நாடு இன்னும் மீளவில்லை

 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் நாள் பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இந்த நடவடிக்கையின் மூலம் கருப்புப்பணம் ஒழிக்கப்படும்; கள்ள நோட்டுபுழக்கமும் தடுக்கப்படும்; தீவிரவாதம் ஒழிக்கப்படும் என்று உறுதியளித்தார். 

ஆனால்இந்த அறிவிப்பிற்கு பின்பு இந்திய பொருளாதாரமே நிலைகுலைந்து நின்றது. 

மோடி அரசின் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் 2ஆம் ஆண்டு நிறைவு பெற்றிருக்கிறது. ஆனால் இந்த நடவடிக்கைக்காக மோடி முன்வைத்த காரணங்கள் இன்றும் அப்படியே தொடர்கிறது. 

இந்த நடவடிக்கையின் காரணமாக இந்தியப் பொருளாதாரமே முடங்கி வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

நாடுமுழுவதும் மக்கள் ஏடிஎம் இயந்திரங்கள் முன்பு விடியவிடிய வரிசையில் காத்திருந்தனர். அப்படிக்காத்திருந்த போது மட்டும் 160 பேர் உயிரிழந்தனர்.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, இந்த நடவடிக்கையின் மூலம் ரூ. 3லட்சத்து50 ஆயிரம் கோடி பணம் வங்கிக்கு திரும்பாது என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. 


ஆனால் 15,41,793 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கப்பட்ட நிலையில் அதில் 99.4 சதவீதம் பணம் ( 15,31,073 கோடிரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள்) வங்கிக்கு திரும்பி வந்திருக்கின்றன என ரிசர்வ்வங்கி அறிவித்தது. 

அதன் மூலம் மோடி அரசுபொய்யான வாக்குறுதியை கொடுத்து உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றியது அம்பலமானது. மேலும் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.8000கோடியும், ஏடிஎம் மிஷின்களை தயார்செய்ய ரூ.35000 கோடியும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார இழப்புரூ.1,50,000 கோடியும் என மொத்தம் ரூ.1 லட்சத்து93 ஆயிரம் கோடி மக்கள் பணம் விரயமாகியிருக்கிறது.

அடுத்ததாக மோடி அரசும் வலதுசாரி பொருளாதார அறிவுஜீவிகளும் முன்வைத்த வாதம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும் எனகூறிவந்தனர். 

ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிபரத்தின் படி, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பு ரூ.15.5லட்சம் கோடி பணம் புழக்கத்தில் இருந்தது. 

பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு பின்பு தற்போது ரூ.18 லட்சம் கோடிபணம் புழக்கத்தில் இருக்கிறது என தெரிவித்திருக்கிறது. 
இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது என்ற வாதமும் பொய்த்திருக்கிறது. 

மாறாக பேடிஎம்,அம்பானியின் பிக் பாஜார் ,ஐ.சி.ஐ.சி, போன்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே லாபமடைந்திருக்கின்றன.

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் மத்திய அரசிடம், ‘‘மோசடி செய்து 15 மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கியில் கடன் வாங்கி கருப்பு பணமாக வைத்திருக்கின்றனர்’’ என்ற பட்டியலை கொடுத்திருக்கிறார். 

ஆனால் இதுவரை அந்த பட்டியலை வெளியிடவோ, நடவடிக்கை எடுக்கவோ மோடிஅரசு தயாராக இல்லை. 

அப்படியென்றால் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம்மோடி அரசு மிகப்பெரிய ஊழலை அரங்கேற்றியிருக்கிறது என்பதுதான் உண்மை.

மோடி அரசாங்கத்தின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பொரு ளாதாரத்திற்கும், மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள்இன்னமும் தொடர்கின்றன.

.
இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:மோடி அரசாங்கம், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற மிக மோசமான நடவடிக்கை யை எடுத்து ஈராண்டுகள் கடந்துவிட்டன. 

எனினும், பிரதமர் மோடியால் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் மக்களின் மீதும் திணிக்கப்பட்ட இந்தநடவடிக்கையின் விளைவாக ஏற்பட்ட பேரிடரி லிருந்தும், மிக மோசமான விளைவுகளிலிருந்தும் இன்னமும் நாடு மீளவில்லை.பிரதமர் மோடியால் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, இதன்மூலம் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளிக்கொணரப்படும் என்றும், லஞ்சத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் கூறப்பட்டது. 


ஆனால் இவை அனைத்தும் முற்றிலும் பொய் என்று மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. 

மாறாக, செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளில் 99.4 சதவீதம் மீண்டும் அரசின் கணக்கிற்கு வந்துவிட்டது. 
இதி லிருந்து, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்மூலமாக, கருப்புப்பணமாக இருந்த ரூபாய்நோட்டுகளும் வெள்ளையாக மாறி, அவற்றை வைத்திருந்த லஞ்சப் பேர்வழிகளுக்குப் பெரிதும் உதவி இருப்பதுதான் உண்மையில் நடந்துள்ளது.

அதேசமயத்தில், இந்த அறிவிப்பின் விளைவாக, தினசரி ரொக்கப் பரிவர்த்தனைகளை முழுதும் நம்பியிருந்த கோடானு கோடி மக்கள் வாழ்க்கை சூறையாடப்பட்டிருக்கிறது. 
முறைசாராத் தொழிலில் ஈடுபட்டிருந்த 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர். 

அதேபோன்று, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். 

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பயங்கரவாத நடவடிக்கைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற மோடியின் கூற்றும் படு தோல்வி அடைந்திருக்கிறது. 
வெளிவந்திருக்கிற அரசின் தரவுகளின்படி பயங்கரவாத நடவடிக்கைகள் அதன்பின்னர் இரட்டிப்பாகி இருக்கின்றன.

பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டதை நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் எவ்வித கூச்சநாச்சமுமின்றி வக்காலத்து வாங்கியதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் குளறுபடி ஏற்பட்டிருப்பதற்கு, அவரும் மோடிக்கு இணையாகப் பொறுப்பாவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் செய்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, நாடு முழுதும் நடந்துவரும் பிரச்சாரத்தின்போது, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் காரணமாக மேலே கூறியவாறு மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களையும் கட்சி அணியினர் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.



கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி எம் ஐ இ என்ற பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு அக்டோபரில், மக்கள் தொகையில் 42.8 சதவீதத்தினர் மட்டுமே வேலை செய்ய தயாராக இருப்பதாக சி எம் ஐ இ கண்டுபிடித்து உள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளில் அதாவது, பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதமானது, குறைந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 
பண மதிப்பிழப்பு நடைபெறுவதற்கு வெற்றிபெறுவதற்கு முன்னர்,தொழிலாளர் பங்களிப்பு 47 சதவீதம் முதல் 48 சதவிகிதத்தில் இருந்தது. 

ஆனால் அதற்குப் பிறகு, இது வீழ்ச்சியடைந்து உள்ளதாக ஆய்வின் படி குறிப்பிடுகிறது.வருவாயை உருவாக்குவதற்கு முறையான அல்லது முறைசாரா வழியில் வேலை செய்யும் மொத்த வயதுவந்தோரின் அளவு, வேலைவாய்ப்பு விகிதத்தை பொறுத்தவரை 39.5 சதவீதத்தினர் மட்டுமே.

கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 39.7 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 40.7 கோடி அதிகரித்து உள்ளது. அதாவது வேலைவாய்ப்பின்மை 2.4 சதவீதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 2.16 கோடியாக இருந்தது. 
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2.95 கோடியாக அதிகரித்துள்ளது. 

ஆண்டுதோறும் 1.2 கோடி மக்கள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். 
ஆனால் அதற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.

========================================================================================
ன்று,
நவம்பர்-09.
  • அமெரிக்கா, ஹவாய் தீவின் பியர்ல் துறைமுக உரிமையைப் பெற்றது(1887)
  • கம்போடியா விடுதலை தினம்(1953)
  • நேபாளத்தில் மன்னராட்சி ஒழிந்து  மக்களாட்சி அரசியலமைப்பு நடைமுறை (1990)
  • டார்ம்ஸ்டாட்டியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1994)
  • உத்தராஞ்சல், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(2000)
  • முன்னாள் குடியரசுத் தலைவர்   கே.ஆர்.நாராயணன் இறந்ததினம் (2005).

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களுக்கான தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டுப் பெற்றுக்கொண்ட பாரிய வெற்றியானது, நேபாள அரசியலில் மட்டுமன்றி, ஆசிய அரசியல் சூழலில் கவனிப்புக்குள்ளாகிய ஒரு நிகழ்வாகியுள்ளது.   
நேபாள நாடாளுமன்றம் மற்றும் ஏழு மாகாணங்களின் பேரவைகளுக்கு கடந்த நவம்பர் 26 மற்றும் டிசெம்பர் ஏழாம் திகதிகளில் தேர்தல் நடந்தது.  
275 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில், ஆளும் நேபாளி காங்கிரஸ், மாதேசி கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், நேபாள கம்யூனிஸ்ட் ஐக்கிய மாவோயிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் மையம், அடங்கிய இடதுசாரி கூட்டணி எதிரணியாகவும் போட்டியிட்டன. எதிர்கட்சியான இடதுசாரிக் கூட்டணி 113 இடங்களில் வென்று அமோக வெற்றிபெற்றது.   
இதில் முன்னாள் பிரதமர் கே.பி.ஒளி தலைலையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 80 இடங்களிலும், மற்றொரு முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) 36 இடங்களிலும் வெற்றி பெற்றது.  
 கடந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்த ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி, 23 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியைத் தழுவியது.   
இப்போது மொத்தமாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) 123 இடங்களையும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) 53 இடங்களையும் பெற்றுள்ளன. இதன்மூலம் இடதுசாரிக் கூட்டணி நாடாளுமன்றில் மூன்றில் இரண்டுக்குக் கிட்டிய பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.  
 இதேவேளை மாகாணங்களுக்கான தேர்தலில் ஏழில் ஆறு மாகாணங்களை இடதுசாரிக் கூட்டணி, அமோக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் அண்டை நாடுகளில் ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தியா விரும்பிய தேர்தல் முடிவாக இம்முடிவுகள் அமையவில்லை.   
இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை அறிவதற்கு நேபாளத்தின் கடந்தகாலத்தை மீட்டுப்பார்ப்பது முக்கியமானது. சீனாவை வட எல்லையாகவும் ஏனைய அனைத்துப் பக்கங்களாலும் இந்தியாவை எல்லையாகக் கொண்ட, நிலத்தால் சூழப்பட்ட நேபாளத்தின் சனத்தொகை 29 மில்லியன். 42 சதவீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கிறார்கள். கல்வியறிவு 48 சதவீதமாகும். 102 இனக்குழுமங்களையும் 93 மொழிகளையும் கொண்ட நேபாளத்தில் 80 சதவீதமானவர்கள்  இந்துக்கள், 11 சதவீதமானவர்கள் பௌத்தர்.   

உலகின் ஒரேயோர் இந்து இராஜ்ஜியமாகவும் முடியாட்சியாகவும் திகழ்ந்து வந்த நேபாளத்தின் முடியாட்சிக்கும் இந்து இராஜ்ஜியத்துக்கும், மக்களின் யுத்தத்தின் நீண்ட விளைவால் நேபாள மாவோவாதிகள் முடிவு கட்டினார்கள். 239 ஆண்டுகளாக நிலைத்த மன்னராட்சி, 2007ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.   
1950களில் இருந்து சர்வதேச அபிவிருத்தி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தும் நேபாளத்தில் அவற்றின் பயனுள்ள தடயமெதையும் காணமுடியாது. குடிநீர், மின்சார, நெடுஞ்சாலை, போக்குவரத்து வசதிகள் அரிதாகவேயுள்ளன. தலைநகர் காத்மண்டுவுக்கு வெளியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே நேபாளம் இருக்கிறது. உலகின் மிக வறுமையான 50 நாடுகளில் நேபாளமும் ஒன்று.   
1990 வரை அரசாங்கம் முற்றுமுழுதாக அரசரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 1990இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் விளைவாக அரசர் பீரேந்திரா, நாடாளுமன்ற முடியாட்சியை ஏற்றுக்கொண்டார்.   
இதன்படி அரசுத் தலைவராக மன்னரும் அரசாங்கத்தின் தலைவராக பிரதம மந்திரியும் இருப்பர். ஆயினும் ஆட்சி திருப்தியானதாக அமையவில்லை. 2007 டிசெம்பரில் மன்னாராட்சி நீக்கப்பட்டு, நேபாளம் சமஷ்டிக் குடியரசாகியதில் பிரதான பங்கு நேபாள மாஓவாதிகளைச் சாரும்.   
நேபாளம், தென்னாசியாவின் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள நாடாக இருப்பதற்கான காரணங்கள் பல. அவற்றுக்குள் நிலவுடமைச் சமூகத்துக்குப் பாதுகாவலாய் இருந்த முடியாட்சியினது பங்கு பெரியது. நேபாளத்தில் மன்னராட்சியின் வரலாறு முடிவுக்கு வந்தது மக்கள் போராட்டத்தின் விளைவாலேயேகும்.   
அந்த முடியாட்சி, ஒரு பயங்கரமான கொடுங்கோன்மையாக நடந்து கொண்டபோது கூட, அதை ஆதரித்து வந்தவர்கள் இருக்கிறார்கள். மன்னராட்சியிலிருந்தான நேபாளத்தின் விடுதலையின் பயனை, மக்கள் அனுபவிக்காமல் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாயிருந்தன.   
அமெரிக்கா வெளிவெளியாகவே மன்னராட்சியை ஆதரித்தது. மன்னராட்சி தடுமாறித் தத்தளித்த நிலையில், அமெரிக்காவின் தென்னாசிய அலுவல்களுக்கான செயலாளர் றிச்சட் பௌச்சர், நேபாள இராணுவத் தலைமையுடன் கலந்தாலோசனைகளை நடத்தினார்.   
இதன்மூலம் மன்னராட்சிக்கான அமெரிக்காவின் நேரடி ஆதரவையும் விருப்பையும் தெரிவித்தார். ஆனால், நேபாள மக்களின் போராட்டம் இதை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றது.  
நேபாளத்தின் மிகப்பெரிய சமூகமாற்றம் 1996 ஆம் ஆண்டு நேபாள மாஓவாதிகளால் தொடக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்ட மக்கள் யுத்தத்தின் விளைவிலானவை.  

========================================================================================
கே.ஆர்.நாராயணன்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், உழவூர் கிராமத்தில், 1920, அக்., 27ல் பிறந்தார். 
கோட்டயத்தில், கல்லுாரி கல்வியையும், கேரள பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்பையும் முடித்தார். 
இதழியல் படிப்பை முடித்த அவர், ஆங்கில நாளிதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றினார். 

லண்டன் பொருளாதார கல்விக் கழகத்தில், அரசியல் அறிவியலில் மேல்படிப்பை முடித்தார். 
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் துணைவேந்தராக பணியாற்றியவர்.

முன்னாள் பிரதமர், இந்திரா வேண்டுகோளை ஏற்று, 1984ல், அரசியலுக்குள் வந்தார். 

கேரள மாநிலம், ஒற்றப்பாலம் லோக்சபா தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில், திட்டம், வெளியுறவு, அறிவியல் தொழில்நுட்ப துறை இணையமைச்சராக பொறுப்பு வகித்தவர். 

1992ல் நாட்டின் ஒன்பதா-வது, துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1997ல்இந்திய குடியரசுத் தலைவரானார்.
  9 நவம்பர்  2005,ல் காலமானார்.
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?