பின்விளைவுகள் மோசமாக இருக்கும்


 மத்திய பாஜக அரசு தன்னாட்சி நிறுவங்களான தேர்தலானையம்,சிபி.ஐ,ரிசர்வ் வங்கி போன்றவற்றின் செயல்பாடுகளில் தலையிட்டு குழப்பி பாஜகவின் ஆதரவு செயல்களை செயல்படுத்த வற்புறுத்தி வருகிறது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

அதற்காகவே இத்துறைகளில் ஆர்.எஸ்.எஸ், மற்றும் இந்துத்துவா பின்னணி கொண்டவர்களை அதுவும் குஜராத் மாநிலத்தவர்களையே நியமித்து வருகிறது மோடி அரசு.
சிபிஐ விசாரணை விவகாரங்களில் மத்திய பாஜக அரசு தலையிடுவதாக கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சி.பி.ஐ இயக்குனரான அலோக் வர்மா உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். 


இதில் வேடிக்கை இவரை சிபிஐ இயக்குனராக நியமித்தது மோடிதான்.ஆனால் அலோக் வர்மா ,மோடி எண்ணியது போல் பாஜக அரசுக்கு ஜாலராவாக இல்லாமல் பதவியின் பெருமைக்கேற்ப மனசாட்ச்சியுடன் நடந்து கொள்ள ஆரம்பித்ததுதான் இம்மோதலுக்கே கரணம்.
இதனால்தான் குஜராத் ரெயில் எரிப்பில் மோடி அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்ட அஸ்தானாவை சிறப்பு இயக்குனராக சிபிஐயில் பதவி கொடுத்து வர்மாவை முடக்கப்பார்த்தது பாஜக மோடி அரசு.

அலோக் வர்மாவை கட்டாயவிடுப்பில் அனுப்ப முக்கிய காரணம் ,வர்மா பல்லாயிரக்கணக்கான கோடிகளில் அம்பானிக்கு ஆதரவாக மோடி அரசு செய்த ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் விசாரணையை நடுநிலையுடன் அணுகியதுதான்.ஆனால் மோடி ஒன்று நினைக்க அஸ்தானா ஊழல் முறைகேட்டில் ஆதாரத்துடன் சிக்கிக்கொள்ள நிலை வேறாகி விட்டது.சிபிஐ தனது சிறப்பு இயக்குனர் அஸ்தானா மீதே வழக்கு  பதிவு செய்துவிட்டது. எனவே அலோக்வர்மாமீது அஸ்தானாவை புகார் கொடுக்கக்கூறி அதைவைத்தே இருவரையும் கட்டாய விடுப்பில் செல்ல கட்டப்பஞ்சாயத்து செய்தார் பிரதமர் நரேந்திரமோடி .
சிபிஐ விவகாரம் இப்படி ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் இதுவரை பொறுமை காத்து வந்த ரிசர்வ் வங்கி பொங்கி விட்டது.ரிசர்வ் வங்கி  ஆளுநர் ரகுராம்ராஜனை சுப்பிரமணியசாமி மூலம் தெறிக்க விட்ட மோடி அரசு குஜராத் காரரான  உர்ஜித் பட்டேல் ஐ ரிசர்வங்கி ஆளுநராக்கியது.
ஆனால் முக்கிய பொருளாதாரக்கொள்கைகளை ரிசர்வ் வங்கிக்கு தெரியாமலே தடாலடியாக எடுத்து விட்டு பின் அசிங்கப்பட்டு நிற்பது ரிசர்வ் வாங்கியாக்கி விட்டது மோடி அரசு.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடியும் ,அமித்ஷாவும் மட்டுமே எடுத்த மிக முக்கிய பொருளாதார சீரழிவு நடவடிக்கை.
நிதி அமைச்சர் அருணஜெட்லீ , நிதி அமைச்சகம்,ரிசர்வ் வங்கி ஆளுநர் போன்றவர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை.

இதனால்தான்  புதிய ரூபாய் நோட்டுகள் வடிவமைக்கவும்,அச்சிடவும் தயார் நிலையில் ரிசர்வ் வாங்கி,நிதி அமைச்சகம் இல்லை.
அதனால்தான் இந்திய மக்கள் கையில் அன்றைய செலவினங்களுக்கு பணமின்றி சீரழியவும்,112 பேர்களுக்கு மேல் உயிரிழக்கவும் வேண்டிய மோசமான நிலை வந்தது.
அப்பனா மதிப்பிழப்பின் மூலம் இந்தியா முழுக்க சிறு,குறுந்தொழில்கள் முடக்கப்பட்டு இன்று பலர் வேலையிழந்து கடும்துயரில் தெருக்களில் அலைகினறனர்.
மேலும் ரகுராஜன் ஆளுநராக இருந்த போது பிரதமருக்கு  "வங்கிகளில் கோடிகளில் கடனை வாங்கிக்கொண்டு திரும்ப செலுத்தாமல் இருக்கும் கோடீசுவரகள் பட்டியலைக்கொடுத்து அவர்கள் மீது அமுலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க அனுமதிக்க "கேட்டு கடிதம் எழுதினர்.
ஆனால் மோடியோ அதைக்கண்டுகொள்ளவில்லை.

மாறாக நிதி அமைச்சர் அருணஜெட்லீ தற்போது ரிசர்வ் வங்கி கடனை அள்ளிக்கொடுத்ததை கண்டும் , அதை வாங்கிக்கொண்டு வெளிநாட்டு செல்லவும்  ரிசர்வ் வங்கி தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.ரகுமராம்ராஜன் கடிதம்  பற்றை கேட்டதற்கு மன்மோகன் சிங் பிரதமராக இருக்கையில் எழுதியிருக்கலாம் என்றார்.

மன்மோகன் சிங் மறுக்கவே காங்கிரசார் தகவல் உரிமை சட்டப்படி கேட்க ரகுராம்ராஜன் கடிதம் எழுதியது மோடி பிரதமராக இருக்கையில்தான் என்பது உறுதியாக தெரிந்து விட்டது.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி விவகாரங்களில் மோடி அரசு தலையிடுவது பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அந்த வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கூறியுள்ளது மோதலை நாடு முழுக்க பகிரங்கப்படுத்தியுது. 
சி.பி.ஐ மற்றும் ரிசர்வ் வங்கி என இரண்டுமே தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. அதாவது தனிப்பட்ட முறையில் அந்த அமைப்புகளின் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களால் முடிவுகளை எடுத்து செயல்படுத்த முடியும். பிரதமராக இருந்தாலும் கூட சி.பி.ஐ மற்றும் ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் தலையிட வரம்பு இருக்கிறது. இந்த வரம்பைத்தான் மத்திய அரசு மீறி வருவதாக சி.பி.ஐ கூறியிருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி கூறுகிறது.
கடந்த வாரம் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா கூறிய சில கருத்துகள் தான் மத்திய அரசு – ரிசர்வ்  வங்கி இடையே மோதல் மூண்டிருப்பதை தெரியப்படுத்தியது. ஏனென்றால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருப்பர் உர்ஜித் பட்டேல். குஜராத்காரர். மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அப்படி இருந்தும் மோடி அரசுடன் – ரிசர்வ் வங்கி முறிக்கிக் கொண்டு செல்வதற்கான காரணம் சில முக்கியமான முடிவுகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுத்ததே காரணம் என்று சொல்லப்படுகிறது.
அதாவது, ரிசர்வ் வங்கியின் சட்டத்தில் செக்சன் ஏழு என்கிற விதி ஒன்று உள்ளது. இந்த விதிக்கு உட்பட்டு மத்திய அரசு கொடுக்கும் அறிவுறுத்தல்களை ரிசர்வ் வங்கி பின்பற்றியே ஆக வேண்டும். ஆனால் இந்த செக்சன் 7 என்கிற விதியை இதுவரை எந்த அரசும் ரிசர்வ் வங்கியிடம் பயன்படுத்தியதே இல்லை. ஆனால் தற்போதைய மோடி அரசு இந்த செக்சன் 7 விதியை பயன்படுத்தி ரிசர்வ் வங்கி சில முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது. 

பண்டிகை காலம் மற்றும் தேர்தல்கள் நெருங்குவதால் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதத்தில் நலிவடைந்த வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கவும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் எளிதில் கடன் பெறவும் வழிவகை செய்யுமாறு ரிசர்வ் வங்கிக்கு செக்சன் 7 சட்ட விதிப்படி மத்திய நிதி அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. 
செக்சன் 7 என்கிற விதி பயன்படுத்தப்பட்டுள்ளதால் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை ரிசர்வ் வங்கி ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 
ஆனால் மத்திய அரசு கூறியபடி செயல்பட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.
இதனை மனதில் வைத்தே ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கடந்த வாரம்  அரசுகள் தங்கள் செயல்பாட்டில் தலையிட்டால் பேரழிவுகள் ஏற்படும் என்று கூறியிருந்தார். இதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்றைய தினமே பதிலடி கொடுத்தார். அதாவது வங்கிகளில் தற்போது வாரக்கடன் குவிந்துள்ளதற்கு காரணம் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு தான் என்று அவர்.
முதல்முறையாக மோடி அரசில் ரிசர்வ் வங்கி – நிதி அமைச்சகம் இடையே மோதல் மூண்டது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவி விலக உள்ளதாக கூட தகவல்கள் வெளியாகின. 

இதனால் சுதாரித்துக் கொண்ட மத்திய நிதிஅமைச்சகம் பிரச்சனைக்கு தீர்வு காண இறங்கி வந்தது. உடனடியாக அறிக்கை ஒன்றும் நிதி அமைச்சகத்திடம் இருந்து வந்தது. 
அதாவது, மக்கள் நலனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
மத்திய அரசும், ரிசர்வ வங்கியும் பரஸ்பரம் பல்வேறு விவகாரங்களை அவ்வப்போது ஆலோசித்து முடிவு எடுத்து வரும் நிலையில், மத்திய அரசு ஒருபோதும் பொதுவெளியில் அந்த விவகாரங்களை விவாதித்ததில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
இருந்தாலும் கூட  ரிசர்வ் வங்கிக்கு  மத்திய அரசின் மீதான அதிருப்தி இன்னமும் நீடிப்பதாகவே சொல்லப்படுகிறது.
========================================================================================
ன்று,
நவம்பர்-02.
  • நியூசிலாந்து ஒரே நேரஅமைப்பை  நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)
  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரிகள் இறந்த தினம்(1903)
  • பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை துவக்கியது(1936)
  • பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)
  • பெங்களூர் நகரம் பெங்களூரு என பெயர் மாற்றப்பட்டது(2006)
=========================================================================================








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?