புயல் நல்லது

போஜனா யாருக்கு?

மோடி அறிவித்த ‘பிரதான் மந்திரி ஃபசல்பீமா யோஜனா’ என்ற பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால்விவசாயிகள் எந்த பயனும் அடையவில்லை; மாறாகமோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் ரூ. 15 ஆயிரம் கோடியை அள்ளிக் குவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மத்திய பாஜக அரசின் ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’, ஒரு தோல்வியடைந்த திட்டம்; இதுவிவசாயிகளுக்கு கொஞ்சமும் உதவாது என்று 2016-ஆம் ஆண்டே, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன் முல்லாகூறினார். 

இந்தியாவில் 70 முதல் 75 சதவிகிதம் வரை சிறு விவசாயிகளே இருக்கின்றனர்; 
ஆனால்,புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டம் அவர்களுக்கு உதவுவதாக இல்லை; 
வசதி படைத்த குறிப்பிட்ட சில விவசாயிகளுக்கே பயனளிப்பதாக இருக்கிறது; 

நிலம்இல்லாத குத்தகை விவசாயிகளைப் பற்றியெல்லாம்இந்த திட்டம் கவனத்தில் கொள்ளவில்லை என்று முல்லா குறிப்பிட்டார்.

அண்மையில், மோடியின் பயிர்க் காப்பீடு திட்டமே, அவரது கார்ப்பரேட் நண்பர்கள் கொள்ளைலாபம் சம்பாதிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதுதான் என்று பத்திரிகையாளர் சாய்நாத் புதிய குற்றச்சாட்டை வைத்தார். 

இன்னும் சொன்னால், ரபேல் விமானக் கொள்முதல் ஊழலை விட, மிகப்பெரிய ஊழல் பயிர்க்காப்பீட்டுத் திட்டம்தான் என்றும், இதைப்பயன் படுத்தி, ரிலையன்ஸ், எஸ்ஸார் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
புயலால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் கவனிக்க.
புயல் நல்லதுதானாம் .


“மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் சோயா பயிரிட்டுள்ளனர்; 
இவர்கள் காப்பீட்டுத் தொகையாக ரூ. 19 கோடியே 20 லட்சத்தைக்காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்துகிறார்கள்; 
மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக தலாரூ. 77 கோடியை தங்களின் பங்களிப்பாக செலுத்துகிறார்கள்; 

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 173 கோடிகிடைக்கிறது; ஆனால், மழையில்லாமல் ஒட்டுமொத்த பயிரும் கருகிப்போனால் கூட, 2 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் தர வேண்டிய இழப்பீட்டுத் தொகை வெறும் ரூ. 30 கோடிதான்; 
அந்த வகையில்தான் பார்த்தால்,, எந்த விதமான முதலீடும் செய்யாமல் ரிலையன்ஸ் ரூ. 143 கோடி ரூபாய் கொள்ளை லாபம் அடைகிறது.

இதுஒரு மாநிலத்தின் நிலவரம் மட்டுமே. அப்படியானால் நாடு முழுவதும் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை எவ்வளவு?” என்று சாய்நாத் கேட்டிருந்தார்.

மோடி அரசின் மோசமான விவசாயக் கொள்கைகளால், தற்போது சொந்தமாக நிலம் வைத்திருக்கும் 86 சதவிகித விவசாயிகளும், குத்தகைக்கு நிலத்தை எடுத்து விவசாயம் செய்யும் 80 சதவிகிதவிவசாயிகளும் கடனில் சிக்கித் தவிப்பதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தங்களின் விவசாயத்தை இழந்து வருகிறார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில்தான், மோடி அரசின் ‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி, பானிபட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.பி. கபூர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வேளாண்மைத்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள வேளாண்மைத் துறை, ‘பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா’ திட்டத்தில் இணைந்த விவசாயிகளில் சுமார் 84 லட்சம் பேர், தற்போது, இத்திட்டத்திலிருந்து விலகி விட்டதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது. 

மோடியின் புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டம் படுதோல்வி அடைந்திருப்பது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

2016-17இல் 5 கோடியே 72 லட்சத்து 17 ஆயிரத்து 159 விவசாயிகள் மோடியின் பயிர்க்காப்பீட்டுத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். 

தற்போது 2017-18இல் இந்த எண்ணிக்கை 4 கோடியே 87 லட்சத்து 70 ஆயிரத்து 515 பேர்களாக குறைந்துள்ளது. 

அதிகபட்சமாக ராஜஸ்தானில் 31 லட்சத்து 25 ஆயிரத்து 25 பேர், மகாராஷ்டிராவில் 19 லட்சத்து 46 ஆயிரத்து 992 பேர், உத்தரப்பிரதேசத்தில் 14 லட்சத்து 69 ஆயிரத்து 52 பேர், மத்தியப்பிரதேசத்தில் 2 லட்சத்து 90 ஆயிரத்து 312 பேர் விலகியுள்ளனர். 

அதாவது பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவிவசாயிகளே பெரும்பாலானோர் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். 
ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் 68 லட்சத்து 31 ஆயிரம் விவசாயிகள் மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

தென்னிந்தியாவிலும் கர்நாடகத்தில் 27 லட்சத்து 37 ஆயிரத்து 667 விவசாயிகளாக இருந்தஎண்ணிக்கை, தற்போது 16 லட்சத்து 8 ஆயிரத்து 569 பேர்களாகவும், ஆந்திராவில் 18 லட்சத்து 18 ஆயிரத்து 449 பேர்களில் இருந்து, 17 லட்சத்து 75 ஆயிரத்து 444 பேர்களாகவும் குறைந்துள்ளது.

அதேநேரம், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், மோடி அரசின் திட்டத்தைப் பயன்படுத்தி, பல ஆயிரம்கோடி ரூபாய் கொள்ளை லாபம் சம்பாதித்து இருப்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.‘பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா’ திட்டம்ஆரம்பிக்கப்பட்ட, கடந்த ஓராண்டில் மட்டும் ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, எச்.டி.எப்.சி. மற்றும் ஐஎப்எப்சிஓ உள்ளிட்ட பயிர்க்காப்பீட்டு நிறுவனங்கள் சுமார் 15 ஆயிரத்து 795 கோடியை வாரிச் சுருட்டியுள்ளன. 

2017-18ஆம் ஆண்டுக்கான கணக்கு இதில் சேரவில்லை.

ஆகவே, மக்கள் நலன் அடிப்படையில் எந்த திட்டத்தையும் பிரதமர் மோடி அறிவிப்பது இல்லை என்பதும், கார்ப்பரேட் கூட்டாளிகளுக்காகவே அவர்செயல்படுகிறார் என்பதும் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது.
============================================================================================
ன்று,
நவம்பர்-18.
  • ஓமன் தேசிய தினம்
  • புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறக்கப்பட்டது(1626)
  • விடுதலைப்போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்  இறந்த தினம்(1936)
  • அழுத்தும் பொத்தான்களை கொண்ட முதல் தொலைப்பேசி விற்பனைக்கு வந்தது(1963)
  • தென்னாப்பிரிக்காவில் புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது(1993) 

வ.உ.சிதம்பரனார் 

சுதந்திர போராட்ட வீரர், மொழி பெயர்ப்பாளர், நுாலாசிரியர், பத்திரிகையாளர் என பல பரிணாமங்களை கொண்டவர் வ.உ.சிதம்பரம். அரசியல் வாழ்விலும், தமிழ்ப்பணியிலும் தன்னிகரற்று திகழ்ந்தார். 

'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' என புகழப்படும் இவர் துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 1872 செப்.5ல் பிறந்தார். சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

பின் 1890களில் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு, சுதேசி இயக்கங்களில் ஈடுபாடு காட்டினார். கைத்தறி ஆடைகளுக்காக 'தர்ம சங்க நெசவுச்சாலை'யையும், சுதேசி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் 'சுதேசி கடைகளை'யும் துவக்கினார்.




துாத்துக்குடி - கொழும்பு போக்குவரத்தில் ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் ஏகபோக உரிமையை அனுபவித்து வந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக இரண்டு புதிய கப்பல்களுடன் 1906ம் ஆண்டு களத்தில் இறங்கினார். 

உள்ளூர் வணிகர்களின் ஆதரவு இருந்ததால், சுதேசி நீராவி கப்பல் போக்குவரத்து கம்பெனி சிறப்பாக செயல்பட்டது.

பாரதியாருடன் நட்பு பாரட்டிய இவர், 1907ல் நடந்த சூரத் காங்., மாநாட்டில் அவருடன் கலந்து கொண்டார். 
இது தவிர துாத்துக்குடியில் கோரல்மில் தொழிலாளர் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு கொடுத்தார். இவரது நடவடிக்கைகள் ஆங்கிலேயருக்கு எரிச்சலை ஏற்படுத்தின. 

இதனால் கலகம் விளைவித்தார் என குற்றம் சாட்டி 1908ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 

இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார். 
வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

சிறையில் அவர் அரசியல் கைதியாக நடத்தப்படவில்லை. 
செக்கிழுத்தல் உள்ளிட்ட கடும் சித்ரவதைகளுக்கு ஆளானார்.
 1912ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 
அவர் சிறையிலிருந்த காலத்தில் அவரது கப்பல் நிறுவனம் அவரது பங்குதாரர்களான காங்கிரசரால் ஆங்கிலேயருக்கே விற்கப்பட்டது . 

விடுதலைக்குப்பின் அன்றைய காங்கிரசார் நடந்து கொண்ட முறையும்,ஆங்கிலேயருக்கு மறைமுகமாக ஆதரவாக நடந்து கொண்ட காந்தியின் செயல்பாடுகளும் பிடிக்காததால் அரசியலை விட்டு ஒதுங்கினார்.
சிறிது காலம் வணிகம், நுால் எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.ஜேம்ஸ் ஆலன் எழுதிய ஆங்கில சுயமுன்னேற்ற நூல்களை தமிழ்ப்படுத்தினார்.

ஆங்கிலேயரான வாலஸ் என்பவர் வறுமையில் வாடும் வ.உ.சி,யாரைக்கண்டு வருந்தி அன்றைய வெள்ளை ஆட்சியாளர்களிடம் வாதாடி வழக்குரைஞர் உரிமத்தை மீளப்பெற்றுத்தந்தார்.
அதன் பின்னர் வ.உ.சி யாரின் நிலை சிறிது உயர்ந்தது.
நன்றியாக தனது மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார்.

அவருக்கிருந்த நன்றி உணர்வு இன்று அவரை சொந்தங்கொண்டாடும் அவரால் தென்தமிழகத்தில் வளர்க்கப்பட்ட ,பயனடைந்த காங்கிரஸாருக்கு இல்லாததுதான் பெரும் குறை.
இன்றும் கூட வ.உ.சி.நினைவை கொண்டாடுவது  முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற இடதுசாரி இயக்கங்கள்தாம்.  காங்கிரசார் இல்லை.
=============================================================================================
மாடி வீட்டு ஏழை?

தெலுங்கானா மாநிலத்தின் இடைக்கால முதல்வர் சந்திரசேகர ராவ், மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய் துள்ளார். 

அதில் தனது சொத்து விவரங்களை இணைத்துள்ளார்.
இதில் விஷேசம் என்னவென்றால், தனக்கு சொந்தமாக ஒரு கார் கூடஇல்லை என்று ராவ் என்று தெரிவித்துள்ளார். 

2014-ஆம் ஆண்டிலும் இப்படித்தான் கூறியிருந்தார். 

இதையடுத்து ஊடகங்களும் ‘கார் கூட இல்லாத முதல்வர்’ என்று தற்போது தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், தனது பெயரில் சொந்தமாக கார் இல்லையே தவிர, ரூ. 22 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக ராவ் கூறியுள்ளார். 
91 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
இதுதவிர,தன் மகன் கே.டி. ராமா ராவ் பெயரில் ரூ. 84 லட்சம் மதிப்பிலான சொத்துக்கும், 
மருமகள் கே. சர்மிளா பெயரில்ரூ. 24 லட்சம் மதிப்பிலான சொத்துக் கும் கணக்கு காட்டியுள்ளார்.

இவை எல்லாவற்றையும் முக்கியமாக, தன்னிடம் கார் இல்லை என்றுகூறும் இதே சந்திரசேகர ராவ்தான், முதல்வரானதும் அரசு செலவில் 6 சொகுசுக் கார்களில் பவனி வந்தார்என்பதை மறந்துவிட முடியாது. 

அதில்மூன்று கார்களை கறுப்பு நிறத்திலிருந்து வெள்ளை நிறத்துக்கும் அவர்மாற்றினார். 
கறுப்பு பதவிக்கு ‘ஆகாது’என்று ஒரு ஜோசியர் கூறியதற்காக, அரசுப் பணத்தை ஊதாரித்தனமாக செலவிட்டார். 

அத்துடன் 2015-ஆம் ஆண்டில் தலா 1 கோடி ரூபாய் விலையில் குண்டு துளைக்காத பாதுகாப்பு அம்சத்துடன் நான்கு டொயோட்டா கார்களையும் அரசுப் பணத்தில் வாங்கினார். 
ஆனால், தற்போது கார் இல்லைஎன்று எளிமை வேஷம் போட்டுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------=======================================================
                                                      ஆந்திராவில் சிபிஐ யை தடை செய்ததில் தவறே இல்லை.
                                                     நம்மவூரு சி.பி.சி.ஐடியை விட மோசமாக செயல்படுகிறார்கள்.









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?