ஆணவக்கொலையும் ஆணவச் சிலையும்


ஆணவக்கொலைகள் மட்டுமல்லஆவ
ச் சிலையும் உள்ளது உங்களுக்குத்தெரியுமா?


குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை பிரதமர் மோடியின் ஆணவத்தால் மட்டுமே உருவாகி இருக்கிறது . 

பொருளாதாரத்தில் தொடர்ந்து தவறான முடிவுகளை செயல்படுத்தி இந்தியாவை உலகநாடுகள் ஏழைகள் பட்டியலில் கொண்டு செல்கின்ற மோடிக்கு 3000 கோடிகளில் சிலை செய்ய தட்டிக்கேட்க ஆளில்லை என்ற ஆணவம் மட்டுமே காரணம் "அமெரிக்க செய்தி ஊடகங்கள் கடுமையாக சாடியுள்ளன.

பிரதமர் மோடி, குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 182 மீட்டர் சிலையை திறந்து வைத்துள்ளார். இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை என்றும் கர்வத்து டன் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் படேல் சிலை திறப்பு குறித்து அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “வல்லபாய் படேல் ஒரு விடுதலை போராட்ட வீரர். 

அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிரதமர் மோடி அந்த சிலையை வைக்கவில்லை; படேலை ஒரு இந்து தலைவராக மக்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டே இந்த சிலையை நிறுவி இருக்கிறார்” என்று கூறியுள்ளது. 


இதேபோல வேறு பல அமெரிக்க செய்தி நிறுவனங்களும் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளன.

“பிரதமர் மோடி தன்னுடைய அரசியல் ஆணவத்தை வெளிப்படு த்த ஆசைப்பட்டு இந்த சிலையை வைத்து இருக்கிறார்; 

அதற்கு மேல் அவருக்கு இதில் பெரிய முன்னேற்ற நோக்கம் எல்லாம் இல்லை; 
தன்னுடைய வலதுசாரி கொள்கையை பரப்ப வேண்டும் என்றுதான் இந்த சிலையை நிறுவியுள்ளார். மேலும் பிரதமர் மோடியும் அவரது கட்சியும், இந்த சிலை மூலம் அரசியல் செய்யலாம் என்று நம்புகிறார்கள்; இது தங்களுக்கு தேர்தலின் போது உதவும் என்று நினைக்கிறார்கள்” என்று அவை குறிப்பிட்டுள்ளன.

படேல் சிலை இருக்கும் நர்மதா அணையைச் சுற்றியுள்ள கிராமங் கள் மதக் வன்முறைகளை சந்தித்த பகுதியாகும்;

 இஸ்லாமியர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளா கும் வட்டாரம் ஆகும். 

அந்த பகுதியில்தான் படேல் சிலை நிறுவப் பட்டு இருப்பதை இந்திய ஊடகங்கள் சிலவும் சுட்டிக்காட்டி யுள்ளன.
========================================================================================================
பன்றிக் காய்ச்சலைத் தவிர்க்க 
பன்றிக்காயச்சல் ஏற்படக் காரணமான ஃபுளூ வைரஸ் உள்ள எதையேனும் தொட்டால் வைரஸ் தொற்று உண்டாகிறது. இந்தக் காய்ச்சல் உள்ளவர்கள் இருமினாலோ தும்மினாலோ தெறிக்கும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் மற்றவர்களுக்கும் பரவுகிறது. 

ஆஸ்த்மா உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 வயதுக்கும் குறைவானவர்கள், நாள்பட்ட நுரையீரல், இதயம், சிறுநீரக நோய் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் போன்றவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. 

தொடர்ச்சியாக காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, சோம்பல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை பன்றிக்காய்ச்சல்அறிகுறிகளாகும். 

விரலிடுக்குகளிலும் நன்றாக சோப்பு போட்டு தேய்த்து கைகளை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். 

தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையால் மூக்கு, வாயை மூடிக்கொள்ளுதல் வேண்டும். 

நல்ல தூக்கத்தைக் கண்டிப்பாக உறுதிசெய்துகொள்ள வேண்டும். 

நீர்ச்சத்து குறையாமல் இருக்கு தண்ணீரும் மற்றும் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

பன்றிக்காயச்சல் அறிகுறிகள் இருப்பவர்கள் வெளியிடஙகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பிறரைத் தொடுவதையும் முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். 

காய்ச்சல் வந்தால் மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சுயமாக மருத்து எடுத்துக்கொள்ளக் கூடாது. 

இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2017ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் தான் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டது. ஆனால், அதன் பிறகு தற்போது மீண்டும்குஜராத்தில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு, அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குஜராத் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 
தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் 144 பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் வரையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 4,40,000 பேர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்தனர். ஏடிஸ் வகை கொசுக்களின் மூலம், ஜிகா வைரஸ் பரவுகிறது. 

 கடந்த 2015ம் ஆண்டு முதல் 70 நாடுகளில் 1.5 மில்லியன் பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

=========================================================================================
ன்று,
நவம்பர்-03.
  • பாம்பே டைம்ஸ் இதழ்  வெளியிடப்பட்டது (1838)
  • பாம்பே டைம்ஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது(1861)
  • பனாமா விடுதலை தினம்(1903)
  • போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)
=========================================================================================
காசிருந்தால் நீங்களும் வாங்கலாம்?
தாங்கள் எத்தனை கோடி ரூபாய்களுக்கு பேரம் பேசப்படுகிறோம் என்பதை இலங்கை நாடாளுமன்ற வளாகத்திலேயே எம்.பி.க்கள் போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இரவு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவைப் பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. அப்போது முதல் இலங்கையில் அரசியல் குழப்பம் தீவிரமாக இருக்கிறது.

இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க, புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே கடுமையான முயற்சிகளில் இருக்கிறார்.

நேற்று (நவம்பர் 2) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்தித்த 119 எம்.பி.க்கள், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறும், ராஜபக்சேவின் பிரதமர் நியமனம் ஏற்கத் தக்கது அல்ல என்றும் தீர்மானம் நிறைவேற்றி ஒப்படைத்தனர்.
அப்போது வரும் நவம்பர் 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தைக் கூட்ட இருப்பதாக தெரிவித்த சபாநாயகர் இது தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வருமென்று குறிப்பிட்டார்.

ஆனால், நேற்று மாலை இதை அதிபர் சிறிசேனாவின் அலுவலகம் நிராகரித்துவிட்டது.

அரசுப் பேச்சாளரும் எம்.பி.யுமான கெஹலிய ரம்புகவெல்ல நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இது குறித்துப் பேசியபோது, “அதிபர் வரும் நவம்பர் 16 வரைக்கும் நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக முடக்கி வைத்திருக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை.

நாடாளுமன்றத்தை நவம்பர் 7 ஆம் தேதி கூட்டுவதாக சபாநாயகர் சொன்னதை அதிபர் ஏற்று அரசிதழில் வெளியிட்டால்தான் அது செல்லும். மாறாக சபாநாயகரே தேதியை மாற்ற முடியாது” என்றவர், “119 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு சபாநாயகரிடம் ராஜபக்சேவுக்கு எதிராக கொடுத்திருக்கும் கடிதத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. ரனிக்கு பெரும்பான்மை இருப்பதாக சொல்லி மக்களை தவறான திசைக்குத் திருப்புகிறார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் 119 எம்.பி.க்களும் ரனிலுக்கு ஆதரவாகக் குழுமிய வேளையில், மேலும் சிலரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று பேசப்பட்டது. அதனால் நாடாளுமன்றம் கூடும் தேதியை முடிந்தவரை இழுத்தடித்து அதற்குள் எம்.பி.க்களை பேரம் பேசி ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாற்றும் ஏற்பாடுகளும் தீவிரமாக நடக்கின்றன. இதை இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. பலித ரங்கே பண்டாரா தனது ஸ்மார்ட் போனை செய்தியாளர்களிடம் காட்டியபடி பேசினார்.
அவருக்கு வந்த அந்த குறுஞ்செய்தியில், “Dear sir both can be do what u ask from me today morning’ என்று இருந்தது.

இது குறித்து விளக்கம் அளித்த பண்டாரா, “அவர்கள் என்னை அணுகி தங்களுக்கு ஆதரவு அளித்தால் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 48 கோடி ரூபாய்) அளிப்பதாகவும், அமைச்சர் பதவி அளிப்பதாகவும் கூறினார்கள்.

கொழும்புவில் இருக்கும் ஒரு புத்தர் கோயிலில் வைத்து காலையில் பணம் கொடுக்கப்படும் என்றும், மாலையிலேயே அமைச்சராகப் பதவி ஏற்கலாம் என்றும் உத்தரவாதம் அளித்தனர்.

ஆனால் நானோ அந்தப் பணத்தை அனமதுவா பகுதியில் இருக்கும் என் வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தால் இந்த வேண்டுகோளைப் பரிசீலிக்கிறேன் என்று சொன்னேன்.
அதற்கு பதிலாகத்தான் எனக்கு இந்த மெசேஜ் வந்திருக்கிறது” என்று கூறினார் பண்டாரா.
மேலும் அவர், “ இலங்கையின் இப்போதைய சூழல் இதுதான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவிலான விலை கொடுத்து வாங்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்” என்றும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ரனில் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ரஞ்சன் ராமநாயக, “ராஜபக்சேவுக்கு ஆதரவாக சீனாவின் தலையீட்டில்தான் இந்த பேரங்கள் நடைபெறுகின்றன” என்று குற்றம் சாட்ட, அதற்கு சீனா கடுமையாக மறுப்பு தெரிவித்தது.
“இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பது எங்களின் கொள்கையாகும்” என்று சீன அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பண மதிப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் எம்.பி.யின் தொகை கடுமையாக அதிகரிக்கிறது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?