நீதியை எரித்து சாம்பலாக்கிய எடுபிடி அரசும்
ஆண்மையற்ற ஊடகங்களும்.
தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளின் போது பத்தாண்டுக் காலம் சிறை தண்டனை கழித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்து வந்தது.
அரசியல் சாசனப் பிரிவு 161ன்படி மாநிலஅமைச்சரவை ஆயுள் கைதிகள் அல்லது தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்வதாக முடிவுசெய்து அதனை மாநில ஆளுநருக்குபரிந்துரை செய்தால் அதனை ஏற்று அவர்பரிந்துரைக்கப்பட்ட கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிடுவார்.
இந்த 161வது பிரிவின்படி தமிழக அரசு வருடா வருடம் அண்ணா பிறந்தநாளின் போது கைதிகளை பொதுமன்னிப்பில் விடுதலை செய்து வருகிறது.
கொடூரமான குற்றம் புரிந்தவர்களை உச்சநீதிமன்றம் எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என தீர்ப்பளித்தவர்களைக் கூடதமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
தற்போது,தர்மபுரியில், கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 பேரை எரித்துக் கொன்ற அதிமுகவினர் மூவரை எம்ஜிஆர் நூற்றாண்டின்பெயரில் விடுதலை செய்திருக்கிறது தமிழக அரசு
.
இதுதமிழக மக்களை, குறிப்பாக தமிழக மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்டபோது, தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
குற்றவாளிகளுக்கெதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் அன்றைக்கு களத்தில் நின்று போராடியது. இச்சம்பவம் நடந்த பிப்ரவரி 2- அரசியல் வன்முறை எதிர்ப்புத் தினமாக இன்றளவும் மாணவர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகள் பாலியல் வன்கொலை, சாதி ஆணவ படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மறுபுறத்தில் கஜா புயல் தாக்கம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
அனைத்திற்கும் மேலாக, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளைத் தாண்டி ஏராளமான முஸ்லிம் சிறைவாசிகள் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக சிறைகளில் உள்ளவர்களில் 23 முஸ்லிம்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளனர்.
மாணவர்களை எரித்துக் கொலை செய்தவர்கள் |
3 பேர் 18 வருடங்கள், ஒருவர் 15 வருடங்கள், இருவர் 14 வருடங்கள், 3 பேர் 11 வருடங்களுக்கு மேலாகவும் சிறைகளில் உள்ளனர்.
ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 10 வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்தால் விடுவிக்கப்படுவதும், பிற கைதிகள் தண்டனை காலம் முடிந்தவுடன் விடுதலை ஆவதும் வழக்கமான விதிமுறை.
சாதாரணமாக ஒரு ஆயுள்தண்டனை கைதி 13 ஆண்டுகள் கழித்தவுடன் சிறை நடைமுறை விதிகளின்படிமாவட்ட நீதிபதி, மாவட்டஆட்சியர், சிறைக் கண்காணிப்பாளர் மற்றும்நன்னடத்தை அதிகாரி ஆகியோரை கொண்டகுழுஅவரின் மனுவை பரிசீலனைசெய்து 14 வருடத்தில் அவரை விடுதலை செய்வதுவழக்கம்.
15 வருடத்திற்கு மேல் சிறையில் கழித்திருந்த போதும் கூட முஸ்லிம் சிறைவாசிகள் விசயத்தில் இத்தகைய வழிமுறை பின்பற்றப்படுவதோ, அவர்கள் விடுவிக்கப்படுவதோ இல்லை.
25 ஆண்டுகளாக பேரறிவாளன் உட்பட 7 பேர்கள் தங்கள் வாழ்க்கையை சிறையிலேயே வாழ்கிறார்கள்.
அவர்களை விடுதலை செய்ய வக்கற்ற இந்த எடுபிடி அரசு திட்டமிட்டு இந்த மூன்று கொலைகாரர்களை விடுவித்துள்ளது.முதலில் ஆளுநர் மறுத்தும் கூட மோடியை சந்தித்து பேசி ரகசியமாக விடுவித்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் கூட மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி, மற்ரும் மாணவர் சங்கங்கள் ,சமூகநல அமைப்புகள் தமிழக முதல்வரிடம் முறையிட்டது. மனு கொடுத்துள்ளது.
ஆனால் அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தமது கட்சியின் குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது அதிமுக அரசு. இது அப்பட்டமான பாரபட்சம்.
முற்றிலும் அநீதி.
தங்கள் தலைவி சிறைக்குப்போனால் அடிமைகள்,நாக்கை அறுத்துக்கொள்ளலாம், தீக்குளித்து செத்துத்தொலையலாம்.
அதை யார் கேட்கப்போகிறார்கள்?
அதை யார் கேட்கப்போகிறார்கள்?
பாராட்டத்தான் செய்வோம்.
ஆனால் இவன்கள் தலைவி என்ன நாட்டின் விடுதலைக்காகவா சிறைக்கு சென்றார்.
ஊழல்,முறைகேடுகளுக்காக சிறைக்கு சென்றார்.
அதுவும் கண்துடைப்புக்காகத்தான்.
ஆனால் இந்த அடிமைகள் வருங்கால கனவுகளுடன் கல்லூரி சென்றுவரும் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி மாணவர்கள் இறங்கவிடாமல் கதவை மூடி உயிருடன் கொளுத்தியுள்ளார்கள்.
அவர்களை இந்த எடுபிடி மாநில அரசு,மத்திய எடுபிடி ஆளுநர் உதவியுடன் விடுவித்துள்ளது.
முதலில் மறுத்தவர் டெல்லி ஆணையின்படி விடுவித்து கையெழுத்து போட்டுவிட்டார்.
மூன்று மாணவிகள் வந்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை ஓட்டி வந்தவர் டிரைவர் கந்தசாமி.
அவர் நக்கீரனுக்கு அளித்த விபரம் ,இந்த அடிமைகள் எப்படி பட்ட கொடூர கொலை வெறியர்கள் என்பதை காட்டுகிறது.
”மாணவ, மாணவிகள் தனித்தனி பஸ்ஸில் டூர் முடித்துவிட்டு, பையூரில் ஆராய்ச்சிகளையும் முடித்தபின் கோவைக்கு போகலாம்னு கிளம்பினோம். தர்மபுரியில் 4 முனை ரோட்டில் வரும்போது பிள்ளைகளெல்லாம் ரொம்ப பசிக்குது சாப்பிட்டுவிட்டு போகலாம்னு சொன்னதால் ஹோட்டல் முன்னாடி பஸ்ஸை நிறுத்தினோம்.
அப்ப, மஃப்டியில் வந்த ஒரு போலீஸ்காரர் ’ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’ன்னு சொன்னார் நான் உடனே புரபசர்கள்கிட்டே சொன்னேன். அவங்க கோயமுத்தூருக்கு போன் போட்டு பேசிவிட்டு வந்து, ’பாதுகாப்பா பஸ்ஸை ஒரு ஓரமா நிறுத்தும்படி காலேஜ் நிர்வாகம் சொல்லியிருக்கு. அதனால ஓரமா நிறுத்துங்க’ன்னு சொன்னாங்க.
அப்ப, மஃப்டியில் வந்த ஒரு போலீஸ்காரர் ’ஜெயலலிதாவை அரஸ்ட் பண்ணிட்டாங்க. பார்த்து கவனமா போங்க’ன்னு சொன்னார் நான் உடனே புரபசர்கள்கிட்டே சொன்னேன். அவங்க கோயமுத்தூருக்கு போன் போட்டு பேசிவிட்டு வந்து, ’பாதுகாப்பா பஸ்ஸை ஒரு ஓரமா நிறுத்தும்படி காலேஜ் நிர்வாகம் சொல்லியிருக்கு. அதனால ஓரமா நிறுத்துங்க’ன்னு சொன்னாங்க.
அந்த சமயத்தில் கடைகளை எல்லாம் கல்லால் அடிச்சுகிட்டே ஒரு கூட்டம் ஓடி வந்தது. எங்க பஸ் நின்னுக்கிட்டு இருந்த ஓட்டலுக்கு பக்கத்தில் இருந்த கடைக்காரர்களெல்லாம், ’சீக்கிரம் வண்டியை எடுப்பா... உங்களால எங்களுக்கு ஆபத்து வரப்போவுது’ன்னு அவசரப்படுத்தினாங்க. என்ன செய்வதுன்னு யோசித்துகிட்டு இருக்கும்போது ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் வந்தாரு. ”வண்டியில பொட்டபுள்ளைங்களா இருக்கு. சீக்கிரம் எடுங்க” என்றார். பாதுகாப்பா எங்கே நிறுத்துறதுன்னு அவர்கிட்டேயே கேட்டேன். ’1 கிலோமீட்டர் போனா எஸ் பி ஆபீஸ் வரும், அதற்குப் பக்கத்திலே நிறுத்திக்க, பாதுகாப்பா இருக்கும்’னு சொன்னாரு.
நான் வண்டியை மெதுவா உருட்டிக்கிட்டே வந்தேன். அங்கங்கே கல்வீசிகிட்டிருந்ததால் ரைட் சைடில் இருந்த ஜன்னல்களை எல்லாம் மூடச் சொல்லிட்டேன்.
எங்க பஸ்ஸுக்கு பின்னாலேயே 100 அடி இடைவெளியில பையனுங்க பஸ் வந்துகிட்டிருந்தது.
பாரதிபுரம்கிற இடத்துகிட்டே போனபோது எங்க பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. காருக்குப் பின்னால் பஸ்ஸை நிறுத்தினேன். அம்பாசிடர் காரில் குழந்தைகளுடன் ஒரு ஃபேமிலி இருந்தது.
குழந்தைகளை பார்த்து பஸ்ஸிலிருந்த பிள்ளைகள் சந்தோஷமா கையை ஆட்டி டாட்டா சொல்லிக்கிட்டிருந்துச்சு.
நான் பஸ்ஸிலேயே உட்கார்ந்திருந்தேன்.
எங்க பஸ்ஸுக்கு பின்னாலேயே 100 அடி இடைவெளியில பையனுங்க பஸ் வந்துகிட்டிருந்தது.
பாரதிபுரம்கிற இடத்துகிட்டே போனபோது எங்க பஸ்ஸுக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது. காருக்குப் பின்னால் பஸ்ஸை நிறுத்தினேன். அம்பாசிடர் காரில் குழந்தைகளுடன் ஒரு ஃபேமிலி இருந்தது.
குழந்தைகளை பார்த்து பஸ்ஸிலிருந்த பிள்ளைகள் சந்தோஷமா கையை ஆட்டி டாட்டா சொல்லிக்கிட்டிருந்துச்சு.
நான் பஸ்ஸிலேயே உட்கார்ந்திருந்தேன்.
திடீர்னு எங்கிருந்துதான் அந்த ஆளுங்க வந்தாங்கன்னு தெரியலை. பஸ்ஸின் லெஃப்ட் சைடில் ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது.
ஸ்கூட்டரில் ஒருத்தன் உட்கார்ந்திருந்தான்.
அவனை பார்த்துக்கிட்டே இருக்கும்போது திடீர்னு பஸ்ஸில் பெட்ரோல் வாசனை அடிக்க ஆரம்பித்தது.
நான் பயந்துபோய் உடனே இறங்கி பார்த்தபோது ஒருவன் ஸ்கூட்டரிலும் அவன் பக்கத்தில் இரண்டு பேரும் நின்னுகிட்டிருந்தாங்க.
ஒருத்தன் சட்டையின் பின் பக்கத்திலிருந்து ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலை எடுத்தான்.
அதில் பெட்ரோல் இருந்தது.
ஸ்ஸின் லெஃப்ட் சைடு ஜன்னல்கள் மூடாமல் இருந்ததால் அதன் வழியாக பெட்ரோலை ஊற்றத் தொடங்கினான். புரபஸர்கள் அவனிடம் ”பொம்பளப் புள்ளைகளா இருக்கு... எதுவும் பண்ணிடாதீங்க. நாங்க இறங்கிடுறோம்’னு கெஞ்சினாங்க. அதற்குள் ஒருத்தன் தீப்பெட்டியை எடுத்தான்.
நானும் புரபஸர்களும் அவன் காலிலேயே விழுந்தோம்; ஆனால் ஸ்கூட்டரில் இருந்தவன் கொளுத்துங்கடா’ன்னு சொன்னதும், தீக்குச்சியை கொளுத்தி பஸ்சுக்குள்ளே போட்டானுங்க. படிக்கட்டுகளிலும் பெட்ரோலை ஊத்தினாங்க.
பதறிப்போன புள்ளைங்களெல்லாம் சூட்கேஸை பரபரப்போடு எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. (விபத்து நடந்தாலும் பொருட்களை காப்பாற்றிக்கொண்டு உயிர் பிழைக்க நினைப்பது தானே மனித இயல்பு) நானும் புரபஸர்களும் புள்ளைகளை இழுத்து இழுத்து வெளியே போட்டோம்.
பின்னால் வந்த பஸ்ஸிலிருந்து பையனுங்க பதட்டத்தோடு ஓடி வந்தாங்க.
அதற்குள்ளே எங்க பஸ் முழுக்க புகையாயிடுச்சு... ஒன்னும் தெரியலை.
பையனுங்களும் முடிந்த அளவு காப்பாற்றினாங்க. பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை உடைச்சு, பிள்ளைகளை இறக்கிவிட்டானங்க.
ஒரு பையன் எங்கிருந்தோ ஒரு கடப்பாரையை கொண்டு வந்து கொடுத்தான்.
பின்பக்க கதவை இடித்துத் திறந்தோம். அதற்குள் பஸ் முழுக்க தீ பரவிடுச்சு. நெருங்க முடியாமல் விலகி வந்துட்டோம்.
பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்டவர்களை புரபஸர்கள் எண்ணிப் பார்த்தபோது 42 பேர் தான் இருந்தாங்க. ’மொத்தம் 47 பேராச்சே... மீதி 5 பேர் எங்கே?’ன்னு பதறினோம்.
இரண்டு பிள்ளைங்க ஓரமா நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.
மீதி 3 பேரை காணலை.
பஸ் பக்கம் மறுபடியும் நெருங்கியபோது எல்லாம் எரிஞ்சுப் போயிடுச்சு” என்றார் வேதனையுடன்
பிப்ரவரி 2, 2000-ம் ஆண்டு கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டலின் ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
அதில் உச்சகட்ட வன்முறையாக தர்மபுரி பேருந்து எரிப்பு.
தருமபுரி, பாரதிபுரம் எனும் இடத்தில அதிமுகவினர், அரசுக்கு சொந்தமான கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் மாணவிகள் பேருந்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.
அதில் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா எனும் மூன்று மாணவிகள் பேருந்தினுள்ளே தீயில் கருகி உயிர் இழந்தனர்.
அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முனியப்பன், நெடுஞ்செழியன் மற்றும் மது என்கிற ரவீந்திரன் மூன்று பேரும் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இன்று யாரும் எதிர்பாராமல், எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன் தமிழக அரசு ரகசியமாக விடுதலை செய்துள்ளது.
மேலும் தமிழகத்தின் கஜா புயலின் தஞ்சை,நாகை,கடலூர் மாவட்டங்களில் செய்த பேரழிவை இன்றுவரை சரியாக மக்கள் பார்வைக்கு இந்த ஊடகங்கள் கொண்டு போகவில்லை.
காரணம் அங்கிருந்து வரும் செய்திகள் மிகவும் அதிர்சியாக்வும்,வேதனை தரக்கூடியதாவுமே உள்ளன.
கஜா புயலின் பேரழிவில் இருந்து மீண்டுவர இன்னும் 10 ,15 ஆண்டுகளாகிவிடுமாம்.
வாழ்வாதாரமான 2லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டுள்ளன.
குடியிருந்த வீடுகள் பல ஆயிரம் தரைமட்டமாகி வேற்று வெளி,சாலைகளில் சோறு பொங்கி சாப்பிடும் நிலை.புயல் கடந்து போய் 7நாட்களான பின்னரும் குடிநீர்,மின்சாரம் கிடையாது.
சரிந்த மின்கம்பங்களை சரி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் கிடையாது.
அமைச்சர்கள் மரிக்கப்படுவதும்,விரட்டப்படுவதும் மக்கள் எவ்வளவு துயரத்தில்,கோபத்தில் உள்ளார்கள் என்று காண்பிக்கிறது.
ஆனால் எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று வந்த பின்னரும் தமிழ் நாட்டின் முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவே இல்லை.
மாறாக தனது தொகுதியில் மலர் பாதையில் நடந்து சென்று அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடுகிறார்.அதை இந்த ஊடகங்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.
பாதிப்பு பணிகளை செய்யாமல் ஊர்வலம் வந்த ஓ.எஸ். மணியனை மக்கள் விரட்டியதால் காரை நொறுக்கியதால் தப்பித்து சுவரேறி குதித்து ஓடியதை ,எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் காரை சுற்றி நின்று மக்கள் தங்கள் குறைகளை சொல்லி கதறி முழுவதையும் தந்தி தொலைக்காட்சி செய்தியாக திரித்து வெளியிட்டதுதான் ஊடகங்களின் மொள்ளமாரித்தனத்தின் உச்சக்கட்டம்.
"சுரேறி குதித்து நிவாரணப்பணி செய்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன். ஸ்டாலின் காரை மறித்து கோஷமிட்ட பொதுமக்கள். "
தமிழ் நாட்டின் ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடும் ஆண்மையற்ற ஊடகங்கள்.
===========================================================================================
இன்று,நவம்பர்-20.
- யுனிசெஃப் குழந்தைகள் தினம்
- வியட்நாம் ஆசிரியர் தினம்
- மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது(1985)
- உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது(1917)
- ஜெர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க், ரெண்டென்மார்க் ஆல் மாற்றப்பட்டது(1923)
தி.மு.க., தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் சிறிது இடத்தை மாநகராட்சிக்கு வடிவமைப்பு சட்டப்படி திமுக வழங்கியுள்ளது .
தற்போது, அந்த இடத்தில், பூங்கா அமைத்து, தி.மு.க., பராமரித்து வருகிறது.
இப்பூங்காவில் 1989ல், அண்ணா சிலை அமைக்கப்பட்டது.
அதன் அருகே, மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்க, தி.மு.க., முடிவு செய்தது.
இதன்படி, சிலை வைக்க அனுமதி கோரி, சென்னை மாநகராட்சியிடம், தி.மு.க., தரப்பில், மனு அளிக்கப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகமும், செப்டம்பரில் நடந்த, தனி அலுவலர்கள் மன்ற தீர்மானத்தில், சில நிபந்தனைகளுடன் கலைஞர் சிலை வைக்க அனுமதி வழங்கியது.
மன்ற தீர்மானம் குறித்த விபரத்தை, அக்டோபரில், www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில், மாநகராட்சி பதிவேற்றம் செய்தது.இந்நிலையில், மாநகராட்சி இடத்தில் கலைஞர் சிலை வைக்க, தமிழக உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை ஒப்புதல் அளிக்கவில்லை.
அதனால், உடனடியாக மாநகராட்சியின் இணையதளத்தில் இருந்து, அந்த மாத மன்ற தீர்மானங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.
ஒரு மாத இடைவெளிக்கு பின், தற்போது கலைஞர் சிலைக்கு அனுமதி அளிக்கும் தீர்மானத்தை நீக்கிவிட்டு, மற்ற தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சார் அந்த மூனு பேரு விடுதலை பற்றி. .
"போன வாரம் ஏழு பேருன்னு சொல்லிட்டு இப்ப மூனு பேருங்கிறீங்க..
அந்த ஏழு பேரு வேற.. இந்த மூனு பேரு வேற சார்..
அப்ப மொத்தமா பத்து பேரு ன்னு ஒரே கேள்வியா கேளுங்க..
"போன வாரம் ஏழு பேருன்னு சொல்லிட்டு இப்ப மூனு பேருங்கிறீங்க..
அந்த ஏழு பேரு வேற.. இந்த மூனு பேரு வேற சார்..
அப்ப மொத்தமா பத்து பேரு ன்னு ஒரே கேள்வியா கேளுங்க..