புதன், 19 டிசம்பர், 2018

நண்பேண்டா.


‘அதானியே நாட்டை விட்டு வெளியேறு’
பிரதமர் மோடியின் நண்பரும், இந்திய பெருமுதலாளிகளில் ஒருவருமான அதானி, ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க மேற்கொண்டு வரும்முயற்சிக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் மீண்டும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

குஜராத்தை தலைமையகமாக கொண்ட அதானி நிறுவனம், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்திலுள்ள ‘கார்மைக்கல்’ பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க திட்டமிட்டது.

16.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த நிலக்கரிச்சுரங்க திட்டத்திற்கான ஒப்பந்தம், 2015-ஆம்ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஆஸ்திரேலியாவில் கையெழுத்தானது.

நிலக்கரிச் சுரங்கத்தை ஏலத்தில் எடுப்பதற்கு, பாரத ஸ்டேட் வங்கி அதானிக்கு ரூ. 6 ஆயிரம் கோடி கடனும் கிடைத்தது.
 பாரதஸ்டேட் வங்கியின் தலைவர் ஆஸ்திரேலியாவுக்கே சென்று இந்த கடனை அளித்தார்.
 மறுபுறத்தில் ஆஸ்திரேலிய அரசும் ரூ. 6 ஆயிரத்து 500 கோடி நிதியுதவி அளித்தது.

ஆனால், நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கு அதானி திட்டமிட்டுள்ள, ஆஸ்திரேலியாவின் ‘கார்மைக்கல்’, ‘கிரேட் பேரியார் ரீப்’ என்ற பவளப் பாறைகள் நிறைந்தபகுதி என்பதால், அதற்கு மக்கள் மத்தியில்கடும் எதிர்ப்பு எழுந்தது.


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரை, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், கோல்ட்கோஸ்ட் ஆகிய நகரங்களில் சுமார் 40 இடங்களில் ஆயிரக்கணக்கில் திரண்ட அந்நாட்டு மக்கள், STOP ADANI, ADANI GO HOME (அதானியே நிறுத்திக்கொள்; உன் நாட்டிற்கே திரும்பு) என்ற பதாகைகளை உயர்த்தியும், முழக்கங்களை எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கார்மைக்கல் கடற்பகுதியில் வாழும் அரிய உயிரினங்கள் ஏற்கெனவே அழிந்து வரும் நிலையில், அதானியின் நிலக்கரித் திட்டத்தை செயல்படுத்தினால், கடல் மேலும் மாசுபடுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் கேள்விக்குள்ளாகும், கடல்வாழ் உயிரினங்கள் பேரழிவைச் சந்திக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
அதனடிப்படையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

‘Stop Adani Alliance’என்ற பெயரில்30 சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள்ஒன்றாக இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இவர்கள் பொதுமக்களுடன் இணைந்து, STOP ADAN என்ற வடிவத்தில் மனித சங்கிலியையும் உருவாக்கினர்.
இதையொட்டி, ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அந்நாட்டு மக்கள் சுமார் 70 சதவிகிதம் பேர் அதானியின் திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தனர்.

இதனால், அதானி நிறுவனத்திற்கான சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைப்பதில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கல்இருந்து வருகிறது.

எனினும், திட்டத்திற் கான அனுமதியை ரத்து செய்ய, ஆஸ்திரேலிய அரசு தயாராக இல்லை. அதானிக்குசாதகமாகவே ஆஸ்திரேலிய அரசு இருக்கிறது.

 மறுபுறத்தில் ஆஸ்திரேலிய மக்களும் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை.ஆயிரக்கணக்கானோர் தங்களின் குழந்தைகளுடன் தொடர்ந்து போராட்டத்தில் பங் கேற்று வருகின்றனர்.

டிவி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போதே உள்ளே சென்று போராடுவது, விளையாட்டு போட்டிகளின் போது போராடுவது, மைதானத்திற்குள் சென்று போட்டிகளின் போது போராடுவது என்று மிக வித்தியாசமான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிநடந்து வரும் நிலையில், ‘அதானியே நிறுத்திக் கொள்’ (STOP ADANI) என்றஇயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தியுள்ளனர்.

இதற்காக இணையதளத்தையும் உருவாக்கியுள்ள அவர்கள், இந்திய - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகளிலும் கூட‘அதானியே நிறுத்திக்கொள், உன்நாட்டிற்குதிரும்பிப் போ’ என்ற பதாகைகளை காட்டிஎதிர்ப்பை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளனர்.

 இப்போராட்டம் வரும் காலத்தில் மேலும் வலுவடையலாம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், அண்மையில் ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக  நடத்தப்பட்ட மாபெரும் கருத்துக் கணிப்புகளில், அந்நாட்டு மக்கள் சுமார் 70 சதவிகிதம் பேர் அதானியின் திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.அது ஆஸ்திரேலிய அரசை அதிரச்செய்துள்ளது

இந்தியாவைச் சூறையாடி வரும் அதானி,இங்கு ஒரிசா,பீகாரை,ஆந்திரா,தெலுங்கானா மக்கள்கள் நல்வாழ்வை சீரழித்தும் காணாதென தனது தொழிலை ஆஸ்திரேலியாவுக்கும் விரிவுபடுத்திய நிலையில், அந்நாட்டு மக்கள் தங்களின் இயற்கை வளத்தை அதானிக்கு காவு கொடுக்க மாட்டோம் என்ற உறுதிப்பாட்டுடன் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

அங்கு பசுமைத்தீர்ப்பாயம் உண்மையிலேயே பசுமைத் தீர்ப்பயமாக லஞ்ச ஊழலின்றி ,கர்ப்பரேட்களுக்கு ஆதரவாக இயங்கமால் நடுநிலையுடன் இருப்பதால் அதானி சுரங்கத்தால் ஏற்படும் பாதிப்பை வெளிப்படையாக அறைக்கும்,மக்களுக்கும் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட்  போன்று மக்களுக்கு நாசகரமான நோய்களை வழங்கமால்,காற்று,நிலத்தடி நீரை விஷமக்காமல் இச்சுரங்கம் பவளப்பாறைகளை அழிக்கும்,அரிய நீர்வாழ் உயிரினங்களை அழிக்கும் என்பதற்கே ஆஸ்திரேலிய மக்கள் கொதித்தெழுகிறார்கள்.

அங்கு மட்டும் மோடியின் மற்றோரு நண்பன் அணில் அம்பானி ஸ்டெர்லைட்டை கட்டியிருந்தால்...?
 நண்பேண்டா.
அகமதாபாத் நோக்கி பிழைப்புக்காகக் குடிபெயர்ந்த ஒரு நொடித்துப்போன ஜவுளி வியாபாரியின் மகன்தான் மோடியின் உயிர்நண்பர்  கௌதம் அதானி.

சிறிய அளவில் 1988-ல் கடை துவக்கிய  கௌதம் அதானி எப்படி அதானி குழுமம் வெறும் 27 ஆண்டுகளுக்குள்  28 நாடுகளில் கிளை பரப்பி தொழில் செய்கிறது என்ற உண்மைக்குப்பின்னால் நரேந்திர மோடி என்ற மனிதன் உள்ளார் .
அவர் குஜராத் முதல்வரானதும் கௌதம் அதானிக்காக என்னெவெல்லாம் செய்தார் .அரசு நிலங்கள்,ஒப்பந்தங்களை எப்படி வாரி வழங்கி ஒப்படி வளர்த்தார் என்பதை அப்படியே இங்கே விவரிப்பதற்கு இடம் இல்லை.அந்த கதைக்கு இப்போது தேவையும் இல்லை.எனவே சுருக்கம்.
 ராகுல் காந்தியின் கூறியதையே இங்கு நாமும் கேட்போம்.
 “குஜராத்தில் மோடி ஆண்ட 2002-2014 காலகட்டத்தில் மட்டும் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ. 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி?”
 அதற்கான பதிலை இந்த போர்ப்ஸ்’ வெளியிட்ட  கட்டுரைக் காட்டுகிறது.

 குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஆட்சியில் கட்ச் வளைகுடா பகுதி கிட்டத்தட்ட முழுக்க அதானி குழுமத்துக்கு அரசு விதிகள் அனைத்தையும் மீறி 7,350 ஹெக்டேர் 30 வருஷக் குத்தகைக்கு சில்லறை காசுக்கு அளிக்கப்பட்டது.
அப்படி அளிக்கப்பட்ட நிலத்தை அனறைய சந்தை விலையைக் காட்டிலும் கிட்டத்தட்ட 15 மடங்கு அதிக தொகைக்கு ‘இந்தியன் ஆயில்’ உள்ளிட்ட அரசு நிறுவங்களுக்கே  அதானி குழுமம் உள்குத்தகைக்கு விட்டதும்,அந்த இடத்தை முன்பே பொதுத்துறை நிறுவங்களான இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம் ஆகியவை யெல்லாம் ஒப்பந்தத்துக்கு கேட்டபோது குஜராத் மோடி அரசு மீனவர் வாழ்க்கை,மீன்வளம் பாதிக்கும் என்று கூறி தரமறுத்த உண்மையெல்லாம் அந்தக் கட்டுரை போட்டுடைத்தது..

நண்பேண்டா.
ஆண்டுதோறும்  வெளியான தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகளும் மோடி அரசு பெருநிறுவனங் கள் மீது குறிப்பாக அதானி குழுமத்தின் மீது காட்டிய பாசத்தையும் அரசு விதிகளை மீறி தனிப்பட்டமுறையில் கொடுத்த கட்டுப்பாடற்ற முறைகேடுகளான சலுகைகளையும் கூறின.

பிரதமரான பின்னரும் நரேந்திர மோடி வழக்கமான இன்ப சுற்றுலா சென்று வரும் வழியில் திடீரென பாகிஸ்தானில் இறங்கி அங்குள்ள பிரதமரை சந்தித்துப்பேசினார்.
திட்டமிடலில் இல்லாத இந்த திடீர் கூத்து இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளை அதிரவைத்தது.பாகிஸ்டதான் பிரதமரும் அதிர்ச்சியுடன்தான் மோடியை தரையிறங்க அனுமதித்து பேசினார்.

அப்பேச்சு இந்திய-பாகிஸ்தான் மோதலைத்தவிர்க்க அல்ல என்பதும் ,அங்கு  அதானி துவக்க இருக்கும் தொழிலுக்கு அனுமதி  கிடைக்காததை குறிப்பிட்டு சிபாரிசு செய்து உரிமத்தை  பெற்று அதானிக்கு சமர்ப்பித்தும் பாகிஸ்தான் நாளேடுகள் மூலம் தெரியவந்தது.

தான் இருக்கும் டெல்லியிலே 60 நாட்கள் கையில் மனுவுடன் சந்திக்க நேரம் கேட்டு நிர்வாணம் வரைக்கும் போராடிய தமிழக விவசாயிகளை சந்திக்க நேரமில்லாதவர்,கஜா புயலால் சின்னாபின்னமாக தஞ்சை பகுதி மக்களை இன்றுவரை ஆறுதல் கூற சந்திக்க ,இழப்பீடு வழங்க காலமில்லாதவர்  நண்பனுக்காக பகை நாட்டுக்குள்ளேயே தைரியமாக சென்று வென்று வந்த மோடியின் செயல் நட்பின் மகத்துவதைக்கட்டுகிறது.

கிட்டத்தட்ட திருபாய் அம்பானியின் முறைகேடான வெற்றிக்கதை போல்தான்  அதானியின் வெற்றிக் கதையும்!

=====================================================
ன்று,
டிசம்பர்-19.


 தமிழக அரசியல் தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் பிறந்த தினம்(1922)

இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் பிறந்த தினம்(1934)
முதல் இந்தோ-சீன போர் துவங்கியது(1946)

போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)
=====================================================

வேட்பாளராக

மோடியின் வெளிநாடு சுற்றுப்பயணங்கள் சாதித்தது?
நரேந்திர மோடியை பிரதமர் கடந்த நான்கரை ஆண்டு பாஜக ஆட்சியில், பிரதமர் மோடி 90 நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, அந்நிய முதலீடுகளை, இந்தியாவுக்குக் கொண்டுவரவே பிரதமர் அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்று பாஜக-வினர் சமாளித்து வந்தனர்.

ஆனால், பிரதமரின் பயணத்தால், பெரிதாக எந்த பலனும் ஏற்படவில்லை.


அந்நியமுதலீடுகள் துறையில், மந்தமான வளர்ச்சியே ஏற்பட்டுள்ளது.

மத்திய வர்த்தக மற்றும்தொழில்துறை இணையமைச்சர் சி.ஆர். சவுத்ரி, நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கை மூலமே இந்த உண்மைஅம்பலத்திற்கு வந்துள்ளது.

“2014-15ஆம் ஆண்டில்இந்தியாவில் மேற்கொள்ளப் பட்ட அந்நிய நேரடி முதலீடுகளின் மதிப்பு 45.15 பில்லியன் டாலராகும்.

ஆனால்,சென்ற 2017-18 நிதியாண்டில்மொத்தம் 60.97 பில்லியன்டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன.
இதற்கு முந்தைய 2015-16 நிதியாண்டில் 55.56 பில்லியன் டாலரும்,
2016-17 நிதியாண்டில் 60.22 பில்லியன் டாலரும் இந்தியாவில்முதலீடு செய்யப்பட்டுள் ளது” என்று சவுத்ரி குறிப் பிட்டுள்ளார்.

 அதாவது, அந்நிய முதலீடுகளானது, கடந்த2 ஆண்டுகளில் வெறும் 1.24 சதவிகித வளர்ச்சியையே கண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------