டி.என்.ஏ காலம,

 இன்றைய மருத்துவ உலகில் மரபியல் அல்லது டி.என்.ஏ காலம். 

இப்போது நீங்கள் ஒரு சின்ன டியூபில் உங்கள் எச்சிலை சேகரித்து தபால் அல்லது கூரியரில் மரபியல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, தேவையான கட்டணத்துடன் சேர்த்து அனுப்பிவிட்டால் போதும். 

சில நாட்களில், உங்கள் மரபணுக்கள், உங்கள் உடற்பயிற்சிகள் முதல் விருப்பமான உணவுகள், பானங்கள், விருப்பமான மனிதர்கள் வரையிலான பல்வேறு வகையான மனித செயல்பாடுகளுடன் எந்த வகையில் பொருந்துகிறது அல்லது வேறுபடுகிறது என்பது தொடர்பான தகவல்கள் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.


ஒருவரின் எச்சிலில் இருந்து அவர்களுடைய மூதாதையர்கள் யார் அல்லது பூர்வீகமானது மரபியல் அடிப்படையில் உலகின் எந்த பகுதியுடன் தொடர்புடையதாக இருக்கிறது உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு அளித்துவரும் உலகின் பிரபலமான அமெரிக்க நிறுவனங்கள் இரண்டு. 
அவை: 23andMe மற்றும் AncestryDNA ஆகியவை. இவ்விரு நிறுவனங்கள் சுமார் ஐம்பது லட்சத்துக்கும் மேலான வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன.


ஆனால் இதுவரை சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள மனித மரபணுக்கோப்புகளின் எண்ணிக்கை 25 லட்சத்துக்கும் குறைவு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 
அதெல்லாம் சரி, இவ்விரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், இதுபோன்ற கட்டணச் சேவை செய்துவரும் உலகின் இதர பல நிறுவனங்கள் கொடுக்கும் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் அறிவியல்பூர்வமாக மிகச்சரியானவைதானா? 
அவை அனைத்தையும், கண்மூடித்தனமாக நம்பலாமா? 
அதில் தவறுகள் ஏதும் இருக்காதா? 
இதுபோன்ற பல கேள்விகள் இருக்கின்றன.

அவற்றுக்கான, மரபியல்பூர்வமான சில விடைகளை பார்க்கும் முன்பு மரபியல் குறித்த சில அடிப்படை உண்மைகளை தெரிந்துகொள்வோம்.

உங்கள் உயிரணுக்களில் இருக்கும் டி.என்.ஏ உங்களைப் பற்றி ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒரு குறியீடு (கோட்-Code) போன்றது. 
உயிரணுக்களின் உள்ளே இருக்கும் டி.என்.ஏவை, இதுவரை மனிதர்கள் அறிந்துகொள்ள முயன்றுவரும் எண்ணற்ற உயிரியல் தகவல்கள் கொட்டிக்கிடக்கும் சுரங்கம் என்றே சொல்லலாம்.

சுமார் 300 கோடி ரசாயன மூலக்கூறு எழுத்துகளால் ஆன டி.என்.ஏ-வானது, 23 இரட்டைக் குரோமோசோம்களில் அடங்கியிருக்கிறது. 
அவற்றில் ஒரு இரட்டையானது ஆண்களைக் குறிக்கும் XY அல்லது பெண்களைக் குறிக்கும் XX-ஆக இருக்கும் என்கிறது மரபியல்.

நம் டி.என்.ஏவில் சுமார் 20 ஆயிரம் மரபணுக்கள் இருக்கின்றன என்று கருதப்படுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மரபியல் ஆய்வுகள், 1980-களில் தான் மியூட்டேஷன் (mutation) எனும் மரபணு மாற்றம் அடைந்த மரபணுக்கள் தவறான புரதங்களை உற்பத்தி செய்வதும், மேலும் அவை தசை வளக்கேடு (muscular dystrophy) அல்லது சிஸ்டிக் பைப்ரோசிஸ் (cystic fibrosis) ஆகிய ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகின்றன என்று முதன் முதலில் கண்டறிந்து உறுதிசெய்தன.

முக்கியமாக, கடந்த 2003-ம் ஆண்டு, மனித உயிரணுவில் உள்ள, 20 ஆயிரம் மரபணுக்கள் கொண்ட மரபணுக்கோப்பினை முழுவதுமாக ஆய்வு செய்து, அதிலுள்ள மரபியல் தகவல்களை சேகரித்து பதிவு செய்யும் ‘Human Genome Project அல்லது மனித மரபணுக்கோப்பு திட்டம்’ வெற்றியடைந்தது.

இந்த திட்டத்தின் வெற்றியின் காரணமாக, மனித டி.என்.ஏ-வை மிக குறைவான செலவில் மிக வேகமாக ஆய்வு செய்வது சாத்தியமானது. இதன்மூலம் தற்போது லட்சக்கணக்கான மக்களின் மரபியல் தகவல்களை சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது. 
அதன் காரணமாக, மனிதர்களின் பரிணாமம், சந்ததி தொடர்ச்சி மற்றும் நோய்கள் தொடர்பான பல உண்மைகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே மரபியல் இப்போது வியாபாரமாக மாறியுள்ளது.

பொதுமக்கள் டி.என்.ஏ பரிசோதனை முடிவுகள் தொடர்பான சமீபத்திய ஒரு ஆய்வில், சுமார் 40 சதவீத முடிவுகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, தற்போது சந்தையில் உள்ள, கிட்டத்தட்ட அனைத்து டி.என்.ஏ பரிசோதனைகளும் மனித மரபணுக்கோப்பு முழுவதையும் ஆய்வு செய்வதில்லை. மாறாக, டி.என்.ஏ-வில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஆய்வு செய்கின்றன என்பது இங்கு கவனிக்கத்தக்கது. 
இதன் காரணமாக, ஒரு நிறுவனம் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கிறது என்று முடிவு கொடுத்தால், அதே மரபணு இல்லை என்று மற்றொரு நிறுவனம் சொல்கிறது.

இந்த நிறுவனங்கள் Genome Wide Association Studies, or GWAS எனப்படும் உலக மனித மரபணுக்கோப்பு ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தங்களின் மரபியல் ஆய்வுகளை மேற்கொள்கின்றன. GWAS ஆய்வுகள், ஒரு நோயுடன் தொடர்புடைய குரோமோசோம் அல்லது மரபணு ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட (ஒரு ஆயிரம் அல்லது லட்சம்) மக்களில் எந்த வகையான மாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று கண்டறிகின்றன. 
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கண் அல்லது முடியின் நிறம், உயரம், உடல்வாகு உள்ளிட்ட ஒரு பண்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள் காரணமாக இருக்கின்றன. மேலும், அம்மரபணுக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலும் இருக்கின்றன.

இதனால், ஒரு குறிப்பிட்ட பண்புக்கு காரணமான ஒரு மரபணு ஒருவருக்கு இருக்கும் மற்றொருவருக்கு இல்லாமல் கூட போகும். அதனால் இம்மாதிரியான மரபியல் ஆய்வு முடிவுகள் ஒருவருக்கு பொருந்தும், மாறாக பலருக்கு பொருந்தாமல் போகும் ஆபத்து இருக்கிறது. 
எனவே, நம்முடைய பரம்பரை குறித்தோ அல்லது நோய்கள் குறித்தோ நம் எச்சிலில் உள்ள மரபியல் தகவல்கள் சொல்வதாக பிரபல நிறுவனங்கள் அளிக்கும் பரிசோதனை முடிவுகள் மிக மிக குறைவானவை மற்றும் மிகவும் சிக்கலானவை என்பதால் அவை தொடர்பான மேலதிக ஆய்வுகள் மூலமாகவே நாம் உண்மையை உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் உலகில் பிரபல மரபியலாளர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


"தனக்கு உடல் உறுப்புகளை தானம் செய்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்" 
என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்...! 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசனின் பிறந்த நாளான இன்று (7 ஆம் தேதி)  உடல் தானத்தை வலியுறுத்தும் வகையில், அவருடைய குரலில் பதிவு செய்த வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். 

தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன். ஏற்கெனவே 2002 ஆம் ஆண்டில் ஆகஸ்டு 15 ஆம் தேதி சென்னை மருத்துவக்கல்லூரியில் இறந்தபிறகு தன் உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருக்கிறார். அவருடைய மகள்கள் உட்பட குடும்பத்தினரும் பதிவு செய்திருக்கிறார்கள்.
 ரத்த தானம் உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது மற்றும் பல்வேறு நற்பணிகளில் மன்றத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த ஆண்டு தன் பிறந்த நாளை முன்னிட்டு உறுப்புதானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள், உள்ளிட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலம் வலியுறுத்திருந்தார். 
இந்த நிலையில், அவர் உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில், ``தாயாய் மாற அழகு குறிப்பு..." என்ற தலைப்பில், அவருடைய குரலில் பதிவு செய்த வீடியோ ஒன்றை அவருடைய கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள். 
======================================================================================
ன்று,
நவம்பர்-07.
  • உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)
  • போலந்து வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
  • உலகின் முதலாவது விமான தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)
  •  நவம்பர் புரட்சியின் 101வது ஆண்டு(1917)  
  • உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்ததினம் .
  • இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)

மகத்தான நவம்பர் புரட்சியின் 101வது ஆண்டு 
(1917-2018) தினம் இன்று  அனைவருக்கும் புரட்சி தின  வாழ்த்துக்கள்.
புரட்சியையும் புரட்சி நாயகனாம்லெனினையும் நினைத்து கொண்டாடுவது நமக்கு புது உத்வேகத்தை தரும்.

புரட்சி அனுபவத்தின் சாரத்தை உள்வாங்குவது, மார்க்சையும் லெனினையும் மேலும் கற்று இன்றைய உலகை சரியாகப் புரிந்து கொள்வது, 
புது யுகம் படைக்க அதை லாவகமாகக் கையாள்வது என்பது அந்தகொண்டாட்டத்திற்கு கூடுதல் அர்த்தம் சேர்க்கும். கொண்டாட்டமும் மார்க்சியர்களுக்கு ஒரு கல்வியே.

புரட்சி உணர்வை பிரகாசிக்கச் செய்வதும்,குறிப்பிட்ட நிலைமைகளில் புரட்சி வேலைத்திட்டத்தையும், நடைமுறை அரசியல் உத்திகளையும் உருவாக்கிட வேண்டும். 
இதற்கு, ஒருவர் மார்க்சிஸ்டாகவும், லெனினிஸ்டாகவும் இருக்க வேண்டும். 
இதுவே “நவம்பர் புரட்சி” உணர்த்து முக்கிய பாடம்.
சோசலிசம் உறுதியாக வந்தே தீரும் என்ற கருத்து வரலாற்று நோக்கில் சரியானது.ஆனால்,நடைமுறைக் கருத்தாக இதனை உச்சரிப்பது வெறும் வேத மந்திரமாகப் போய் முடியும்.

சோசலிசம் உறுதியாக வந்தே தீரும் என்று அமைதி காக்க லெனினியம் அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் இப்படி ஒரு தருனம் வர உழைப்போம்.உழைப்பாளிகள் கையில் ஆட்சி அதிகாரத்தை கொடுப்போம்.
==========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?