"சுதேசி"கார்ப்பரேட் சாமியாரின் "சீன ஒப்பந்தம்".

யோகாகுரு சாமியார் என கூறிக்கொண்டு, இன்று நாட்டின் மிகப்பெரிய முதலாளிகளில் ஒருவராக ,கார்பரேட்டாக மாறியிருப்பவர் ராம்தேவ் எனப் படும் பாபா ராம்தேவ்.

கடந்த 2006-ஆம் ஆண்டு, ராம்தேவ் ஆரம்பித்த ‘பதஞ்சலி’ நிறுவனம், இன்று ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.இதற்கு பாஜக அரசும்,காவிகள் அமைப்புகளும் செய்த உதவி அதிகம்.அரசு நிலங்களை வரை வழங்கியது,உ.பி,ராஜஸ்தான் ,ம.பி அரசுகளின் அணைத்து தேவைகளுக்கும் பதஞ்சலி தயாரிப்புகளைத்தான் வாங்க வேண்டும் என்று அரசாணையே வெளியிடப்பட்டது.
‘பதஞ்சலி’ நிறுவனத்தின் 10%பங்குதாரரான ஆச்சார்யாபாலகிருஷ்ணாவின் சொத்து மதிப்புமட்டும் ரூ. 57 ஆயிரம் கோடியாக உள்ளது. நாட்டின் பெரும்பணக்காரர்களில் 11-ஆவது இடத்தில் அவர் வந்திருக்கிறார்.
அப்படியெனில் சாமியார் ராமதேவ் சொத்து எவ்வளவு இருக்கும்?

மிகக் குறுகிய காலத்தில், பதஞ்சலி நிறுவனம் அடைந்த இந்த வளர்ச்சிக்கு, ராம்தேவ் கையிலெடுத்த ‘சுதேசி’ பிரச்சாரம் முக்கியமான ஒன்றாகும்.

 ‘பதஞ்சலி’ நிறுவனம் தயாரிக்கும் பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்டவை, ரசாயனக் கலப்பு அற்றவை, முழுக்க முழுக்கஉள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட் களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை- ஒரு முழுமையான ‘சுதேசி’ தயாரிப்பு என்றுவிளம்பரம் செய்தார்.

ஆனால் அவரின் தயாரிப்புகள் விலங்குகளின் எச்சங்கள் கலக்கப்பட்டுள்ளன,ரசாயனங்கள் அதிகமாக உள்ளன என இந்திய உணவு தரக்கட்டுப்பாடு நிறுவனம் அறிவித்துள்ளது.அத்துடன் பதஞ்சலி தயாரிப்பு நூடுல்ஸ்,நெய்,நெல்லைக்காய் சாறு (ஆம்லா ஜூஸ்)மற்றும் சில எண்ணெய்,சோப் வகைகளைத்தடை  செய்தது.
ஆனால் மோடியிடம் தனக்குள்ள செல்வாக்கினால் இந்தத் தடையுமின்றி அவைகளை தயாரித்து விற்று வருகிறார் ராமதேவ்.
கேட்டால் தனது சுதேசி இந்திய தயாரிப்புகளைக்கண்டு மிரண்டு பன்னாட்டு நிறுவனங்கள் சதி.அதை முறியடிப்போம் என்று வேதாந்தம் பேசினார்.

அண்மையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து, சிம் கார்டு ஒன்றை ராம்தேவ் அறிமுகப்படுத்தினார். அந்த சிம்கார்டுக்கும் கூட ‘சுதேசி சம்ரிதி’ என்றுதான் பெயர் வைத்தார்.

அந்த அளவிற்கு ‘சுதேசி’ பேசி வந்தார்.
இந்திய சந்தையை, அந்நிய நாடானசீனா ஆக்கிரமித்துள்ளதால், சீன பொருட் களை புறக்கணிக்க வேண்டும் என்று ராம்தேவ் கூறினார்.
சீனாவுடன் வர்த்தகம் கூடாது என்றார்.

இந்திய நாட்டின் பொருளாதாரம் வளர வேண்டுமானால், முதலில்சீன பொருட்களை நிராகரிக்க வேண்டும்;அதனுடனான வர்த்தக உறவுகளை கைவிடவேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.

அவரின் பதஞ்சலி தயாரிப்புக்களை விற்பதற்கான உத்தியாகவும் இது அமைந்தது.

ஆனால், நாட்டின் தற்சார்பு பொருளாதாரத்திற்கு ராம்தேவ் வழிகாட்டுகிறார்;
நவீன சுதேசியின் அடையாளமே ராம்தேவ்தான் என்று இந்துத்துவா கூட்டாளிகள்ஊரெங்கும் பீற்றினர்.
 பதஞ்சலி நிறுவனத்தின் வர்த்தகப் பெருக்கத்திற்கும் அதுபெரிய உதவியாக அமைந்தது.

ஆனால், ராம்தேவ் இவ்வளவு காலம் எந்த ‘சுதேசி’ மூலதனத்தை வைத்து, உள்நாட்டு பெருமுதலாளி ஆனாரோ, இன்று அந்த ‘சுதேசி’ முழக்கத்தை சத்தமில்லாமல் தூக்கி வீசிவிட்டு, இதுவரை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த சீனா நாட்டுடனேயே வர்த்தக ஒப்பந்தம் செய்துள் ளார்.

 கலை, கலாச்சாரம், யோகா, ஆயுர்வேதசோதனைகள், மூலிகை மருந்து உற்பத்தி,சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், கல்விஆகியவற்றில், சீன அரசின் உதவியை பெறுவது என்று ‘பதஞ்சலி’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்பந் தத்தில் பதஞ்சலி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான ஆச்சார்யா பாலகிருஷ்ணா கையெழுத்திட்டுள்ளார்.
சீன அரசுடன், பதஞ்சலி செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் பதஞ்சலி நிறுவனத்திற்குமட்டுமன்றி, இந்திய கலாச்சாரத்திற்கே பெருமையளிக்கும் ஒப்பந்தம் என்றும், ராம்தேவின் சர்வதேச வர்த்தகம் விரிவடைந்து உள்ளதாகவும் ராம்தேவ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது, ராம்தேவின் இந்துத்துவ காவி கூட்டாளிகளையும், அவரது சுதேசி முழக்கத்தில் மயங்கிக் கிடந்தவர்களையும் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஒரு தேசிய நிறுவனம், அந்நிய நாட்டுடன், அதிலும் சீனா போன்ற எதிரி நாடுகளுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக் கூடாது என்று நாட்டுக்கு உபதேசம் செய்தவர் ராம்தேவ். 

அவரின் இந்த உபதேசம் ஊருக்குத்தானா?
இதுவரை அவர் போட்டது வேடமா?என்று திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

மற்றொரு புறத்தில், ராம்தேவின் லாப நோக்கம் நிறைவேறப் போவதில்லை என்றுகூறியிருக்கும் அவர்கள், பதஞ்சலி நிறுவனத்தை விரைவிலேயே சீனா விழுங்கி விடும்.
அதுதான் நடக்க வேண்டும் என்று பொருமுகின்றனர்.

ஆனால் கார்ப்பரேட் சாமி ராமதேவோ  தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், திடீரென மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 “தற்போது இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து விட்டதாகவும், இளைஞர்களிடையே உள்ள அனைத்து மனக் குழப்பங்களுக்கும் வேலையின்மையே முக்கியக் காரணமாக உள்ளது.
ஒரு தொழிலதிபராகவும், யோகா ஆசிரியராகவும், நான் பல வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இருக்கிறேன்.
 ஆனால், ஆட்சியாளராக இருந்துகொண்டு பிரதமர் மோடி அதைச் செய்யத்தவறி விட்டார்.
என்னால் 6 மாதத்தில் இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
 மத்திய பாஜக அரசு எத்தனை வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இருக்கிறது?

 பெட்ரோல் - டீசல் விலைஉயர்வால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
 இந்த விஷயத்தை, பிரதமர் மோடி ஒரு சாமானியனின் மனநிலையிலிருந்து யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், விலைவாசி உயர்வு காரணமாகவே மோடிமீண்டும் பிரதமர் ஆக முடியாமல் போய்விடும்.


 கடந்த 2014-ஆம் ஆண்டுநடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், மோடிக்கும் ஆதரவாகநான் பிரச்சாரம்  செய்தேன்.
 இந்தமுறை ஏன் அவர்களுக்காக நான் பிரச்சாரம் செய்ய வேண்டும்?நான் பாஜக-வுக்கும்,மோடிக்கும் ஆதரவாக 2019 தேர்தலில் பிரச்சாரம் செய்யமாட்டேன்” 
என்று மோடியையும்,பாஜக அரசையும் விளாசியுள்ளார்.

அதன் பின்னணியில்தான் சீன -பதஞ்சலி ஒப்பந்தம் நடந்துள்ளது.

 நடந்துள்ள தேர்தலிலெல்லாம் மோடியும் ,அமித்ஷாவும் பலவழிகளில் முயன்றும் தோல்விகளையே சந்தித்து வருவதுதான் ராமதேவின் இந்த தடாலடி மாற்றத்துக்கு காரணமாக இருக்கும்.

என்னவோ மோடி பலசாலி,பத்து பேர்கள் சேர்ந்துதான் அவரை எதிர்க்கிறார்கள்,அவர் மக்களுக்காக உழைக்கிறார் என்று சொன்ன ஆன்மிக அரசியல்வாதிகள்,கார்பரேட்கள்  எல்லோரும் தங்கள் தொனியை மாற்றி வருவதை காண முடிகிறது.

ஆனால் இதை உணர வேண்டிய மோடி,அமித் ஷா க்கள் கண்டு கொண்டு இனியாவது மக்கள் நலன் பற்றி யோசிப்பார்களா ?

மோடியைப்பொறுத்தவரை அவருக்கு மாற்றாக உ.பி.ஆத்தியநாத் ராஜகுருவை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ், முயல்கிறது என்பது தெரியாமல் இராது.
பார்த்து பக்குவமா நடந்து கொள்ளவேண்டும் மோடி.

அத்வானியையே தனது பாதையில் இருந்து விலக்கி பிரதமர் நாற்காலியை கைப்பற்ரிய அவரின் சாணக்கியம் இம்முறை கைகொடுக்குமா?
--------------------------------------------------------------------------------------------------------
         மக்கள் மய்யஅரசியலும்                                                  ஆன்மிக கார்ப்பரேட் அரசியலும்.
கஜா புயல் பதித்த பகுதியில் மூன்றாம் முறை ஆறுதல்-நிவாரணம்   
அம்பானிமகள் மனவிழாவில் மனைவியுடன் உதய்ப்பூர்.

====================================================
ன்று,
டிசம்பர்-18.
உலக  இடம்பெயர்வோர் தினம்
கத்தார் தேசிய தினம்
 நியூஜெர்ஸி,அமெரிக்காவின் 3வது மாநிலமாக இணைந்தது(1787)
நைஜர் குடியரசு தினம்(1958)
ஹச்.டி.எம்.எல்., 4.0 வெளியிடப்பட்டது(1997)
====================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?