பேரிடர்களில் உதவாத ஆண்டாள் ஆர்மி!
மூடப்படும் 1,13,000 ஏடிஎம்கள்
இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 2,38,000 ஏடிஎம்கள் உள்ளன.
இந்தியாவில் தற்போது ஏறத்தாழ 2,38,000 ஏடிஎம்கள் உள்ளன.
அதில், போதுமான செயல்பாடுகள் இல்லாத 1,13,000 ஏடிஎம்கள் மூடப்பட உள்ளன.
இவற்றில் 1,00,000 ஏடிஎம்கள் வங்கி கிளை இல்லாத இடங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ளவை.
இவற்றில் 1,00,000 ஏடிஎம்கள் வங்கி கிளை இல்லாத இடங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் உள்ளவை.
மேலும், 15,000 ஏடிஎம்கள் வங்கி அல்லாத வேறு நிறுவனங்களால் நடத்தப்படுபவை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஏடிஎம்கள் மூடப்படுவதன் மூலம், பிரதான் மந்திரி ஜன் தான் யோஜனா திட்டத்தின் மூலம் ஏடிஎம்களில் மானியத்தை எடுத்து வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மக்கள் கூட்டமாக ஏடிஎம்களில் நின்றது போல, தற்போது ஏடிஎம்கள் மூடப்படுவதன் மூலம் மீண்டும் அதே நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏடிஎம் தொடர்பான தொழிலில் பெருமளவில் வேலையிழப்பு ஏற்படும் என்றும் ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
=======================================================================================
“ஊழல் கரையான் யார்?
“ஊழல் கரையான்களை ஒழிப்பதற்காகவே கசப்பு மருந்தான பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டது” என்று பிரதமர் மோடி, மத்தியப்பிரதேச தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் செவ்வாயன்று பேசினார்.
ஆனால், அதேநாளில், “பணமதிப்பு நீக்க நடவடிக்கை, விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதித்தது உண்மைதான்” என்றும், “விதைநெல் வாங்குவதற்குக் கூடவழியில்லாமல், விவசாயிகள் தவித்தார் கள்” என்றும் மோடி அரசின் கீழுள்ள மத்தியவேளாண்துறை அமைச்சகமே, அறிக்கைஒன்றை அளித்து பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“பணமதிப்பு நீக்கம் ஒரு தவறான நடவடிக்கை” என்றும் வேளாண் துறை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென உயர் மதிப்புடைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல் லாது என்று அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ளப்பணம் மற்றும் ஊழலை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றார். ஆனால், மோடிகுறிப்பிட்ட அவகாசத்திற்குள் அனைத்துப்பணமும் வங்கிக் கணக்கில் வந்து, தற்போது வெள்ளையாகி விட்டது.
இரண்டாண்டுகள் ஆகியும் கறுப்புப் பணம், கள்ளப்பணம் மட்டும் இதுவரை பிடிபடவில்லை. மாறாக, பணமுடக்கம் காரணமாக, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், குடிசைத் தொழில்கள் பெரும் நலிவைசந்தித்தன. பல கோடி பேர் வேலையிழந்தனர்.
தொழில் உற்பத்தி மட்டுமன்றி, விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப் பட்டது.
அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன. 2015-ஆம் ஆண்டு 8.2 சதவிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2016-17இல் 5.7 சதவிகிதமாக குறைந்தது.
தற்போதும் அதன் பாதிப்புக்கள் தொடருகின்றன.எனினும், பணமதிப்பு நீக்கம் வெற்றிகரமான நடவடிக்கை என்றும் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் ஜெட்லியும் கூச்சமே இல்லாமல் கூறி வருகின்றனர்.
5 மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திலும் பணமதிப்பு நீக்க பெருமை பேசத் தவறவில்லை. குறிப்பாக, பிரதமர் மோடி செவ்வாயன்று மத்தியப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், “நாட்டில் ஆழமாகவேரூன்றியுள்ள ஊழலை ஒழித்து அனைத்து பணத்தையும் வங்கி முறைக்குக்கொண்டுவருவதற்காகவே பணமதிப்பு நீக்கம் என்ற கசப்பு மருந்தைக் கொடுத் தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மோடி இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதேதான், மத்திய வேளாண்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு, ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரிய தவறு’ என ஒப்புக்கொண்டிருக்கிறது.
நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், அதன் தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் செவ்வாயன்று கூடியது.
அப்போது, மத்திய வேளாண்துறை அமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையில்தான் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.“இந்திய விவசாயிகள் காரீப் பருவபயிர்களை அறுவடை செய்து விற்பதற்கும், ராபி பயிருக்கான விதைப்பிற்கும் தயாராகிக் கொண்டு இருந்தபோது பணமதிப்பு நீக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அறுவடையான பொருளை விற்பது; புதிய விதைப்பிற்கு தயாராவது என்ற இரண்டு செயல்களுக்குமே பணம் பெருமளவு தேவை. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக விவசாயிகளின் இந்தஇரண்டு பணிகளுமே கடும் நெருக்கடிக்கு உள்ளாகின;
விளைந்த பொருளை விற்க முடியவில்லை, அடுத்தகட்ட சாகுபடிக்கு விதையும் வாங்க முடியவில்லை” என்று வேளாண்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், “சாதாரண விவசாயிகள் மட்டுமன்றி, மிகப்பெரிய நிலச்சுவான்தாரர்கள் கூட, தங்கள் வயல்களில் வேலை செய்தவிவசாயத் தொழிலாளர்களுக்கு கூலிவழங்க பணம் இல்லாமல் அவதிப்பட்டனர்” என்றும், “இந்திய அரசின் அமைப் பான தேசிய விதைக் கழகம் மூலமாக திட்டமிட்டபடி 1.38 லட்சம் குவிண்டால் கோதுமைவிதைகளை விவசாயிகளிடம் விற்க முடியவில்லை” என்றும் வேளாண் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஐந்து மாநிலத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பணமதிப்பு நீக்கநடவடிக்கையால் விவசாயம் பாதிக்கப்பட்டது என்று மத்திய வேளாண்துறை அமைச்சகமே அறிக்கை அளித்திருப்பது, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பேரிடர்களில் உதவாத ஆண்டாள் ஆர்மி. ஆண்டாள் விவகாரத்தில் ஆவேசமாக போராடிய உண்ணாவிரதம் இருந்த இந்த ஆண்டாள் ஆர்மி இப்போது தமிழகமே பேரிடரில் தவிக்கையில் உதவாமல் எங்கே போய் மணியாட்டிக்கொண்டிருக்கிறது? |
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உத்தர்கண்ட் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
.உத்தர்கண்ட்டில், பாஜக, காங்கிரஸைத் தாண்டி, சுயேச்சை வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றிபெற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று இங்கு தேர்தல் நடைபெற்றது. 60 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், மாநகராட்சிகளில் மட்டும் 7-இல் 5 இடங்களை பெற்றுள்ளது.
நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அந்தக் கட்சியால் பெருமளவு வெற்றிபெற முடியவில்லை.8
4 நகராட்சித் தலைவர் பதவிகளில் 34 இடங்களில் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
காங்கிரஸ் 25,
சுயேட்சைகள் 23,
பகுஜன் சமாஜ் 1 என மொத்தம் 49 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
ஓரிடத்திற்கு முடிவு அறிவிக்கப்படவில்லை.உத்தரகாசி மாவட்டத்தில் இருக்கும் 3 நகராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு இடம்கூட பாஜக-வுக்கு கிடைக்கவில்லை.
பாஜக-வின் கோட்டை என்று அவர்கள் கூறிக்கொள்ளும் முசோரி நகரிலும் பாஜக-வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடைக்கவில்லை.
டேராடூனில் மொத்தமுள்ள 34 வார்டுகளில் காங்கிரஸ் 15 இடங்களையும், சுயேச்சைகள் 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
பாஜக-வுக்கு 14 இடங்களே கிடைத்துள்ளன
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 57 இடங்களைப் பிடித்து பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போது உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி தனது செல்வாக்கை பெருமளவில் பறிகொடுத்துள்ளது.
இன்று,
நவம்பர்-22.
பாலமுரளி கிருஷ்ணா |
- அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது(1908)
- லெபனான் விடுதலை தினம்(1943)
- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் எஃப்.கென்னடி, லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்(1963)
=========================================================================================
உலக அளவில் தற் போது இருக்கின்ற கிலோகிராம் எடை அளவு 1875ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது.
ஆனால் எல்லா கிலோகிராம் எடையின் முதல் மாதிரி, அதன் அணுக்களை இழந்துள்ளதால், துல்லியமாக இல்லை.
எனவே, 2019ம் ஆண்டு மே மாதம் இந்த கிலோ அளவு மாற்றம் அடையப்போகிறது.
அப்போது தேர்தல் ஆணைய,ஆளும் அதிமுக கெடுபிடியால் தினகரானால் ஓட்டுக்காக ரூ. 20 நோட்டு கொடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக வெற்றி பெற்ற பின்னர்2000் வழங்கப்படும் என கூறப்பட்டது.இதனால் அவர் அங்கு வெற்றிபெற்றார்.
ஆனால் அந்த 20 ரூபாய்க்கு 2000 ரூபாய் வழங்கவே இல்லை.
ஆர்.கே நகரில் 20 ரூபாய் கொடுத்து பின்னர் பணம் வழங்கப்படும் என கூறப்பட்டதைப் போல, சத்தீஸ்கரில் கோர்பா பகுதியில் தனக்கு ஓட்டு போட வேண்டும் என சிலர் 10 ரூபாய் வழங்கியதாகவும்.
தேர்தல் முடிந்தவுடன் ந்த 10 ரூபாய் கொடுத்து 1 கிலோ கோழிக் கறியை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் தினகரன் போல் அங்கு ஏமாற்றவில்லை.10 ரூபாயை கொடுத்து கோழிக்கறியை பலர் வாங்கி சென்றுள்ளனர்.
=======================================================================================