பிறகு, விலை குறித்த பேரம் பேசப்பட்டுள்ளது. 
அதாவது அறிவிப்பு வெளியிட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் பேரம் துவங்குகிறது. 

இந்தபேரம் சுமார் ஓராண்டு வரை நடக்கிறது. 
அதன்பிறகு2016-ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்றுதான், 36 விமானங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
இங்கே, எழக்கூடிய கேள்வி என்னவென்றால், ஓராண்டு கழித்து வாங்கப் போகும் விமானம் குறித்து, பிரதமர் மோடி முன்பே அறிவிப்பு வெளியிட்டது எப்படி? என்பதுதான்.

இரண்டாவது விஷயம்: 
கடந்த 2001-ஆம்ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் 126 விமானங்களை வாங்க ஒப்புதல் அளித்தார். 
அதன்பிறகு விமான எண்ணிக்கைகள் குறித்த அறிக்கை 2006-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு, 126 விமானங்கள் வாங்குவது உறுதி செய்யப்படுகிறது. 
இந்த 126 விமானங்களில் 18 விமானங்களை உற்பத்தியாளரிடமிருந்து முழுமையாக வாங்கவும், மீதமுள்ள 108 விமானங்களை, சம்பந்தப் பட்ட உற்பத்தியாளரிடமிருந்து பெறப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு, இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யப்படுகிறது.


இங்கே எழும் கேள்வி என்னவெனில், 
2001-ஆம் ஆண்டில், 126 விமானங்கள் தேவை என்று கூறப்பட்டிருந்த நிலையில், மத்திய பாஜக அரசு திடீரென 36 விமானங்களை மட்டும் வாங்குவது என்று எதன் அடிப்படையில் முடிவுக்கு வந்தது? 
என்பதுதான். 
அதற்கேற்ப, 36 விமானங்கள் மட்டுமே தேவை என்ற கருத்துரு எதுவும் மத்திய அரசின் ஆவணங்களில் இடம்பெறவில்லை என்பதும் இங்கே முக்கியமானதாகும்.

மூன்றாவது, ரபேல் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு பிரான்ஸ் வழங்காததற்கு, டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கும், இந்திய நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் இடையேயான புரிதல் இன்மையே காரணம் என்று மத்திய பாஜக அரசுகூறியிருக்கிறது. 

ரபேல் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க, பிரான்ஸ் நிறுவனத்தை விட 2.7 மடங்கு அதிக வேலைநேரம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது.
 டஸ்ஸால்ட் நிறுவனம் 126 விமானங்களுக்கும் தேவையான ஒப்பந்தப் பணிகளைச் செய்ய வேண்டியிருந்தது. 
அதனால், 108 விமானங்களை இந்தியாவில் செய்வதால் எழும் பிரச்சனைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

டஸ்ஸால்ட் - இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் பிரச்சனையை இவ்வளவு விரிவாக கூறும் மத்தியஅரசு, விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு பற்றிஎதுவும் சொல்லவில்லையே; அது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

எனவே, மத்திய அரசின் பதிலிலுள்ள குளறுபடிகள் குறித்து, உச்ச நீதிமன்றத்திற்கு மற்றுமொரு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளோம்.இவ்வாறு பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
=============================================================================================
உடல் எடையை சீராக்க.
ஆயுர்வேத முறைப்படி நம் உடல் வாதம், பித்தம் மற்றும் கபம் என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. இதனை தெரிந்து வைத்து கொண்டாலே போது, அதற்கு ஏற்ற உணவுகள் மற்றும் உடல் பயிற்சிகளை செய்து உடல் எடையை அதிகரிக்கவும் முடியும், குறைக்கவும் முடியும். 
மற்ற முறைகளை காட்டிலும் ஆயுர்வேத முறைப்படி உடல் எடையை குறைப்பது மிகவும் எளிமையானது.
தினம் மூன்று வேளை உண்ணவும்
உடலில் வளர்சிதை மாற்றம் சீராக இருக்க வேண்டும் என்றால் செரிமானம் சிறப்பாக இருத்தல் வேண்டும். செரிமானம் சீராக இருந்தால் மட்டுமே உடலுக்கு தேவையான ஆரோக்கியம் சமமாக கிடைக்கும். உணவு வேளைக்கு இடையே சிற்றுண்டிகளை தவிர்க்குமாறு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். 
இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.


இரவு உணவை 7 மணிக்குள் உண்ணுங்கள்.எளிதில் செரிக்க கூடிய உணவுகளையே இரவு உணவாக எடுத்து கொள்ள வேண்டும். 
மேலும் இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட நீங்கள் தூங்க செல்லும்போது சாப்பிட்ட உணவு செரித்து இருக்கும். இதனால் இரவு நேரத்தில் உடலில் இருந்து இயற்கையாகவே நச்சு வெளியேற்றும் முறை சிறப்பாக இருக்கும். 
இரவு நேரத்தில் சூப் மற்றும் சாலட் சாப்பிட்டால் உடலுக்கு சிறந்த க்ளென்ஸாக இருக்கும்.
கபத்தை வெளியேற்றக்கூடிய உணவுகளை உண்ணவும்
உடலில் கபம் சேராமல் பார்த்து கொண்டாலே போது, ஆரோக்கியமாக இருக்கலாம். 
வெதுவெதுப்பான, உலர்ந்த, லேசான மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளே கபம் நீக்கும் தன்மை கொண்டவை. 
வீட்டிலே செய்யப்பட்ட உணவுகளை குளிர வைத்து சாப்பிடுவது சிறந்தது.

வாரம் மூன்று நாள் உடற்பயிற்சி செய்யவும்
உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் கொழுப்பை குறைக்கவும் நிச்சயம் உடற்பயிற்சி அவசியம். 
நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங், யோகா அல்லது நீச்சல் போன்ற உடற்பயிற்சி ஏதேனும் ஒன்றை தினசரி வழக்கமாக்கி கொள்ள வேண்டும். 
குறிப்பாக அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் அந்த நாளுக்கான ஆற்றல் கிடைத்துவிடுகிறது.
வெந்நீர் அல்லது சூடான டீ அருந்துங்கள்.

சூழல் மாசு, ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவற்றால் உடலில் கழிவுகள் மற்றும் நச்சுக்கள் தங்கிவிடுகின்றன. 
இவற்றை உடலில் இருந்து வெளியேற்றும் தன்மை வெந்நீருக்கு உண்டு. காலை எழுந்ததும் சுடு தண்ணீரை குடித்துவரலாம். 
இத்துடன் இஞ்சி போன்ற மூலிகைகளை சேர்த்து பருகலாம்.
ஆழ்ந்து உறங்குங்கள்.
தூக்கம் சீராக இல்லாமல் தடைப்பட்ட தூக்கம் இருக்குமேயானால் கட்டாயமாக உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். 
இதனால் உடல் எடை கூடும் வாய்ப்பும் அதிகம். 
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் தூங்கினால் மட்டுமே உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
=========================================================================================
ன்று,
நவம்பர்-14.
  • கின்னஸ் சாதனை புத்தக நினைவு தினம்
  • உலக  நீரிழிவு நோய் தினம்
  • இந்திய குழந்தைகள் தினம்
  • இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம்(1889)
  • டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1996)
==========================================================================================
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் வரும் 15 ஆம் தேதி தமிழகத்தைத் தாக்கும் என அறிவிக்கப்பட்டது. 
முதலில், கஜா புயல் சென்னையைத் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது திசை மாறி பாம்பன்-கூடலூர் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. 


மணிக்கு 80-90 கிமீ வேகத்தில் வீசும் இந்த புயல், கரையைக் கடக்கும் போது, சுமார் 100 கி.மீ வேகத்தில் வீசும் என கூறப்படுகிறது. 


இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவை புயல் தாக்கக்கூடியப் பகுதிகளில் பணியமர்த்தியுள்ளது. 

இந்நிலையில், கஜா புயலின் வேகம் 8 கி.மீ என்பதிலிருந்து 6 கி.மீ ஆக குறைந்துள்ளது. இதனால், புயல் தாக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது. 

தற்போது கஜா புயல் சென்னையிலிருந்து 570 கி.மீ தொலைவிலும், நாகையிலிருந்து 670 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
===========================================================================================
ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு GSAT-29 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய செயற்கைக்கோள் நிறுவனம் இஸ்ரோ தெரிவித்திருந்தது. 


ஆனால் கஜா புயல் கடலூருக்கும், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 
இதனால் செயற்கைகோள் ஏவப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
நவம்பர் 14(இன்று) மாலை 5.08 மணிக்கு GSLV MK3 விண்ணில் ஏவப்படும். இதற்கான கவுன்டவுன் நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு தொடங்கியது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் GSAT-29, MK3 எடுத்துச் செல்கிறது. 

செயற்கைக்கோள் ஏவப்படும் நேரம் மாற்றப்படும் என வதந்திகள் பரவிவந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இஸ்ரோ.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?