சனி, 17 நவம்பர், 2018

இனி; சிம் இல்லா கைபேசிதான்.

 1991ஆம் ஆண்டு தற்போது நாம் பரவலாக பயன்படுத்திவரும் சிம் கார்டுகள் கடந்த அறிமுகப்படுத்தப்பட்டு, பல்வேறு வடிவமைப்பு மாற்றங்களுக்கு பிறகு நானோ சிம் என்று  மிகச்சிறிய அளவிற்கு வந்து சேர்ந்துள்ளது.
தற்போது  கைபேசிக்கென்று கொடுக்கப்பட்டுள்ள சிம் கார்டு வைக்கும் டிரேவை  குண்டூசி போன்ற பொருளை பயன்படுத்தி   திறந்து, மிகச் சிறிய பகுதியில் சிம் கார்டு  உள்ளே வைப்பதே மிகவும் சிரமம் . 
அதற்கு மாற்றாக  ஏதாவது  புதிய வழி உள்ளதா என்று  நினைபவர்களுக்கு இப்போது கைகொடுக்க வந்துள்ளது இ-சிம். 
தற்போதைய புதிய தொழில் நுட்ப வடிவமைப்புதான் இது.
சாதாரண சிம் கார்டு பயன்பாட்டு முறைக்கு முடிவுக்கட்டும் இப்புதிய  இ-சிம் தொழில்நுட்பத்தை ஆப்பிள் போன்ற  முன்னணி திறன்பேசி(ஸ்மார்ட் போன் ) தயாரிப்பாளர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். 

இனி வருங்காலத்தில்  திறன்பேசிகளில் நாம் சிம்கார்ட்டை நுழைக்கவும்,எடுக்கவும் துன்பப்படவேண்டியதில்லை. 

நானோ சிம் அட்டையை கீழே வைத்துவிட்டு தேடி அலையவும் வேண்டாம்.
ஆமாம் இனி சிம் கார்டே இல்லாமல் கைப்பேசிகளை  பயன்படுத்தும் நிலை உருவாகி விட்டது..
அடிப்படையில் இ-சிம் என்பதும் ஒருவகை சிம் கார்டுதான். ஆனால், ஏற்கனவே திறன்பேசியின் மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் அந்த சிம் கார்டை நீங்கள் வெளியே எடுக்கவோ, மாற்றவோ முடியாது. அதாவது, நீங்கள் அந்த திறன்பேசியை வாங்குவதற்கு முன்னரே அதனுள் சிம் கார்டு பொருத்தப்பட்டிருக்கும்.
"என்னுடைய புதிய கைபேசியில் மிகப் பெரிய எட்ஜ்-டு-எட்ஜ் திரை இருக்க வேண்டும், நல்ல சத்தம் வேண்டும், பல சென்சார்கள் இருக்க வேண்டும், இரண்டுக்கும் மேற்பட்ட அதிநவீன கேமெராக்களையும் சிறந்த பிளாஷ் லைட்டையும், இரண்டு சிம் கார்டுகளை போடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்" என்று நாம் தினந்தினம் கைபேசியின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த, அதிகப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு கைபேசியிலிருந்து எதையெல்லாம் நீக்கினால் வேறொரு சிறப்பம்சத்தை கூட்டலாம் என்று நினைத்து அடுத்தடுத்து செய்த படிநிலை மாற்றங்களின் விளைவுதான் இது.
சுருங்க சொன்னால், கையளவு உள்ள கைபேசியில் அதிக இடத்தை அடைக்கும்/ வடிவமைப்பை சிக்கலாக்கும் பழமையான சிம் கார்டுக்கான இடத்தை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதே இ-சிம்!
மேலே குறிப்பிட்டப்பட்டதை போன்று, உங்களது கைபேசியின் உள்ளேயே இ-சிம் அமைக்கப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு ஐபோனின் புதிய வரவான ஐபோன் 10 எஸ், எஸ் மேக்ஸை எடுத்துக்கொள்வோம். இந்த இரண்டு ஐபோன்களிலுமே முதல் சிம் சாதாரண நானோ சிம், இரண்டாவது இ-சிம். நீங்கள் சாதாரண சிம்மை அமைத்த பிறகோ அல்லது அமைக்காமலோ கூட இ-சிம்மை நிறுவ முடியும்.
அதாவது, ஐபோனிலுள்ள செட்டிங்ஸ் > செல்லுலார் > ஆட் செல்லுலார் பிளான் வரை வந்துவிட்டு உங்களது கைபேசி அழைப்பு வசதி அளிக்கும் நிறுவனம் வழங்கிய தாளில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, அடுத்து கேட்கும் கன்பர்மேஷன் எண்ணை பதிவிட்டவுடன் உங்களது பழைய கைபேசி எண், திட்டம் என அனைத்துமே உடனடியாக வந்துவிடும்.
மாறாக, உங்களது தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் பிரத்யேக செயலியின் மூலமும் இதை நிறுவலாம் என்கிறது ஆப்பிள் நிறுவனம்.
முதலாவதாக கைபேசி தயாரிப்பாளர்களுக்கு இடத்தை அடைக்கும் சாதாரண சிம் கார்டிலிருந்து விடுதலை கிடைக்கிறது. இதன் மூலம் வடிவமைப்பில் கவனம் செலுத்த முடியுமென்று தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர்.

சாதாரண சிம் கார்டுகளை போன்று அடிக்கடி தேய்ந்து போகும் பிரச்சனையோ, தொழில்நுட்ப பிரச்சனைகளோ இதில் இல்லை.
குறிப்பாக, அடிக்கடி பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய எண்ணை மாற்றுபவர்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்பவர்களும் உடனுக்குடன் சிம் கார்டை மாற்றாமலேயே எண்ணையும், நிறுவனத்தையும் மாற்றிக்கொள்ளமுடியும் என்பது வரப்பிரசாதமாக அமையும்.
அமெரிக்காவிலுள்ள முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் இ-சிம் கார்டுகளை வழங்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவை பொறுத்தவரை ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுந்தான் இ-சிம் வசதியை அளிக்கின்றன. வருங்காலத்தில் இ-சிம் பொதிக்கப்பட்ட திறன்பேசிகளின் வருகை பெருகினால் மற்ற நிறுவனங்களும் இ-சிம்முக்கு ஆதரவு வழங்கும்.
சீனாவிலுள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் கூட இ-சிம் வசதியை வழங்கவில்லை என்பதால் அந்நாட்டில் மட்டும் இரண்டு சாதாரண சிம் கார்டுகளை பொறுத்தக்கூடிய ஐபோன்கள் விற்கப்படுமென்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
==========================================================================================
ன்று,
நவம்பர்-17.
  • உலக  மாணவர் தினம்
  • எக்குவேடார் மற்றும் வெனிசுவேலா ஆகியன கொலம்பியாவில் இருந்து பிரிந்தன(1831)
  • எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது(1869)
  • புடாபெஸ்ட் நகரம், ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது(1873)
  • டக்லஸ் யங்கெல்பர்ட் முதலாவது கணினி மவுஸ்க்கான காப்புரிமம் பெற்றார்(1970)
 சூயஸ் கால்வாய்
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் விதமாக 163 கி.மீ. நீளமும், 300 மீ அகலமும் செயற்கையாக தோண்டப்பட்ட கால்வாய்தான் ‘சூயஸ் கால்வாய்’. இது எகிப்தில் அமைந்துள்ளது.

இக்கால்வாய் 1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இக்கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பல் போக்குவரத்து மிகவும் இலகுவானது. 

அதன்முன்னர் கப்பல் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

பிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி 8 வருடகாலமாக தொடர்ந்து நடந்தது. 

1867-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இக்கால்வாயின் வெற்றி பிரான்ஸ் நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.

இக்கால்வாய் வழியாக ஏறக்குறைய 15 ஆயிரம் கப்பல்கள் ஓரு ஆண்டில் கடக்கின்றன. 

ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயை கடக்க 16 மணி நேரம் ஆகிறது.
============================================================================================
உலகின் மிகப் பெரிய கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம், தனது கல்லூரி வளாகத்தில் "கலைஞரு"க்கு சிலை வைக்க முடிவு..

அடுத்துவருவது  பேய்ட்டி 

ஒவ்வொரு கடற்பகுதியிலும் உருவாகும் புயல்களுக்கு, சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம், பெயர்களை சூட்டுகிறது. 
புயல்களின் தாக்கம் குறித்த வரலாறை தெரிந்து கொள்ளும் வகையில், மண்டல ரீதியாக, பெயர்கள் முன் கூட்டியே தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்களின் பகுதிகள் பிரிக்கப்பட்டு, பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் உருவாகும் புயல்களுக்கு, 2,000ம் ஆண்டில், ஓமன் நாட்டின், மஸ்கட் நகரில் கூடிய, சர்வதேச வானிலை ஆராய்ச்சி மைய உறுப்பினர் கூட்டத்தில், பெயர்கள் முடிவு செய்யப்பட்டன.

இதில், வங்க தேசம், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் இணைந்து, முன் கூட்டியே பெயர்களை வழங்கியுள்ளன. 


இந்த பட்டியலில், ஒவ்வொரு நாடும், தலா எட்டு பெயர்கள் என, 64 பெயர்களை வழங்கியுள்ளன.
இவற்றில், கஜா புயலுடன் சேர்த்து, 55 பெயர்கள் பயன்படுத்தப்பட்டு விட்டன. 

வங்க கடலில் உருவான, கஜா புயல், கோர தாண்டவம் ஆடிய நிலையில், புயல்களுக்கு சூட்ட, இன்னும், ஒன்பது பெயர்கள் தயாராக உள்ளன.

கஜா என்ற பெயர், இலங்கையால் தேர்வு செய்யப்பட்டது. 

அடுத்து இப்பகுதியில் உருவாகும் புயலுக்கு  புயலுக்கு, 'பேய்ட்டி' என, தாய்லாந்து வழங்கியுள்ள பெயர் சூட்டப்படும். 
மற்ற நாடுகள் வருகினற புயலுக்கு ஏற்கனவே தந்துள்ள பெயர்கள் விபரம்:
வங்க தேசம் போனி. 
இந்தியா வாயு.
மாலத்தீவு  ஹைக்கா. 
மியான்மர்  க்யார்.
ஓமன் மஹா.
 பாகிஸ்தா புல்புல். 

முடிந்தபின்னர் அடுத்த சுற்று 
இலங்கை பவன்,அடுத்து  
தாய்லாந்து  அம்பன் ஆகிய பெயர்கள், பட்டியலில் காத்திருப்பு வரிசையில்  உள்ளன. 
இவை வரிசைப்படி, ஒவ்வொரு புயலுக்கும் சூட்டப்படும்.
நாம் இனி எதிர்கொள்ளும் 9 புயல்களுக்கு பெயர்கள் தயார். 

அடுத்துவரும் பேய்ட்டி யை எதிர்கொள்ள தயாராகுங்கள்.
==========================================================================================