நாங்கள் தயார்,அப்போ நீங்க..?
குஜராத் மாநில முதல்வராக தொடர்ந்துமூன்றுமுறை பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, நரேந்திர மோடியை இந்தியா முழுமைக்கும் ஆபத்பாந்தவனாக ,மிகப்பெரியபிம்பமாக சங்-பரிவாரங்கள் கட்டி எழுப்பின.
ஆனால் குஜராதில் மோடி பெற்ற வெற்றிகளுக்குப் பின்னால் கோத்ராக்களும்,போலி என்கவனற்களம்,போட்டோஷாப் களும் உள்ளதை திட்டமிட்டு மறைத்து விட்டன.
இந்த மோடி வித்தையில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மத்திய ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி மோடியும் பிரதமரானார்.
மோடி - அமித்ஷா அடாவடி,ஏமாற்று மோடி மஸ்தான்கள் தலைமையில் பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கையும் 21 ஆக அதிகரித்தது.
இதனால், மோடி என்றாலே வெற்றிதான்;பாஜக என்றாலே மோடிதான் என்ற நிலை, பாஜகவில் உருவானது.
மோடிக்காக, மூத்ததலைவர்களான அத்வானி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பலரும் தூக்கி வீசப்பட்டனர்.
ஆனால், அண்மைக் காலமாக மோடியின் சாயம் வெளுத்து விட்டதால் பாஜகஅடைந்து வரும் தோல்விகளும், குறிப்பாக,5 மாநிலத் தேர்தலில் பாஜக அடைந்த படுதோல்வியும் மோடி - அமித்ஷா தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது.
தேர்தல் வெற்றிக்கு மோடி காரணம் என்றால், தோல்விக்கும் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜக-வுக்குள் கலகம் வெடித்துள்ளது.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்த மறுநாளே, மோடிக்கு எதிராகஉத்தரப்பிரதேசத்தில் - அதுவும் மோடியின்சொந்தத் தொகுதியான வாரணாசியிலேயே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
மோடி - அமித்ஷாவின் தோல்வியை எதிர்ப்பார்த்தே காத்திருந்தது போல, மிக விரைவாக ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளின் பின்னணியில் ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் இருந்தனர்.
அவர்களுக்கு மூலமாக ஆர்.எஸ்.எஸ்.இறந்தது.அதின் செயல்திட்டம்தான் தற்போது ஆத்யநாத் ,நிதின்கட்கரி போனற்வர்கள் மூலம் ஆங்காங்கே வெளியாகிறது.
இப்படித்தான் அத்வானியை ஓரங்கட்டும் ஆர்.எஸ்.எஸ் சின் செயல்பாடும் இருந்ததை கவனித்திருக்கலாம்.
சுவரொட்டி விவகாரம், சில தனிப்பட்டவர்களின் செய்கை என்று கூறப்பட்டாலும், உண்மையில் மோடி - அமித்ஷா இணையைக் கழித்துக்கட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பும்தயாராகி விட்டது என்ற உண்மையை அறிந்துகொண்டு ஒட்டப்பட்ட சுவரொட்டியாகவே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
மோடி - அமித்ஷா இணையால் இனி வெற்றிபெற முடியாது என்று எப்போதோ, ஆர்எஸ்எஸ் கணித்து விட்டதாகவும், 5 மாநிலத் தேர்தலின்போது, இந்த இருவரைக் காட்டிலும், ஆதித்யநாத்தை அதிக பொதுக்கூட்டங்களில் பேச வைத்தது கூட அந்த அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது.
இது உண்மையில்லை என்று பாஜகவில் ஒருதரப்பினர் கூறிக்கொண்டிருக்கும் போதே, “2019-இல் தொங்கு நாடாளுமன்றம்தான் அமையப் போகிறது” என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகை அதிர்ச்சி அளித்தது.
“2019 தேர்தலில் பல இடங்களில் பாஜகதோற்கப் போகிறது” என்றும் பகிரங்கமாக எழுதியது.
அதன் முன்பு மோடி அரசின் செயல்பாடுகளை நல்லப்பிள்ளை போல் ஆர்.எஸ்.எஸ், விமரிசித்துள்ளது.மோடியின் பின்னணியில் நாங்கள் இல்லை நாங்கள் யோக்கியர்கள் என்பதை காட்டும் முயற்சி.
2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற வேண்டுமானால், மோடிக்குப் பதில் நிதின் கட்காரியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் விவசாயப் பிரிவு தலைவர் கிஷோர் திவாரி கூறினார்.
இதுபற்றி கட்காரியிடம் கேட்டபோது, ‘எப்போதுமே மோடிதான் பிரதமர் வேட்பாளர்’ என்று கூறிய அவர், சில நாட்களிலேயேமோடி - அமித்ஷாவுக்கு எதிர்நிலையெடுத்து, கடுமையாக விமர்சிக்கத் துவங்கியிருக்கிறார்.
“தலைமை தாங்குபவர்கள்தான், வெற்றிக்கு காரணமென்றால், தோல்விக் கும் தலைமை தாங்குபவர்கள்தான் காரணம்; ஆனால், வெற்றிக்கு எல்லோரும் பொறுப்பேற்கின்றனர்; தோல்வி என்றால், ஓடி விடுகின்றனர்; நன்றாக வேலை செய்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிக்கவும், மோசமாக வேலை செய்தால் தண்டனையும் வழங்க வேண்டும்; அவர்கள் நமக்கு வேண்டியவராக இருந்தாலும் கூட தண்டித்துதான் ஆக வேண்டும்” என்று கட்காரி கூறிவருகிறார்.
“எந்தவொரு தோல்வி மற்றும் திறமையின்மைக்கு முக்கியக் காரணம் கட்சித் தலைமைதான்; நான் கட்சித் தலைவராக இருந்து,எனது கட்சியின் எம்.பி., எம்எல்ஏ-க்கள் சரிவரசெயல்படவில்லை என்றால், அதற்கு நான்தானே பொறுப்பு?” என்றும் கேட்டு மோடி - அமித்ஷாவை சாடி வருகிறார்.
“ஆட்சிகள் மாறிக்கொண்டிருந்தாலும் நாடு அப்படியேதான் இருக்கும்; இந்த நாடுஎந்தவொரு கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ சொந்தமானது அல்ல, 120 கோடிமக்களுக்குச் சொந்தமானது” என்றும் கூறியிருக்கும் கட்காரி, “பிரச்சனைகளுக்கு தீர்வுகொடுக்க முடியாத ஒருவர், குறைந்தபட்சம் பிரச்சனைகளை உருவாக்காமலாவது இருக்க வேண்டும்” என்றும் தாக்குகிறார்.
தேர்தல் வெற்றிக்கு மென்மையான முகம் வேண்டும்; அதற்கு கட்காரிதான் பொருத்தமானவர் என்று ஆர்எஸ்எஸ் விவசாயிகள் பிரிவு தலைவர் கிஷோர் திவாரிகூறிய அடிப்படையில், திடீரென மதவெறிஅரசியலை விமர்சிப்பவராகவும் கட்காரிதன்னை காட்டிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.
“அனுமன் தலித்தாக இருந்தால் என்ன; ராகுல் காந்தியின் கோத்திரமும்தான் எதுவாக இருக்கட்டுமே, இதுவா பிரச்சனை? இப்படி தேவையில்லாதவற்றை பேசுவதாலேயே பாஜக மீது மக்கள் வெறுப்படைந்து வருகிறார்கள்” என்று நல்லவர் போல பேசியிருக்கும் கட்காரி, “சகிப்புத்தன்மை என்பதுமிகப்பெரிய சொத்து;
இந்தியா ஒரு தேசமல்ல, மக்களின் தொகுப்பு” என்றும், “முன்னாள் பிரதமர் நேருவைத் தனக்குப் பிடிக்கும்” என்றும் வேஷம் கட்டியுள்ளார்.
கடந்த 2014 தேர்தலின்போது, மோடிதான் அடுத்த பிரதமர் என்று வரித்துக் கட்டிக்கொண்டு பேசியவர்களில் ராம்தேவும் ஒருவர்.
அந்த ராம்தேவ், “2019-ஆம் ஆண்டு நாட்டில் யாருடைய தலைமையில் ஆட்சி அமையும், அடுத்த பிரதமர் யார், அல்லது மோடியே 2-வது முறையாக பிரதமராவாரா?
என்பதை அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது” என்று தெரிவிக்கிறார்.
மேலும் தமிழக மக்களை கவர மேகதாது அணை விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்.
ஆனால் நிர்மலா கர்நாடகாவிற்கு ஆதரவாக பேசுகிறார் .
இதெல்லாம் பாஜகவின் என்னவிதமான மோடி வித்தைகள்.
இவற்றையெல்லாம் பார்த்தால், ஆர்எஸ்எஸ் அமைப்பானது, பாஜக-வில் ஆளை மாற்றத் தயாராகி விட்டதாகவே தெரிகிறது. மோடிக்காக, அத்வானியை ஓரங் கட்டிய வரலாறு ஏற்கெனவே இருக்கிறது.
ஆனால், அந்த நபர் ஆதித்யநாத்தா, கட்காரியா அல்லது வேறு யாருமா?
என்பதே தற்போது பாஜக-வுக்குள் நடக்கும் பட்டிமன்றம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் எப்போதோ மோடியை மற்ற முடிவு செய்து விட்டது.அதை அறிவிக்க வேண்டியது மட்டுமே பாஜகவின் வேலை.
ஆர்.எஸ்.எஸ்சின் அறிவியலார் குழாம்(?)முன் தற்போது உள்ள ஆய்வில் வெல்லும் காக்கி அரை டவுசரே பாஜகவின் அடுத்த பிரதம வேட்பாளர் .
====================================================
இன்று,
டிசம்பர்-27.
வடகொரியா அரசியலமைப்பு தினம்
பேர்சியா, ஈரான் என்ற பெயரை பெற்றது(1934)
உலக வங்கி உருவாக்கப்பட்டது(1945)
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது(1956)
ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)
====================================================
இந்த எலிகள், வேகவைக்கப்பட்டு தோல்கள் அகற்றப்பட்டு மசாலாக்கள் தடவப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
அந்த சந்தையில், இந்த எலிக்கறி சிக்கன், பன்றிக்கறிகளை விட அமோகமாக விற்பனையாகி வருகின்றன. தற்போது ஒருகிலோ எலிக்கறி ரூ.200 வரை விற்பனையாகிறது.
உள்ளூர் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை காப்பதற்காக வேட்டையாடும் எலிகளை அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கில் இந்த வார சந்தை கடைக்காரர்கள், கொள்முதல் செய்கின்றனர்.
இந்த எலிக்கறி வியாபாரம் வறுமையில் வாடும் விவசாயிகளுக்கு சிறந்த வருமானமாக மாறி இருக்கிறது.
"தானியவகைகளை மட்டும் தின்று தீர்க்கும் இந்த எலிகள் உணவுக்கு பொருந்தும்தானே.மேலும் இதன் சுவை ஆடு,கோழியை விட தங்களுக்கு பிடித்திருப்பதாகவம்,விலை அவைகளை விட தங்கள் கையைக்கடிக்காமல் இருப்பதாக" சொல்கிறார்கள் இந்த எலிக்கறி விரும்பிகள்.
தற்கொலைக்கு தள்ளப்படும் ஏழை விவசாயிகளுக்கு இது கை கொடுக்கும் உபரி வருமானம்தான்.