வியாபம் ஊழலும், ஆன்லைன் ஏலமும்

 ம.பி. பாஜக ஆட்சியை அகற்றியது.!

மத்தியப் பிரதேசத்தில் பாஜக தோற்காது என்பதே, அக்கட்சித் தலைவர்களின் நம்பிக்கையாக இருந்தது. பசுவதைத் தடை, சாமியார்களுக்கு அமைச்சர் பதவிபோன்றவை தங்களைக் காப்பாற்றும் என்பதுதான் அந்த நம்பிக்கைக்குக் காரணம். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது.

மாறாக, மத்தியப்பிரதேசத்தில் பெரிய அளவிற்கு எழுந்த ‘வியாபம்’ ஊழலும், ஆன்லைன் ஏலத்தில் நடைபெற்ற ஊழலும், பாஜக தோல்விக்கு காரணமாகி இருக்கின்றன.

மத்தியப்பிரதேச பாஜக அரசானது, அம்மாநிலத்தில் மின்னணு மேம்பாட்டுக் கழகம் (MPSEDC) மற்றும்டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின்கூட்டு முயற்சி மூலம் ஆன் லைன் ஏலம் முறையைக் கொண்டு வந்தது. 


ஆனால்,தங்களுக்கு சாதகமானவர் களுக்கு ஏலம் கிடைக்கும் வகையில், இந்த மின்னணுஏலம் முறை வடிவமைக்கப் பட்டு இருந்தது பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டது.
மின்னணு மேம்பாட்டுக் கழக தலைமை இயக்குநர் மணிஷ் ரஸ்தோகிதான் இதனைக் கண்டுபிடித்தார். 

இதனால், ஆத்திரமடைந்த பாஜக அரசு, மணிஷ் ரஸ் தோகியை பழிவாங்கும் வகையில், அவரை இன்னொரு துறைக்கு பணிமாற்றம் செய்தது.
 ஆனால், இதுவே எதிர்க்கட்சிகளுக்கு மிகமுக்கியமான ஆயுதமாக மாறியது.

 சிவராஜ் சிங் சவுகான் அரசானது, மின்னணு ஏல முறையில் சுமார் 8000 கோடி ரூபாய்அளவிற்கு ஊழல் செய்திருப்பதை எதிர்க்கட்சிகள் ஊர்ஊருக்கு பிரச்சாரம் செய்தனர்.

ஏற்கெனவே, பல ஆயிரம் கோடி ரூபாய் தொடர்புடைய ‘வியாபம்’ ஊழலும் இதனுடன் சேர்ந்து கொண் டது. அது ஓரளவுக்கு நன் றாக எடுபடவும் செய்தது.

அதுவே தற்போது பாஜக ஆட்சியை ஒட்டுமொத்தமாக காவு வாங்கியிருக்கிறது.

மத்தியப்பிரதேசத்தில், மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளநிலையில், இங்கு கடந்த 2013-ஆம் ஆண்டு 165 இடங்களை பாஜக பெற்றது.

ஆனால், இந்த முறை 56இடங்களை பாஜக இழந் துள்ளது.
அதேநேரத்தில், அந்த 56 இடங்களை அப்படியே காங்கிரஸ் அள்ளியுள்ளது.
கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 58 இடங்கள்கிடைத்திருந்தது குறிப்பிடத் தக்கது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் விதேஷா சட்டமன்றத் தொகுதி பாஜக-வுக்கு முக்கியமானதாகும். கடந்த 1977-ஆம் ஆண்டிலிருந்து இந்த தொகுதி பாஜக வசமே இருந்து வந்தது.

ஆனால், தற்போது நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந் துள்ளது.
பாஜக வேட்பாளர் முகேஷ், காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீகிஷன் பார்கவிடம், 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விதேஷா தொகுதியைப் பறிகொடுத்துள்ளார்.

மாட்டு அமைச்சர் சுயேச்சையிடம் வீழ்ந்தார்


பாஜகவின் மாட்டு அரசியலுக்கு, ராஜஸ்தான் மக்கள் கொடுத்த மரண அடிக்கு, மற்றொரு உதாரணம்,

ராஜஸ்தான் மாநில பசு பாதுகாப்புத்துறை அமைச்சரான ஒட்டாராம் தேவசியின் தோல்வியாகும்.

ராஜஸ்தானில் பசுக்களைக் பாதுகாப்பதெற்கென தனி அமைச்சகத்தை பாஜக அரசு ஏற்படுத்தியது.

இதற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஒட்டாராம் தேவசி, நாட்டின் முதல் பசு பாதுகாப்புத்துறை அமைச்சர் என்று கூறப்பட்டார்.

அதற்கேற்பவே, எப்போது பார்த்தாலும், காதில் வளையம், தலையில் சிவப்பு கலர் துண்டு, கையில் ஒரு கம்பு சகிதமாக, மாடு மேய்ப்பவர் தோற்றத்திற்கு அவர் மாறினார். 

இதனால், அவருக்கு மாட்டு அமைச்சர் என்ற செல்லப்பெயரும் ஏற்பட்டது.

 இந்நிலையில், சிரோகி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஒட்டாராம் தேவசி, சுயேச்சை வேட்பாளர் சன்யம் லோதா என்பவரிடம் 10 ஆயிரத்து 253 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார்.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------------
  

மோடி-அமித்ஷாவுக்கு எதிராக 
பாஜகவுக்குள் கலகம்?
 பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி கூட்டணி இருக்கும்வரை பாஜக-வுக்கு வெற்றிதான் என்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
 ஆனால், உத்தரப்பிரதேசத்தில், கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தல்கள் முதல் பாஜக-வுக்கு தோல்வி துவங்கியது.
வரிசையாக, ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிர மாநில இடைத்தேர்தல்களில் பாஜக-வுக்கு தோல்வியே கிடைத்தது.
2014-க்கு பின், நாட்டில் மொத்தம் 30 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்த நிலையில், அவற்றில் வெறும் 6 இடங்களை மட்டுமே பாஜக பெற முடிந்தது.

இதனால், அமித்ஷாவின் ராஜதந்திரத்திற்கு, மத்தியப்பிரதேசம், மிசோரம், சத்தீஸ்ர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலத் தேர்தல் முக்கிய சோதனைக் களமாக மாறியது.

 இதனையறிந்து அமித்ஷாவும், மோடியும் விழுந்து விழுந்து பிரச்சாரம் செய்தனர்.
எவ்வளவு தகிடுதத்தங்களை அரங்கேற்ற முடியுமோ, மதவெறியைக் கிளப்பிவிட முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்தனர்.

ஆனால், ஐந்து மாநிலங்களில் ஒன்றில் கூட பாஜக ஆட்சிக்கு வர முடியாமல் தற்போது படுதோல்வியே பரிசாக கிடைத்துள்ளது.
இது மோடி - அமித்ஷா கூட்டணியை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.

இந்நிலையில், தொடர் தோல்விக்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷா-வும் பதவி விலக வேண்டும் என்று பாஜகவுக்கு உள்ளேயே கலகம் ஏற்பட்டுள்ளது.
 குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தில் மோடிக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஹிந்து யுவ வாஹினி அமைப்பினரும், நவ நிர்மாண் சேனாவும் ஒட்டியுள்ள இந்த சுவரொட்டிகளில், மோடி பதவி விலக வேண்டும் என்றும், ஆதித்யநாத் மூலம்தான் இனிமேல் நாட்டைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மோடிக்குப்பதிலாக 2019இல் பாஜக பிரதமராக ஆதித்யநாத்தை ஆர்.எஸ்.எஸ் கும்பல் கொண்டுவர எண்ணுகிறது.

ஆனால் மோடியைவிட பகிரங்கமாகவே கவி வெறி பிடித்து  அலைபவர் ஆதித்யநாத்  என்பது இந்தியாமுழுக்க அறிந்தது.
உ.பி.காவல்நிலையங்களுக்கு,அரசு அலுவலங்கள்,பள்ளிகளுக்கு காவியடித்தவர் ஆதித்யநாத் .அவரை முன்னிறுத்தினால் விளைவு மிக மோசமாகத்தான் பாஜகவுக்கு அமையும்.

முதலில் அவர் அடுத்த உ.பி.மாநிலத் தேர்தலில் வெல்கிறாரா,ஆட்சியைத் தக்கவைக்கிறாரா என்பதைப்பாருங்கள்.
=====================================================
ன்று,
டிசம்பர்-13.
 வெள்ளை வெள்ளி பனிச்சரிவில் 10000பேர்கள் பலி.(1916)
மோல்ட்டா குடியரசு தினம்(1974)
போலந்தில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது(1981)
தமிழக எழுத்தாளர் நா.பார்த்தசாரதி இறந்த தினம்(1987)
 பாய்ஜீ என்ற சீன ஆற்றின் டால்ஃபின் அரிய இனமாக அறிவிக்கப்பட்டது(2006)

 வெள்ளை வெள்ளி பனிச்சரிவு .
 
 1916 - வெள்ளை வெள்ளி என்று குறிப்பிடப்படும், இத்தாலியின் மர்மோலடா மலையில் ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கிய பனிச்சரிவு ஏற்பட்டது.
இது ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு மலையாகும்.

முதல் உலகப்போரில் நேச நாடுகள் அணியிலிருந்த இத்தாலியின் வீரர்களும், மைய நாடுகள் அணியிலிருந்த ஆஸ்திரிய வீரர்களும் இப்பகுதியில் போரில் ஈடுபட்டிருந்தனர்.

அன்று ஒரே நாளில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்த தெளிவான பதிவுகள் இல்லையென்றாலும், குறிப்பிட்ட பனிச்சரிவில் இறந்தவர்கள் எண்ணிக்கை பொதுமக்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

முதல் உலகப்போரில் பனிச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்கள் மட்டும் மொத்தம்  80 ஆயிரம் பேர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 பனிபடர்ந்த மலைகளில், வலுவற்ற அடுக்கின்மீது மென்மேலும் பனி உருவாகும்போது பனிச்சரிவு ஏற்படுகிறது. புவியீர்ப்புவிசை (மேலிருக்கும் அடுக்கின் எடை), சூரிய ஒளியால் உருகுதல், மழை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைக் காரணிகளாலும், மனித செயல்பாடுகளாலும் பனிச்சரிவுகள் ஏற்படுகின்றன. பனிச்சரிவுகளை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

உலர்ந்த தூள் போன்ற பனி சிறிய அளவில் சரியத் தொடங்கினாலும், மிக வேகமாகச் சரியும்.
இவை 190 கி.மீ. வேகத்தைக்கூட எட்டி மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிடும்.

ஈரமான சாந்து போன்ற பனி மெதுவாகவே நகர்ந்தாலும், அளவும் அடர்த்தியும் அதிகமாக இருப்பதால் பெரும் சேதத்தை விளைவிக்கும்.
மூன்றாவது வகையில் பனிப்பாளங்களே சரிந்து விழும்.

மிகப்பெரும்பாலான பனிச்சரிவு உயிரிழப்புக்களுக்கு, பாளங்கள் சரிவதே காரணமாக உள்ளது. இந்த வெள்ளை வெள்ளி நிகழ்வில் பனியைச் சரியச் செய்வதற்காகவே இரு தரப்பும் பீரங்கிகளால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு பனிச்சரிவால் மிக அதிக உயிரிழப்பு ஏற்பட்டவற்றில் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுகிறது.

முதலாவதாகக் குறிப்பிடப்படுகிற, 1970இல் பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு, பனிச்சரிவு ஆகியவற்றில் சுமார் 70 ஆயிரம் பேர் இறந்த நிகழ்வில், பனிச்சரிவில் மட்டும் இறந்தவர்கள் குறித்த பதிவுகள் இல்லை.

=====================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?