ராஜிவ் காந்தி வழியில் நரேந்திர மோடி.?

  திருவாளர்.ஹிட்லரும் ,திருவாளர் மோடியும்.
சென்ற  இரண்டு மாத காலமாக மோடி அரசாங்கமும், உத்தரப்பிரதேச அரசாங்கமும் பெயர் மாற்ற போரில்ஈடுபட்டு வருகின்றன.
மொகல்சராய் ரயில்நிலையம் என்பது தீனதயாள் உபாத்யாயா ரயில்நிலையம் என்றுமாற்றப்பட்டுள்ளது. அலகாபாத் என்பதுபிரயாக் ராஜ் என்றும் பைசாபாத்என்பது அயோத்தி என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 ஊர்ப் பெயர்களை மாற்றி விளையாடுவது உ.பி.முதல்வர் யோகிக்குப் புதிதல்ல. அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே, இதை ஆரம்பித்து விட்டார். ‘ஹூமாயூன்’ நகரை ‘ஹனுமன்’ நகர் ஆக்கினார். ‘மியான்’ பஜாரை ‘மாயா’ பஜார்ஆக்கினார்.
‘அலி’ நகரை ‘ஆர்யா’ நகர் ஆக்கினார்.‘உருது’ பஜார் என்பதை ‘ஹிந்தி’ பஜார் ஆக்கினார். இப்போதும் அசராமல், தேவைப்பட்டால் தாஜ்மஹால் என்ற பெயரை ‘ராம் மஹால்’ என்று மாற்றுவேன் என்கிறார்.

இஸ்லாமிய பெயர்களைத் தாங்கிய அனைத்து இடங்களின் பெயர்களும் மாற்றப்பட போகின்றன.
ஹைதராபாத் நகரின் பெயரையும் மாற்றுவோம் என பாஜக கூறுகிறது.

பாபர் மசூதி 17நிமிடத்தில் இடிக்கப்பட்டது என்றுபெருமை பேசுகிறார். சிவசேனை தலைவர் உத்தவ்தாக்கரே.

சாக் ஷி மகராஜ் என்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு படி மேலே சென்றுள்ளார்.
தில்லியில் உள்ள ஜூம்மா மசூதி தகர்க்கப்பட வேண்டுமென்றும் ஏனென்றால் அது ஒரு கோவிலை இடித்துக்கட்டப்பட்டதென்றும் கூறியுள்ளார்.

24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அவர் ஒரு புதிய சவால் விடுத்துள்ளார்.‘ஜூம்மா மசூதியைத் தோண்டினால் அங்கே கோவில் இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கும். இல்லையென்றால் என்னை தூக்கில் போடுங்கள்’ என்று கூறி இந்துத்துவா மதவெறியைக் கட்டவிழ்த்து விடுகிறார்.

`இந்து’ ஆங்கில நாளிதழ் இம்மாதம் 24ஆம் தேதி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

குஜராத் மாநில கல்வி வாரியம் நடத்தும் 10, 11 வது வகுப்புக்கான தேர்வு விண்ணப்பங்களில் முஸ்லிம்மாணவர்கள் மட்டும் தங்களுடைய மதத்தைக் குறிப்பிடுமாறு கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் `ஹஜ்’ யாத்ரிகர்களுக்கு தரப்பட்ட மானியத் தொகையை நிறுத்துவது, இஸ்லாமிய கல்விக்கூடங்களான மதரஸாவின் மீது கட்டுப்பாடு விதிப்பது என்பது தொடர்ந்து வருகிறது.

இப்பொழுது புதியதொரு செய்தியும் வந்துள்ளது.அயோத்தி என்று பெயர் மாற்றப்பட்ட பைசாபாத் மாவட்டம் முழுவதும் இறைச்சிக் கடைகளை தடைசெய்யும் திட்டமும் உ.பி.அரசாங்கம் கொண்டிருக்கிறது என்று தெரியவருகிறது.

அதாவது அந்த மாவட்டம் முழுவதிலும் மக்கள் சைவ உணவுக்கு மாற வேண்டுமென்று நிர்ப்பந்திப்பது என்பதாகும்.மாட்டுக்கறி தின்றார் என்று பொய்கூறி முஸ்லிம்களை கொடூரமாக கொலை செய்வது, `லவ் ஜிகாத்’என்று கூறி காதலர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது;
முஸ்லிம்என்பதால் ஆங்கிலேய எதிர்ப்புப் போராளி திப்பு சுல்தான் பிறந்த நாளை கொண்டாட எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற இத்தகையபோக்குகள் அனைத்திற்கும் ஒரு பெயர்சூட்ட வேண்டுமென்றால் அது `கலாச்சார பாசிசம்’என்பதைத் தவிர வேறு வார்த்தையாக இருக்க முடியாது.

வரலாற்றுக்கு இது என்றும் புதிதல்ல. தன்னை `சூரிய புத்திரன்’ என்று அறிவித்துக் கொண்ட பாசிஸ்ட்இட்லர், உலகில் ஆரிய இனம்தான் உயர்ந்தது.

இதரஅனைத்து இனங்களும் வாழத் தகுதியற்றவை.

குறிப்பாக யூத இனத்தவர் மனித வாழ்க்கைக்கு தகுதியற்றவர்கள், சமூக ரீதியாக வாழத் தகுதியற்றவர்கள் என்று கூறி 55 லட்சம் யூதர்களையும், பலலட்சக்கணக்கான இதர இன மக்களையும் விஷரசாயன கூண்டுக்குள் தள்ளி கொன்றான்.
அதுமட்டுமல்ல, ஜெர்மன் நாட்டின் எண்ணற்ற கம்யூனிஸ்ட்டுகளையும் 2ஆம் உலகப் போரில் பிடிபட்ட சோவியத் நாடு மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் படைவீரர்களையும் இதே விஷப்புகை கூண்டுக்குள் தள்ளிவிட்டு கொல்லச் செய்தான்.

மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியும் யூதருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனியிலிருந்து தப்பிஓடியிருக்கவில்லையென்றால் அவரும் கொல்லப்பட்டிருப்பார்.

 மாறுபட்ட கலாச்சாரத்தை, பண்பாட்டை, நாகரீகத்தைக் கொண்ட இனங்களை, மக்கட் பகுதிகளை கொல்லுவது, சித்ரவதை செய்வது, உரிமை மறுப்பது போன்றவைதான் கலாச்சார பாசிசமாகும்.உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புகழ்பெற்றதலைவர்களில் ஒருவரும், ஜெர்மன் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தார் என்று பொய்யாகக் கூறப்பட்டு ஹிட்லரின் காவல்படையால் சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவருமான ஜார்ஜ் டிமிட்ரோவ்பாசிசம் என்றால் என்ன என்பதைச் சுருக்கமாகச் கூறினார்.

``நிதி மூலதனத்தின் மிகப் பிற்போக்கான, இனவெறி மிகுந்த நபர்களின் அப்பட்டமான, பயங்கரவாத சர்வாதிகாரமே பாசிசம்.’’ பாசிசத்தின் தத்துவம் என்பது மூடத்தனம், மிக அதீதமான இனவெறி, இன ஒதுக்கல் கொள்கை, பழமைவாதம் மற்றும் மனிதாபிமானமற்றத் தன்மைஎன்பதாகும்.

வாழ்க்கை, மொழி, நாகரீகம், கலாச்சாரம் போன்றவை பன்முகத்தன்மை வாய்ந்தவை.
 `வேற்றுமையில் ஒற்றுமை’ ((Unity in diversity)) என்பதுதான் மக்களை ஒன்றிணைக்கும் முறை. அதற்கு மாறாக ஒரு மொழியை திணிப்பது, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பது என்பது கலாச்சாரப் பாசிசமாகும்.

அதற்கெதிராக அணி திரள வேண்டியது இந்தியமக்களின் கடமையாகும்.
                                                                                                                                                                                                                           -என்.ராமகிருஷ்ணன்             
------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்தல் நன்கொடை சாதனை படைத்த பாஜக.
2018 ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் நன்கொடையாக பாஜக ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ள தொகைகள் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் வருமானவரித்துறை ரிட்டன் தாக்கல் செய்துள்ளன.

 அதில், கடந்த ஆண்டில் அதிகமான நன்கொடை வாங்கிய கட்சிகளில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பெற்று பாஜக முதலிடம் பிடித்துள்ளது. அது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பெற்ற நன்கொடையாக கணக்கு காட்டியது மட்டும் ரூ 1489 கோடிகள்.
ஆனால் உண்மையில்  பெற்றது இருமடங்காக இருக்கலாம்.
 மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ரூ.717 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகவும் 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ரூ.291 கோடி பெற்றதாகவும் தாக்கல் செய்துள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2017-18-ம் ஆண்டில் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து பெற்ற சந்தா, பொது மக்களிடமிருந்து பெற்ற நன்கொடை அடிப்படையில் ரூ.104 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக ரிட்டனில் தெரிவித்துள்ளது.கார்ப்பரேட்கள் தந்த நிதிகளை திருப்பி அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போல்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.அதன்  வருவாய் ரூ.1.50 கோடி மட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வருமான  அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை.இன்னும் கணக்கு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
 ======================================================
ன்று,
டிசம்பர்-03.
உலக  மாற்றுதிறனாளிகள் தினம்
 அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் பிறந்த தினம்(1795)
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்(1884)
இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
போபாலில் விஷவாயு கசிவால் பதினைந்தாயிரம் மக்கள் படுகொலை (1984)
======================================================
 யூனியன் கார்பைடு வழியில் ஸ்டெர்லைட்.!

ராஜிவ் காந்தி வழியில் நரேந்திர மோடி.?
பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் ஆட்சியில் இருந்தது. போ​பால் யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்தி​லி​ருந்து விஷ​வாயு கசிந்​த​தால் 20,000க்​கும் மேற்​பட்​டோர் பலி​யா​யி​னர்.​ 
இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட வாரன் ஆண்​டர்​சன் சில மணி நேரங்​க​ளில் விடு​விக்​கப்​பட்​டார்.​ 
இதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கும் தப்பிவிட்டார்.
 அவருக்கு தண்டனை வாங்கித் தர மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று தங்களது அப்போதைய வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் இந்த வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரியே குற்றம் சாட்டியுள்ளார்.

இந் நிலையில் 1984ம் ஆண்டில் விமா​னப் போக்​கு​வ​ரத்​துத்​துறை இயக்​கு​ந​ராக இருந்த ஆர்.எஸ்.​ சோதி,​​ தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்துள்ள பேட்டியில் மேலும் பல திடு்க்கிடும் விவரங்களைத் தெரிவித்துள்ளாகர். அவர் அளித்துள்ள பேட்டி:​-

"1984ம் ஆண்டு டிசம்​பர் 2, 3ம் தேதி​க​ளில் விஷ​வாயு கசிவு சம்​ப​வம் நடந்​தது.​

அதன் பின்​னர் 7ம் தேதி ஆன்​டர்​சன் கைது செய்​யப்​பட்​டார்.​

ஆனால் கைது செய்​யப்​பட்ட சில மணி நேரங்​க​ளில் அவர் விடு​விக்​கப்​பட்​டார்.​

வாரன் ஆன்​டர்​சனை
 போபாலி​லி​ருந்து டெல்​லிக்கு அழைத்​துச் செல்​லு​மாறு அப்போ​தைய முதல்​வர் அர்​ஜுன் சிங் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து எனக்கு உத்​த​ரவு வந்​தது.​

இ​தைத் தொடர்ந்து அவ​ருக்​காக போபால் விமான நிலை​யத்​தில் மத்​திய பிர​தேச முதல்​வ​ரின் அதி​கா​ரப்​பூர்வ அரசு விமா​னம் தயா​ராக வைக்​கப்​பட்​டது.​ அவ​ரு​டன் மாவட்ட கலெக்டரும், எஸ்.பியும் வந்​த​னர்.
​ இ​தை​ய​டுத்து தயா​ராக இருந்த விமா​னத்​தில் ஆன்​டர்​சன் ஏறி டெல்லி சென்​றார்.​

 விமா​னத்​தில் அவ​ரு​டன் வேறு யாரும் செல்​ல​வில்லை.​ கேப்​டன் எஸ்.எச்.​ அலி விமா​னத்தை ஓட்​டிச் சென்​றார்.​ ஆனால் விமா​னத்​தில் யார் இருக்​கி​றார்​கள் என்ற தக​வல் கேப்​டன் அலிக்கே தெரி​விக்​கப்​ப​ட​வில்லை.​ அது மிக மிக ரக​சி​ய​மா​கவே வைக்​கப்​பட்​டி​ருந்​தது என்​று கூறியுள்ளார்.

இது குறித்து விமான கேப்​டன் அலி கூறுகையில், விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருக்​கு​மாறு எனக்கு உத்​த​ர​வி​டப்​பட்​டது.​ இதை​ய​டுத்து ஒரு மணி நேரத்​துக்கு முன்​ன​தா​கவே விமா​னத்​தைத் தயா​ராக வைத்​தி​ருந்​தேன்.​ வந்​த​வர் யார் என்​பதை என்​னி​டம் தெரி​விக்​க​வில்லை.​
 அதை ரக​சி​ய​மாக வைத்​தி​ருந்​த​னர்.​
1 மணி நேரம் 35 நிமி​டங்கள் பறந்து டெல்​லி​யில் தரையிறங்​கி​னோம்.​ விமா​னத்தி​லி​ருந்து அந்த நபர் இறங்​கி​ய​தும்,​​ ஒரு தூதரக காரில் அவரை ஒருவர் அழைத்​துச் சென்​றார்.​
விமா​னத்​தில் வந்த அந்த நபர் மிகவும் கவலையுடன் காணப்​பட்​டார் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அலி அளித்த பதில்களும்: 
கேள்வி: இதையெல்லாம் செய்யுமாறு உங்களுக்கு உத்தரவிட்டது யார்?
 பதில்: எங்களுடைய கேப்டன் ஆர்.எஸ்.சோதியிடம் இருந்து உத்தரவு வந்தது. அவர், எங்களுடைய இயக்குனராக இருந்தார். முதல்வர் அல்லது முதல்வரின் செயலாளரிடம் இருந்து அவருக்கு தகவல் வந்திருக்கும். அவர்கள், இயக்குனருக்கு உத்தரவிட்டனர். அவர், எங்களுக்கு உத்தரவிட்டார்.

கேள்வி: விமானத்தில் வேறு யாரெல்லாம் இருந்தனர்? 
பதில்: அவர் மட்டுமே இருந்தார். வேறு யாரும் கிடையாது.

 கேள்வி: டெல்லியில் அவரை வரவேற்க யாரெல்லாம் இருந்தார்கள்? 
பதில்: ஒரே ஒருவர் மட்டுமே... அவரும் விமான நிலையத்துக்கு வெளியே காரில் இருந்தார்.
 கேள்வி: ஆண்டர்சன் எப்படி காணப்பட்டார்?
பதில்: மிகவும் களைப்பாகவும், மனக் குழப்பத்துடனும் காணப்பட்டார். விமான நிலையத்துக்கு வந்தபோது, அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
பின்னர் தான், அது ஆண்டர்சன் என்பதை அறிந்தோம். அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது .

 மத்திய அரசு தலையீட்டால் அர்ஜூன் சி்ங் உதவினாரா?:
இந்த விஷயத்தில் ராஜி்வ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசின் உத்தரவு இல்லாமல், ஆண்டர்சனை அர்ஜூன் சிங் டெல்லிக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே பலரும் கருதுகின்றனர்.
 ஜெயில் சிங்கை சந்தித்த ஆண்டர்சன்: இந் நிலையில் ஆண்டர்சென் அப்போதைய ஜனாதிபதி ஜெயில் சிங்கை அவர் சந்தித்துப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் அமெரிக்காவுக்கு சென்ற அவர் தலைமறைவாகிவிட்டார்.

உளவுப் பிரிவுகள் 'ஆபரேஷன்'?: 
ஆண்டர்சனை தனி விமானத்தில் டெல்லிக்குக் கொண்டு வருவது, அவரை ஜனாதிபதியுடன் சந்திக்க வைப்பது, நாட்டை விட்டே தப்ப வைப்பது போன்ற செயல்களை மாநில அரசு மட்டும் செய்திருக்க வாய்ப்பில்லை. இதை மத்திய உளவுப் பிரிவுகள் தான் ஒருங்கிணைத்து செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ஆண்டர்சனை இந்தியாவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அமெரிக்கா அனுப்பி வைக்கவில்லை என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில், அவரை பத்திரமாக தப்ப விட்டதே அப்போதைய காங்கிரஸ் அரசு தான் என்பது இதன்மூலம் நிரூபணமாகிவிட்டது. 
 ஆன்​டர்​சனை டெல்​லிக்கு அழைத்​துச் செல்​லு​மாறு முதல்​வர் அலு​வ​ல​கத்தி​லி​ருந்து உத்​த​ர​வி​டப்​பட்​டது தொடர்​பாக அப்போதைய மத்தியப் பிரதேச முதல்வரான அர்​ஜுன் சிங் கடைசி வரை வாயே திறக்கவில்லை .
  அவர் தனது மெளனத்தைக் கலைக்கவேண்டும் என்று அப்போது பாஜக வற்புறுத்தி போராடியது . இன்று அதுதான் தூத்துக்குடி மக்களை கொன்று குவிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல் படுகிறது.

இது குறி்த்து மத்தியப் பிரதேச பாஜக முதல்வர் சிவராஜ் செளஹான் கூறுகையில், யூனி​யன் கார்​பைடு ஆலை​யின் முன்னாள் தலை​வர் வாரன் ஆன்​டர்​சனை விடு​தலை செய்​த​தின் பின்​ன​ணி​யில் உள்ள முக்​கி​யப் பிர​மு​கர் யார் என்​பதை நாட்டு மக்​க​ளுக்கு முன்​னாள் முதல்​வர் அர்​ஜுன் சிங்​கி தெரி​விக்க வேண்​டும். 
ஆன்​டர்​சனை விடு​தலை செய்​யத் தூண்​டி​யது யார் என்​பதை அறிய போபால் நகர மக்​க​ளும்,​​ மத்​திய பிர​தேச மக்​க​ளும் காத்​தி​ருக்​கின்​ற​னர்.​ இது​கு​றித்து அறிய அவர்​க​ளுக்கு உரிமை உள்​ளது.​ உண்​மையை நீண்ட நாட்​க​ளுக்கு மறைக்க முடி​யாது என்றார்.
 மத்திய பிரதேச அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ஆன்டர்சன் விவகாரத்தில் அர்ஜுன் சிங் பெயரும் இழுக்கப்பட்டுள்ளது. 
எனவே அர்ஜுன் சிங் தனது மெளனத்தைக் கலைத்துவிட்டு விளக்கம் அளிக்க வேண்டும். நாட்டிலிருந்து ஆன்டர்சன் வெளியேற மத்தியப் பிரதேச அரசு உதவியதா என்பதை அறிய உலகமே ஆவலாக உள்ளது. எனவே இதுதொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அர்ஜுன் சிங் போக்க வேண்டும் என்றார். 
சோனியாவுடன் அர்ஜூன் சிங் சந்திப்பு: இந் நிலையில் அர்ஜூன் சி்ங் திடீரென நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தில் அர்ஜூன் சிங் ஏதும் பேசிவிடாமல் இருக்க காங்கிரஸ் தலைமை முயல்கிறதோ என்னவோ.
 இந் நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள, போபால் விஷவாயு வழக்கின் தீர்ப்பு தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவேதனையளிப்பதாகவே இந்திய மக்கள் உணர்ந்தனர்.
 நீதித்துறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான தீர்ப்பை கொடுக்கவில்லை என்பது தான் இன்றுவரை போபால் மக்களுக்குமட்டுமல்ல,இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட எண்ணம்.போபால் விஷவாயு கசிவு இந்திய மக்களின் மனதி நீங்கா வடு.
வரலாறு திரும்புவது போல் இன்று ஸ்டெர்லைட் மக்கள் உயிரை காவு வாங்க காத்திருக்கிறது.


 ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேட்டினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர்
ஆலையில் இருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டதால் சுற்றிலும் இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது
இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
மார்ச் 30 2013 ல் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்
அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமான கந்தக-டை-ஆக்சைடு எனும் நச்சு வாயு இவ்வாலையில் இருந்து வெளியானதால், ஆலையைச் சுற்றியுள்ள பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி முதலான பாதிப்புகளும் ஆலைப் பகுதியில் இருந்த மரங்கள் கருகிப் போதலும் ஏற்பட்டன.
2013 ஆம் ஆண்டு தனது தீர்ப்பில், சுற்றுப்புற சூழல் மாசுகேட்டை இந்த நிறுவனம் ஏற்படுத்தி இருப்பதைக் கூறி, அக்குற்றங்களுக்காக மூடுவது என்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்றும் கூறி உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் இயங்க அனுமதி கொடுத்தது.

அதை இயக்கவைக்க ஆளும் பாஜக அரசும்,அதே நீதித்துறையும் பாடுபடுகிறது.
கேட்டால் தொழில் வளர்ச்சி ,இந்திய வளர்ச்சி என்று கதைக்கிறது.
ஸ்டெர்லைட்டை மூடியது நீதி இல்லை என்கிற தருண்  அகர்வால்,பசுமைத்தீர்ப்பாயம் , ஸ்டெர்லைட் மக்களை தனது நாசகார செயல்பாடு  மூலம் கொன்று குவிப்பது நீதிதான் என்கிறதா?

இதுவரை மக்கள் நல்வாழ்வுக்காத்தான் சட்டம்-ஒழுங்கு,நீதித்துறை என்ற எண்ணத்தில் இந்திய மக்கள் வாழ்ந்தது தவறு என்கிறது அரசு,நீதித்துறைகள் .

"போபால் மக்களைக்கொண்று குவித்தான் அமெரிக்க வாரன் ஆண்டர்சன்.அவனை ராஜீவ் காந்தி தடுத்தாண்டார்.
இப்போது இந்தியாவிலேயே சொந்த மக்களை கொன்று குவிக்க வேதாந்தா அனில் அகர்வால் உருவாகியுள்ளான்.
இவனுக்கு  மோடியின் ஆசி முழுமையாக உள்ளது."

ஏதோ அலைபேசிகள் கிராபிக்சில் ஊர்வலம் வருவதாக எண்ண வேண்டாம்.இது வண்ணத்துப்பூசியின் இறகை நுண்நோக்கி மூலம் எடுத்தப்படம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?