வங்கிகள் இணைப்பு மக்களுக்கு ஆபத்தானது!

ஏன் வங்கிகளை இணைக்க மோடி அரசு அவசரப்படுகிறது ?
மத்திய பாஜக மோடி அரசு  ஒருதலைபட்சமாக பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்துவதிலும், தனியார் துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து முனைப்பை காட்டி வருகிறது.
 அந்தத் திசை வழியில் எடுக்கப்படும் முயற்சிதான் 3 பொதுத்துறை நிறுவனங்களின் இணைப்பாகும்.

“பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான மாற்று ஏற்பாடு” என்ற பெயரில் அருண்ஜெட்லி, பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் ஆகிய 3 மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு2018 செப்டம்பர் 17ஆம் தேதி “பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி” ஆகிய மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

“இந்த மூன்று வங்கிகள்இணைப்பின் மூலமாக உருவாகும் வங்கி இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாகும்; இதன்மூலம் அதிகளவில் கடன் வழங்க முடியும்; இந்தஇணைப்பினால் ஊழியர்கள்-அதிகாரிகள் பணி நிலைமைகள் பாதிக்கப்படாது” என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தேனா வங்கியின்இயக்குநர் குழு 24.9.2018 அன்றும், பேங்க் ஆப் பரோடா மற்றும் விஜயா வங்கிகளின் இயக்குநர் குழு 29.9.2018 அன்றும் இம்மூன்று வங்கிகளை இணைக்கும் பரிந்துரைகளை மேற்கொண்டன.


இதனைத் தொடர்ந்து இம்மூன்றுவங்கிகளின் கூட்டு இயக்குநர் குழு பல முறை கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கான திட்டமிடலை வகுத்துள்ளது.

21 பொதுத்துறை வங்கிகள் சுமார் 90,000 கிளைகளுடன் இந்திய நாட்டு குடிமக்களுக்கு அரும்பணியாற்றி வருகின்றன.
சாதாரண மக்களின் சேமிப்பு கணக்குபராமரிப்பிலிருந்து, விவசாயக் கடன், கல்விக் கடன், வீடு கட்டக் கடன் உள்ளிட்ட சாதாரண மக்களுக்கான சேவையை பெருமளவில் அளித்து வருகின்றன.
1969-ல்வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான் பொதுமக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பு கிட்டியது.

அதற்குமுன்பு வரை பொதுமக்களின் சேமிப்புக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது.
1969-க்கு பிறகும் பொதுமக்களின் சேமிப்பிற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் பலதனியார் வங்கிகள் திவாலாகின.
ஆனால், அவையெல்லாம் பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டு பொதுமக்களின் சேமிப்பு பாதுகாக்கப்பட்டது.இந்த பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு முயற்சி பொதுத்துறை வங்கிகளை பலவீனப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.

ஸ்டேட் வங்கி இணைப்பின் விளைவுகள்

2017 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 5 துணை வங்கிகளும்,பாரத் மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.
அதன் காரணமாக ஸ்டேட் வங்கிமட்டுமே மொத்த வியாபாரத்தில் மூன்றில் ஒரு பங்கு வியாபாரத்தை மேற்கொண்டது.
 2012 ஜூன் முதல்சேமிப்பு கணக்கிற்கு குறைந்தபட்ச இருப்பை நீக்கிய ஸ்டேட் வங்கி 2017 ஏப்ரல் முதல் குறைந்தபட்சம் சேமிப்புகணக்கில் ரூ.5,000 இருப்பு கட்டாயம் இருக்க வேண்டும்; இல்லையென்றால், மாதம் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று முடிவெடுத்தது.

 இவ்வாறு பல முனைகளில் சாதாரண வாடிக்கையாளர்களிடமிருந்து ஸ்டேட் வங்கி நிர்வாகம் 2017-18 ஓராண்டில் மட்டும் ரூ.1700 கோடிக்கும் அதிகமாக அபராதத் தொகை வசூலித்தது. 
அதே ஆண்டில் பெரு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் சுமார் ரூ.27,000 கோடி கடன்தள்ளுபடி செய்யப்பட்டது

தற்போது ஸ்டேட் வங்கி தங்களது பெரும் பணக்காரர் வாடிக்கையாளர் எண்ணிக்கையை 35,000-லிருந்து 2 ஆண்டுக்குள் 2 லட்சமாக உயர்த்துவதற்கான திட்டம் தீட்டியுள்ளது.
அதற்காக பல விசேஷ கிளைகளை திறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இவையெல்லாம் தெளிவாக இவ்வங்கி மக்களுக்கான சேவையிலிருந்து பணக்காரர்களுக்கான சேவையை நோக்கி திசை திருப்பப்படுவதை வெளிப்படுத்துகிறது.“வங்கிகள் பெரிதாக பெரிதாக சாதாரண ஏழை மக்களுக்கான கடன் சேவை குறையும்” என்பதுதான் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் அனுபவம்.

எனவே வங்கிகள் இணைப்பு சாதாரண மக்களுக்கான சேவையை குறைத்துவிடும்.
இந்தியா தவிர்த்த மற்றபிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒரு லட்சம் மக்களுக்கு 40 வங்கிக் கிளைகள் உள்ளன.

ஆனால், இந்தியாவில் 7 கிளைகள் மட்டுமே உள்ளன.
வங்கிகள் இணைப்பு என்பதுநூற்றுக்கணக்கான கிளை மூடலுக்கு இட்டுச் செல்லும். அ
தன் காரணமாக தற்போதுள்ள கிளைகளின் எண்ணிக்கைகூட குறைவதற்கான ஆபத்து உள்ளது.

தனியார் வங்கிகளுக்கு ஊக்கம்
ஒருபுறம் பொதுத்துறை வங்கிகளை இணைத்து எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று சொல்கிறமத்திய பாஜக அரசு, மறுபுறம் பந்தன் வங்கி, ஐடிஎப்சி வங்கி, ஈக்விடாஸ், ஜனா, ஏர்டெல், ரிலையன்ஸ், பேடிஎம்உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளை துவக்குவதற்கு அனுமதித்துள்ளது. 

பொதுத்துறை வங்கிகளை குறைக்க வேண்டும் தனியார் துறை வங்கிகளை அதிகரிக்கவேண்டுமென்றால், இதன் உள்நோக்கம் என்ன?
 இந்த நடவடிக்கை தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதைத் தவிர வேறென்ன?
1992 வெளியிடப்பட்ட முதலாவது நரசிம்மம் கமிட்டி முதலே பொதுத்துறை வங்கிகள் இணைப்பிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதலாவது நரசிம்மம் கமிட்டி பொதுத்துறையில் மூன்று/நான்கு பெரிய வங்கிகளும் ஏழெட்டு நடுத்தரவங்கிகளும் இருந்தால் போதும் என்று பரிந்துரைத்தது.
 கூடவே “இனி எந்தத் தனியார் வங்கியும் தேசியமயமாக்கப்படாது” என்று மத்திய அரசு வாக்குறுதி அளிக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
 மத்திய அரசும் இப்பரிந்துரையை ஏற்றுக் கொண்டது.


தனியார் வங்கிகள் சிறு சதவிகித பணக்காரர்களுக்காக மட்டுமே கூடுதல் கட்டணத்துடன் செயல்பட்டு வருகின்றன. 
அவை சாதாரண மக்களுக்கான சேமிப்பு கணக்கு பராமரிப்பிலோ, கடன் வழங்குதலிலோ ஈடுபடுவதில்லை. மாறாக சட்டத்தை மீறிய பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. 
அவை தனியார் துறையில் நீடிப்பதற்கான எந்த நியாயமும் இல்லை. இவ்வங்கிகளையெல்லாம் பொதுத்துறை வங்கிகளாக மாற்றுவதன் மூலமாக மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், சாதாரண மக்களுக்கான வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும்.

ஆனால், முதலாவது நரசிம்மம் கமிட்டியின் பரிந்துரைக்கு ஏற்ப எந்த அரசாங்கமும் தனியார் வங்கிகளை பொதுத்துறைவங்கிகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை.


இணைப்பிற்குப் பிறகு ஸ்டேட் வங்கி 200 க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலகங்களையும், 2000 க்கும் மேற்பட்ட கிளைகளையும் இழுத்து மூடியுள்ளது.
 இதிலிருந்து கிராமப்புற கிளைகள் கூட தப்பவில்லை.
 சுமார் 40000 ஊழியர்களும், அதிகாரிகளும் உபரியாக்கப்பட்டனர்.

31.3.2017ல் ரூ.177000 கோடியாக இருந்த இவ்வங்கியின் வராக்கடன் 31.3.2018ல் ரூ.225000கோடியாக உயர்ந்துள்ளது.


பேங்க் ஆப் பரோடா-தேனா-விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகள் இணைப்பினாலும் இத்தகைய விளைவுகள்தான் ஏற்படும்.தனியார் துறை விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ஏர் இந்தியாவும், இந்தியன் ஏர்லைன்சும் ஒன்றிணைக்கப்பட்டு பலவீனப்படுத்தப்பட்டன.
தனியார் கொரியர் சர்வீசை ஊக்குவிப்பதற்காக ரயில்வே மெயில்சர்வீஸ் நிறுத்தப்பட்டு தபால் துறை பலவீனமாக்கப்பட்டது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை வளர்ப்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சர்வீஸ் வழங்குவதிலிருந்து 2 ஆண்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டது. 

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தாராளமாக வழங்கப்படும் 4ஜி சேவை இன்றளவிலும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. 

இவ்வாறு மத்திய அரசாங்கம் ஒருதலைபட்சமாக பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்துவதிலும், தனியார் துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ந்து முனைப்பை காட்டி வருகிறது.
 அந்தத் திசைவழியில் எடுக்கப்படும் முயற்சிதான் 3 பொதுத்துறை நிறுவனங்களின் இணைப்பாகும்.

வராக்கடனை வசூல் செய்
வங்கித்துறையின் உண்மையான பிரச்சனை வராக்கடன் பிரச்சனையாகும். ரூபாய் 13 லட்சம் கோடிக்கும் கூடுதலாக உள்ள வராக்கடனில் பூஷன் ஸ்டீல், பூஷன் பவர் & ஸ்டீல், எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ், ஜெ.பி. இன்ப்ரா, இரா இன்ப்ரா, ஆம்டெக் ஆட்டோ, ஏ.பி.ஜி.ஷிப்யார்டு, ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ், மோன்னட் இஸ்பட், லேன்கோ இன்ப்ராடெக், அலோக் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய 12 பெரிய நிறுவனங்களின் வராக்கடன் மட்டுமே ரூ.3.45 லட்சம் கோடியாக உள்ளது. 

இதனை வசூல் செய்வதற்கு மத்திய அரசோ,ரிசர்வ் வங்கியோ எந்த விதமான உருப்படியான நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
சமீபத்தில் இயற்றப்பட்ட திவால் சட்டமோ இதனை வசூல் செய்வதற்கு பதில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி செய்யவே உதவுகிறது.

 இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும், மேலும் பெரு நிறுவனங்களுக்கு சேவகம் புரியவுமே பொதுத்துறை வங்கிகள் இணைப்பை முன் வைக்கிறது மத்திய அரசு.



எனவேதான் வங்கி ஊழியர் இயக்கம் இம்முயற்சியை எதிர்த்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பை உடனடியாக கைவிட வலியுறுத்தி 2018 டிசம்பர் 26ம் நாள் யுஎப்பியுஎன்ற வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலுக்கிணங்க நாடு முழுவதும் உள்ள பத்து லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளனர்.

 மத்திய அரசு வங்கிகள் இணைப்பை கைவிடவில்லையானால் போராட்டம் மேலும் தீவிரமடையும்.


                                                                                                        -சி.பி.கிருஷ்ணன்
 பொதுச்செயலாளர்,
 இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்- தமிழ்நாடு.
cpkrishnan1959@gmail.com

=====================================================
ன்று,
டிசம்பர்-26.

ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது(1898) 

தோழர் நல்லக்கண்ணு பிறந்தநாள்(1925)

 பண்பலை வானொலி காப்புரிமம் பெறப்பட்டது(1933)

ஆங் சான், பர்மாவின் நவீன ராணுவத்தை உருவாக்கினார்(1944)

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது(1991)

 ஆழிப்பேரலை(சுனாமி)பேரிடர் நினைவு தினம்(2004)

தோழர் நல்லக்கண்ணு


தன் 94வது வயதிலும் துடிப்பான இளைஞனாக அறப்போர் புரியும் தோழர் நல்லக்கண்ணு  டிசம்பர் 26, 1925ல் திருவைகுண்டத்தில் (திருநெல்வேலி) பிறந்தார்.

 பள்ளிப்பருவத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவான ஒரு நாடக ஒத்திகை அவர் பள்ளியில் நடைபெற்றபோது அதை எதிர்த்து  அப்போதே போராடியவர். 
அதற்காக ஆசிரியர்கள் தண்டித்தபோது பள்ளிப்  புறக்கணிப்பு போராட்டம் நடத்தியவர்.

 காந்தியைவிட நேருவின்மீதும், அவர் எழுத்துக்களின்மீதும் காதல்  கொண்ட இவர் காங்கிரஸில் இணைந்தார். பின் காங்கிரஸ் நிலச்சுவான்தார்கள் மற்றும் பணம் படைத்தோரின் புகலிடமாக மாறி வருவதாக நினைத்த நல்லக்கண்ணு அதிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 

ஆரம்பத்தில் நெல்லை மாவட்ட விவசாய சங்க செயலாளராக இருந்தபோது நிலஉரிமை போராட்டம் மேற்கொண்டு "உழுபவருக்கே நிலம்" என்ற வார்த்தையை உண்மையாக்கினார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------

KamalHaasan ➖ Our Pride! and 5 others liked
Kamal HaasanVerified account @ikamalhaasan 23 minutes ago
இவருக்கு பெயர் இட்டது பெற்றோரே எனினும் தான் வாழ்ந்த விதத்தால், தன் பெயரை “காரணப் பெயராக்கிய” பெரியவர் திரு. நல்லக்கண்ணு அய்யாவிற்கு இன்று பிறந்த நாள். நல்லவரையும் நல்லவற்றையும் வாழ்த்துவோம் மனதார...

அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மை, ஜனசக்தியில் செய்தி வெளியிட்ட அவரின் துணிச்சல், இன்றுவரை ரூ.4,000க்கு ஒரு சாதாரண வீட்டில் குடியிருக்கும் எளிமை, மனைவி உடல்நிலை மோசமானபோதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மனவலிமை,  திருநெல்வேலி ஜாதி கலவரத்தில் தனது மாமனார் கொல்லப்பட்டபோதும், நிதானம் தவறாமல் தக்க முடிவு எடுத்தது மட்டுமின்றி சுற்றுப்பயணத்தையும் சிறப்பாக முடித்த அவரின் பொறுமை, கம்யூனிஸ்ட் பற்றி தவறாக பிரச்சாரம் செய்தவர்களிடம்  கம்பெடுத்துக்கொண்டு சென்ற அவரின் வீரம்,  பணத்தை துட்சமாக நினைத்த அவரின் மனம் இதுமட்டுமில்லாமல் தானே தன் துணிகளை துவைப்பது, நேரம் இருந்தால் உடன் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து தருவது போன்ற அனைத்துமே அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைதான்.

"இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் அதுதான் இந்தியாவிற்கு தேவை"  என்ற சிந்தனைக்கொண்ட "தோழர்" நல்லக்கண்ணு பிறந்த தினம் இன்று.

 தினகரனுக்கு வந்த மூன்று மாதத்தில் ஆதரவு அளித்த நாம், இன்றுவரை நல்லக்கண்ணுவிற்கு கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதையே வெளிக்காட்டுகிறது.

ஊருக்கே தெரியும் இவர் நல்லவர் என்றும், அவர் சார்ந்த கட்சி தொழிலாளர் கட்சி என்றும்... ஆனாலும் இவரை ஏற்கவில்லை கோவை மக்கள்.

 இத்தனைக்கும்  கோவை, தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்ற தொகுதி.
 அத்தோடு அவர் தேர்தலில் போட்டியிடுவதையே  நிறுத்திக்கொண்டார். 

1999 நாடாளுமன்ற தேர்தலில்  கோவை நாடாளுமன்ற தொகுதியில் நல்லக்கண்ணு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நின்ற போட்டியாளர்,  பா.ஜ.க.வின் சி.பி.ராதாகிருஷ்ணன். 
அதுவரை தமிழ்நாட்டில் பெரிதாக கால் பாதிக்காத பாஜகவின் வேட்பாளரிடம் ஊரறிந்த நல்லவர் தோற்றார், 

54,000 ஓட்டுகள் வித்தியாசத்தில். அத்வானி வருகையின் போது நடந்த  கோவை குண்டுவெடிப்புக்குப்பின்  ஓராண்டுக்குள் வந்த தேர்தல் அது.மதவெறியைத்தூண்டி பாஜக வென்றது.
 அதோடு திமுக கூட்டணி பலமும் பாஜகவுக்கு இருந்தது என்றாலும் நல்லகண்ணு போன்ற ஒரு வேட்பாளரை தோற்கடித்தது நம்மக்களுடைய அறியாமையே . 
நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என சகாயத்தை அழைக்கும் மக்கள் குறிப்பாக இளையோர்கள் இவர் போன்றவர்களை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவைத்து தான் நாம் செய்யும் பெருந்தவறு .
 உண்மையில் அரசியலுக்கு மட்டுமல்ல, ஒரு நல்ல நாடு உருவாகவும்தோழர் நல்லகண்ணு கள்தான் தேவை.
=====================================================
கணினிக்கதிர் 
-என்.ராஜேந்திரன்

2019ஆம் ஆண்டும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களும்-அதிகமாக பயன்படுத்தும் ஆப்ஸ்
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான ஆப்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருந்தாலும், அனைவருக்கும் பயன்படும்படியான ஆப்ஸ்கள் என்பவை மிகக் குறைவே.

அதிலும்ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஆப்களே ஒவ்வொரு ஆண்டும் முன்னிலைப் பட்டியலில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன.
சமீபத்தில் கூகுள் வெளியிட்ட பட்டியலும் அதை உறுதிப்படுத்துகிறது. ஃபேஸ்புக், ஜிமெயில், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்றஆப்களே எப்போதும்போல் இந்த ஆண்டும் முன்னிலையைத் தக்கவைத்திருக்கின்றன.

மோசமான கடவுச் சொற்கள்.
ரகசியமாக வைத்துக்கொள்ளவேண்டிய கடவுச் சொற்களை, எளிதில் கண்டுபிடிக்கும் விதமாக அமைத்துக் கொள்ளக்கூடாது என்பது அடிப்படைவிதி.
ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில்மோசமான கடவுச் சொற்க(பாஸ்வேர்டு)ளுக்கான பட்டியலில் தொடர்ந்து சில  கடவுச் சொற்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.
 அந்த வகையில் ஸ்பிளாஸ் டேட்டா (SplashData) என்ற  கடவுச் சொற்கள் நிர்வகிக்கும் மென்பொருள் நிறுவனம் வெளியிட்ட இந்த ஆண்டிற்கான மிக மோசமான 25 கடவுச் சொற்கள் பட்டியலில் முதலிடத்தில் 123456 என்ற கடவுச் சொற்கள்(பாஸ்வேர்டு) இடம்பிடித்துள்ளது.

அதற்கு அடுத்ததாக கடவுச் சொற்கள்  (password) என்ற வார்த்தையையே தங்கள் கணக்கிற்கு பயன்படுத்துவது இரண்டாவது இடத்தைப்பிடித்திருக்கிறது.
 அதேபோல, 123456789, 12345678, 12345 மற்றும் 1234567ஆகிய வரிசை எண்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
 இந்த ஆண்டு புதிதாக 111111 என்ற எண்ணும், ளரளோiநே என்ற வார்த்தையும் புதிதாக இடம்பிடித்துள்ளன.
 இதற்கு அடுத்த இடங்களை 11 princess, 12 admin, 13 welcome,14 666666, 15 abc123, 16 football, 17 123123, 18 monkey, 19 654321, 20 !@#$%^&*, 21 charlie,22 aa123456, 23 donald, 24 password1, 25 qwerty 123 ஆகியவை.

 உங்களது பிறந்தநாள், அலைபேசி எண், உங்கள் பெயர் அல்லது குடும்பத்தினர் பெயர் போன்ற தகவல்களை கடவுச் சொற்களாக அமைத்திருந்தால் அவையும்அபாயகரமானவையே.

  கடவுச் சொற்அமைக்கும்போதுபெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள், சிறப்புக்குறியீடுகள் ஆகியவற்றை கலந்து  கடவுச் சொற்களாக அமைப்பதுதான் சிறந்ததாகும்.

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை
இணையவழிப் பணப்பரிமாற்றத்தை அதிகப் படுத்துவதாகக் கூறி வங்கிகள் மற்றும் நிதி சேவை சாராத பல நிறுவனங்களும் இத்துறையில் புதிதாககாலடி எடுத்துவைத்துள்ளன.
 ஏற்கனவே வங்கிகளும்,மொபைல் சேவை நிறுவனங்களும் இந்த சேவையில்ஈடுபட்டுள்ள நிலையில், இணைய வழி சேவை நிறுவனங்களான அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன.
இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்குப்படி வங்கிகள், ஏர்டெல், வோடாபோன், ஜியோ, ஐடியா போன்ற மொபைல் நிறுவனங்களுடன், பேடிம், பேயுமணி, ஃபிரீசார்ஜ், கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மொபைல் ஆப்கள் வங்கி சேவை, பேமண்ட்ஸ் பேங்க், வாலட்கள், புஷ்பேமண்ட் எனப்படும் யுபிஐ முறையிலான மொபைல் பணப்பரிவர்த்தனை எனப் பலவகையான நிதி சேவைகளை ஒருங்கிணைத்தோ, தனித்தனியாகவோ வழங்கி வருகின்றன.

வாட்ஸ்அப் மற்றும் ட்ரூ காலர் ஆப்களும்பணப்பரிவர்த்தனைக்கான வசதியை தொடங்குவதற்கு அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றன.

 2019ஆம் ஆண்டில் இதுபோல இன்னும் பல ஆப்கள் வரக்கூடும். 
இலவசமாக சேவை கொடுப்பவர்கள் எதற்குஆஃபர்களை அள்ளித் தெளிக்கிறார்கள், நாளிதழிலும், டிவியிலும் விளம்பரம் வெளியிட்டு போட்டி போடுகிறார்கள் என்று ஆராய்ந்தால், இதற்குப் பின் உள்ளஇந்தியா ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வாய்ப்பு சுமார் 1டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

 தற்போது இலவச சேவையில் பயனரைப் பழக்கியபின் எதிர்காலத்தில் சேவைக் கட்டணத்திற்கு மாறும்போது தவிர்க்கவோ, எதிர்க்கவோ முடியாத நிலைக்கு புறச் சூழலும், பயனரின் மனநிலையும் மாறியிருக்கும்.
இதன் ஒருபகுதிதான் தற்போது ஏடிஎம்மையங்களைக் குறைக்கும் நடவடிக்கை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
முன்பு ஊழியர்கள் பற்றாக்குறை, செலவு, 24 மணி நேரமும்செயல்படும் என்று ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டது.
 இப்போது ஏடிஎம் மையங்களுக்கு செலவழிக்க முடியவில்லை, நஷ்டம்என்று அவற்றைக் குறைப்பதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?