பாஜகவை காக்கும் எடுபிடிகள்.?
வரலாற்றறிஞசரின் பொருளாதாரக்கொள்(கை) ளைகள்.
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப் பட்டு இருப்பது கடும் விமர்சனத்திற்குஉள்ளாகி வருகிறது.
பொருளாதாரம் பயிலாத ஒருவரை, மோடி அரசு ஆளுநராக்கி இருப்பது, ரிசர்வ் வங்கிக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஆபத்தாக அமைந்து விடும் என்று எச்சரிக்கைகள் எழுந்துள்ளன.
காரணம் இந்திய நாட்டின் பொருளாதார நிலையை வடிவமைப்பதே ரிசர்வ் வங்கித்தான் .
இதுவரை பதவி வகித்த ஆளுநர்கள் எல்லாம் பொருளாதாரத்தில் மேற்படிப்பு படித்தவர்கள்,மேலைநாடுகளில் பனி புரிந்தவர்கள்,பலர் ஐ.எம்.எப் இல் உலகவங்கியில் பணிபுரிந்து உலகளவில் உள்ளநாடுகளின் பொருளாதாரத்தைப்பற்றிய நுபவத்தைப்பெற்றவர்கள்.
ஆனால் தற்போது மோடியால் ரிசர்வ் வங்கி ஆளுநராக திணிக்கப்பட்ட சக்திகாந்ததாஸ் வரலாற்றில் முதுகலை (எம்.ஏ.).
நம்மவர்கள் பலர் எளிதாக பட்டப்படிப்பு வெல்ல வரலாற்றைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பொருளாதார அறிவை பறைசாற்ற இந்தியாவை இன்றைய பொருளாதாரப்படுகுழிக்குள் தள்ளிய "பணமதிப்பிழப்பு "ஒன்றே போதும்.
அதில் மோடிக்கு வலதுகையாக மதிப்பிழப்பு செய்து பலர் சாவுக்கு காரணமாக அமைந்தவர் இவர்தான்.
மோடி அரசு 2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வந்தது.
அப்போது முதலே,நாட்டின் தன்னாட்சி அமைப்புக்கள் பலவற்றை, தங்களின் கைப்பாவையாக்கி குலைக்கும் வேலையை துவங்கி விட்டது.
அவற்றில் முக்கியமானது ரிசர்வ் வங்கி.ஆனால், அப்போதைய ரிசர்வ் வங்கிஆளுநர் ரகுராம் ராஜன் அதற்கு இடம்கொடுக்கவில்லை. குறிப்பாக பணமதிப்பு நீக்கத்திற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால், அவருக்குபதவி நீட்டிப்பு வழங்காமல், அவராகவேராஜினாமா செய்யும் சூழலை ஏற்படுத்திய மோடி அரசு, ரகுராம் ராஜன் இடத்தில், குஜராத்தைச் சேர்ந்த உர்ஜித்படேலை நியமித்தது.
அதைத்தொடர்ந்து, 2016 நவம்பரில் பணமதிப்பு நீக் கத்தை அறிவித்தது.2017 ஜூலையில் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அப்போது, இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் அரவிந்த்சுப்பிரமணியன். ஆனால், அவரிடம் ஆலோசனை பெறாமலேயே, தன்னிஷ்டத் திற்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்புகளை மோடி அரசு கொண்டுவந்தது.
இதனால், 6 மாதங்களுக்கு முன்பு, அரவிந்த் சுப்பிரமணியனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த 2 பேருமே, மிகத் திறமையான பொருளாதார அறிஞர்கள்.
உலகின் சிறந்த முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் என்று கருதப்படுபவர்கள்.
அவர்கள் இருவரையுமே மோடி அரசு வெளியேற்றியது.
இதனிடையே, ரிசர்வ் வங்கிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உர்ஜித் படேல்மூலம், ரிசர்வ் வங்கி வசமிருக்கும் ரூ. 9 லட்சத்து 60 ஆயிரம் கோடி கையிருப்பைப் பறித்து, பெருமுதலாளிகளுக்கு சூறையாட மோடி அரசு முயன்றது.
கையிருப்பிலிருந்து ரூ. 3 லட்சத்து60 ஆயிரம் கோடியை அரசுக்குத் தருமாறு கேட்டது. பெருமுதலாளிகளின் வராக்கடன் விஷயத்திலும் அனுசரித்துப் போகுமாறும் கட்டளையிட்டது.
இதனை ரிசர்வ் வங்கியின் துணைஆளுநர் விரால் ஆச்சார்யா பகிரங்கப்படுத்தினார்.
ரிசர்வ் வங்கியின் செயல் பாட்டில் மத்திய அரசு அத்துமீறுவதாக கண்டித்தார்.
பதிலுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான அஸ்வனி மகாஜன், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித்படேலை மிரட்டினார்.
நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு ஓடுங்கள் என்றார்.
ரிசர்வ் வங்கி தங்களுக்கு ஒத்துப்போவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
இவற்றால், அதிருப்தியடைந்த உர்ஜித் படேல், தொடர்ந்து அமைதியாக இருந்து வந்தார். குறிப்பிட்ட நிதியை அரசுக்கு வழங்குவதாகவும் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி அறிவித்தார்.
இதனால், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பணிந்து விட்டதாகவும், ரிசர்வ் வங்கியை குலைப்பதற்கு, உர்ஜித் படேலும் துணைபோய் விட்டதாகவும் விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில், டிசம்பர் 11-ஆம் தேதிஉர்ஜித் படேல், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ரிசர்வ் வங்கி என்ற நிறுவனம் சீர்குலைவதற்கு காரணமாவதை விட, பதவியை விட்டுப் போகலாம் என்ற முடிவே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.
மோடி அரசு, இதற்காகவே காத்திருந்தது போல ரிசர்வ் வங்கியின் புதியஆளுநராக சக்திகாந்த தாஸை நியமித்தது.
மத்திய அரசின் நிதிச் செயலாளராக இருந்து வந்த இவர், மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் உடன் இருந்தவர்.
ஏடிஎம் வாசல்களில் நாட்கணக்கில் மக்கள் நிற்க வைக்கப்படுவதாக புகார் வந்தபோது, ‘இவர்கள் யாரும்ஏழைகள் அல்ல; நிறைய ஏடிஎம் அட்டைகளை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதற்காகவே வந்தகூட்டம்தான் இது’ என்று கூசாமல் கூறியவர்.
வங்கிகளில் பணம் எடுக்கும் நபர்கள் மீண்டும் பணம் எடுக்காமல் இருக்க அவர்களின் கையில் ‘மை’ வைக்க வேண்டும் என்று யோசனை கூறியவர்.
ஒரு நிதிச்செயலாளராக சக்திகாந்ததாஸ் அரசுக்கு கொடுத்த ஆலோசனைகள், நாட்டு மக்களை வதைப்பதற்கே உதவியது. ஏனெனில் அவருக்கு பொருளாதாரம் பற்றி தெரியாது.
பணமதிப்பு நீக்கம் என்ன விளைவுகளை ஏற்படுத் தும் என்பது பற்றியெல்லாம் அறியாதவர்.
ஏனெனில் அவர் படித்தது, எம்ஏ வரலாறு.
அதன்மூலம் ஐஏஎஸ் ஆகி, நிதித்துறையில் நியமனம் ஆனவர்.
இப்படிப்பட்டவரைத்தான், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மோடி அரசுதற்போது நியமித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.
ரிசர்வ் வங்கியின் இதற்கு முந்தைய ஆளுநர்களான ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் போன்றவர்கள் எல்லாம்,பொருளாதாரத்துறையில் டாக்டர் பட்டம்பெற்றவர்கள்.
பல்வேறு நாடுகளில் பணியாற்றியவர்கள்.
ஆனால், மோடிக்கு தலையாட்ட வேண்டும் என்பதற்காக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
ரிசர்வ்வங்கியில் தகுதியான அதிகாரிகள் இப்போதும் இருக்கும்போது, சக்திகாந்த தாஸை நியமித்தது, ஆபத்தைஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.
பாஜக தலைவரான சுப்பிரமணியசாமியும் இந்த நியமனத்தை எதிர்த்துள்ளார்.தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் என்ற பாஜக ஆதரவாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால்தான் விவசாயம்,எயிறுதொழிலதிபர்கள்,தொழிலார்கள் இன்று நடுத்தெருவில் .பலர் தற்கொலை,சாவுகளுக்கு கரணம் மோடி,சக்திகாந்ததாஸ் கொண்டுவந்த பணமதிப்பிழப்புதான்.
நோக்கம் நல்லதாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தல் அறிவு கொஞ்சமும் இல்லாததால்தான் இவ்வளவு சோக முடிவுகள்.அன்று வீழ்ந்த பணமதிப்பு அதன் பின் சரிந்து கொண்டே போகிறதே தவிர மீண்டெழும் வழியில்லை.
அதற்கான தீவும்,தெளிவும் மோடினாமிக்ஸ் ஆட்களிடம் இல்லை.
அமித் ஷா,மோடி எண்ணியபடி தங்களுக்கான அடிமையை ரிசர்வ் வங்கி பொறுப்பில் அமர்த்தி விட்டார்கள்.
வரலாறு படித்தவர் பணமதிப்பிழப்பு வரலாறில் இருந்து ஏதாவது கற்றுக்கொண்டாரா என்பது இனிதான் தெரியும்.
ஆனால் அவர் படித்த வரலாறில் பாபர் மஸூதிக்கு கீழ் ராமர் இருப்பதாகத்தானே இருக்கும்?
இனி இந்திய பொருளாதாரம்?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேகதாது பாஜகவை காக்கும் எடுபிடிகள்.?
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விவாதிக்கவேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கையில்நியாயம் இருந்தாலும் இதர முக்கியமான பிரச்சனைகள் முன்னுக்கு வரும்போது அதுகுறித்த விவாதத்தை சீர்குலைக்கவேண்டும் என்றநோக்கத்தில் அக்கட்சி நடந்து கொள்கிறதோ என்ற ஐயம் அனைத்து கட்சிகளுக்கும் எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர்ராஜினாமா?
ராமர் கோயில் விவகாரம்,
உத்தரப்பிரதேசத்தில் மதவெறியர்களால் காவல்துறை அதிகாரி அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம், விவசாயிகளின் கடன் பிரச்சனை,
மேகதாது அணை ,
அதிகரித்து வரும் வேலையின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சனைகளில் மத்திய அரசைக் காப்பாற்றும் நோக்கில் அதிமுக நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மேற்படி பிரச்னைகளுடன் மேகதாது அணை விவாதத்தையும் நடத்திட எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்படாமல் தனியாக அதிமுக சபை அலுவல்களை முடக்கத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு குழப்புவதில் உள்நோக்கம் உள்ளதாகவே தெரிகிறது என்கின்றன மக்களவை எதிர்க்கட்சிகள்.
மேகதாது பிரச்னை பற்றியும் விவாதிக்க உதவுவதாக எதிர்க்கட்சிகள் அதிமுக மக்களவைத் தலைவரிடம் கூறியும் அதை கண்டு கொள்ளாமல் தனியாக அவை நடவடிக்கைகளை சீர்குலைத்து மற்ற முக்கிய பிரசனைகளை பற்றியும் விவாதம் நடத்தவிடாமல் அதிமுக இடையூறு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் கூறுகின்றன.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் மத்தியஅரசுக்கு எதிராக, தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தபோது அந்தத்தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுவதற்கான சூழலை அதிமுக திட்டமிட்டு சீர்குலைத்து தேவையற்ற குழப்பங்களை எழுப்பி அவையை நடத்தவிடாமல் செய்து மோடி அரசைக் காப்பாற்றியது.
அவையில் நாள்தோறும்ஏற்பட்ட அமளியைப் பயன்படுத்தி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அவைத்தலைவர் நிராகரித்தார்.
அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றிருந்தால் அதில் பங்கேற்றுக்கூட அதிமுக உறுப்பினர்கள் காவிரிமேலாண்மை வாரியம் மட்டுமல்ல பல்வேறு பிரச்சனைகளில் தங்களது கருத்தை வலுவாக பதிவு செய்திருக்கமுடியும்.
நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள், தம்பிதுரை, வேணுகோபால் போன்றஅதிமுகவின் மூத்த எம்.பி.,க்களுக்கு தெரியாமல்இருக்காது.
ஆனாலும், விடாப்பிடியாக அப்போது அமளி செய்தனர். இப்போதும் அதேபோல் நடந்துகொள்கின்றனர். அதிமுகவின் இந்தச் செயல், நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்த மோடி தலைமையிலான பா.ஜக அரசைக்காப்பாற்றும் நடவடிக்கையைத் தவிர, வேறொன்றும் இல்லை.
மறுபுறம் எதிர்க்கட்சிகளின் கோபாவேசத்தில் இருந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அ.தி.மு.க எம்.பி.,க்களை பாஜகவும் நன்கு பயன்படுத்திக்கொள்கிறது.
மேகதாது அணை விவகாரம் மிகமுக்கியமான பிரச்சனை என்பதை மறுப்பதற்கில்லை.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்டினால் காவிரி டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், அதற்கான சூழலை மத்தியஅரசும் இரு அவைகளின் தலைவர்களும் ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் அவையை நடத்தவிடாமல் செய்வதன் மூலம் எந்தப்பிரச்சனையையும் விவாதிக்க முடியவில்லை என்றுஅதிமுக மீது பழியை போட்டு பாஜக எளிதாகத்தப்பித்துக்கொள்கிறது.
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரிடெல்டா மாவட்டங்களுக்கு மத்திய அரசுபோதிய நிதியுதவியை வழங்கவில்லை.
இந்தகூட்டத்தொடரில் இதுகுறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம்.
அதைவிட்டுவிட்டு மக்களின் விருப்பத்திற்கு விரோதமாகவும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு விரோதமாகவும் அதிமுக தொடர்ந்து நடந்துகொள்ளுமேயானால் வரும் மக்களவைத்தேர்தலில் அதற்கான விளைவை அக்கட்சி அனுபவிக்கப்போவது நிச்சயம்.
இந்நிலையில் ஆன்மிக அரசியல் ரஜினிகாந்த் தனது திருவாய் மலர்ந்துள்ளார்.
"மேகதாது ஆணையால் தமிழகத்துக்கு நிர்வரத்துக் குறையுமா என்பதை ஆராய்ந்து அதன் பின் எதிர்க்கவேண்டும் "என்று தனது கன்னட பாசத்தை காட்டியுள்ளார்.
தமிழகத்துக்கு திறந்து விடும் தண்ணீர் வரும் வழியிற் மறித்து கர்நாடக எல்லை அருகே கட்டப்படுவதுதான் இந்த அணை .
இது காவிரியில் திறந்து விடும் தண்ணீரை தேக்கி அதிகமானத்தைத்தான் தமிழகத்துக்கும் அனுமதிக்கு என்பது சின்ன பப்புகளுக்கே தெரியும் போது கன்னட ரஜினிக்கு தெரியாமல் போனது வியப்பே அல்ல.
ரஜினிகாந்த் சிஸ்டம் அப்படி.
======================================================
இன்று,
டிசம்பர்-14.
இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
ரைட் சகோதரர்கள், தமது வான்வெளிப் பயணத்தை முதல் முறையாக சோதித்தனர்(1903)
நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது(1939)
ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவானது(1946)
=====================================================
இந்தியா முஸ்லிம் நாடாகாமல் தடுக்க வேண்டும்!
இந்தியா முஸ்லிம் நாடாக மாறுவதை தடுக்க வேண்டும்; இதனைபிரதமர் நரேந்திர மோடியால்தான் செய்ய முடியும் என்று மேகாலய உயர் நீதிமன்ற நீதிபதியான சுதீப்ரஞ்சன் சென் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவை ஒரு இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் வெறியை கிளப்பியுள்ளார்.
அமோன் ராணா என்பவர் குடியுரிமைச் சான்றிதழ் கோரி மேகாலயா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
புதனன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதீப் ரஞ்சன் சென், தீர்ப்புக்கு வெளியே தனிப்பட்ட வகையில் சில கருத்துக்களையும் தெரிவித்தார். அதில்தான் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கியுள்ளார்.
சுதீப்ரஞ்சன் சென் மேலும்கூறியிருப்பதாவது:அஸ்ஸாமில் நடந்து வரும் தேசியக் குடியுரிமை பதிவு பணிகளில் நிறைய தவறுகள் உள்ளன.அந்த பதிவின்படி, வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இந்தியர்களாகி உள்ளனர். இந்தியர்கள் விடுபட்டுள்ளனர். இது மிகவும் கவலைதருகிறது.
யாரும் இந்தியாவை இன்னொரு இஸ்லாமிய நாடாக்கமுயலக் கூடாது.
அப்படி செய்ய முயன்றால் இந்தியாவும் சரி, உலகமும் சரி பேரழிவை சந்திக்கும்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்கெனவேஇங்கு வந்து விட்ட, இனியும் வரப்போகிற முஸ்லிம்கள் அல்லாத சமூகத்தினரை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீநரேந்திர மோடிஜியின் கீழ்இயங்கும் இந்த அரசினால் மட்டுமே இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்ள முடியும். இதன் ஆழத்தை உணர முடியும்.
எனவே,தேவையானதை பிரதமர் செய்யவேண்டும். மேற்கு வங்க முதல்வர்மம்தாஜியும் தேசிய நலன் கருதிபிரதமருக்கு ஆதரவாக இருப்பார்.
ஒன்றுபட்ட இந்தியா இந்து சாம்ராஜ்யமாக இருந்தது.
ஆனால் முகலாயர்கள் வந்த பிறகு இந்தியாவின் பல பகுதிகளை அவர்கள் பிடித்துக் கொண்டனர்.
நாட்டை ஆள ஆரம்பித்தனர்.
பின்னர் கட்டாய மதமாற்றம் நடக்க ஆரம் பித்தது. பிரிவினைக்குப் பின், பாகிஸ்தான் நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண் டது.
அதேபோல இந்தியா, தன்னை இந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்.
ஆனால் மதச்சார்பற்ற நாடாகவே அது இருக்கிறது. இவ்வாறு சுதீப்ரஞ்சன் சென் கூறியுள்ளார்.தனது தீர்ப்பின் நகலை பிரதமர், உள்துறை அமைச்சர், சட்டஅமைச்சர் ஆகியோருக்கு கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி சுதீப் ரஞ்சன் சென்னின்இந்த பேச்சு, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நீதிபதி போல அல்லாமல், பாஜக கட்சி உறுப்பினரைப் போல சுதீப் ரஞ்சன் சென் பேசியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேற்குவங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி சென்,ஷில்லாங்கில் பிறந்து வளர்ந்தவர்.
2014-இல் மேகாலயா உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அவருக்கு இன் னும் ஒரு வருடம் பதவிக்காலம் உள்ளது.
இவைபோன்ற மத வெறி பிடித்த காவி நீதிபதிகள் இன்னும் பலர் கருப்பு அங்கிக்குள் மறைவாக உள்ளனர்.
இதனால்தான் மோடி கட்சியினர் "போடா அந்த உச்சிக்குடுமி நீதிமன்றமே எங்கள் பையில் "என்று சொல்லிவருகின்றனர்.