மிஞ்சியது என்ன?
எல்லோருக்கும் லிவிங்ஸ்டன் நடித்த திரைப்பட நகைச்சுவை ஒன்று நினைவுக்கு வரும். படையப்பா ஸ்டைலில் மவுத்தார்கான் வாசிக்க, ஒரு புற்றிலிருந்து அவர் ஏற்பாடு செய்த பாம்பு வெளிவர, இன்னொரு புற்றிலிருந்து மற்றொரு பாம்பு தலையைத் தூக்கி படமெடுக்கும். மோடியின் நிலைமையும் அப்படி ஆகிவிட்டது.
பணமதிப்பு நீக்க புற்றிலிருந்து அவர் எதிர்பாராமல் பல பாம்புகள் படமெடுக்கின்றன.
பணமதிப்பு நீக்கத்தால் உள்ளே வந்து சேர்ந்த செல்லாத நோட்டுக்களையெல்லாம் ரிசர்வ் வங்கி எண்ணி முடித்த போது கறுப்புப்பணமும் பிடிபடவில்லை, கள்ளப்பணமும் பிடிபடவில்லையென படமெடுத்த பாம்புகள்...
மோடி பக்த கோடிகளின் ஆட்சி நடைபெறுகிற தமிழகத்திலேயே சட்டமன்றத்தில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் 50000 சிறு தொழிலகங்கள் மூடப்பட்டு, 5 லட்சம் தொழிலாளர்கள் வீதியிலே நின்றார்கள் என்று அமைச்சரொருவர் அறிவித்தபோது படமெடுத்த பாம்பு...
இது நாதர்முடி நல்ல பாம்பு
மோடியின் கோட்டைக்குள் இருந்தேபடமெடுத்துள்ள பாம்பு இது.
ஆம்!
மத்தியவிவசாய அமைச்சகம், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அளித்துள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்கம் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோ அறிக்கையிலிருந்து...
பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் மழைக்காலப் பயிருக்கு விதைகளையும், உரங்களையும் வாங்க முடியவில்லை.
தேசிய விதைக்கழகம் உற்பத்தி செய்திருந்த விதைகளில் 17 சதவீதம், பணமதிப்புநீக்கத்திற்குப் பிந்தைய பருவப்பயிர் காலத்தில்விற்பனையாகாமல் முடங்கியிருந்தது.
அரசுக்கு சொந்தமான தேசிய விதைக்கழகம் 2015 - 16 வசந்த காலத்து ‘‘இராபி’’ பருவத்தில் 7.75 லட்சம் குவிண்டால் கோதுமை விதைகளை உற்பத்தி செய்தது. இதில் 1.38 லட்சம் குவிண்டால் விதைகள் அப்பருவம் முடிகிறவரை விற்பனையாகவில்லை. காரணம், ரொக்கம் கைகளில் இல்லாததுதான்.
இராபி பயிர்களை விதைக்கிற பருவமாகவும் பணமதிப்பு நீக்க காலம் இருந்தது. ‘‘காரிஃப்’’ எனப்படும் கோடைப்பயிர்கள் விற்பனைக்கு சந்தைக்கு வருகிற காலமும் ஆகும். இவ்விரண்டிற்குமே நிறைய ரொக்கம் தேவைப்படும். பணமதிப்பு நீக்கம் ரொக்க பற்றாக்குறையை உருவாக்கிவிட்டது.
இந்தியாவின் 2.63 கோடி விவசாயிகளில் பெரும்பாலானோர் ரொக்க பொருளாதாரத்தை நம்பி வாழ்பவர்களே. விதைக்கும், உரத்திற்கும் ரொக்கமில்லாமல் திண்டாடினார்கள்.
பெரிய நிலப்பிரபுக்கள் கூட விவசாயிகளுக்கு தினக்கூலி தர முடியாமல் திணறினார்கள். வளர் பயிருக்கான விவசாயத் தேவைகளைநிவர்த்தி செய்ய இயலாத நிலையில் இருந்தனர்.
தேசிய விதைக்கழகம் அல்லாடிய பிறகுகோதுமை விதைகளை வாங்குவதற்கு பழையரூ.500, ரூ.1000 நோட்டுக்களைப் பயன்படுத்தலாமென்று அரசு முடிவெடுத்துங் கூட விதை விற்பனை மீட்சி காணவில்லை.
நிமிர முடியாத கேள்விகள்
நாடாளுமன்ற நிலைக்குழுவின் அமர்வில் எம்.பி.க்கள் பல கேள்விகளை வீசியிருக்கிறார்கள்.
விவசாய அமைச்சக செயலாளர் வரவில்லை. அமைச்சகத்தின் அதிகாரிகளை மட்டும்அனுப்பியிருந்திருக்கிறார். நாடாளுமன்ற நிலைக்குழு அமைச்சக அதிகாரிகளைத் திருப்பி அனுப்பி விட்டது.இந்த அமர்வில் தொழிலாளர் நல அமைச்சகமும், குறு,சிறு, நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகமும் பங்கேற்று சாட்சியங்களை அளித்துள்ளன.
தொழிலாளர் நல அமைச்சகம் தனது சாட்சியத்தில் பணமதிப்பு நீக்கத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளது. அது ‘‘காலாண்டு வேலை வாய்ப்புஆய்வறிக்கைகளை’’ ஒப்பிட்டு வேலைவாய்ப்புஅதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.
பணமதிப்பு நீக்கத்திற்கு முந்தைய 4ஆம் சுற்று ஆய்வில் 1.22 லட்சம் வேலைவாய்ப்புகளும், பணமதிப்பு நீக்கத்திற்கு பிந்தைய 5 ஆம் சுற்று ஆய்வில் 1.85 லட்ச வேலைவாய்ப்புகளும் 10 அல்லது அதற்கு அதிகமான தொழிலாளர் பணிபுரியும் இடங்களில் அதிகரித்திருந்தன என்பதை அது சாட்சியத்தில் தெரிவித்தது.ஆனால் எதிர்க்கட்சி எம்.பி., ஒருவரின் எதிர்க் கேள்விக்கு பதில் இல்லை.
‘‘இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின்(CMIE) அறிக்கை, ஜனவரி - ஏப்ரல் 2017 க்குஇடைப்பட்ட காலத்தில், 15 லட்சம் வேலைஇழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கூறியுள்ளதே! இது அரசுக்கு தெரியாதா? என்பதுதான்.
இது சைடு எபெக்ட் அல்ல....
பிரதமர் மோடி மத்தியப் பிரதேச தேர்தல்பிரச்சாரத்தில், ஜபுவாவில் நடைபெற்ற பேரணியில் பேசும்போது, பண மதிப்பு நீக்கம் ‘‘ஓர் கசப்பான மருந்து’’ எனக்குறிப்பிட்டார்.நல்ல மருந்துக்கு கூட பக்க விளைவுகள் இருக்கலாம். ஆனால் நோய் குணமாகும்.
இங்கே நோய் என்ன?
கறுப்புப்பணம், கள்ளப்பணம், ஊழல் ஒழிப்பு ஆகியனதான். இதில்எது ஒழிந்தது?
‘‘ரொக்கமற்ற பரிவர்த்தனை’’ என்றார்கள்.
அதுவும் காலப் போக்கில் கரைந்துவிட்டது.
மிஞ்சியது என்ன?
விவசாயிகள் விதை வாங்க முடியவில்லை.உரம் வாங்க முடியவில்லை. விளைந்த பயிரைவிற்க முடியவில்லை. விவசாயக் கூலிகளுக்குஅன்றாட வருமானம் கூட கிடைக்கவில்லை.
ஆகவே இவையெல்லாம் பக்க விளைவுகள் இல்லை. பிரதமர் கொடுத்தது மருந்தும்இல்லை. அதுவே நோய்க் கிருமியாகிவிட்டது.
நன்றி:தீக்கதிர். -க.சுவாமிநாதன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
A.PARIMALAM liked
Jaya Kumar @jk13071961
21 hours ago
ஒரு தொழில்சுத்தம் வேண்டாமா?
இலையை கொண்டு போய் எங்க போட்டீருக்கீங்கனு பாருங்க..
இந்தியாவில் புற்றுநோய், வலிப்பிற்கு மருந்து கண்டுப்பிடிப்பு..!
புற்று நோய் மற்றும் வலிப்பு இவை இரண்டையும் சரி செய்யும் அடுத்தக்கட்ட மேம்படுத்தப்பட்ட மருந்து மிக விரைவில் இந்தியாவில் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துகளை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) அறிமுகம் செய்து உள்ளது. இந்த இரண்டு மருந்துகள் தற்போது வெளிநாடுகளில் கிடைகின்றது. இந்தியாவில் மிக அரிதாக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
கஞ்சாவை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த மருந்தை தற்போது அமெரிக்கா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்தியாவில் தயாரித்து இங்கேயே பயான்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மத்திய அரசு
CBD கஞ்சா சாடிவா
THC டெட்ராஹைட்ரோகாநானோனால்
இதற்கான சோதனையில் தற்போது CSIR இன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஒருங்கிணைந்த மருத்துவம் (IIIM) டாடா மெமோரியல் மருத்துவமனையும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதே சமயத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கான பரிசோதனைகளும் நடைப்பெற்று வருகிறது. இந்த மருந்துகள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதால் ஒரு சிலர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனால் தற்போது இந்தியாவிலேயே இதற்கான சோதனை தொடங்கி உள்ளதால் அடுத்த ஆண்டே பயன்பாட்டிற்கு வரும் நிலையில் உள்ளது.
இந்த இரண்டு மருந்துகளும், இந்தியாவிலேயே கிடைக்கப்பெற்றால் அதன் விலை குறைவாக சில ஆயிரங்களில் தான் இருக்கும்.
ஆனால் நாம் வெளிநாடுகளில் அதே மருந்தை வாங்கினால் விலை லட்சங்களில் தான் .
இன்று,
நவம்பர்-25.
பிடல் காஸ்ட்ரோவின் நினைவு தினம்
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்
இந்தோனேஷிய ஆசிரியர் தினம்
ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கான காப்புரிமம் பெற்றார்(1867)
பொஸ்னியா ஹெர்செகோவினா தேசிய தினம்(1943)
சுரிநாம் விடுதலை தினம்(1975)
====================================================
அக்கம் பக்கம் புறணிக்கு ஒரு செயலி?
கூகுள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பயனர்கள் குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிதாக அறிமுகப்படுத்திய நெய்பர்லி என்கிற செயலியின் விரிவாக்கத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் உள்ளூர் தகவல்களை அந்தந்த பகுதியை சேர்ந்த கூகுள் பயன்பாட்டாளர்கள் மூலமே பெற முடியும்.
கூகுள் நிறுவனமானது நெய்பர்லியை தேசிய அளவில் விரிவுபடுத்தி வருகிறது, முன்னதாக பெங்களூரு மற்றும் டெல்லி பயனர்களுக்காக இந்த செயலி தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சென்னைக்கு வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் ஹைதிராபாத், புனே, கொல்கத்தா, சண்டிகர், லக்னோ, இந்தூர் உள்ளிட்ட பிற நகரங்களும் சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பயனர்கள் குழுவின் மூத்த தயாரிப்பு மேலாளரான போனர் கூறுகையில் “இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இணையத்தைக் கொண்டு சேர்க்கக் கடமைப்பட்டுள்ளோம், அதற்காக உள்ளூர் தகவல்களை அதிகம் சேகரித்து வழங்க விரும்பினோம், அதன்படி ஆண்டின் துவக்கத்தில் ‘நெய்பர்லி’ செயலியை அறிமுகப்படுத்தி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைக் கண்டுபிடித்தோம்.
இந்த ஆய்வில் தங்களை சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறிய மக்கள் மற்ற நபர்களிடம் கேட்பதை அல்லது உரையாடுவதை விரும்புகிறார்கள் என்பதையும் கணக்கிட்டோம். அதே பகுதியை சேர்ந்த மற்றவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதை எளிதாக்க இந்த ‘நெய்பர்லி’ செயலியை உருவாக்கினோம். மேலும் இந்தியர்கள் அனைவருக்கும் இது கிடைக்க முயற்சித்து வருகிறோம்” என்றார்.
செயல் திறன்:
- ஒரே தட்டுதலில் அருகில் உள்ள அக்கம் பக்கத்தினரின் பரிந்துரைகளைப் பெறலாம்.
- ஒவ்வொரு முறை நெய்பர்லி செயலியை நீங்கள் திறக்கும் போதும், உங்கள் அக்கம் பக்கத்தினரிடமிரின் கேள்விகளைக் காணலாம்.
- நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டு அதற்குப் பதில் கிடைக்கவில்லை என்றால், அதே கேள்வியை மீண்டும் சிறந்த முறையில் எப்படிக் கேட்பது என்கிற ஆலோசனையைச் செயலி வழங்கும்.
- பிறரின் கேள்விகளுக்கு அதிகம் பதிலளிக்கும் நபரை ‘பெஸ்ட் நெய்பர்’ என்கிற நிலை வழங்கப்படும்.
- மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான கேள்விகள் அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்த தகவல்களையும் இதன் மூலம் பெறலாம்.
- மாணவர்கள் இந்த செயலியில் இணைவதன் மூலம் தங்கள் பகுதியைச் சேர்ந்த பிற மாணவர்களிடம் கல்வி சார்ந்த கேள்விகளையும், சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ளலாம்.
=====================================================
கஜா சேதங்களை ஆறுதல் கூற வரமுடியாத ரஜினி. முதல்வராக விரும்பும் ரஜினி ...
நடிகர் அம்பரீஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த பெங்களூரு புறப்பட்டார் ரஜினிகாந்த் .செய்தி
Balamurugan liked
தலைவா நீங்க ஏன் அடுத்த படத்திற்கு கஜா2 னு பேரு வச்சு புயலை அடித்து விரட்டி மக்களை காப்பாற்றுவது போல் நடிக்ககூடாது...?